Friday, 8 January 2016

திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு பொருட்கள்


திருவாரூர் மாவட்டத்தில் 3½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் மதிவாணன் தெரிவித்தார்.



தமிழகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சிறப்பு பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டு சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், 2 அடிநீள கரும்பு மற்றும் ரூ.100 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி நேற்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் கீழவீதியில் உள்ள நியாயவிலை கடையில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதிவாணன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 43 ஆயிரத்து 614 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பரிசு பொருட்கள் பொங்கல் தினத்திற்கு முன்பு அனைவருக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment