Sunday, 24 January 2016

தமிழகம், புதுச்சிசேரியில் 3 நாள்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு


தமிழகம், புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புண்டு. அடுத்து வரும் 3 நாள்களுக்கும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் தெளிவாகக் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில், அதிகாலை நேரங்களில் மூடுபனி காணப்படும்.
வங்காள விரிகுடா கடல் பகுதியிலிருந்து, நிலம் நோக்கி வரும் காற்றின் மேலடுக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியும், மாலத்தீவு முதல் லட்சத் தீவு வரையிலான பகுதியில் காற்றின் மேலடுக்குச் சுழற்சியும் காணப்படுகிறது.
இதன் காரணமாகவே, தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் 3 நாள்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 86 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment