Sunday, 24 January 2016

திருவாரூர் மாவட்ட பேரவைத் தொகுதிகளில் 9.68 லட்சம் வாக்காளர்கள்


திருவாரூர் மாவட்ட பேரவைத் தொகுதிகளில் 9.68 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார் ஆட்சியர் எம். மதிவாணன்.
திருவாரூர், ஜன 20: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 9,68,841 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியலை அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டு மேலும் அவர் பேசியது:
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு பேரவைத் தொகுதிகளில் சிறப்பு சுருக்க திருத்தம் 2016-ன் படி 9,68,841 வாக்களர்கள் உள்ளனர். இதில் 4,84,297 ஆண் வாக்களர்கள், 4,84,527 பெண் வாக்களர்கள், இதரர் 17 பேர் உள்ளனர்.
மாவட்டத்தில் தொகுதி வாரியாக திருத்துறைப்பூண்டி 2,22,380 வாக்காளர்கள், மன்னார்குடி 2,40,899 வாக்காளர்கள், திருவாரூர் 2,52,466 வாக்காளர்கள், நன்னிலம் 2,53,096 வாக்காளர்கள் உள்ளனர். சிறப்பு சுருக்க திருத்தம் 2016-ன்படி 29,880 வாக்காளர்கள் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை (ஜன.20) தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடங்குகிறது. ஜன.31, பிப்.6-ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment