வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக் கூறி பலரிடம் ரூ. 20 லட்சம் வரை மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே அகரப் பொதக்குடியைச் சேர்ந்தவர் ரகமத்நிசா (50). இவரது மகன் அபுநசீம் (25). இவர் அதே பகுதியில் அல்அமானா டிராவல்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி, வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்பி வந்துள்ளார். இவருக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ஜெகபர்சாதிக் (40), நூர்முகமது (44) ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அபுநசீமிடம் வெளிநாட்டுக்கு செல்வதற்காக கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலர் பணம் கொடுத்தனர். அவர்கள் அகரப்பொதக்குடிக்கு சென்று பார்த்தபோது, அங்கு யாரும் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து தகலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.ஜெயச்சந்திரன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், குற்றப்பிரிவு டிஎஸ்பி பலுலா, ஆய்வாளர் சந்திரசேகர், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரதராஜன், ராஜேந்திரன், வெங்கட் ஆகியோர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் அபிநசீம், இவரது தாய் ரகமத்நிசா, நண்பர்கள் ஜெகபர்சாதிக், நூர்முகமது ஆகியோர் சேர்ந்து பலரிடம் ரூ.20 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நூர்முகமதுவை கைது செய்த போலீஸார் தலைமறைவாக உள்ள அபிநசீம் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்
No comments:
Post a Comment