Sunday, 30 September 2018

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா; நாட்டில் பெண்கள் பாதுகாப்பில் சென்னைக்கு முதலிடம்: முதல் அமைச்சர் பழனிசாமி

சென்னையில் நந்தனம் பகுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடந்து வருகிறது.  இதில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் பழனிசாமி உரையாற்றினார்.  அதில் அவர் பேசும்பொழுது, நாட்டில் பெண்கள் பாதுகாப்பில் மெட்ரோ நகரங்களில் ஒன்றான சென்னை முதலிடம் வகிக்கிறது என கூறினார்.
அவர் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். முதன்முறையாக முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பொழுது ரூ.330 கோடி விவசாய கடனை ரத்து செய்தவர்.
திரை துறையில் இருந்து வந்தவர்களில் முதல் அமைச்சராக மக்கள் ஏற்று கொண்டது எம்.ஜி.ஆரையே.  தமிழகத்தின் சத்துணவு திட்டத்தினை மத்திய அரசே பின்பற்றுவதற்கு எம்.ஜி.ஆர். காரணம்.
எம்.ஜி.ஆர். என்ற சக்தி தோன்றியிருக்கா விட்டால் தமிழகத்தின் கதி நிர்கதியாகி இருக்கும்.  எம்.ஜி.ஆர். கட்சி அவரது படம் போன்று 100 நாட்களே இருக்கும் என்றவர்கள் கோட்டைக்கே வர முடியவில்லை.
எம்.ஜி.ஆர். புகழை பறைசாற்றும் வகையில் அரசு சார்பில் நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
எம்.ஜி.ஆர். குடிசை வீடுகளுக்கு மின் வசதி செய்து கொடுத்தவர்.  தமிழக மக்களுக்காக கிருஷ்ணா குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தியவர்.  தனது சொத்துகளை பொது நலத்திற்கு விட்டு சென்றவர் என பேசினார்.

5 கோடிப்பேரின் ‘பேஸ் புக்’ தகவல்கள் திருட்டு - மீண்டும் சர்ச்சை

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இளைய தலைமுறையினர் தொடங்கி மூத்த குடிமக்கள் வரை அனைத்து தரப்பினராலும் விரும்பப்படுகிற சமூக வலைத்தளமாக ‘பேஸ்புக்’ விளங்குகிறது.

உலகமெங்கும் ஏறத்தாழ 200 கோடிப்பேர் இந்த ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை தீவிரமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 27 கோடிப்பேர் ‘பேஸ்புக்’ பயன்படுத்துகின்றனர்.

ஆனால் அந்த சமூக வலைத்தளத்தின் உபயோகிப்பாளர்கள் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தால் திருடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்து உலகமெங்கும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும், இங்கிலாந்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த தகவல் திருட்டு நடைபெற்றதாக அப்போது கூறப்பட்டது.

இது ‘பேஸ்புக் ’வலைத்தள நிறுவனத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதில், அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியதும், அப்போது ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டதும் நினைவுகூரத்தக்கது. இனி தவறுகள் நேராதபடிக்கு பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்படும் என அப்போது அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இப்போது மறுபடியும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் 5 கோடிப்பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி, புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த திருட்டு கடந்த செவ்வாய்க்கிழமையன்று (25-ந்தேதி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் தகவல்களும் பெருமளவில் திருடப்பட்டிருக்கலாம், அவர்களின் ‘பேஸ்புக்’ கணக்குகளும் பாதிப்புக்குள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

‘வியூ ஆஸ்’ என்னும் அம்சத்தின் மூலம் ஹேக்கர்கள் (சட்ட விரோதமாக இணையதளங்களில் புகுந்து திருடுகிறவர்கள், தாக்குதல் நடத்துகிறவர்கள்) ‘பேஸ்புக்’ உபயோகிப்பாளர்களின் கணக்குகளில் நுழைந்து தகவல்களை திருடி இருக்கலாம் என ‘பேஸ் புக்’ நிறுவனத்தின் துணைத்தலைவர் கய் ரோசன் தெரிவித்தார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

‘வியூ ஆஸ்’ என்பது உபயோகிப்பாளர்களின் கணக்கில் உள்ள தகவல்கள், பிற உபயோகிப்பாளர்களுக்கு எவ்வாறு காட்சி அளிக்கிறது என்பதை காட்டும் அம்சம் ஆகும்.

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, “செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் எங்கள் என்ஜினீயர்கள் குழு, 50 மில்லியன் பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் கணக்குகளில் ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். வியூ ஆஸ் என்னும் அம்சத்தின் மூலம் பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் கணக்குகளுக்குள் நுழைந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் உபயோகிப்பாளர்களின் கணக்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கலாம். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது” என கூறினார்.

இதில் என்ன வேடிக்கை என்றால் ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் மற்றும் அதன் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷெரில் சேண்ட் பெர்க் ஆகியோரின் கணக்குகளும் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதுதான்.

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்களின் கணக்குகளுக்குள் ஹேக்கர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர் என தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை நேற்று முன்தினம் 3 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்தது.

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்களின் தகவல்கள் தொடர்ந்து திருடப்படுவது, அந்த சமூக வலைத்தளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் போதுமானவையாக இல்லை என்பதையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நமதூர் மௌத் அறிவிப்பு 30/09/2018

நமதூர் சூஃபி நகர் வடக்கு தெரு. குத்துபு காலணியில்.  பச்சை கிளி  செய்யது அலி அவர்களின் தகப்பனார் அப்துல் ரெஜாக் அவர்கள் மௌத்.


அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் இன்று மாலை 4 மணிக்கு 

Sunday, 23 September 2018

திருவாரூரில் போட்டி மு.க.அழகிரி தகவல்



திருவாரூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மு.க.அழகிரி பேசியதாவது,
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் திருவாரூரில் போட்டியிடுவது பற்றி பார்க்கலாம். என்னுடைய விசுவாசிகளிடம் கேட்ட பிறகு திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன். நான் தேர்தலில் போட்டியிட்டால் அனைத்துக் கட்சி தலைவர்களும் எனக்கு ஆதரவு அளிப்பார்கள்.
தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. ரஜினிக்கு பின்னணியில் நான் இல்லை. பாஜக என்னை இயக்கவில்லை. தமிழக அரசு எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் ஆதரவு குறித்து பார்க்கலாம். எனக்கு எல்லோரும் ஆதரவு அளிப்பார்கள்.
கருணாநிதி கொள்கைகளை நான் என்றும் பின்பற்றுவேன். சென்னையில் நடைபெற்றது கருணாநிதி நினைவுப் பேரணி. கட்சியில் இணைத்துக்கொண்டால் இணைந்துகொள்வேன். திமுக-வுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன் என்றார். 

Saturday, 22 September 2018

நமதூர் நிக்காஹ் தகவல் 23/09/2018

நமதூர் சூஃபி நகர் நடுத்தெரு A.முஹம்மது யூனுஸ் அவர்களின் மகளார் ஹாஸ் ரிஸ்வானா மணமகளுக்கும் நாகப்பட்டினம் S.முஹம்மது ஆரிப் அவர்களின் மகனார் சாஹூல் ஹமீது மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி1440 முஹர்ரம் பிறை 12 (23/09/2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:45 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைப்பெற்ற உள்ளது.

மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!


பெட்ரோல் விலை உயர்வு கண்டித்து ம.ம.க ஆர்ப்பாட்டம்




பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சரக்கு கட்டணம் உயர்ந்து அனைத்து பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை-எளிய மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் பஸ் நிலையம் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முகமது தம்பி தலைமை தாங்கினார். நகர தலைவர் ஹாஜாநஜ்புதீன், நகர துணைத்தலைவர் தமீமுன்அன்சாரி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பஜ்ஜிலுல்ஹக், மாவட்ட செயலாளர் குத்புதீன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் நவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக பெட்ரோல், டீசல் விலை பாதிப்பை உணர்த்தும் வகையில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து சென்று பஸ் நிலையத்தினை சுற்றி வந்து நூதன முறையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Thursday, 20 September 2018

கொடிக்கால்பாளையத்தில் அமைச்சர் காமராஜ்






*கொடிக்கால் பாளையம் பொதுமக்களின் நலன்கருதி சில கோரிக்கைளை முன்வைத்து ஜமாத் பொதுமக்கள் சார்பாக 16/09/2018 அன்று உணவு துறை அமைச்சர்  அவர்களிடம்  கொடுக்கப்பட்ட மனு சம்மந்தமாக இன்று உணவு துறை அமைச்சர் இரா.காமராஜ் அவர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொதுப்பணி துறை அதிகாரிகள், திருவாரூர் நகராட்சி ஆணையர் ஆகியோர் கொடிக்கால்பாளையம் வருகை தந்து நாம் கோரிக்கையில் குறிப்பிட்ட இடங்களை கள ஆய்வு செய்தனர் விரைவில் இந்த மூன்று கோரிக்கைகளையும்  நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தனர் இன்நிகழ்வில்  M.முஜிபுர்ரஹ்மான், தமுமுக மமக முன்னால் மாவட்ட தலைவர், M.ஜாஹிர்ஹுசைன் இந்திய தேசிய காங்கிரசு  முன்னால் நகர மன்ற உறுப்பினர். கொடிக்கால்பாளையம் ஜமாத் முத்தவல்லி ப.மு. ஹபீபுல்லா , செயலாளர் நஜ்புதீன் , ஆடிட்டர் அப்துல் ரஜாக் , தமுமுக மமக வார்டு நிர்வாகிகள் அஷ்ரஃப், ஃபர்வேஸ்,ஃபாமின், கமருல்ஜமான், ரொஸ்,  தமுமுக நகர செயலாளர் A.பாஷா மற்றும் ஊர் ஜமாத் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.*

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை சென்னை ஐகோர்ட் அதிருப்தி

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும், அதை அரசு முறையாக அமல்படுத்தவில்லை என்றும், அதை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட கோரியும், ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஐகோர்ட்  நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட வாரியாக ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வசூலிக்கப்பட்ட அபராதம் ஆகியவை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போலீசார் ஹெல்மெட்டும், கார்களில் பயணிக்கும் காவல்துறை அதிகாரிகள் சீட் பெல்ட்டும் அணிகிறார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது என்று தெரிவித்தனர். காரில் செல்லும் அதிகாரிகள் கூட சீட் பெல்ட் அணிவது இல்லை மேலும், வழக்கின் மீதான தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் எனக் கூறி, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Wednesday, 19 September 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 19/09/2018

நமதூர் தெற்கு தெரு மர்ஹூம்JM முஹம்மது அலி அவர்களின் மகளாரும் சி.அ.முஹம்மது தாகிர் அவர்களின் மனைவியும் பாபு என்கிற ரஹ்மத்துல்லா அவர்களின் தாயாருமான தங்கா என்கிற ராபியத்துன் பஜிரியா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.

 இன்னா  லில்லாஹி  வஇன்னா  இலைஹி  ராஜிவூன் !


அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 20/09/2018 வியாழக்கிழமை காலை  10   மணிக்கு நடைபெறும்.

பிரதமர் மோடி கோடீஸ்வரர்; சொந்தமாக கார் கிடையாது - சொத்து விபரங்கள் வெளியீடு




பாராளுமன்ற எம்.பி.க்கள் ஆண்டுதோறும் தங்களின் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் பிரதம அலுவலகம் பிரதமர் மோடியின் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி வரையிலான சொத்து மதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் ரொக்கமாக கையிருப்பு கடந்த ஆண்டு ரூ.1.49 லட்சம் இருந்த நிலையில், இவ்வாண்டு ரூ. 50 ஆயிரத்திற்கு குறைவாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் ரூ. 48 ஆயிரத்து 944 ரொக்கமாக கையிருப்பு இருக்கிறது.

காந்திநகர் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.11 லட்சத்து 29 ஆயிரத்து 690 டெபாசிட் செய்துள்ளார். மற்றொரு எஸ்பிஐ வங்கிக்கணக்கில் ரூ.1.7 கோடிக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு சொந்தமாக காரோ, பைக்கோ கிடையாது. 2002-ம் ஆண்டு காந்திநகரில் ரூ.1.30லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளார். இப்போது அதனுடைய சந்தை மதிப்பு ரூ.1.கோடியாகும். மற்றவகையில் பரம்பரை சொத்துக்கள் ஏதும் மோடிக்கு இல்லை இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியிடம் ரூ.1.38 லட்சம் மதிப்புடைய் 4 தங்க மோதிரங்கள் உள்ளன. முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் என மொத்தமாக அவருடைய சொத்து மதிப்பு ரூ. 2.28 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 18 September 2018

திருவாரூர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி கலந்துரையாடல் கூட்டம் அமைச்சர் காமராஜ் பங்கேற்பு.


திருவாரூர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் வர்த்தக சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், முன்னாள் பொதுச்செயலாளர் பிரபாகரன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நுகர்வோர் அமைப்பின் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் ரமேஷ். ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு நிர்வாகி கனகராஜ், தொழிலதிபர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது தொகுதி மேம்பாட்டிற்கு தேவையானவை குறித்து கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

திருவாரூர் தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் உள்நோக்கத்துடன் நடைபெறுவதாக கருத வேண்டாம். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தால் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். இங்கு சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளர்கள். அனைத்து தேவைகளும் முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப் படும்.

திருவாரூரில் விரைவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். திருவாரூர் விளமல் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும். ஓடம்போக்கி ஆறு தூர்வாரப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Monday, 17 September 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 17/09/2018

கேக்கரை தெற்கு தெரு அப்துல் காதர் அவர்களின் மகளும் புஞ்சாண்டு வீட்டு மர்ஹூம் பக்கீர் முஹம்மது அவர்களின் மருமகளும் முஹம்மது கனி அவர்களின் மனைவியுமான ஜெய்லானி நிசா அவர்கள் மௌத்
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை 3மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெறும்.

Sunday, 16 September 2018

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல் 2018 புதுமனைத்தெரு தொகுதி



தேர்தல் நாள்                16.9.2018
மொத்த வாக்காளர்கள் 67
பதிவான வாக்குகள்.    28
செல்லாதவை.         1
A.ஹாஜா குத்புதீன். 7
M.M.I.முக்தார் உசேன். 20
புதுமனைத்தெரு தொகுதி பிரதிநிதியாக  முக்தார் உசேன்
தேர்வு செய்யப்பட்டார்.







Saturday, 15 September 2018

ஜமாஅத் தேர்தல் 2018 - 21 பிரதிநிதிகள் விபரம்


கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர்உறவின் முறை ஜமாஅத் தேர்தல் 2018ல்  21 இறுதி தெரு பிரதிநிதிகளாக வெற்றி பெற்றவர்கள் விபரம்:

 *மேலத்தெரு -காட்டுப்பள்ளி தெரு*
1. முஹம்மது ஆதம்
2. இனாயத்துல்லா

 *பள்ளிவாசல் தெரு*
1.முஹம்மது ஜெஹபர்
2. அஷ்ரப் அலி

 *பர்மா தெரு*
1.முஹம்மது சலாவுதீன்
2.சேக் முஹம்மது

 *தெற்கு தெரு*
1.பஜாலுதீன்
2.முஹம்மது அப்துல் வகாப்
3.சுக்கூர் முஹம்மது
4.முஜிபுர் ரஹ்மான்

 *நடுத்தெரு*
1.அஹமது ஜலீல்
2. ஜாகிர் ஹூசைன்
3.ஹபிபுல்லாஹ்
4.முஹம்மது அன்சாரி
5. சேட் என்கிற சிராஜூதீன்

 *வடக்கு தெரு*
1. அலி அக்பர்
2.முஹம்மது அலி

 *ஜெயம் தெரு*
1.அப்துல் லத்தீப்
2.முஹம்மது ஆசிக்

 * -மலாயத்தெரு*
1. துக்கான் ராஜா என்கிற சேக் முஹைதீன்
 புதுமனைத்தெரு
1. முக்தார் உசேன்



வெளியூர் மௌத் அறிவிப்பு 15/09/2018


Friday, 14 September 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 14.09.2018



நமதூர் தெற்கு தெரு அப்சா வீடு மர்ஹூம் க.மெ.அ.அப்துல் மஜீத் அவர்களின் மகனாரும் சேக் அலாவுதீன் ,A.M ரபியூதீன் இவர்களின் சகோதரரும் ,த.மு.மு.அப்துல் ஜலீல் ,செம்மங்குடி உபையத்துல்லா, பாபு என்கிற முஹம்மது இபுராகிம் இவர்களின் மைந்துனருமாகிய   முஹம்மது ஜெஹபர் அவர்கள் மௌத்.

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Thursday, 13 September 2018

திருவாரூரில் மின்தடை

மின்தடை
திருவாரூர் துணைமின்நிலையம் முலமாக மின்சாரம் பெறும் பகுதிகளில் பராமரிப்பு  பணிக்காக நாளை 15/09/2018 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 4 September 2018

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு திருவாரூர் மாவட்டத்தில் 9¾ லட்சம் வாக்காளர்கள்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், அதிகாரிகள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி 9 லட்சத்து 93 ஆயிரத்து 460 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 2 ஆயிரத்து 599 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 12 ஆயிரத்து 330 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 904 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 995 பெண் வாக்காளர்களும், ஒரு மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 900 பேர் உள்ளனர். மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 718 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 24 ஆயிரத்து 780 பெண் வாக்காளர்களும், 5 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 503 பேரும் உள்ளனர்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 169 பெண் வாக்காளர்களும், 18 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 687 பேரும் உள்ளனர். நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 825 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 25 ஆயிரத்து 808 பெண் வாக்காளர்களும், 6 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 639 பேரும் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 4 லட்சத்து 87 ஆயிரத்து 947 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 95 ஆயிரத்து 752 பெண் வாக்காளர்களும், 30 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 9 லட்சத்து 83 ஆயிரத்து 729 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பால்துரை, உதவி கலெக்டர்கள் முருகதாஸ் (திருவாரூர்), பத்மாவதி (மன்னார்குடி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பழனிவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகக்குழு உறுப்பினர் முருகானந்தம் மற்றும் தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Monday, 3 September 2018

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல் 2018 முக்கிய முடிவால் தடை விலகுகிறது





நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர்உறவின் ஜமாஅத் தேர்தல் கடந்த பிப்ரவரி மார்ச் மாதங்களில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் எட்டு கட்டங்களாக தெரு வாரியாக தேர்தல் முலமாக 21 தெரு பிரதிநிதிகளில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். புதுமனைத்தெரு தேர்தல் மட்டும் நீதிமன்றம் வழக்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த ஆறு மாத காலமாக   மேலத்தெரு பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட முஹம்மது ஆதம் அவர்கள் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றதால் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தும் மக்கள் பொதுசபை கூட்டம் நடைபெறவில்லை.
இதனால் தற்போதைய தலைவர் ஜலாலுதீன் தலைமையில் உள்ள நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் 02/09/2018 திங்கட்கிழமை இரவு 9மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் ஜமாஅத் அங்கத்தினர்கள் இடையே ஆலோசனை கூட்டம் தலைவர் ஜலாலுதீன் தலைமையில் செயலாளர் ஹாஜா நஜிபுதீன் ,துணைதலைவர் பொறுப்பு ஹபிபுல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகஸ்தர்கள் ,தெரு பிரதிநிதிகள் ,முன்னாள் தலைவர் ரபியூதீன் ,தேர்தல் அதிகாரிகள் ,புதியதாக தேர்வு செய்யப்பட்ட  முஹம்மது ஆதம் உள்பட தெரு  பிரதிநிதிகள், ஊர் பெரியவர்கள் ,இளைஞர்கள் உள்ளிட்ட நமது ஜமாஅத் அங்கத்தினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதில்.    சுமார் 3 மணிநேர  காரசாரமான விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் என நடைபெற்று இறுதியில் ஜமாஅத் தேர்தலுக்கு இடையூறாக இருக்கும் நீதிமன்றம் வழக்கை திரும்ப பெற  சம்மதம் தெரிவித்த முஹம்மது  ஆதம் அவர்கள் எவ்வளவு சீக்கிரம் திரும்ப பெற்று வந்த உடன் ஒத்தி வைக்க ப்பட்ட புதுமனைத்தெரு பிரதிநிதி தேர்தல் நடந்த பொது மக்கள் சபை கூட்டம்   கூடி அங்கீகாரம் வழங்க   அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடந்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Sunday, 2 September 2018

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் முக்கிய அறிவிப்பு



இன்ஷா அல்லாஹ் 02/09/2018  இன்று இரவு 9 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் புதிய ஜமாஅத் நிர்வாக தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை  கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஜமாஅத் அங்கத்தினர்கள் தவறாறு கலந்துகொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

 -- நிர்வாகம்

Saturday, 1 September 2018

*கொடிக்கால்பாளையம் தமுமுக சார்பாக 1லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி*




*கேரள வெள்ள நிவாரண நிதியாக  7, 8 வார்டு கொடிக்கால் பாளையம்  பொதுமக்களிடம் இருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வசூலிகப்பட்ட  ரூபாய்: 1,02150 (ஒரு லட்சத்து இரண்டாயிரத்து நூற்றி ஐம்பது ரூபாய்)  ஜும்மா தொழுகைக்கு பிறகு பள்ளிவாசலில் பொதுமக்கள் முன்னிலையில் எமிரெட் இஸ்லாமிக் அசோசியேசன் தலைவர் சுபஹத்துல்லா, கொடிக்கால் பாளையம் கத்தார் வாசிகள் குழு தலைவர் நஸ்ருதீன் தமுமுக முன்னாள் மாவட்ட தலைவர் M.முஜிபுர்ரஹ்மான் முன்னால் நகரச்செயலாளர் M.அப்துல்காதர் , பஹ்ருதீன் வார்டு  நிர்வாகிகள் அஷ்ரஃப், ஃபர்வேஸ், கமருல்ஜமான் ஃபாமின் ஆகியோர் தமுமுக திருவாரூர் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் சகோதரர்களால்  கலீல்ரஹ்மான் அவர்களிடம் D.D யாக எடுத்து கொடுக்கப்பட்டது.*

*அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்*

*என்றென்றும் மக்கள் பணியில்*
*தமுமுக*
*கொடிக்கால் பாளையம்*