அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இசை நிகழ்ச்சியின்போது ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 58 பேர் பலியானார்கள். 515 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்தியவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று லாஸ்வேகாஸ் நகர போலீசார் தெரிவித்து இருந்தனர்.
கொலையாளி ஸ்டீபன் பட்டாக் வீடு நிவேடா மாகாணத்தில் உள்ள மெஸ் குயிட் நகரில் உள்ளது. அங்கு அவனது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அங்கு 18 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் பல்லாயிரம் ரவுண்டு சுடக் கூடிய தோட்டாக்கள் மற்றும் குண்டுகளை வெடிக்க செய்யும் எலெக்ட்ரானிக் கருவிகள் குவியல் குவியலாக சிக்கின.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவனது காரில் ‘டேன்னரிட்’ எனப்படும் வெடி பொருட்கள், அமோனியா நைட்ரேட் எனப்படும் ஒரு வகை உரம் போன்றவை கைப்பற்றப்பட்டது. இதை வைத்து வெடிகுண்டு தயா ரிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இத்தகவலை லாஸ் வேகாஸ் செரீப் ஜோசப் லம்பார்டோ தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது, இச்சம்பவம் குறித்து விவாதிக்க 4 குற்றப் பிரிவு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பட்டாக் தங்கியிருந்த ஓட்டல் அறை மற்றும் அவரது உறவினர் வீடுகளில் விசாரணையும், சோதனையும் நடத்தி வருகின்றனர்” என்றார்.
No comments:
Post a Comment