Thursday, 26 October 2017

செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க எளிய நடைமுறை மத்திய அரசு அறிமுகம்


ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கும் எளிய நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.இதுகுறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– தொலைபேசி சேவை வழங்குவோர் தங்கள் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 6–ந்தேதி உத்தரவு வெளியிட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக மத்திய தொலை தொடர்புத்துறை சில விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, செல்போன் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்களை இணைப்பதற்கு மூன்று எளிய வழிமுறைகளை தொலை தொடர்புத்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன்படி செல்போன் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்களை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொற்களை (ஓ.டி.பி.) பயன்படுத்தியும், செயலி மூலமாகவும் அல்லது ஐ.வி.ஆர்.எஸ். என்ற குரல் மறுமொழி கலந்துரையாடல் முறை மூலமாகவும் பதிவு செய்ய முடியும்.

இந்த எளிய முறை மூலம் வாடிக்கையாளர்கள் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு செல்லாமல் தங்கள் ஆதார் எண்களை இணைக்க முடியும்.

No comments:

Post a Comment