Tuesday, 31 October 2017

21 இடங்களில் கனமழையும் 16 இடங்களில் மிக கனமழையும் பெய்து உள்ளது -சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது . தென்கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இலங்கை அருகே நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மேற்கில் நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக் கூடும்.

21 இடங்களில் கனமழையும் 16 இடங்களில் மிக கனமழையும் பெய்து உள்ளது. செம்பரம்பாக்கத்தில் 18 செ.மீ மழை பெய்துள்ளது. விமான நிலையத்தில் 17 செ. மீ மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ மழை, கேளம்பாக்கத்தில் 11 செ. மீ மழை பெய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைகழக பகுதியில் 15 செ. மீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

Monday, 30 October 2017

தமிழகம் -புதுச்சேரியில் நவம்பர் 3 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை


வட கிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தென் மேற்கு வங்க கடலில் தமிழகத்தின் அருகே மேலடுக்கு சுழற்சி உருவானது. அது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம்  உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சென்னை மற்றும் வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் இன்று முதல் மழை  தீவிரம் அடையும் என்றும் கடலோர மாவட்டங்களில்  பலத்த மழை பெய்யும்  என்றும் சென்னை  வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி சென்னையில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் அனைத்துப் பகுதியிலும் மழை கொட் டியது. இதனால் காலை நேரத்தில் அலுவலகம் செல்வோர், பள்ளிக் கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.

தாழ்வான  பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றுதான் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அளவுக்கு  மழை பெய்துள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர  வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலும் பலத்த மழை பெய்து  வருகிறது.

இந்த நிலையில் இன்று  முதல் நவம்பர் 3 தேதி வரை  வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது

 அக்டோபர் 30 முதல் நவம்பர் 3 வரையிலான 5 நாட்களுக்கான வானிலை முன்அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதில், அக்,30 ல் தமிழகம் மற்றம் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் கனமழை பெய்யக் கூடும். அக்.,31ல் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகள், ராயலசீமா ஆகியவற்றில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 1 ல் ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதி, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகியவற்றில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.,2 மற்றும் 3 ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் காலை முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது.

Sunday, 29 October 2017

பள்ளிவாசல், தர்காக்களில் பணிபுரிவோர் உலமா அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நலவாரியம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் பள்ளிவாசல், தர்கா, மதரசாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளோருக்கு இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு உலமா அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

உறுப்பினர்கள் அடையாள அட்டை பெறுவதற்குரிய விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வாரியத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச் சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, விபத்து நிவாரணம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகளை விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

மேலும் உறுப்பினர்களின் பதிவை 3 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் புதுப்பித்தல் செய்தல் வேண்டும். உறுப்பினரின் பதிவை புதுப்பித்தலுக்கு 1.11.2017 அன்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த முகாமில் கலந்துகொண்டு, உறுப்பினர்கள் பதிவை உரிய காலத்தில் புதுப்பிக்க தவறியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Saturday, 28 October 2017

திருவாரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கப்புகளுக்கு தடை


திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவகம், திருமண மண்டபம், தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேப்பர் கப்புகள், பிளாஸ்டிக் கப்புகள் மூலம் சுகாதார கேடு ஏற்பட்டு டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க வருகிற ஜனவரி மாதம் வரை பேப்பர் கப்புகள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற பொருட்களில் மழைநீர் சேர்ந்து டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் உள்ள இடங்களை கண்டறிந்தால் பொது சுகாதாரத்துறையின் கண்காணிப்பு அலுவலகத்துக்கு 8940269379 என்ற செல்போன் எண்ணிலும் 04366-241895 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செந்தில்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் எம்.செந்தில் குமார், மருத்துவகல்லுாரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜகோபால், உதவி கலெக்டர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Friday, 27 October 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 27/10/2017

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

நமதூர் நடுத்தெரு மர்ஹூம் தக்கப்பா என்கிற முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும் ஹபிபுல்லாஹ் குத்புதீன் இவர்களின் தாயாருமான அரபுகனி அவர்கள் மௌத்.
நல்லடக்கம் நேரம் மாலை 6:15

Thursday, 26 October 2017

செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க எளிய நடைமுறை மத்திய அரசு அறிமுகம்


ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கும் எளிய நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.இதுகுறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– தொலைபேசி சேவை வழங்குவோர் தங்கள் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 6–ந்தேதி உத்தரவு வெளியிட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக மத்திய தொலை தொடர்புத்துறை சில விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, செல்போன் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்களை இணைப்பதற்கு மூன்று எளிய வழிமுறைகளை தொலை தொடர்புத்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன்படி செல்போன் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்களை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொற்களை (ஓ.டி.பி.) பயன்படுத்தியும், செயலி மூலமாகவும் அல்லது ஐ.வி.ஆர்.எஸ். என்ற குரல் மறுமொழி கலந்துரையாடல் முறை மூலமாகவும் பதிவு செய்ய முடியும்.

இந்த எளிய முறை மூலம் வாடிக்கையாளர்கள் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு செல்லாமல் தங்கள் ஆதார் எண்களை இணைக்க முடியும்.

Tuesday, 24 October 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 24/10/2017

ஜனாஸா அறிவிப்பு ...
   அடியக்கமங்கலம்
    மேலசெட்டித்தெரு மர்ஹும் J.M.அப்துல் கபூர் அவர்களின் மைத்துனரும், அமான் தாயக பிரதிநிதி ஹாஜி J M A. முஹம்மது தாவூது & சகோதரர்களின் பெரிய மாமாவுமாகிய ஜனாப், M.  அப்துல் ஹமீது அவர்கள் கொடிக்கால் பாளையம் தமது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இரவு 08:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ...

வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை வானிலை மைய இயக்குனர் தகவல்


Sunday, 22 October 2017

மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து 4 லட்சம் பேர் நீக்கம் ராஜேஷ் லக்கானி தகவல்


சென்னையில் 11 ஆயிரத்து 609 இறந்த வாக்காளர்களின் பெயர்களும், 1 லட்சத்து 62 ஆயிரத்து 911 இடம் பெயர்ந்து சென்ற வாக்காளர்களின் பெயர்களும் கண்டறியப்பட்டன. இரண்டையும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 520 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் படுகிறார்கள். அதுபோல, திருவள்ளூர் மாவட்ட பட்டியலில் இருந்து 57 ஆயிரத்து 802 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் விழுப்புரம் 28 ஆயிரத்து 685, காஞ்சீபுரம் 24 ஆயிரத்து 116, சேலம் 20 ஆயிரத்து 481, விருதுநகர் 20 ஆயிரத்து 242, கன்னியாகுமரி 18 ஆயிரத்து 979, திருவாரூர் 10 ஆயிரத்து 790, நெல்லை 10 ஆயிரத்து 509, கடலூர் 10 ஆயிரத்து 107, ஈரோடு 8 ஆயிரத்து 786, சிவகங்கை 8 ஆயிரத்து 573, வேலூர் 8 ஆயிரத்து 417, தஞ்சாவூர் 7 ஆயிரத்து 850, தர்மபுரி 7 ஆயிரத்து 293, கிருஷ்ணகிரி 6 ஆயிரத்து 974, கோவை 6 ஆயிரத்து 170, திருப்பூர் 5 ஆயிரத்து 794, கரூர் 5 ஆயிரத்து 623, திருச்சி 5 ஆயிரத்து 293, திண்டுக்கல் 5 ஆயிரத்து 197, நீலகிரி 4 ஆயிரத்து 811, திருவண்ணாமலை 4 ஆயிரத்து 153, பெரம்பலூர் 3 ஆயிரத்து 663, மதுரை 3 ஆயிரத்து 305, நாமக்கல் 3 ஆயிரத்து 208, ராமநாதபுரம் 2 ஆயிரத்து 114, நாகப்பட்டினம் ஆயிரத்து 530, தூத்துக்குடி ஆயிரத்து 243, தேனி ஆயிரத்து 168, புதுக்கோட்டை 819, அரியலூர் 450 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 785 இறந்தவர்கள் பெயர் களும், 3 லட்சத்து 9 ஆயிரத்து 880 இடம் மாறியவர்கள் பெயர்களுமாக மொத்தம் 4 லட்சத்து 78 ஆயிரத்து 665 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, 19 October 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 19/10/2017


நமதூர் தெற்கு தெரு (மருந்துவமனை எதிர்) சுண்டைக்காய் வீட்டு ஜமால் முஹம்மது அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

 அல்லாஹ் ! அவர்களின்  பிழை  பாவங்களை பொறுத்து  அன்னாரின்  இறப்பை  ஏற்று  அவர்களின்  குற்றம்  குறைகளை  மன்னித்து  அவர்களை  பொருந்திக்  கொள்வானாக ! அவர்களுக்கு  ஜன்னத்துல்  பிர்தவ்ஸ்  எனும்  சொர்கத்தில்  இடமளித்  தருள்வானாக !  ஆமீன் !

Wednesday, 18 October 2017

நிலவேம்பு குடிநீரினால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நேற்று மதியம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
பின்பு விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:–
தமிழக அரசு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தக்கூடிய தொடர் நடவடிக்கைகளை மிகவும் விரைவாக எடுத்து வருகிறது. நேற்று திருவள்ளூரை தொடர்ந்து இன்று தாம்பரம், செங்கல்பட்டு போன்ற இடங்களில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் குறைந்தது 5 நாள் முதல் 7 நாள் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து முழுமையாக குணம் பெற்றவுடன் வேலைக்கோ மற்ற பணிகளுக்கோ செல்ல வேண்டும்.
இதுபோல காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களிடம் காய்ச்சலுக்காக ஊசி போட சொல்வதை தவிர்க்கவேண்டும். டெங்குவை பொறுத்தவரை நீர் ஆகாரம் போன்ற உணவுகளை உட்கொள்ளவேண்டும். மேலும், காய்ச்சல் என்று வந்தவுடன் அரசு மருத்துவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நாம் நடக்கும் பொது 100 சதவீதம் உயிர் இழப்பு இல்லாத வகையில் உருவாக்கமுடியும்.
தற்போது திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் கடந்த வாரத்தைவிட தற்போது காய்ச்சல் குறைந்து இருக்கிறது. சேலம், திருச்சி போன்ற இடங்களிலும் காய்ச்சல் குறைந்து வருகிறது.
எனவே 10 முதல் 15 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.
நிலவேம்பு குடிநீர் குறித்து எதிர்மறையான கருத்துகள் நிலவி வருகிறது. அந்த கருத்துகளை யாரும் நம்ப வேண்டாம். நிலவேம்பு குடிநீரினால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. அதில் நல்ல குணங்கள் எல்லாம் இருக்கிறது.
நிலவேம்பு குடிநீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். எனவே அதனை உட்கொள்வதினால் எந்த ஒரு தவறும் கிடையாது.
தெற்கு ஆசியாவில் உள்ள மிகப்பெரிய ஆய்வு நிறுவனமான சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் நிலவேம்பு குடிநீருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே மருத்துவர்களுடைய ஆலோசனையின்படி அதனை உட்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்குனர் இன்பசேகரன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குனர் குழந்தைசாமி, முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் இராஜேந்திரன், பல்லாவரம் முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் உட்பட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.

Tuesday, 17 October 2017

6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 621 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. பணிநியமன ஆணைகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சட்டம் ஒழுங்கை பராமரித்தும், குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை விளங்கிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை பராமரித்தும், நல்லிணக்கத்தை நிலைநாட்டியும், தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காத்தும், தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்கவும் தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.

இயற்கை பேரிடர் ஏற்படும் தருணங்களில் காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பிற துறையினருடன் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். சிறைத்துறையினரும் குற்றவாளிகளை நன்னடத்தை உடையவர்களாக மாற்ற சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாடு காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் இருக்கின்றனர்.

சீருடைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தனி வாரியத்தை 1991-ம் ஆண்டு நவம்பரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார்.

கடந்த ஆண்டு வரை, ஒரு லட்சத்து இரண்டு ஆயிரத்து நானூற்று முப்பத்திரண்டு சீருடைப் பணியாளர்களை இத்தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த ஆண்டு நிதிநிலைக் கூட்டத்தொடரில் காவலர்கள் பணி நியமனம் குறித்து சட்டமன்றத்தில் நான் அறிவித்ததைத் தொடர்ந்து, மிகக்குறுகிய காலத்திலேயே 15 ஆயிரத்து 621 நபர்கள் பல்வேறு சீருடைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவற்றில், ஆயுதப்படைக்கு 6 ஆயிரத்து 4 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 2 ஆயிரத்து 564 இரண்டாம் நிலை பெண் காவலர்களும், தமிழக சிறப்புக் காவல் படைக்கு 4 ஆயிரத்து 567 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 5 பெண் காவலர்களும் என மொத்தம் 13 ஆயிரத்து 140 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிறைத்துறைக்கு 954 இரண்டாம் நிலை ஜெயில் வார்டர்களும், 36 இரண்டாம் நிலை பெண் ஜெயில் வார்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ஆயிரத்து 491 தீயணைப்பு வீரர்கள் என மொத்தமாக 15 ஆயிரத்து 621 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சரித்திரம் படைக்கும் வகையில் 4 திருநங்கைகளும் காவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக காவல் துறையில் திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இதன்மூலம் தமிழ்நாடு காவல்துறையில் காலி பணியிடங்களே இல்லை என்ற நிலை உருவாகும்.

தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்ற வாய்ப்பு பெற்றிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்வில் இது ஒரு பெருமைமிக்க தருணம் ஆகும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் லட்சியத்தின்படி, தமிழ்நாடு காவல்துறையில் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் பேணி, நமது காவல்துறையின் வரலாற்று பெருமையை நிலைநாட்ட வேண்டிய கடமை உணர்வோடும், நடுநிலையோடும், தன்னலமற்ற சேவையை தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்ற வேண்டும்.

சீருடைப்பணியில் ஏராளமான சவால்களையும், பல்வேறு இடர்களையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அல்லும்பகலும் அயராது உழைக்க வேண்டிவரும். “ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்” என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். மக்களுடைய குறைகளை கனிவுடனும், கவனத்துடனும், பணிவுடனும், பரிவுடனும் கேட்டு, நடுநிலையுடனும், நேர்மையாகவும் பணிபுரிய வேண்டும். இதுதான் உங்களுடைய தலையாய கடமை.

இன்று முதல் பணியில் சேரும் ஒவ்வொரு காவலரும், கடமையுணர்வுடனும், துணிவுடனும், சமயோசிதமாக செயல்பட்டு, நாட்டில் அமைதி நிலவ பாடுபடவேண்டும்.

நேரம் காலம் கடந்து பல தருணங்களில் பாடுபட்டு உழைக்க வேண்டிய தன்னலமற்ற சேவைதான் காவல்பணி. ஆனால் அந்த உழைப்பால் மக்கள் பெரும் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை கண்முன்னே நிறுத்தி பார்க்கும்போது உங்களுக்குள் ஒரு பூரிப்பும், மிடுக்கும் நிச்சயம் ஏற்படும். ஒளிவு மறைவின்றி, நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தியவர்களுக்கு பாராட்டுகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வரவேற்றார். பணி நியமனம் குறித்து விளக்கத்தை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அளித்தார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல்துறை இயக்குனர் திரிபாதி நன்றி கூறினார். புதிய சீருடைப் பணியாளர்கள் 15 ஆயிரத்து 621 பேருக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கும் விதமாக அவர்களில் 46 பேருக்கு மேடையில் ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபா மோகன், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாட்சாயிணி ஆகிய மூன்றாம் பாலினத்தவரும் பணி ஆணைகளை பெற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆயிரம் புதிய சீருடைப் பணியாளர்களுக்கு அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்று பணிநியமன ஆணைகளை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிரஞ்சன் மார்டி, டி.கே.ராஜேந்திரன் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக் கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்பட பல அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Sunday, 15 October 2017

Kodikkalpalayam வாழ்த்துக்கள்





தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கொடிக்கால்பாளையம் மற்றும் கத்தார் வாசிகள் குழு ,எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோசியோசன் ,சிங்கப்பூர் வாசிகள் குழு மற்றும் உள்ளுர் மற்றும் பல்வேறு வெளியூர் வெளிநாட்டு அனைத்து நல் உள்ளங்களுக்கு  நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த அவசர  சேவை ஊர்தியை நம்ம ஊர் மக்கள் மட்டும் இல்லாமல் சற்று பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் கொண்டு வர முயற்சி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்களையும் பிராத்திக்கிறோம் ஆமீன். கொடிநகர் டைம்ஸ் நண்பர்கள் .

நமதூர் மௌத் அறிவிப்பு 15/10/2017


நமதூர் பாடகர் நூர்மெய்தீன் அவர்கள் மெளத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

 அல்லாஹ் ! அவர்களின்  பிழை  பாவங்களை பொறுத்து  அன்னாரின்  இறப்பை  ஏற்று  அவர்களின்  குற்றம்  குறைகளை  மன்னித்து  அவர்களை  பொருந்திக்  கொள்வானாக ! அவர்களுக்கு  ஜன்னத்துல்  பிர்தவ்ஸ்  எனும்  சொர்கத்தில்  இடமளித்  தருள்வானாக !  ஆமீன் !


(முன்பு புதுமனைதெரு
தற்பொழுது தெற்குதெரு)

Saturday, 14 October 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 14/10/2017

நமதூர். ஆசாத் நகர் புன்னாகி வீட்டு  J. M.M. முஹம்மது இஸ்மாயில் (அப்பா கனி ) அவர்கள் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Thursday, 12 October 2017

Kodikkalpalayam- மத்லபுல் கைராத் பள்ளியில் நிலவேம்பு நீர் வழங்கல்





வருமுன் காக்க நம் பள்ளி , மத்லபுல ஹைராத் நர்சரி&பிரைமரி பள்ளியில் மாணவ மாணவியருக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது நமது கொடிநகர் அரசு மருத்துவ அதிகாரி        Dr.காயத்ரி,MBBS,MO அவர்கள் குழந்தைகளுக்கு அறிவரை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்.

Tuesday, 10 October 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 10/10/17



நமதூர் புதுமனைத்தெரு கறிப்வெப்பிலை வீட்டு முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மாமியாருமாகிய
ஹாஜியா. உம்மா சல்மா பீவி
அவர்கள் MMI நகரில் வபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4:00 மணிக்கு கொடிக்கால்பாளையத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!.

நமதூர் மௌத் அறிவிப்பு 10/10/2017


நமதூர் புதுமனைத்தெரு கடாக்கார வீடு ராவூத்தர் அப்துல் ஜப்பார் அவர்கள் மௌத்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இன்று
மாலை 6 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Monday, 9 October 2017

ஜனாதிபதி- துணை ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் சந்திப்பு

டெல்லி  சென்றுள்ள தமிழக கவர்னர் பன்வாரி லால்  புரோகித் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். 

தமிழக அரசியல் நிலவரம் பற்றி அவர் ஜனாதிபதியுடன் விவாதித்ததாக தெரிகிறது.பின்னர் அவர் துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடுவையும் சந்தித்து பேசினார்

Sunday, 8 October 2017

அடுத்த ஆண்டு முதல் புனித ஹஜ் பயணத்துக்கு மானியம் ரத்து மத்திய அரசுக்கு பரிந்துரை


ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் முஸ்லிம்கள் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தநிலையில் கடந்த 2012–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அளிக்கும் மானியத்தை 2022–ம் ஆண்டுக்குள் படிப்படியாக குறைக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து ஹஜ் பயணம் மேற்கொள்வது பற்றி புதிய கொள்கையை உருவாக்க முன்னாள் செயலாளர் அப்சல் அமானுல்லா தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வியிடம் அண்மையில் தனது வரைவு பரிந்துரையை தாக்கல் செய்தது.
இதுகுறித்து முக்தார் அப்பாஸ் நக்வி மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
புனித ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இது வசதிகளை ஏற்படுத்தி தருவதில் சிறந்த கொள்கைகள் அடங்கியதாக திகழ்கிறது. இது வெளிப்படையானது. பயணம் மேற்கொள்பவர்களுக்கு உகந்த கொள்கைகளையும் கொண்டது. இது ஹஜ் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
இந்த புதிய கொள்கை ஹஜ் பயணத்துக்கு மானியம் அளிப்பதை ரத்து செய்கிறது. இதில் மிச்சப்படுத்தப்படும் மானியத் தொகை முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரைவு பரிந்துரை கொள்கையின் முக்கிய அம்சங்கள் சிறுபான்மையினர் நல அமைச்சகம் தெரிவித்த தகவல்கள் வருமாறு:–
* ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு கப்பல் வழி பயணமும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் விமானத்தில் பயணம் செய்வதை விட குறைவான கட்டணமே தேவைப்படும். இது தொடர்பாக சவுதி அரேபிய அரசுடன் பேசி விருப்பத்தின் அடிப்படையில் கப்பலில் பயணம் மேற்கொள்பவர்கள் குறித்து முடிவு செய்யலாம்.
* ஹஜ் பயணிகளுக்கான தற்போதுள்ள 21 புறப்பாட்டு மையங்கள் 9 ஆக குறைக்கப்படும். புதிய வரைவு கொள்கையின்படி டெல்லி, லக்னோ, கொல்கத்தா, ஆமதாபாத், மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி ஆகிய 9 நகரங்களில் இருந்துதான் இனி விமான பயணம் மேற்கொள்ள இயலும். இந்த நகரங்களில் ஹஜ் இல்லங்களும் அமைக்கப்படும். இது, ஹஜ் பயணிகள் கப்பல் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும்.
* புதிய புனித ஹஜ் பயண கொள்கையின்படி இந்திய அரசின் ஹஜ் குழு மற்றும் தனியார் மூலம் அனுப்பி வைக்கப்படும் பயணிகளின் விகிதாச்சாரம் முறையே 70:30 என்ற அளவில் இருக்கும். இதன் காரணமாக வெளிப்படை தன்மை அமையும்.
* இந்த புதிய வரைவு கொள்கையை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்து அடுத்த ஆண்டு முதல் (2018) நடைமுறைக்கு கொண்டு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Saturday, 7 October 2017

5 நாள் பரோலில் சசிகலா சென்னை வந்தார் ‘யாரையும் சந்திக்கக்கூடாது: அரசியலில் ஈடுபட தடை’


சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ததை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த பிப்ரவரி 15-ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் அவர்கள் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை மோசமாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்து இருந்தனர். நடராஜனுக்கு சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் உள்ள தனது கணவரை பார்க்க 15 நாட்கள் ‘பரோல்’ வழங்குமாறு கோரி சசிகலா சார்பில் அவரது வக்கீல்கள் சிறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் தொழில்நுட்ப ரீதியாக சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதை சரிசெய்து மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்யும்படியும் கூறி அதை சிறை அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து சசிகலாவின் வக்கீல்கள் மறுநாள் அதாவது கடந்த 4-ந் தேதி உரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களுடன், சசிகலாவுக்கு அவசரமாக 15 நாட்கள் ‘பரோல்’ வழங்குமாறு கோரி சிறை அதிகாரிகளிடம் புதிய மனுவை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட சிறை அதிகாரிகள் சசிகலாவுக்கு அவசர ‘பரோல்’ வழங்க முடிவு செய்தனர். இதையடுத்து சசிகலா சென்னையில் தங்குவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு கோரி சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் ஒரு கடிதம் எழுதினர். இதற்கு அனுமதி வழங்கி சென்னை மாநகர போலீஸ் சார்பில் மின்னஞ்சல் மூலமாக நேற்று காலையில் தடையில்லா சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டது. சில கட்டுப்பாடுகளுடன் அந்த சான்றிதழை சென்னை போலீஸ் வழங்கி இருக்கிறது.

அதை பெற்றுக்கொண்ட பெங்களூரு சிறை அதிகாரிகள், சசிகலாவுக்கு அவசரமாக 5 நாட்கள் ‘பரோல்’ வழங்க முடிவு செய்தனர். அதாவது 7-ந் தேதி (இன்று) முதல் 11-ந் தேதி வரை சசிகலாவுக்கு ‘பரோல்’ வழங்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் நேற்று பகல் 12.30 மணி அளவில் அறிவித்தனர். சசிகலாவுக்கு பரோல் உத்தரவாத தொகையாக ரூ.1,000 செலுத்தப்பட்டு உள்ளது.

5 நாட்கள் ‘பரோல்’ வழங்கி இருப்பது பற்றி சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு சிறை ஆஸ்பத்திரியில் சசிகலாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது உடல்நிலை சீராக இருப்பது தெரியவந்தது.

233 நாள் சிறை வாசத்துக்கு பின் நேற்று மதியம் 2.55 மணிக்கு சசிகலா சிறையில் இருந்து முன்பக்க பிரதான நுழைவு வாயில் வழியாக வெளியே வந்தார். அப்போது அங்கு கூடி இருந்த அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

சசிகலா 5 நாட்கள் ‘பரோல்’ காலத்திற்கு பிறகு 12-ந் தேதி மாலை 5 மணிக்குள் பெங்களூரு சிறைக்கு திரும்ப வேண்டும் என்று சிறை அதிகாரிகள் அவருக்கு உத்தரவிட்டு உள்ளனர். 

கிருஷ்ணகிரி, பர்கூர் வழியாக சசிகலா நேற்று இரவு சென்னை வந்தார். இரவு 10 மணி அளவில் தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மூத்த மகள் விஷ்ணுபிரியாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

சசிகலாவுக்கு சில கடுமையான நிபந்தனைகளுடன் ‘பரோல்’ வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* இந்த அவசர ‘பரோல்’ நாட்களில் நீங்கள் (சசிகலா) உங்களின் கணவர் அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரிக்கு மட்டுமே செல்ல வேண்டும். நீங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள வீட்டில் தான் தங்க வேண்டும்.

* நீங்கள் தங்கும் வீட்டிலோ அல்லது ஆஸ்பத்திரியிலோ யாரையும் சந்திக்கக்கூடாது.

* நீங்கள் இந்த நாட்களில் அரசியல் நடவடிக்கையிலோ அல்லது கட்சி நடவடிக்கைகளிலோ ஈடுபடக்கூடாது. பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது.

* அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுடன் கலந்துரையாடக்கூடாது.

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மருத்துவமனையில் இருக்க வேண்டும்.

* இந்த நாட்களில் ஏதாவது அவசரமாக வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், உள்ளூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரின் முன்அனுமதியை பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Friday, 6 October 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 6/10/2017

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். காயேதேமில்லத் தெரு, ஹசன் அலி, ராஜா அவர்களின் தகப்பனார் (கொலத்தாங்கரையா வீட்டு) அப்துல் ஜப்பார் அவர்கள் மொவுத். அவர்களின் மஃபிரத்திற்கு துவா செய்யுங்கள்.

Thursday, 5 October 2017

சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் பிரதமருக்கு தம்பிதுரை கடிதம்


பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசும் இந்த கோரிக்கையை ஆதரிக்கிறது. இது தொடர்பான மத்திய அரசின் யோசனைக்கு தேர்தல் கமிஷன் கடந்த ஆண்டு தனது ஆதரவை தெரிவித்தது.

இவ்வருட தொடக்கத்தில் எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரம் வழங்குதலுக்கான உத்திகள் பற்றி கருத்தரங்கில் பேசிய  தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி, எதிர்காலத்தில் கூடுதல் நிதி ஆதாரங்களோடு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும். ஆனால் 2 முக்கிய நிபந்தனைகள் உள்ளன. ஒன்று, அரசியல் கருத்தொற்றுமை ஏற்படுத்தி, இது தொடர்பாக அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும். அடுத்து, மின்னணு ஓட்டு எந்திரங்கள் உள்ளிட்டவற்றைப் பொறுத்தமட்டில் அவற்றை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஆதாரம் தேவை என்றார். 

பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால், பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்துக்கு ஏற்ப, நாட்டில் உள்ள மாநில சட்டசபைகளில் சிலவற்றின் ஆயுளை நீட்டிக்கவும் வேண்டி வரும், சில சட்டசபைகளின் ஆயுளை முன்கூட்டியே முடிக்கவும் வேண்டி வரும். இதற்குத்தான் அரசியல் சட்ட திருத்தம் தேவைப்படும் என தேர்தல் கமிஷன் கூறுகிறது.

தற்போது  2018 செப்டம்பர் மாதத்திற்குள் பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர்  தம்பிதுறை பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

2019 முதல் சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பட்சத்தில் மக்கள் வரிப்பணம் மிச்சமாகும். 2019 நாடாளுமன்ற தேர்தலுடன் குறைந்தபட்சம் 20 மாநிலங்களின் சட்ட மன்றத்திற்கும் தேர்தல் நடத்தலாம்.என கூறி உள்ளார்.

Wednesday, 4 October 2017

தூய்மையே சேவை திட்டத்தில் கழிவறை கட்டும் பணி கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு


திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பேர் ஊராட்சியில் தூய்மையே சேவை திட்டத்தின்கீழ் கழிவறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் தூய்மையே சேவை திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. மேலும் இந்த திட்டத்தின்கீழ் கழிவறை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை அவசியம். திறந்த வெளியில் அசுத்தம் செய்யக்கூடாது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே திருவாரூரை முழு சுகாதாரம் பெற்ற மாவட்டமாக மாற்ற முடியும். இவ்வாறு கலெக்டர் கூறினார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை செற்பொறியாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உடன் இருந்தன

Tuesday, 3 October 2017

அமெரிக்க துப்பாக்கி சூடு :கொலையாளி வீட்டில் குவியல் குவியலாக ஆயுதங்கள்

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இசை நிகழ்ச்சியின்போது ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 58 பேர் பலியானார்கள். 515 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்தியவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று லாஸ்வேகாஸ் நகர போலீசார் தெரிவித்து இருந்தனர்.

கொலையாளி ஸ்டீபன் பட்டாக் வீடு நிவேடா மாகாணத்தில் உள்ள மெஸ் குயிட் நகரில் உள்ளது. அங்கு அவனது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அங்கு 18 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் பல்லாயிரம் ரவுண்டு சுடக் கூடிய தோட்டாக்கள் மற்றும் குண்டுகளை வெடிக்க செய்யும் எலெக்ட்ரானிக் கருவிகள் குவியல் குவியலாக சிக்கின.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவனது காரில் ‘டேன்னரிட்’ எனப்படும் வெடி பொருட்கள், அமோனியா நைட்ரேட் எனப்படும் ஒரு வகை உரம் போன்றவை கைப்பற்றப்பட்டது. இதை வைத்து வெடிகுண்டு தயா ரிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இத்தகவலை லாஸ் வேகாஸ் செரீப் ஜோசப் லம்பார்டோ தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது, இச்சம்பவம் குறித்து விவாதிக்க 4 குற்றப் பிரிவு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பட்டாக் தங்கியிருந்த ஓட்டல் அறை மற்றும் அவரது உறவினர் வீடுகளில் விசாரணையும், சோதனையும் நடத்தி வருகின்றனர்” என்றார்.

Monday, 2 October 2017

சரக்கு சேவை வரி குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது நிதி மந்திரி அருண் ஜெட்லி தகவல்

ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல்வேறு வரிகளுக்கு மாற்றாக நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகள் மீது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என்று நான்கு விதமாக இந்த வரி விதிக்கப்படுகிறது. சில வகையான பொருட்கள் மீது கூடுதல் இழப்பீட்டு வரியும் விதிக்கப்படுகிறது.

இந்த புதிய வரிவிதிப்பு முறையால் விலைவாசி உயர்ந்து இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி உள்ளனர். அதே சமயம் அரசின் வருவாய் அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு கூறி இருக்கிறது.

ஏற்கனவே சில பொருட்கள் மீதான சரக்கு சேவை வரி குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த வரி மேலும் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறி உள்ளார். இதுகுறித்து அரியானா மாநிலம் பரிதாபாத்தில் இந்திய வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

அரசாங்கம் இயங்குவதற்கும், அனைத்து வகையான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கும் வருவாய் மிகவும் முக்கியமானது ஆகும். நாட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது.

அதே சமயம், அதற்கு தேவையான பணத்தை வரி மூலம் செலுத்த வேண்டிய பொறுப்பும் மக்களுக்கு இருக்கிறது. வரி வருவாய் மூலமே அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்த முடியும்.

சரக்கு சேவை வரி அமல்படுத்தப்பட்ட சில மாதங்களில் வரி வருவாயில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. சரக்கு சேவை வரி விகிதங்களை மாற்றி அமைப்பதன் மூலம் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக வாய்ப்புகள் உள்ளன. மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்கி பயன்படுத்தும் போது வரி விகிதங்களை குறைக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு இருக்கிறது. வரி வருவாய் அதிகரிக்கும் போது வரி விகிதங்கள் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

Sunday, 1 October 2017

வாழ்வு தரும் இதயம் பற்றி இதயப்பூர்வமாக சிந்தியுங்கள்

ரோக்கியத்திற்கு மைய மாய், விளங்குவது இதயம் தான். எனவேதான் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது விலை மதிப்பற்றது, மிக மிக முக்கியமானது. நன்கு, தங்கு தடையின்றி இயங்கிக் கொண்டு, சீராக இரத்தத்தை பிற உறுப்புகளுக்கு அனுப்பிக் கொண்டு மெளனமாக செயல்படும் இதயத்திற்கும், அதன் பராமரிப்பிற்கும் சரியான கவனமும், ஆய்வுகளும், சிறந்த முயற்சிகளும் மிக அவசியம்.

இதய ஆரோக்கியம் என்பதைப் பற்றி ஓரளவு ஆழமாகத் தெரிந்து கொண்டால்தான், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் அவசியம் புரியும் அதற்கான முயற்சிகளையும் எடுக்க முடியும் வருமுன்னர் காப்பது என்பது மிக முக்கியம் ; சொல்லப் போனால் வந்த பின் சிகிச்சை அளிப்பதைவிட முக்கியமானது. நியாயமான, அறிவியல் பூர்வமாக சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும், ”நமது இதயத்தை தூண்கள் போல் தாங்குபவை எவை? எதனால் இதயம் வலுவிழக்கிறது? இதயத்தின் எதிரிகளை எப்படி அறிவது? எப்படித் தடுப்பது? இவற்றையெல்லாம் சரியாக செய்தால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்?’ என்பது போன்ற பல கேள்விகள் எழுவது நிச்சயம்.

ஆரோக்கியமான இதயத்தைத் தாங்கும் முதல் அடிப்படைத் தூண், சரியான ஆரோக்கியமான உணவு தான். இதய ஆரோக்கியத்திற்கான சரியான உணவினால் என்ன கிடைக்கும்? உணவு என்பது காலத்திற்கேற்ப மாறி வருகிறது. அதன் பல்வேறு முகங்களும் காலத்திற்கேற்ப தேவைகளுக்கேற்ப மாறி வருகின்றன. ஆயினும் எப்போதும் மாறாமல் இருப்பது ஒன்றுதான். சரிவிகித உணவு (பேலன்ஸ்டு டயட்) என்பது எப்போதும் சிறந்தது. அங்கங்கே அருகில் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு எவ்விதமான சத்தையும் ஒரேயடியாகக் குறைத்துவிடாமல் தயாரிக்கப்படும் உணவே என்றும் சிறந்தது. பாதுகாப்பானது. சத்துணவு ஆலோசகர்கள் இதற்கு உதவலாம். அடுத்த தூண் சரியான உடற்பயிற்சி. உடலுக்கும்