Wednesday, 10 February 2016

தொழில் கலாச்சாரம்: சோழ மன்னர் வென்ற நாட்டில் தொழில் வாய்ப்புகள்

சில அந்நிய நாடுகளை நாம் வெளி நாடுகள் என்றே நினைக்கமாட்டோம். நம் மண்ணாக, அந்தக் குடிமக்களை நம் சகோதர சகோதரிகளாகக் கருது வோம். தலைமுறைகள் தலைமுறைகளாக இரு தேசங்களுக்கும் இருக்கும் பந்தங்கள் காரணம். மலேசியா அப்படிப்பட்ட சகோதர தேசம்.
பூகோள அமைப்பு
தென்கிழக்கு ஆசிய நாடு. கிழக்கு மலேசியா, மேற்கு மலேசியா என்னும் இரு பிரிவுகள். கிழக்கு மலேசியா, போர்னியோ தீவில் இருக்கும் சபா மற்றும் சரவாக் மாநிலங்களைக் குறிக்கும். மேற்கு மலேசியாவைத் தீபகற்ப மலேசியா என்றும் அழைப்பார்கள். கிழக்கு, மேற்கு மலேசியாக்களைத் தென்சீனக் கடல் பிரிக்கிறது. அண்டைய நாடுகள் தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், புரூணை.
நிலப்பரப்பு 3,29,847 சதுரக் கிலோமீட்டர்கள். 62 சதவீதம் காடுகள். பல காட்டுப்பகுதிகள் பாமாயில் தயாரிப்புக்கான பனைகள் வளர்க்கும் தோட்டங்களாக உருமாறி வருகின்றன. பெட்ரோலியம், தகரம், செம்பு, பாக்சைட், இரும்பு, ரப்பர், மரங்கள், பனை ஆகியவை முக்கிய இயற்கைச் செல்வங்கள்.
தலைநகரம் கோலாலம்பூர். அரசின் நிர்வாக மையம் புத்ராஜெயா என்னும் இடத்தில் இருக்கிறது.
சுருக்க வரலாறு
சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நாகரிக வளர்ச்சி இருந் ததாக அகழ்வாராய்ச்சிகள் கூறுகின்றன. சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்களாக இருக்கவேண்டும் என்று கணிக்கப்படுகிறது.
கி.மு. முதல் நூற்றாண்டின் முதற் பகுதியில் இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் வந்த வணிகர்களும், பிறரும் வந்து குடியேறத் தொடங்கினார்கள். பிற்பகுதியில் விஜயப் பேரரசு என்னும் மலேயப் பேரரசின் ஆட்சி வந்தது. 11 ஆம் நூற்றாண்டில் தமிழகத்து ராஜேந்திரச் சோழர் மலாயாவிலிருந்த கடாரம் என்னும் இடத்தைப் போரில் வென்றதற்கான ஆதாரங்கள் உள்ளன.
பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலிருந்து, பல்வேறு உள்ளூர்ச் சுல்தான்கள் ஆட்சி செய்தார்கள். விஜயப் பேரரசின் இளவரசரான பரமேஸ்வரன் மலாய்த் தீபகற்பத்தின் முதல் சுதந்திர ராஜ்ஜியமாகக் கருதப்படும் மலாக்கா சுல்தானியம் நிறுவினார். இவர் முஸ்லிமாக மதம் மாறினார். நாட்டிலும் இஸ்லாமியம் வேகமாகப் பரவியது.
15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் ஆக்கிரமிப்பு தொடங்கியது. 1511 இல், மலாக்கா பகுதி போர்த்துக்கீசியர் வசமானது. 1641 இல், டச்சுக்காரர்களிடமும், 1786 இல், பிரிட்டிஷாரிடமும் கை மாறியது. 1826 இல் பிரிட்டிஷ் காலனியானது.
1943 முதல் 1945 வரை ஜப்பானால் பிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்தபின், மறுபடியும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது. விடுதலைப் போராட்டங்கள் ஆரம்பித்தன. 1957 இல் விடுதலை பெற்றது. 1963 இல், சிங்கப்பூருடன் இணைந்த மலேசியக் குடியரசானது. ஆனால், 1965 இல், சிங்கப்பூர் உறவு மனக்கசப்போடு முறிந்தது.
மக்கள் தொகை
3 கோடி 5 லட்சம். 61 சதவீதம் இஸ்லாமியர்கள். புத்த மதத்தினர் 20 சதவீதம், கிறிஸ்தவர்கள் 9 சதவீதம், இந்துக்கள் 6 சதவீதம். எஞ்சிய 4 சதவீத மக்கள் பல மதங்களையும் சார்ந்துள்ளனர். அரசியல் சட்டப்படி, மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. ஆட்சி மொழி மலாய் மொழி. கல்வியறிவு 94.6 சதவீதம். ஆண்கள் 96.2 சதவீதம், பெண்கள் 93.2 சதவீதம்.
ஆட்சிமுறை
மலேசியா 13 மாநிலங்களும், 3 கூட்டாட்சிப் பகுதிகளும் கொண்டது. இவை இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மலேசியாவில் இரண்டு மாநிலங்களும், ஒரு கூட்டாட்சிப் பகுதியும் உள்ளன. மேற்கு மலேசியாவில் பதினொரு மாநிலங்களும், இரண்டு கூட்டாட்சிப் பகுதிகளும் உள்ளன. இவற்றுள் ஒன்பது மாநிலங்கள் மலாய் மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன, பரம் பரை ஆட்சியாளர்களால் ஆளப்படுகின்றன. இந்த ஒன்பது ஆட்சியாளர்களும், தமக்குள் ஒருவரை, மலேசியா ஆளும் அரசராக ஐந்தாண்டுப் பதவிக்காலத்துக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் பொது மக்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் கொண்ட அசெம்பிளி உண்டு.
பாராளுமன்றத்தில் இரண்டு சபைகள். மேல்சபை அங்கத்தினர்கள் 5 ஆண்டுப் பதவிக்காலத்துக்கு நியமிக்கப்படுகிறார்கள். கீழ்சபை உறுப்பினர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக் கப்படுகிறார்கள். நிர்வாகத் தலைவர் பிரதமர். 21 வயது நிரம்பிய ஆண்களுக் கும், பெண்களுக்கும் வாக்குரிமை உண்டு. மாநிலங்களில் அசெம்பிளி உறுப்பினர்கள் மக்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆட்சி நடத்துபவர் முதல் அமைச்சர்.
பொருளாதாரம்
பொருளாதாரத்தில் சேவைத்துறையின் பங்கு 56 சதவீதம். இஸ்லாமிய நிதி மையமாக இருத்தல், வெளிநாட்டினருக்கான மருத்துவச் சிகிச்சை வசதிகள், சுற்றுலா ஆகியவை சேவைத் துறையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தொழில் துறையின் பங்கு 35 சதவீதம். 1970 களுக்குப் பின் பல்வேறு தொழில் துறைகளில் பிரமிக்கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பெட்ரோலியம், ரப்பர், கார்கள், மருந்துகள், எலெக்ட்ரானிக் கருவிகள், மரச் சாமான்கள், பாமாயில், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை முக்கிய தொழில்கள். விவசாயம் பொருளாதாரத்தில் 9 சதவீதப் பங்கு வகிக்கிறது.
நாணயம்
ரிங்கிட். 14 ரூபாய் 35 காசுகளுக்கு சமம்.
இந்தியாவோடு வியாபாரம்
மலேசியாவுக்கு நம் ஏற்றுமதி ரூ.35,630 கோடிகள். இவற்றுள் முக்கியமானவை இறைச்சி, உணவு வகைகள். நம் இறக்குமதி ரூ.68,020 கோடிகள். பாமாயில், பெட்ரோலியம், எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் கருவிகள், ரசாயனம் போன்றவை இதில் முக்கியமானவை. டிசிஎஸ், ரிலையன்ஸ் ஆகிய இந்திய நிறுவனங்களுக்கு மலேசியாவில் கிளைகள் இருக்கின்றன. குறிப்பாக டிசிஎஸ் இல் சுமார் 1,500 பேர் பணிபுரிகிறார்கள். வணிகம், இருதரப்பு முதலீடு ஆகிய இரண்டிலும் பெரும் வளர்ச்சி காணும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.
பயணம்
மொத்தத்தில் நம்முடையதுபோல் வெப்ப நாடு. ஆனால், வெவ்வேறு பகுதிகளில் வேறுபட்ட மாதங்களில் மழை பெய்யும். இதேபோல், விடுமுறை நாட்களும் இடத்துக்கு இடம் மாறும். இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, விசிட் காலத்தை முடிவு செய்யுங்கள்.
பிசினஸ் டிப்ஸ்
நேரம் தவறாமை மிக முக்கியம். பெரும்பாலான பிசினஸ்மேன்கள் சீனர்கள். வக்கீல்கள், ஆடிட்டர்கள் போன்றோர் இந்தியர்கள். இவர்கள் இருபாலரும் சரியான நேரத்துக்கு வருவார்கள். பெரும்பாலான அரசு அதிகாரிகள் மலாய்கள். இவர்கள் தாமதமாக வருவதுண்டு. நாம் குறிப்பிட்ட நேரத்துக்குப் போய்விடவேண்டும். சந்திப்பு நேரத்தை முன் கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம்.
விசிட்டிங் கார்டுகள் அவசியம். இதில் பதவியைக் குறிப்பிடுவது நல்லது.
பெரும்பாலான பிசினஸ்மேன்களுக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால், சீன பிசினஸ்மேன்களைச் சந்திப்பதாக இருந்தால், கார்டுகள் ஒருபுறம் ஆங்கிலத்திலும், மறுபுறம் சீன மொழியிலும் இருப்பது நல்லது. இரண்டு கைகளாலும் கார்டைப் பிடித்துக்கொண்டு, வலது கையால் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகத் தரவேண்டும். இரண்டு கைகளாலும் வாங்கி, படித்துப் பார்த்துவிட்டுப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். பான்ட் பின்புறப் பாக்கெட்டில் வைப்பது அவமரியாதை.
கை குலுக்கல், கை கூப்பி வணக்கம் சொல்வது ஆகியவை சாதாரண வரவேற்பு முறை. எப்போதும், முஸ்லிம் கலாச்சாரம் கொண்டவர்களோடு பழகுகிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
மன்னராட்சியை விமர்சிப்பது, பெண்கள் பற்றிப் பேசுவது ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
உடைகள்
நம் ஊர் போலவே, பான்ட், சட்டை போதும்.
பரிசுகள் தருதல்
லஞ்சம் குற்றம். ஆகவே, விலை உயர்ந்த பரிசுகள் தரவே கூடாது. சாக்லெட், பிஸ்கெட்கள் ஆகிய பரிசுகள் தரலாம். வெள்ளை நிறம் சோக நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டதாகக் கருதப்படுகிறது. ஆகவே, பரிசுகளும், பேக்கிங் பேப்பரும் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடாது.

இஸ்லாமிய இளைஞர்கள் கைதில் வெளிப்படைத்தன்மை: பிரதமரிடம் வலியுறுத்தல்


இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் ஜாமா மஸ்ஜித் இமாம் வலியுறுத்தினார்.
 பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜமா மஸ்ஜித் இமாம் சையது அகமது புகாரி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் சுமார் அரை மணிநேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பலர் கைது செய்யப்படுவதை பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் இஸ்லாமிய மதத்தினர் குறிவைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
 பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு இஸ்லாமியர்கள் கைது செய்யப்படும் போது, போலீஸார் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்பினர் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த வெளிப்படைத்தன்மையை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டேன் என்றார் சையது அகமது புகாரி.

பாரபட்சக் கட்டண தடையை மீறினால் அபராதத்தைத் தாண்டியும் நடவடிக்கை: டிராய் எச்சரிக்கை

இணையதளம் பயன்படுத்துவதில் பாரபட்சமான கட்டண அடிப்படையில் சேவை வழங்குவதை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தடை செய்த விவகாரத்தில் விதிமுறைகளை மீறினால் அபராதத்தைத் தாண்டியும் கடும் நடவடிக்கை பாயும் என்று தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது. 

அதாவது ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகள் நிறுவனங்களின் மீறல்களை கட்டுப்படுத்தவில்லை எனில் டெலிகாம் சேவை நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து டிராய் சேர்மன் ஆர்.எஸ். சர்மா பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “அதாவது விதிமுறைகளை மீறி பாரபட்ச கட்டணம் வசூலித்து விட்டு அபராதம் கட்டிவிட்டு மீண்டும் தொடர்வது என்ற நடைமுறைக்கே இடமில்லை. 

விதியை மீறுதலுக்கு எதிரான விதிமுறைகளும் உள்ளன. அதாவது விதிமுறையை மீறினால் விதிமுறையின் பிற பிரிவுகள் உள்ளன. அதாவது பொதுவாக டிராய் விதிகளை மீறினால் அதற்கான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதாவது விதிமீறல் செய்யப்பட்டால், மொத்தமாக விதிமீறலுக்கான பிரிவுகள் உள்ளன. இதனால் அதன் படி நடவடிக்கை பாயும்” என்றார்.

இப்போதைக்கு பாரபட்ச கட்டணத்துக்கு எதிரான உத்தரவை மீறினால் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும், இதற்குப் பிறகும் விதிமீறினால் அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

தொலைத் தொடர்பு ஆணைய சேர்மன் மேலும் கூறும் போது, “அதாவது விதிமீறல் செய்து விட்டு அபராதம் கட்டிவிட்டு பிறகு தொடரலாம் என்பது முடியாது, கட்டணத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு அதனை டிராய்யிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் கட்டணங்கள் விதிக்கு புறம்பாக உள்ளதா என்று டிராய் ஆய்வு செய்யும். அதன் பிறகு அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

அதாவது டெலிகாம் சேவை நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்கை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேறு வேறு காலக்கட்டங்களில் வேறு வேறு கட்டணங்களை வசூலிக்கலாம் ஆனால் இணையத்தை பயன்படுத்தும் போது அதன் உள்ளடக்கம் அடிப்படையில் அமைந்த பாரபட்சமாக கட்டணங்களை நிர்ணயிக்க முடியாது. 

இதனை விளக்கிய ஆர்.எஸ்.சர்மா, “நான் கூறுவது துல்லியமான ஒப்பீடாக இருக்க முடியாது, இருந்தாலும் விளக்க முயற்சி செய்கிறேன், நீங்கள் ஹைவேஸில் செல்கிறீர்கள், அப்போது சுங்கச் சாவடிகள் அதற்கான கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டுமே தவிர, நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டு அதற்காக கட்டணம் வசூலிக்க முடியாது. இதைத்தான் இணையத்தைப் பயன்படுத்தி அண்மிக்கப்படும் உள்ளடக்கங்களுக்காக வேறு வேறு கட்டணங்களை வசூலிக்க கூடாது என்கிறோம். 

இணையச் சமவாய்ப்பு என்பது எங்கள் புரிதலின் அடிப்படையில் பல்வேறு கூறுகளைக் கொண்டது. அவை வெறும் கட்டணம் தொடர்பானது மட்டுமல்ல. நாங்கள் இணையச் சமவாய்ப்பு என்பதை கட்டணத்தின் பார்வையிலிருந்து தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம். இது மட்டுமே டிராய்யின் கீழ் உள்ளது, பிற பிரிவுகள் டிராய்யின் கீழ் வராது” என்றார்.

பாரபட்ச கட்டணத்துக்கு டிராய் விதித்த தடையினால் ஃபேஸ்புக் நிறுவனம் முன்வைத்த பிரிபேஸிக்ஸ் திட்டம் மற்றும் ஏர்டெல் நிறுவனம் முன்வைத்த ஏர்டெல் ஜீரோ திட்டங்களுக்கு பலமான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Tuesday, 9 February 2016

திருவாரூர் மாவட்டத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை


திருவாரூர் மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை பிகார் மாநிலத்திலிருந்து வந்து சேர்ந்தன.
வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இறக்கப்படுவதைப் பார்வையிட்ட ஆட்சியர் எம். மதிவாணன் பிறகு நடைபெற்ற அனைத்துக் கட்சியினர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசியது:
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் 270, மன்னார்குடியில் 277, திருவாரூர் தொகுதியில் 301, நன்னிலம் தொகுதியில் 304 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 2016 சட்டப் பேரவை தேர்தல் வாக்குபதிவுக்காக பிகார் மாநிலத்திலிருந்து 1,493 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2 ஆயிரம் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும் தேர்தல் கமிஷனின் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் வாக்காளர் குறித்த அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இக்கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் வாக்காளர் அடையாள அட்டையின் குறியீட்டு எண்ணை தட்டச்சு செய்து 1950 என்ற எண்ணிற்கு அனுப்பும் போது வாக்காளர்களின் தொகுதி, ஓட்டுச்சாவடி எண், பாகம் எண், வரிசை எண், பெயர் மற்றும் முகவரி குறித்த தகவல்கள் முழுமையாக கிடைக்கும். வாக்காளர் பட்டியல் குறித்த தகவல்களை  வலைதளத்திலும் காணலாம். இதே வலைதளத்தில் வாக்காளர் சேர்த்தல், நீக்கல், திருத்தத்திற்காகவும் விண்ணப்பிக்கலாம் என்றார் மதிவாணன்.

#TNelections2016 #AC168Thiruvarur

Monday, 8 February 2016

அரசு துறைகளில் 18953 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மிழ்நாடு மற்றும் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 18953 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, விண்ணப்பிப்பதற்கான விவரங்கள் அல்லது இணையதள முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ளவும்.
கனரா வங்கியில் 74 சிறப்பு அதிகாரி பணிகனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 74 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 74
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 24.02.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.canarabank.com/Upload/English/Content/RP-3-2015%20-%20Specialist%20Officers%20-%20Corrigendum%20-%20Web%20publication.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிசென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள திட்டம், நிதியியல் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 02
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2016
மேலும் விவரங்கள் அரிய http://chennaimetrorail.gov.in/CMRL_HR_01_2016.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் பணிதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர், இரவு காவலர், மசால்ஜி உள்ளிட்ட 24 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Application_1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தேசிய அனல் மின் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிதேசிய அனல் மின் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்டிபிசி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எக்ஸ்யூட்டிவ் டிரெய்னி, உதவி வேதியியல் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 96
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.02.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.ntpc.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
திருச்சி ஆவின் நிறுவனத்தில் பணிதமிழ்நாடு ஆவில் நிறுவனத்தின் திருச்சி கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 27
பணி இடம்: திருச்சி பெரம்பலூர், அரியலூர், கரூர்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/try3.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் பணிதர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 12
ரெக்கார்டு கிளார்க் - 03, அலுவலக உதிவியாளர் - 07, மசாலஜி - 02
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/CJM%20Court.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழ்நாடு மின் ஆய்வுத்துறையில் அலுவலக உதவியாளர் பணிதமிழ்நாடு மின் ஆய்வுத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு முடித்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 001/E3/2016  தேதி: 27.01.2016
மொத்த காலியிடங்கள்: 07
பணி: அலுவலக உதவியாளர்
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி இடம் மற்றும் காலியிடங்கள்: 
Chennai (HO) - 03
Coimbatore - 01
Erode - 01
Palldam - 01
Virudhunagar - 01
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.02.2016
விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்களை மின் ஆய்வுத்துறை இணையதளமான www.tnei.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி
திருச்சிராப்பள்ளியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் டெக்னிக்கல் உதவியாளர், எம்டிஎஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 07
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.02.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.bdu.ac.in/iecd_teaching_non_teaching_positions.php என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி இந்திய அணு ஆராய்ச்சி மையத்தின் கீழ் தமிழ்நாடு கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்படும் பிரிவுகள்:
1. Fitter - 04
2. Turner - 08
3. Machinist - 06
4. Electrician - 05
5. Welder (G&E) - 03
6. Electronic Mechanic - 01
7. Instrument Mechanic - 03
8. Mechanic R & A/C - 01
9. Carpenter - 01
10. PASAA - 04
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.igcar.ernet.in/recruitment/Advt_IGC_TA.pdf என்ற இணையதளத்தை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கிண்டி ஐ.டி.ஐ-யில்  பணிமனை உதவியாளர் பணிசென்னை, கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசினர் தொடர் அறிவுரை மையம் ஆகியவற்றில் காலியாகவுள்ள பணிமுனை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பணிமனை உதவியாளர் COPA (Computer Operator & Programming Assistant)பணி: பணிமனை உதவியாளர் Fitter (MARC - Mechanic Refrigerator and Air Condifioning)
பணி: பணிமனை உதவியாளர் MARC (Mechanic Refrigerator and Air Condifioning)
பணி: பணிமனை உதவியாளர் Cutting & Tailoring) மகளிர் மட்டும்
விண்ணப்பிக்கும் முறை: மேற்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது பெயர், கல்வித்தகுதி, தொழிற்நுட்ப கல்வி, சாதி விவரம், முன் அனுபவ விவரம், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களுடன் தங்களது விண்ணப்பத்தினை வருகின்ற 10.02.2016-க்குள் முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை - 32 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் பணி: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு
தமிழ்நாடு மருத்துவ  சார்நிலைப்  பணியில்  காலிப்  பணியிடங்களை  நிரப்பிட  தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அறிவிப்பு தமிழ்நாடு  மருத்துவத் துறையில் சார்நிலைப் பணியில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கு, மருத்துவப்  பணியாளர் தேர்வு வாரியத்தால் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
இப்பணியிடங்களுக்கான விரிவான அறிவிப்புகள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
செய்தி  வெளியீடு எண்: 074 தேதி: 03.02.2016
பதவியின் பெயர்: EEG / EMG Technician -12
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
பதவியின் பெயர்: Audio Metrician - 17
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
பதவியின் பெயர்: Prosthetic Craftsman - 64
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
பதவியின் பெயர்: Occupational Therapist - 18
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
பதவியின் பெயர்: Pharmacist - 333
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
பதவியின் பெயர்: Dark Room Assistant - 234
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
பதவியின் பெயர்: Lab.Technician Grade-II  - 524
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
தேர்வு வாரியத்தின் இணையதள முகவரியான ”www.mrb.tn.gov.in”-ல் ’Notification’ பகுதியில் வெளியிடப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளார்க் பணிஇந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 7 Lower Division Clerk (LDC) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். ICAR-CTRI-LDC-2-01/2016
பணி: Lower Division Clerk (LDC)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ctri.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தொலைதொடர்புத் துறையின் சென்னை மண்டலத்தில் உதவியாளர் பணிமத்திய அரசின் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Personnel Assistants - 02
பணி: Junior Accountants - 06
பணி: Stenographer - 03
பணி: Lower Division Clerks (LDC) - 14
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ccatn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

327 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 327 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சத்துணவு அமைப்பாளர்
காலியிடங்கள்: 327
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. பழங்குடி பிரிவினர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின் படி 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சத்துணவுப் பிரிவு) அல்லது சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களுக்கு சென்று சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.02.2016
சென்னை ஐ.ஐ.டி.யில் பல்வேறு பணிஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தின் சென்னையில் மையத்தில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத 70 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.  Superintending Engineer - 01
2.  Deputy Registrar - 02
3.  Assistant Registrar -  02
4.  Medical Officer - 03
5.  Technical Officer - 02
6.  Physical Education Officer - 01
7.  Junior Superintendent: - 04
8.  Junior Engineer - 01
9.  Junior Technical Superintendent - 09
10. Junior Technician - 17
11. Junior Assistant - 16
12. Security Guard - 12
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
மேலும் கல்வித்தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.iitm.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பதிவுத்துறையில் ஓட்டுநர் பணிசென்னை பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி ஓட்டுநர்  - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம்
வயதுவரம்பு: 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியின் மூலம் 8 வகுப்பு தேர்ச்சி பெற்று மோட்டார் வாகன உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், வாகனம் ஓட்டுவதில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்பப வேண்டிய அஞ்சல் முகவரி:
பதிவுத்துறைத்தலைவரின் நேர்முக பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம்,
எண்.100, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை- 600028
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.02.2016
டிப்ளமோ முடித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் பணிநீர்வழி மற்றும் ஆகாய வழிகள் மூலம் நமது சர்வதேச நீர் எல்லைகளைக் காப்பதில் பெரும் பங்கு வகித்து வரும் கடலோரக் காவல் படையின் (இந்தியன் கோஸ்ட் கார்டு) யாந்திரிக் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: 18 - 22க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புதமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கு வங்கியின் துணை விதி மற்றும் அரசு விதிகளின்படியும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம்  தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல் பெற்று பணி நியமனம் செய்யப்பட உள்ளது.  மேலும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும்
கீழ்க்காணும் தகுதிகள் பெற்ற மற்றும் கீழ்க்கண்ட இனத்துக்குரிய முன்னுரிமை/முன்னுரிமையற்ற பிரிவை சேர்ந்த இந்தியக் குடியுரிமையுடைய ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 15/02/2016 பிற்பகல் 5.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
பதவி: உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
மேலும் விவரங்கள் அறிய www.taicobank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

UPSC -யில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்புமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி. மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 112 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: சிவிலியன் மெடிக்கல் அதிகாரி - 49
பணி: பேராசியிர் (சைக்கியாட்ரி)  - 26
பணி: பேராசிரியர் (என்டோக்ரைனாலஜி) - 09
பணி: பேராசிரியர் (கேஸ்ட்ரோ- என்ட்ராலஜி) - 08
பணி: உதவி பேராசிரியர் (பிளாஸ்டிக் சர்ஜரி) - 08  இதர பிரிவுகளில் சேர்த்து மொத்தம் 112 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

2016ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் 5013 பணியிடங்கள்
2016 ஆம் ஆண்டில் தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 பணியிடங்க‌ள் வரும் ஆண்டில் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான திட்ட அறிக்கையை தேர்வாணையத்தின் தலைவர் கே.அருள்மொழி இன்று (ஜன.29) வெளியிட்டார்.
தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல்முறையாக சுற்றுலா வளர்ச்சித்துறையில் 5 அதிகாரி பணியிடத்தில் 5 காலியிடங்களும், எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. குருப் 3 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியில் 36 பணியிடமும், குருப் 4 பிரிவில் 4,931 காலியிடங்கள் என 5,513 பணியிடங்கள் நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய 9 தேர்வுகள் கனமழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டன. அவற்றிக்கான தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பதவி ஏற்றது முதல் 3 மாதங்களில் 12 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, 6 ஆயிரத்து 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று கூறினார்.
மேலும், இந்த ஆண்டு குருப் 1 பிரிவில் 29 துணை ஆட்சியர் பணியிடங்களும், 8 வணிகவரித்துறை உதவி ஆணையர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், 1 மாவட்டப் பதிவாளர் உட்பட 45 பணியிடங்களும், 65 உதவி சிறை அலுவலர் பணியிடமும், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியில் 172 பணியிடமும் நிரப்பப்பட உள்ளன.
இந்த ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் அடங்கிய குருப் 2 தேர்வில் நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகள் என பல்வேறு காலியிட விவரங்கள் வர வேண்டி உள்ளது என்று கூறினார்.
மேலும், புதிய திட்ட அறிக்கையை விவரங்களை அறிய தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மத்திய ஜவுளித்துறையில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புமத்திய அரசின் ஜவுளித்துறையின் செயல்பட்டு வரும் டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி-யில் காலியாக உள்ள கணக்காளர் மற்றும் கிளார்க் பணிக்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 15
பணி: Accountant Groub - B
பணி: Lower Division Clerk - Group-C
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.textilescommittee.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கால்நடை தீவன ஆராய்ச்சி மையத்தில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புஇந்திய கால்நடை தீவன ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள எல்டிசி பணிக்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Adv.No.: 02/2015-Rectt.cell
பணி: Lower Division Clerk - 14
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.igfri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
அணுசக்தி தாதுக்கள் ஆராய்ச்சி கழகத்தில் 146 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்புமத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அணுசக்தி தாதுக்கள் ஆராய்ச்சி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள 146 டெக்னிக்கல் அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர், ஸ்டெனோகிராபர், டெக்னீசியன், அப்பர் டிவிஷன் கிளார்க், ஓட்டுநர், ஒர்க் அசிஸ்டன்ட், செக்யூரிட்டி கார்டு போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 146
1. டெக்னிக்கல் அதிகாரி
2. ஆராய்ச்சி உதவியாளர்
3. ஸ்டெனோகிராபர்
4. டெக்னீசியன்
5. அப்பர் டிவிஷன் கிளார்க்
6. ஓட்டுநர்
7. ஒர்க் அசிஸ்டன்ட்
8. செக்யூரிட்டி கார்டு
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.amd.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
டிஆர்டிஓ ஆராய்ச்சி மையத்தில் 1142 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்புமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தில் (டிஆர்டிஓ) இந்த ஆண்டு 1142 பணியிடங்களுக்கான செப்டம் தேர்வுக்கான (CEPTAM-08) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட்
பணி: டெக்னீசியன்
பணி: நிர்வாரகம் மற்றும் இதர பணிகள் - 233
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.drdo.gov.in அல்லது http://www.drdo.gov.in/drdo/ceptam/advt-ceptam-08-advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ரயில்வே பாதுகாப்பு படையில் 2030 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்புசெகேந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.), ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை (ஆர்.பி.எஸ்.எப்.) போன்ற போலீஸ் பிரிவில் நிரப்பப்பட உள்ள 2030 கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியான இந்திய குடியுரிமை பெற்ற பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 2030
பணி: கான்ஸ்டபிள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.scr.indianrailways.gov.in  அல்லது www.rpfonlinereg.in  என்ற இணையதளங்களை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
146 உதவி, ஸ்டெனோ, கிளார்க், தொழில்நுட்பவியலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புஇந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் அணு மினரல்ஸ் டைரக்ட்டரேட் (AMD) நிறுவனத்தில் காலியாக உள்ள 146 உதவி, ஸ்டெனோ, கிளார்க், காவலர், தொழில்நுட்பவியலாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை: www.amd.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.amd.gov.in/misc/amd_advt_online_2016/amd/002DETAILED%20ADVERTISEMENT%20-%20ENGLISH.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
யுரேனிய கழகத்தில் மேலாண்மை டிரெய்னி பணிஇந்திய யுரேனியக் கழகத்தில் (Uranium Corporation of India Limited (UCIL)) மேலாண்மை டிரெய்னிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 06/2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy General Manager (Accounts) - 01
பணி: Chief Manager (Accounts) - 01
பணி: Manager (Accounts) - 01
பணி: Assistant Manager (Accounts) - 01
பணி: Assistant Manager (EDP) - 02
பணி: Management Trainee (CRD) - 01
பணி: Management Trainee (Personnel) - 01
பணி: Management Trainee (Accounts) - 01
பணி: Management Trainee (Environment Engineering) - 01
பணி: Management Trainee (Control Research & Development) - 01
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.2.2016.
மேலும் கல்வித்தகுதி, பணி அனுபவம், தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ucil.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இஇஜி தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள இஇஜி, இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
இஇஜி இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநர்களாக 12 பேரும், ஆடியோமெட்ரிசியன்களாக 17 பேரும், பிராஸ்தடிக் கிராஃப்ட்ஸ்மேன்களாக 64 பேரும், ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட்டுகளாக 18 பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.
w‌w‌w.‌m‌rb.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​  என்ற இணையதளத்தின் மூலமே பிப்ரவரி 10-க்குள் விண்ணப்பிக்க முடியும். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தில் அதிகாரி பதவிஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பான காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமான இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அதாரிடி ஆப் இந்தியா(ஐ.ஆர்.டி.ஏ) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 24
பணி: Junior Officer
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.irdai.gov.in/ADMINCMS/cms/frmGeneral_Layout.aspx?page=PageNo2730&flag=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
சிஆர்பிஎஃப்-ல் 229 சப்-இன்ஸ்பெக்டர் பணிமத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎஃப்) காலியாக உள்ள 229 சப்-இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ) பணிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி துணை ஆய்வாளர் (ஸ்டெனோ) Assistant Sub Inspector (Steno)விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19140_34_1516b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
புலனாய்வு துறையில் 69 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புமத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புலனாய்வு துறையில் காலியாக உள்ள 69 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்லது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Personal Assistant
காலியிடங்கள்: 69
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mha.nic.in/sites/upload_files/mha/files/DETAILEDADVERTISEMENT-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இளநிலை பயிற்சி அலுவலர் பணி2014 - 2015 ஆம் ஆண்டுக்கு தமிழக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக பூர்த்தி செய்ய பிப்ரவரி.1 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை பயிற்சி அலுவலர் (Junior training officer)
காலியிடங்கள்: 329
தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி  மற்றும் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://skilltraining.tn.gov.in/empowerjtst/pdf/jto_notification_tamil.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புசென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 இளநிலை உதவியளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்..001/PR33/2016,  தேதி: 13.01.201
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 45
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 75
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/JA-ADV-2016.pdf என்ற லிங்கை செய்து தெரிந்துகொள்ளவும்.
தமிழ் நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் பணிதமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித உற்பத்தி நிறுவனத்தில் (டி.என்.பி.எல்) நிர்வாக பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Manager (IT) - 01
பணி: Manager (Finishing House - 01
பணி: Management Trainee(R & D and QC) - 12
பணி: Management Trainee (Plantation) - 04கல்வித் தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., விவசாயத்துறையில் பி.எஸ்சி., அக்ரிகல்சர் அல்லது ஹார்டிகல்சர் அல்லது பாரஸ்ட்ரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/hr%20advt%2021jan2016.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
மத்திய அரசு துறைகளில் 60 அதிகாரி பணி: யூபிஎஸ்சி அறிவிப்புமத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக 60 அதிகராரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அசிஸ்டன்ட் டைரக்டர் (காஸ்ட்)
பணி: துணை ஆர்கிடெக்ட் (சி.பி.டபுள்யு.டி.)
பணி: அசிஸ்டன்ட் ஆர்கிடெக்ட் (சி.பி.டபுள்யு.டி.)
பணி: அசிஸ்டன்ட் ஆர்கிடெக்ட் (குடும்ப நலத்துறை)
தகுதி: சி.ஏ. மற்றும் ஆர்கிடெக்சர் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

முத்துப்பேட்டையில் கந்தூரி விழா:பிப். 19-இல் உள்ளூர் விடுமுறை


முத்துப்பேட்டை கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவையொட்டி, பிப். 19 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முத்துப்பேட்டை கந்தூரி சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதையொட்டி மாவட்டத்துக்கு பிப். 19 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக திருவாரூர் மாவட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பிப். 27 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
உள்ளூர் விடுமுறையான பிப். 19 இல் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் கருவூலகங்களும், சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Sunday, 7 February 2016

ரூ.20 ஆயிரம் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


ST
















திருவாரூர் நகரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். இதில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

புகார்

திருவாரூர் நகரில் காலாவதியான குளிர்பானங்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன் பேரில் மாவட்ட கலெக்டர் மதிவாணன் உத்தரவின்படி மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ் தலைமையில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு, அலுவலர்கள் பாலுசாமி, மணவழகன், ரெங்கராஜன், குருசாமி, விஜயகுமார், லோகநாதன், எழில்சகாயராஜா ஆகியோர் திருவாரூர் நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது காலாவதியான பிஸ்கட் போன்ற உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதி குறித்து ஆய்வு செய்தனர். அதில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாதிப்பு

காலாவதியான உணவு பொருட்கள் மற்றம் குளிர்பானங்கள் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அதற்கு உரிய தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் வாங்கும் பொருட்களின் தயாரிப்பு, உபயோகப்படுத்தும் காலங்கள் குறித்த விவரங்களை அவசியம் பார்க்க வேண்டும். தற்போது நடந்த ஆய்வில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உரிய முறையில் அழிக்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார். 

Saturday, 6 February 2016

ஊராட்சி அளவில் வேலைவாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நடைபெறவுள்ள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து மாவட்டத்தில் ஊராட்சி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் குறித்த முன்னேற்பாடு கூட்டத்தில் அமைச்சர் பேசியது:
நன்னிலம் அருகே சொரக்குடி ஆரூரான் தொழில்நுட்பக் கல்லூரியில் பிப். 14 ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதில் 350-க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று சுமார் 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளன. 8 முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள், பட்டயப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று பயன்பெறலாம்.
தவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் திறன் எய்தும் பயிற்சி பதிவும், வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்யப்படுகிறது.
முகாமில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பதால், வேலை தேடும் ஆண், பெண்கள் வேலைவாய்ப்புப் பெற இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஊராட்சித் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான தகவல்கள் முழுமையாக மக்களைச் சென்றடைய வைக்க வேண்டும்.
பிரசார வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அனைத்துத் தரப்பு மக்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான தகவலை கொண்டு சேர்க்க வேண்டும். மருத்துவத்துறையைப் பொருத்தவரை முகாம் நடைபெறும் தினத்தன்று சுழற்சி முறையில் மருத்துவர்களைப் பணியமர்த்த வேண்டும்.
போக்குவரத்துத் துறை முகாம் நாளில் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும். காவல்துறை தகுந்த பாதுகாப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. கல்வித் துறை ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகளை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக தனி அரங்கு அமைக்கப்பட்டு, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அவர்கள் இருப்பிடத்துக்குச் சென்று தகுதியானவர்களைத் தேர்வு செய்ய உள்ளனர் என்றார் காமராஜ்.
முன்னதாக, வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ள வளாகத்தை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.

Friday, 5 February 2016

குடியரசு தலைவர் மாளிகையில் 66 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 66 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: A-3301/6/08-Estt.
பணி: Mail (New Delhi)
காலியிடங்கள்: 58
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
பணி: Mail (Bolarum (Hyderabad)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
பணி: Mail Mashobra (Shimla)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 29.02.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.02.2016
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy Secretary (ESTT),
President's Secretarait,
Rashrrapati Bhavan, New Delhi - 110 004.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rashtrapatisachivalaya.gov.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 4 February 2016

ஸிகா வைரஸூக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு


பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வரும் ஸிகா வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "பாரத் பயோடெக்' நிறுவனம் அறிவித்துள்ளது.
விரைவில் அந்தத் தடுப்பு மருந்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்கள் மூலம் ஸிகா வைரஸ் பரவுகிறது. உகாண்டா நாட்டில் உள்ள ஸிகா என்ற வனப்பகுதியில் கடந்த 1947-ஆம் ஆண்டு இந்த வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களில் குறைந்த அளவு பரவி வந்த இந்த வைரஸின் தாக்கமானது, கடந்த 2007-ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு அருகே உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 சதவீதம் பேரைத் தாக்கியது.
அதன் பிறகு பிரேசிலில் கடந்த ஆண்டு முதல் ஸிகா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கும் அதன் தாக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கையின்படி, 23 நாடுகளில் ஸிகா வைரஸ் பாதிப்பு உள்ளது. கர்ப்பிணிப் பெண்களை ஏடிஸ் வகை கொசுக்கள் கடித்து ஸிகா வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு கை, கால்கள் நீண்டோ அல்லது தலை சிறுத்தோ இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தேங்கிய நீரில் உருவாகும் ஸிகா வைரஸ் கொசுக்கள், பகல் வேளைகளில் மட்டுமே கடிக்கும். இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு கடுமையான காய்ச்சல் இருக்கும்.
தடுப்பு மருந்து: இந்நிலையில், அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் இந்த ஸிகா வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக "பாரத் பயோடெக்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா, ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஸிகா வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் எங்களது ஆய்வுக் கூடத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது அந்த ஆராய்ச்சியில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
ஸிகா வைரûஸ ஒழிக்கவல்ல தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் அது பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். இந்தியாவில் அந்த வகை வைரஸ்களின் தாக்கம் எதுவுமில்லை என்றாலும், பாதிப்புக்குள்ளான வெளிநாட்டினருக்கு இந்தத் தடுப்பு மருந்துகள் உதவும்.
உலகிலேயே ஸிகா வைரஸூக்கு முதன்முதலாக தடுப்பு மருந்து கண்டுபிடித்த பெருமை நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குநர் டாக்டர் சுமதி கூறியதாவது:
ஸிகா வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வந்தன. பிரேசிலில் அந்த வைரஸின் தாக்கம் வீரியமடைந்ததை அடுத்து, இந்தத் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் எங்களுக்கு புதிய உத்வேகம் பிறந்தது.
அதன் விளைவாகவே தடுப்பு மருந்தைக் கண்டறிய முடிந்தது. கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைப்பேறு அடையும் வயதுடைய பெண்களுக்கும் இந்தத் தடுப்பு மருந்து மிகவும் அவசியம் என்றார் அவர்.
மத்திய அரசு நடவடிக்கை: ஸிகா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கர்ப்பிணிப் பெண்கள், அத்தகைய நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸிகா வைரஸ் தாக்கமானது இந்தியாவில் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக மத்திய சுகாதாரத் துறை இயக்குநரகம் சார்பில் கூட்டுக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆதார்' இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட்

'ஆதார் அட்டை இருந்தால், மூன்றே நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம், அமல்படுத்தப்பட்டு உள்ளது,'' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பால
முருகன் கூறினார்.

இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:
சாதாரண முறையில் விண்ணப்பிக்கும் போது, போலீஸ் அறிக்கை பெற்று, பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு கட்டணம், 1,500 ரூபாய். இந்த நடைமுறையை, வெளியுறவு துறை அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது. இனிமேல் சாதாரண முறையில், 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் போது, 'ஆதார்' அட்டை, 'பான்கார்டு' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சுய ஒப்புதல் அளிக்கும் இணைப்பு - 1 படிவம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பம் வழங்கினால், போலீஸ் அறிக்கை பெறாமல், பாஸ்போர்ட் வழங்கப்படும். இதன்பின், போலீஸ் அறிக்கை பெறப்படும்.

பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்க, புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும், 'தத்கல்' முறையும் அமலில் உள்ளது; அதற்கு கட்டணம், 3,500 ரூபாய்.

வசதியான நேரம்
ஆவணங்கள் சரிபார்ப்பு பணிக்கு, விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக, 'ஆன்லைனில்' தேதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பெற வேண்டும். திங்கள் முதல், வெள்ளிக் கிழமை வரையிலான, ஐந்து நாட்களில், எந்த நாளிலும் வசதிப்பட்ட நேரத்தில் நேரில் ஆஜராவதை, ஆன்லைனில் உறுதி செய்யலாம். ஒரு முறை உறுதி செய்த தேதியை, மாற்றிக் கொள்ளவும் முடியும்.

மொபைலில் அறிக்கை
போலீஸ் அறிக்கை பெற, விண்ணப்பதாரரின் விவரங்கள், மொபைல் போன் மூலம் அனுப்பும் முறை, தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வர உள்ளது. போலீசாரின் மொபைல் போனுக்கு, விண்ணப்பதாரரின் விவரங்கள் அனுப்பப்பட்டு, போலீஸ் சரிபார்ப்பு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட, 21 நாட்களுக்கு முன், மொபைல் போன் மூலம் அறிக்கையை பெற முடியும். பாஸ்போர்ட் உதவி
மையங்கள், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படுகின்றன; இதற்கு, சேவை கட்டணம், 100 ரூபாய்.

நீட்டிப்பு
மழை வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமடைந்தோருக்கு, கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட் வழங்கும் வசதி, பிப்., 7 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் தொடர்பான விசாரணைகள் மற்றும் ஆவணங்களை பெற, பாஸ்போர்ட் அலுவலகங்களில், சமூக தணிக்கை மையம் துவங்கப்பட்டு உள்ளது. ஹஜ் பயணத்துக்கு பாஸ்போர்ட் கோருபவர்கள், பிப்., 8 வரை விண்ணப்பம் அளிக்கலாம். இவ்வாறு பாலமுருகன் கூறினார்.


விண்ணப்பதாரர்கள், 1,500 ரூபாய் கட்டணத்துடன், ஆதார் அட்டை, பான்கார்டு மற்றும் சுய ஒப்புதல் அளிக்கும் இணைப்பு - 1 படிவம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கினால், போலீஸ் அறிக்கை பெறாமல் பாஸ்போர்ட் வழங்கப்படும்.

Wednesday, 3 February 2016

ஸிகா வைரஸ்: பீதி அடைய வேண்டாம்


ஸிகா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் எதுவும் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதால், யாரும் பீதி அடைய வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸிகா வைரஸ் குறித்து தமிழக அரசின் சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சென்னையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய்பாஸ்கர் கூறியது:
ஸிகா வைரஸ் பாதிப்பு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக உள்ளதால் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஸிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும், தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய் பரவுவதற்கு காரணமான, ஏடிஸ் வகை கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வட்டத்துக்கும் 10 நபர்கள், ஒரு பேரூராட்சிக்கு 20 பேர், மாநகராட்சிகளில் தேவையான தாற்காலிகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் குழுக்களாகச் சென்று கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து, அழிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதற்காக 9,861 புகை அடிப்பான்கள், வாகனத்தில் பொருத்தப்பட்ட 247 புகை அடிப்பான்கள், கூடுதலாக கையால் எடுத்துச் செல்லப்படும் 175 புகை அடிப்பான்கள், வாகனத்தில் பொருத்தப்படும் 25 புகை அடிப்பான்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
ஏடிஸ் வகை கொசுக்களை ஒழிப்புப் பணி முழு வீச்சில் நடைபெறுவதால், நோய் பரவ வாய்ப்பு அறவே இல்லை என்றார்.
இதையடுத்து, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது: நோயின் அறிகுறிகளுக்கேற்ப இப்போது புழக்கத்தில் உள்ள மருந்துகளைக் கொண்டே நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
தேவையான மாத்திரைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பு உள்ளது. மேலும் விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகிய இடங்களில் இந்த நோய்கள் தாக்கிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஸிகா வைரஸ் அறிகுறிகள் உள்ளதா என்றும் பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tuesday, 2 February 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 02/02/2016

நமதூர் காட்டுப்பள்ளி தெரு மர்ஹும் முஹம்மது யாசின் அவர்களின் மனைவியும் மர்ஹும்  அப்துல்  ஹக் அவர்களின் தாயாருமான ஹவ்வா பீவி அவர்கள் மௌத் .

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரின் ஜனாசா  2/2/2016.  செவ்வாய் இன்று இரவு 9  மணிக்கு நமது முஹ்யீத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


Monday, 1 February 2016

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் அருகேயுள்ள அடியக்கமங்கலம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தத்துக்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் ஆய்வு செய்தார்.
அப்போது ஆட்சியர் கூறியது:
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜன. 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 1.1.2016 தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்து, இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தனர்.
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் விண்ணப்பங்கள் மாவட்டம் முழுவதும் 652 நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. வாக்குச்சாவடி மையங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. வாக்காளர் பட்டியல்களை www.elections.tn.gov.in என்ற வலைதளத்தில் காணலாம் என்றார் மதிவாணன்.
ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் உடனிருந்தார்.

நமதூர் மௌத் அறிவிப்பு 01/02/2016

நமதூர் ஜெயம் தெரு சின்னக்கனி வீட்டு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் ,  வெங்கலம் ஜபருல்லாஹ் , நடுத்தெரு பாபு என்கிற சேக் அலாவுதீன் இவர்களின் மாமியாருமான   சிராஜின்னிசா அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரின் ஜனாசா 1/2/2016. திங்கள் மாலை 4 மணிக்கு நமது முஹ்யீத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.