நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் ஹாஜி வி.எஸ்.என்.முஹம்மது ஆதம் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் பிரதிநிதிகள் கடந்த 2018 அக்டோபர் 22 அன்று அதிகாலை நேரத்தில் பொறுப்பு ஏற்று மூன்று ஆண்டுகள் இனிதே நிறைவு செய்து உள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்....
*நாட்டாண்மை தலைவரானார்*
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் பைலா சட்டப்படி மூன்று ஆண்டுகள் நிர்வாகம் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1966 ஆண்டு பைலாவில் கடந்த 2010 ஆண்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் நாட்டாண்மை முறை இருந்ததை தலைவர் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
முதல் தலைவராக ஜமாஅத் தேர்தல் அதிகாரிகள் முலமாக மஹாஜன சபை கூட்டத்தில் புதுமனைத்தெரு A.M.ரபீயூதீன் அவர்களிடம் கடைசி நாட்டாண்மை நடுத்தெரு செ.மு.மு.கலிலூர் ரஹ்மான் 2012 மார்ச் 4 அன்று பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இரண்டாவது தலைவராக வக்ப்வாரிய தேர்தல் அதிகாரி நடத்திய தேர்தல் மூலமாக மஹாஜன சபை கூட்டத்தில் ஜெயம் தெரு M.M.ஜலாலுதீன் அவர்களிடம் 2015 மார்ச் 22 அன்று பொறுப்புகளை ஓப்படைத்தார் விடை பெறும் தலைவர் ரபீயூதீன்.
மூன்றாவது தலைவர் தேர்தல் நீதிமன்றம் வழக்கு தடை காரணமாக சுமார் 8 மாதங்கள் கழிந்து 2018 அக்டோபர் 21 அன்று மாலை நடந்த ஜமாஅத் தேர்தல் அதிகாரிகள் மூலமாக தேர்தல் மஹாஜன சபை கூட்டத்தில் 423 ஜமாஅத் அங்கத்தினர்கள் வாக்கு பதிவு செய்து மேலத்தெரு வி.எஸ்.என்.முஹம்மது ஆதம் அவர்கள் அதிகாலை 2:55 மணிக்கு பொறுப்புகளை ஜலாலுதீன் அவர்களிடம் இருந்து பெற்று கொண்டார்.
தற்போது நான்காவது தலைவர் தேர்தல் நடைபெற வேண்டும் .ஆனால் மஹாஜன சபை கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி நாள் அறிவிப்பு செய்யப்பட்டது. இதுவரை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடபடவில்லை என்பது நாம் அறிந்ததே. தற்போது வக்ப் வாரியமிடம் சென்று தேர்தல் நடைமுறை நிறுத்தி வைத்து காலதாமதம் ஏற்படுத்துவதாக உள்ளது என ஜமாஅத் அங்கத்தினர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
காலதாமதம் இல்லாமல் விரைவில் புதிய நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் பொறுப்பு ஏற்கும் நிலையை சமபந்தப்பட்டவர்கள் ஏற்படுத்தி தர வல்ல அல்லாஹ் துணை புரிவானாக ஆமீன்
22.10.2021
No comments:
Post a Comment