Friday, 29 October 2021

#கொடிக்கால்பாளையம் மழை





 

ஜனாஸா அறிவிப்பு

 நமதூர் மேலத்தெரு தேங்காய் வீட்டு A.முஹம்மது காசிம் அவர்களின் துணைவியாரும், M.தாரிக் அஹமது மற்றும் M.ஷாஜஹான் அவர்களின் தாயாருமான ஜெகபர் நாச்சியா அவர்கள் மௌத். 


 அன்னாரின் ஜனாசா நாளை (30/10/2021) காலை 11:00 மணிக்கும் மேலத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் முன்னாள் தலைவர் ஆதம் வெளியிட்ட அறிக்கை


 

Thursday, 28 October 2021

#கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு 28.10.2021

 


நடுத்தெரு குள்ள கத்தரிக்காய் வீட்டு ஜனாப் S.E.P.முஹம்மது காசிம் அவர்களின் மருமகனும் M.சேக் தாவூது . M. அப்துல் முத்தலிப் அவர்களின் மச்சானும் N. அப்துல் மஜீது. N. அப்துல் கபூர் அவர்களின் தகப்பனாருமாகிய. A. நூர் முஹம்மது அவர்கள் அப்துல்கலாம் நகரில் மௌத். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


 இன்று.மாலை 5 மணிக்கு முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

Sunday, 24 October 2021

மௌத் அறிவிப்பு


 

அவசர மஹாஜன சபை கூட்டம்



 நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை அவசர மஹாஜன சபை கூட்டம் ஜமாஅத் துணை தலைவர் ப.மு.ஹபீபுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய நிருவாகிகளாக ஐவர் குழு தேர்ந்தெடுக்கபட்டது.


 அதன் விபரங்கள்


 தலைவர் 

ஹாஜி.செ.மு.மு.முஹம்மது ஷாபி

செயலாளர்

ஹாஜி M.M.ஜலாலுதீன்

துணைத்தலைவர்

ஹாஜி A.M.ரபியூதீன் 

முத்தவல்லி

ஹாஜி S.M.A.ஜெஹபர் சேக் அலாவூதீன்

கேஷியர் 

ஹாஜி. த.மு.மு.அப்துல் ஜலீல்

 2310.2021 


















 நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் அவசர மஹாஜன சபை கூட்டம் தற்போது நடைபெற உள்ளது.


 அனைத்து ஜமாஅத் அங்கத்தினர்களும் கலந்து கொள்ள உடனே பள்ளிவாசல் மஃஸூம் மஹால் வருமாறு கேட்டு கொள்கிறோம்.

Friday, 22 October 2021

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் நிர்வாகம் பதவிக்காலம் நிறைவு


 நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் ஹாஜி வி.எஸ்.என்.முஹம்மது ஆதம் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் பிரதிநிதிகள் கடந்த 2018 அக்டோபர் 22 அன்று அதிகாலை நேரத்தில் பொறுப்பு ஏற்று மூன்று ஆண்டுகள் இனிதே நிறைவு செய்து உள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

*நாட்டாண்மை தலைவரானார்* 

 நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் பைலா சட்டப்படி மூன்று ஆண்டுகள் நிர்வாகம் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

 1966 ஆண்டு பைலாவில் கடந்த 2010 ஆண்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் நாட்டாண்மை முறை இருந்ததை தலைவர் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 


 முதல் தலைவராக ஜமாஅத் தேர்தல் அதிகாரிகள் முலமாக மஹாஜன சபை கூட்டத்தில் புதுமனைத்தெரு A.M.ரபீயூதீன் அவர்களிடம் கடைசி நாட்டாண்மை நடுத்தெரு செ.மு.மு.கலிலூர் ரஹ்மான் 2012 மார்ச் 4 அன்று பொறுப்புகளை ஒப்படைத்தார்.


 இரண்டாவது தலைவராக வக்ப்வாரிய தேர்தல் அதிகாரி நடத்திய தேர்தல் மூலமாக மஹாஜன சபை கூட்டத்தில் ஜெயம் தெரு M.M.ஜலாலுதீன் அவர்களிடம் 2015 மார்ச் 22 அன்று பொறுப்புகளை ஓப்படைத்தார் விடை பெறும் தலைவர் ரபீயூதீன். 


 மூன்றாவது தலைவர் தேர்தல் நீதிமன்றம் வழக்கு தடை காரணமாக சுமார் 8 மாதங்கள் கழிந்து 2018 அக்டோபர் 21 அன்று மாலை நடந்த ஜமாஅத் தேர்தல் அதிகாரிகள் மூலமாக தேர்தல் மஹாஜன சபை கூட்டத்தில் 423 ஜமாஅத் அங்கத்தினர்கள் வாக்கு பதிவு செய்து மேலத்தெரு வி.எஸ்.என்.முஹம்மது ஆதம் அவர்கள் அதிகாலை 2:55 மணிக்கு பொறுப்புகளை ஜலாலுதீன் அவர்களிடம் இருந்து பெற்று கொண்டார். 


 தற்போது நான்காவது தலைவர் தேர்தல் நடைபெற வேண்டும் .ஆனால் மஹாஜன சபை கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி நாள் அறிவிப்பு செய்யப்பட்டது. இதுவரை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடபடவில்லை என்பது நாம் அறிந்ததே. தற்போது வக்ப் வாரியமிடம் சென்று தேர்தல் நடைமுறை நிறுத்தி வைத்து காலதாமதம் ஏற்படுத்துவதாக உள்ளது என ஜமாஅத் அங்கத்தினர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.


 காலதாமதம் இல்லாமல் விரைவில் புதிய நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் பொறுப்பு ஏற்கும் நிலையை சமபந்தப்பட்டவர்கள் ஏற்படுத்தி தர வல்ல அல்லாஹ் துணை புரிவானாக ஆமீன்

 22.10.2021


Thursday, 21 October 2021

மௌத் அறிவிப்பு

நமதூர் மேலத்தெரு மர்ஹூம் முஹம்மது ஜூபைர் அவர்களின் மகனாரும் , கவிஞர் ஜிப்ரீல் அவர்களின் சகோதரரும் , செ.மு.மு முஹம்மது ஷாஃபி அவர்களின் மச்சானுமாகிய *E.M அக்பர்* அவர்கள் தெற்குத்தெரு ஷாஃபி அவர்களின் இல்லத்தில் மெளத். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்


அன்னாரின் ஜனாசா வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மேலத்தெரு பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்

Wednesday, 13 October 2021

கொடிக்கால்பாளையம்

 


கொடிக்கால் பாளையத்தில் முக்கிய சாலையான மாஸ்டர் கடை அருகில் உள்ள சந்திப்பில் பாதாள சாக்கடை வேலை நடந்துகொண்டு இருக்கின்றதுகொடிக்கால் பாளையத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் ஆசாத்நகர் வழியாகவும் ராமரோட வழியாகவும் செல்லவும்