வங்கதேசத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா மிகப் பெரும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்தலில் வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மொத்தமுள்ள 350 நாடாளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சி, இதுவரை 281 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது அக்கட்சி முந்தைய தேர்தல்களில் பெற்ற வெற்றியைவிட கூடுதலான இடங்கள் ஆகும்.
தேர்தல் முறைகேடு புகார்கள், வாக்குசாவடிகளை கைப்பற்றுதல் மற்றும் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட இத்தேர்தலை ''ஒரு கேலிக்கூத்தான தேர்தல்'' என்று வங்கதேச எதிர்க்கட்சிகள் வர்ணித்துள்ளன.
எதிர்க்கட்சிகள் இதுவரை 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகளை ஏற்காத எதிர்கட்சிகள் மறுதேர்தல் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன.
''இதுபோன்ற கேலிக்கூத்தான தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் தவிர்த்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்'' என்று எதிர்க்கட்சி தலைவர் கமல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
''நடுநிலை அரசு ஒன்றின் மேற்பார்வையில் மிக விரைவில் ஒரு புதிய நாடாளுமன்ற தேர்தல் நடத்திட வேண்டும்'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment