திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வருவாய் பிரிவில் நகராட்சி, ஊராட்சி உள்பட பல்வேறு அரசு துறைகளில் மின் கட்டணம் செலுத்தப்படுவது வழக்கம். இந்த பிரிவில் அதிக பணம் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வருவாய் பிரிவில் உள்ள கணக்குகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மின் கட்டணம் செலுத்த அரசு துறை சார்பில் வழங்கப்படும் தொகையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று இருப்பது தெரிய வந்தது.
இதில் மன்னார்குடி மின்வாரிய அலுலகத்தில், வருவாய் பிரிவில் பணிபுரியும் வருவாய் மேற்பார்வையாளர் பர்வீன்நிஷா(வயது 38) என்பவர் ரூ.18 லட்சம் கையாடல் செய்து இருப்பது தெரிய வந்தது. இதேபோல் திருவாரூர் வருவாய் பிரிவு வருவாய் மேற்பார்வையாளர்கள் ஆனந்த்(35) என்பவர் ரூ.5 லட்சமும், அருள்நாதன்(50) என்பவர் ரூ.50 ஆயிரமும் கையாடல் செய்து இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன், வருவாய் மேற்பார்வையாளர்கள் ஆனந்த், அருள்நாதன், பர்வீன்நிஷா ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவி்ட்டார். மேலும் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது.
No comments:
Post a Comment