மின்னணு கட்டண பரிமாற்றம் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு பெற 14444 என்ற இலவச உதவி எண்களை ஐடி துறை அமைப்பான நாஸ்காம், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் நிதி ஆயோக் ஒருங்கிணைந்து விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிஜிட்டல் பணபரிவர்த்தனை தொடர்பான முதல் அமைச்சர்கள் குழுவின் நான்காவது கூட்டம் நடைபெற்றது. இதன் ஒருங்கிணைப்பாளர் சந்திரபாபு நாயுடு பின்னர் கூறுகையில், “ நாடு முழுவதும் ரொக்கமில்லா பணபரிவர்த்தனைக்கு ஆயத்தமாகும் வகையில், ஒருலட்சம் பி.ஓ.எஸ் இயந்திரங்கள் இறக்குமதி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது” என்றார்.
நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனாகாரியா கூறுகையில், “ டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவு பெற ஐடி துறை அமைப்பான நாஸ்காம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அரசு தொலைபேசி எண்ணை உருவாக்கி வருகிறது. உதவி எண்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.
No comments:
Post a Comment