: #கொடிக்கால்பாளையம் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளியில் கொடிக்கால்பாளையம் அங்கன்வாடி மையம் சார்பில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று 16.09.2022 பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.
இதில் பள்ளி தலைவர் சுல்தான் அப்துல் காதர் தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் பெனாசிர் ஜாஸ்மின், ஷகிலா பானு,நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜகுரு ,அங்கன்வாடி பணியாளர் காமாட்சி பள்ளி செயலாளர் முஹம்மது யூசப் சாதிக்,பொருளாளர் முஹம்மது ஜலீல், நிர்வாக குழு உறுப்பினர்கள் முஹம்மது அப்துல் வஹாப், நிஜாமுதீன், ஜெஹபர் சாதிக் மற்றும் தலைமை ஆசிரியை அமர்னிசா பேகம் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சத்தான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பழங்கள் காய்கறிகள் சத்து மாவு கொழுக்கட்டை கடலை மிட்டாய் பொறி உருண்டை உள்ளிட்ட உணவுபொருட்களின் விளக்கத்துடன் மாணவ மாணவிகளின் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment