Friday, 30 September 2022
Thursday, 29 September 2022
Wednesday, 28 September 2022
Tuesday, 27 September 2022
Monday, 26 September 2022
நமதூர் மௌத் அறிவிப்பு
26.09.2022
நமதூர் வடக்குத்தெரு குன்னூரார் வீட்டு மர்ஹும் தெ.ரா.முகமது இப்ராஹிம் அவர்களின் இளைய மகளும், துளசியாப்பட்டினம் மர்ஹும் ஹமீது மரைக்காயர் அவர்களின் மனைவியும், பாபு என்கின்ற ஜெஹபர் ஷேக் பகுருதீன் அவர்களின் சிறிய தாயாரும், டிரைவர் முகமது அலி ஜின்னா
அவர்களின் சின்ன மாமியாரும், ஷாகுல் ஹாஸ் தாவூது அவர்களின் சின்ன பாட்டியாரும் ஆகிய செவத்தாச்சி என்கின்ற *ஹலிமா பிவி* அவர்கள் வடக்கு தெருவில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாசா நாளை 27/09/2022, செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Sunday, 25 September 2022
Friday, 23 September 2022
Thursday, 22 September 2022
Wednesday, 21 September 2022
Tuesday, 20 September 2022
Monday, 19 September 2022
வெளியூர் மௌத் அறிவிப்பு
நமதூர் வடக்கு தெரு உள்ளாகுஞ்சு வீட்டு மர்ஹூம் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனாரும் ,மர்ஹூம் ஹாஜா சேக் அலாவுதீன் ,அப்துல் மாலிக் இவர்களின் சகோதரரும், ஹாஸ் பதாவுதீன் ,முஹம்மது ஹாரிஸ் இவர்களின் தகப்பனாருமான பஷீர் அஹமது அவர்கள் புறாக்கிராமம் கட்டுமாவடியில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.
அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 மணிக்கு கட்டுமாவடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Sunday, 18 September 2022
வெளியூர் மௌத் அறிவிப்பு
நமதூர் கொடிக்கால் பாளையம் பர்மா தெரு, கருவேப்பிள்ளை வீட்டு மர்ஹும் ஜெகபர் அவர்களின் கொழுந்தியாவும், சுல்தான் அப்துல் காதர் அவர்களின் சிறிய தாயாரும், அகமது கபீர், அஸ்கர் இவர்களின் பெரியம்மாவும், எரவாஞ்சேரி மர்ஹும் A.அப்துல் ரஹீம் அவரின் மனைவியுமான தங்கம்மா என்கிற *ஹாஜிரா பேகம்* அவர்கள் எரவாஞ்சேரியில் தனது இல்லத்தில் மொவுத்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணியளவில் எரவாஞ்சேரியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Saturday, 17 September 2022
Friday, 16 September 2022
கொடிக்கால்பாளையம் ஊட்டச்சத்து மாதம் விழா
: #கொடிக்கால்பாளையம் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளியில் கொடிக்கால்பாளையம் அங்கன்வாடி மையம் சார்பில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று 16.09.2022 பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.
இதில் பள்ளி தலைவர் சுல்தான் அப்துல் காதர் தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் பெனாசிர் ஜாஸ்மின், ஷகிலா பானு,நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜகுரு ,அங்கன்வாடி பணியாளர் காமாட்சி பள்ளி செயலாளர் முஹம்மது யூசப் சாதிக்,பொருளாளர் முஹம்மது ஜலீல், நிர்வாக குழு உறுப்பினர்கள் முஹம்மது அப்துல் வஹாப், நிஜாமுதீன், ஜெஹபர் சாதிக் மற்றும் தலைமை ஆசிரியை அமர்னிசா பேகம் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சத்தான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பழங்கள் காய்கறிகள் சத்து மாவு கொழுக்கட்டை கடலை மிட்டாய் பொறி உருண்டை உள்ளிட்ட உணவுபொருட்களின் விளக்கத்துடன் மாணவ மாணவிகளின் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.