Thursday, 31 January 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 31/01/2019

☪ *KOM NEWS ONLY* 🕌


 *வெளியூர் மௌத் அறிவிப்பு 31/01/2019*

நமதூர் தெற்குத்தெரு K.V.S.அப்துல் காதர் அவர்களின் மைத்துனரும் , நடுத்தெரு போஸ்ட் துரை என்கிற சுல்தான் அப்துல் காதர் அவர்களின் சம்பந்தரும் K.ருக்னுதீன் ,K.சபியுதீன் இவர்களின் தகப்பனாருமான ஹாஜி A.கியாசுதீன் அவர்கள் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு தனது இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை 4 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நடைபெறும்.

Saturday, 26 January 2019

இந்திய குடியரசின்70 வது ஆண்டு கொண்டாட்டம்

☪ KOM NEWS ONLY 🕌

 *நமதூரில் குடியரசு தினத்தின் 70வது ஆண்டு கொண்டாட்டம்*

 நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் அலுவலகத்தில் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஆதம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் நிர்வாகஸ்தார்கள்,பிரதிநிதிகள், ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.

நமதூர் மத்லபுல் கைராத் மழலையர் தொடக்க பள்ளி யில் நடைப்பெற்ற விழாவில் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஆதம் தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சுழற்கோப்பைகளையும் சான்றிதழை வழங்கி பாராட்டி பேசினார்.இதில் நிர்வாகஸ்தர்கள் பிரதிநிதிகள் பெற்றோர் கள் கலந்து கொண்டனர்.



தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நகர அலுவலகத்தில் தேசிய கொடியை முன்னாள் தலைவர் வெங்கலம் ஜபருல்லா ஏற்றி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் பஜ்ருல் ஹக் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நமதூர் பேருந்து நிறுத்தம் அருகே தமுமுக மற்றும் மனித நேய தொழிற்சங்கம் சார்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஆதம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் தமுமுக மாவட்ட தலைவர் பஜ்ருல் ஹக் உள்ளிட்ட நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


26/01/2019

Tuesday, 22 January 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 22/01/2019

☪ *KOM NEWS ONLY* 🕌



நமதூர் சூஃபி நகர் தெற்கு தெரு கறிக்கடை மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம்   அவர்களின் சம்மந்தியும் நல்லப்பா என்கிற இனாயத்துல்லா அவர்களின் மாமியாரும் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் பாட்டியாருமான ரஹ்மத்துக்கனி அவர்கள் காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் சோத்தூரில் மௌத்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா 23/01/2019 புதன்கிழமை காலை 10:30 மணிக்கு நல்லம்பலில் நல்லடக்கம் செய்யப்படும்.

நமதூர் மௌத் அறிவிப்பு 22/01/2019




நமதூர் நடுத்தெரு சின்னக்கனி வீட்டு மர்ஹூம் மு.இ.மு. அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகளும் மு.சேக் முஹம்மது அவர்களின் சகோதரியும் முஹம்மது அலி அவர்களின் மனைவியுமான சிராஜ்நிசா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா  புதன்கிழமை காலை 9:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

 *கொடிக்கால்பாளையம்*

Sunday, 20 January 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 20/01/2019

நமதூர் ஜெயம்தெரு கருவேப்பிலை வீட்டு மர்ஹூம் ரஹ்மத்துல்லா அவர்களின் மனைவி ஆசியாம்மாள் அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம்






Thursday, 17 January 2019

பாஜக தலைவர் அமித்ஷாவிற்கு காய்ச்சல்

காய்ச்சல் பாதிப்பால் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.

பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் பாஜக தலைவர் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதி என ஏ.என்.ஐ தகவல். #AmitShah #AIIMS

Tuesday, 15 January 2019

கொடிக்கால்பாளையம் பாச்சோற்று பெருவிழா சிறப்புகள்



 *பாச்சோற்றுப்பெருவிழா*

இச்சிறப்பு மிக்க கொடிக்கால்பாளையத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சியை நினைவு கூறும் முகத்தான் இப்பெருவிழா வருடா வருடம் ஜமாத்துல் அவ்வல் மாதம் பிறை 9ல் பாச்சோற்று ப்பெருநாள் எனப்படும் இப்பெருவிழாவாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் எனப்படும் இப்பள்ளிவாசல் வளாகத்தில் தங்கியிருந்த மஹான் சைய்தினா சைய்யது மஃஸூம் சாஹிப் (ஒலி) அவர்கள் ஒரு சிறு ஆலம் விழுதை ஊன்றியதைக் கொண்டு அது பெருமரமாகி இப்பகுதி தற்போதும் " *ஆலமரத்து மேடை* "  *மஃஸூம் மஹால்* " என்று வழங்கப்படுகிறது.

மஹான் அவர்கள் தம்மை காணவருபவர்களுக்கு நமது தீனுல் இஸ்லாத்தின் கடமைகளை நல்லுஉபதேசங்களாக செய்து அக்காலத்தில் உணவு சமைக்க ப்பயன்ப்பட்ட மடா எனப்படும் மண்பானையில் 5 படி பச்சை அரிசி 5 சேர் சர்க்கரை 5 தேங்காய்களைக் கொண்டு பாகுச்சோறு எனப்படும் பாச்சோறு சமைத்து அனைவர்களுக்கும் பகிர்தளித்து வல்ல இறைவனிடம் தம்முடைய தேவைகளை மனமுருகி கேட்டு பிராத்திக்க வேண்டுமாய் அறிவுறுத்தி உள்ளார்கள்.

தொடக்கத்தில் ஒரு சில மடாக்களாக இருந்த இந்நிகழ்ச்சி தற்போது பெருகி ஆயிரத்திற்கு அதிகமான மடாக்கள் வந்து கொண்டுள்ளன என்பது இதன் சிறப்பாகும். மேலும் அனைவர்களும் ஜாதி மத பேதமின்றி மனித நேய மதநல்லிணக்க விழாவாக இப்பெருவிழா நடைபெறுவது இப்பெருவிழாவின் தனிப்பெறும் சிறப்பாகும்.

இவ்வாறான விழா நமது தாய் திருநாட்டின் வேறு எங்கும் அறியப்படாத விழாவாக உள்ளதால் இவ்விழா கொடிக்கால்பாளையத்தின் சிறப்புகளின் சிறப்பாகும்.

வஸ்ஸலாம்,

 *மர்ஹூம் ஹாஜி கோ.மு.உபைதுல்லாஹ்*
 *முன்னாள் நாட்டாண்மை*
 *முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத்*


 *புதிய பள்ளிவாசல் வக்ப் திறப்புவிழா சிறப்பு மலர் 2008 ல் வெளியிடப்பட்டது.*

15/01/2019

🌹 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*🖋

Sunday, 13 January 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 13/01/2019

☪ *KOM NEWS ONLY* 🕌


*
நமதூர் சூஃபி நகர் நடுத்தெரு மர்ஹூம் முஹம்மது நத்தர் அவர்களின் மகனாரும் சமீர் மளிகை சதக்கத்துல்லா ,இனாயத்துல்லா இவர்களின் தகப்பனாருமாகிய முஹம்மது ஜெஹபர் அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நடைபெறும்.

Saturday, 12 January 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 12/01/19



நமதூர் காயிதே மில்லத் தெரு மில்லுக்கார வீட்டு மேலத்தெரு முன்னாள் ஜமாஅத் தலைவர் அன்வருதீன்  அவர்களின் மனைவி ஹலிமா நாச்சியா அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு மேலத்தெரு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நடைபெறும்.

Friday, 11 January 2019

கொடிக்கால்பாளையம் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணி துவக்கம்




 *நமதூர் பள்ளிவாசல் தெருவில் இருக்கும் TCCWS நியாயவிலை கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு  பெற பதிவு செய்த குடும்ப அட்டைக்களுக்கு பொருட்கள் மற்றும் ₹1000 வழங்கும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை  10 மணி முதல்  துவங்குகிறது*

 *பொதுமக்கள் அனைவரும் பொறுமையாக வந்து அரிசி மற்றும் சர்க்கரைக்கு தனித்தனியே பைகள் அல்லது பாத்திரங்கள்  மற்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட செல்போன் எண், மின்னணு குடும்ப அட்டையையும் கொண்டு வந்து வாங்கி சொல்லுமாறு என்று கேட்டு கொள்கிறோம்*

 *ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மீதம் வாங்கி கொள்ள வேண்டும்*

 *தகுதி உள்ள குடும்ப அட்டைகள் அனைவருக்கும் பரிசு தொகுப்பு கிடைக்கும் என்பதால் பதற்றம் இல்லாமல் வந்து வாங்கி கொள்ளலாம்*

 *இதுவரை பதிவு செய்யாதவர்கள் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு செய்து பொருட்களை  பெற்று கொள்ளலாம்*


 *11/01/2019*

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*🖋

Wednesday, 9 January 2019

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து உருவாக்கப்படுகிறது புதிய மாவட்டம் கள்ளக்குறிச்சி சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு





முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டசபையில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 4, 5, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விவாதத்துக்கு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தனி அதிகாரி

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் குமரகுருவும், விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக உள்ளதால், அதனை பிரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள்.

இதனை பரிசீலித்து, விழுப்புரம் மாவட்டம், பெரிய மாவட்டமாக இருப்பதால், நிர்வாக வசதிக்காக அந்த மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும். புதிதாக தோற்றுவிக்கப்படும் இந்த மாவட்டத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் விரைவில் தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, 5 January 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 05/01/2019



நமதூர் நடுத்தெரு மர்ஹூம்  செ.மு .முஹம்மது ஆரிப் அவர்களின் மகளாரும் கிடாக்கார வீடு மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும் ஜெஹபர் சாதிக் அவர்களின் மாமியாரும் சேக் அலாவுதீன் அவர்களின் தாயாரும்  செய்யது மீரான் அவர்களின் பாட்டியாருமான தங்கம்மா என்கிற ஹைருன்னிசா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீவூன்.




அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நடைபெறும்.

Friday, 4 January 2019

திருவாரூர் இடைத்தேர்தல் 2019 : திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு


திருவாரூர் இடைத்தேர்தல் தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 2 சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல்


திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடத்தி வருகிறது. இதனால் எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர் என பெரும் எதிர்ப்பார்ப்பு தொகுதி மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் முக்கிய பங்கு வகிப்பதால் அதிகமான சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட களம் இறங்குகின்றனர்.



இந்த நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் ஆகிய 2 இடங்களிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக காலை 8 மணி முதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் 2 அலுவலகங்களில் இருந்தும் 100 மீட்டர் தூரத்திற்கு போலீசார் தடுப்புகள் அமைத்து உரிய சோதனைக்கு பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் போலீசார், வேட்பாளர்களின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து அதன்பின்னரே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதித்தனர். மேலும் வேட்பு மனு தாக்கல் செய்வதை வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

முதல் நாளான நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாசிடம் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகமலை புதூர் பகுதியை சேர்ந்த அக்னி ஆத்மா கட்சியின் தேசிய தலைவர் அக்னி ஸ்ரீராமச்சந்திரன், சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பத்மராஜன் ஆகிய 2 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இவர்களது வேட்பு மனு தாக்கல் விவரங்கள், உதவி கலெக்டர்் அலுவலக வாசலில் உள்ள விளம்பர பலகைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

Thursday, 3 January 2019

கொடிக்கால்பாளையம் நிக்காஹ் 03/01/2019


Thiruvarur by-election 2019 - தொகுதியின் பிரதான நிலவரம்







திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் 28.01.2019

பார்வை 4



🎤 தேசிய நெடுஞ்சாலை எண் 67ல் கொரடாச்சேரி தொடங்கி அடியக்கமங்கலம் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. இச்சாலையின் நிலைமை என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

🎤 டெல்டா மாவட்டங்களில் அறிமுகப்படுத்த எண்ணிய மீத்தேன் திட்டமும் நாம் கடந்த 8வது ஆண்டாக உணர்கிறோம்

🎤 நகராட்சி எல்லையில் நீண்டகால திட்டம் முலமாக அமைய பெற்ற புதிய பேருந்து நிலையம் இன்னும் திறப்புவிழாவிற்கு ஏங்கும் மக்கள்

🎤 விவசாயிகள் வாழ்க்கை தரம் நிலை .ஏற்கனவே விவசாய நிலங்கள் பரப்பு குறைந்து வரும் நிலையில் காவேரி நதி வருமா இல்லை ஆண்டுதோறும் போராட்டம் நடக்குமா

🎤 உள்ளாட்சி அமைப்புகளில் இரண்டாவது ஆண்டாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தொடர்வதால் சாலை குடிநீர் பிரச்சினை ஏன் கஜாபுயல் நிவாரணம் வரவில்லை என்றால் உடனே சாலைமறியல் தான் தீர்வு

Wednesday, 2 January 2019

தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் துரிதமான சேவையை பாராட்டி குவியும் வாழ்த்துகள்.



திருவாரூர் Dr.அகோரசிவம் அவர்களின் ABC மருத்துவமனையிலிருந்து உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த ஐந்து வயதுக் குழந்தைக்கு மேல்தர அவசர அறுவை சிகிச்சைக்காக கோவைக் கங்கா மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலையில் ஆறு மணி நேரத்திற்குள் அவசியம் கோவையை சென்றடைந்தால் மட்டுமே இது சாத்தியம் என்ற நிலையில் மருத்துவர் அகோரசிவம் அவர்கள் கொடிக்கால்பாளையம் தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏ.ஜெகபர் ஷேக்அலாவுதீன் ( எ) சேட் அவர்களிடம் துரிதமான நேரத்திலும் அதே சமயம் பாதுகாப்பான முறையிலும் கோவை கங்கா மருத்துவமனை கொண்டுசேர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் திருவாரூரில் இருந்து இரவு 8 :00 மணிக்குப் புறப்பட்ட ஆம்புலன்ஸ் நள்ளிரவு சரியாக 1 : 00 மணிக்கு ஐந்து மணி நேரத்தில் *345 km தூரத்தை மருத்துவர் சொன்ன ஆறு மணி நேரத்திற்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கோவை மருத்துவமனை சென்றடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை மேல் அவசர அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

பாதுகாப்பான முறையில் கோவை கொண்டு சேர்த்த கோடிக்கால்பாளையம் தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சேட் அவர்களைக் குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பாராட்டி நன்றிகளைத் தெரிவித்தனர் மற்றும் திருவாரூர் ABC மருத்துவமனை மருத்துவர் அகோரசிவம் அவர்கள் தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சேட் அவர்களின் துரிதமான சேவையைப் பாராட்டி ஓட்டுநரை கௌரவிக்கும் விதமாக அன்பளிப்புகளை வழங்கி சேட் அவர்களை நெச்சம் நெகிழப் பாராட்டி நன்றி கூறினார்.


செய்தி மற்றும் படங்கள் :நன்றி
மருத்துவ சேவை அணி
தமுமுக கொடிக்கால்பாளையம்

Thiruvarurbyeelection2019 - தொகுதி பார்வை



 *திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்* 28.01.2019

பார்வை 2

வரும் 2019 ஜனவரி 28 அன்று நடைபெறும் தேர்தல் கடந்த 01.01.2018 அன்றைய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நடைபெறும் என ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் 01.01.2019 அடிப்படையில் (அதாவது சென்ற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடந்த முகாமில் சேர்ந்தவர்கள்) வாக்களிக்க முடியும்  என்பது குறிப்பிடத்தக்கது



பார்வை 3

2009ம்ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டன.
இதன்படி *திருவாரூர் நகராட்சி 30 வார்டுகள் மற்றும் *கூத்தாநல்லூர் நகராட்சி* 24 வார்டுகள் கொண்டு உள்ளன. இதனை தவிர *கொரடாச்சேரி பேரூராட்சி* யும் இணைக்கப்பட்டுள்ளது.

 ஊராட்சி ஒன்றிய எல்லையில் உள்ள கிராம ஊராட்சி மன்றங்கள் வருமாறு

 *திருவாரூர் ஓன்றியம்*

1.அடியக்கமங்கலம் 2.அலிவலம் 3.ஆத்தூர் 4.ஆமூர் 5.உமாமகேஸ்வரபுரம் 6.கல்யாண மகாதேவி 7.கீழக்காவதுக்குடி 8.குன்னியூர் 9.கூடுர் 10.கொட்டாரக்குடி 11.செருகுடி 12.சேமங்கலம் 13.தண்டலை 14.தப்பாளம்புலியூர் 15.திருக்காரவாசல் 16. திருநெய்ப்பேர் 17.திருவாதிரைமங்கலம் 18.நடப்பூர் 19.பழவனக்குடி 20.பழையவலம் 21.பள்ளிவாரமங்கலம் 22.பின்னவாசல் 23.புதுப்பத்தூர் 24.புதூர் 25.புலிவலம் 26.பெருங்குடி 27.மாங்குடி 28.வடகரை 29.வேப்பத்தாங்குடி 30.வேலங்குடி 31.வைப்பூர்

 *கொரடாச்சேரி ஓன்றியம்*

1.காப்பனாமங்கலம் 2.அரசவனங்காடு 3.கீரங்குடி 4.வடகண்டம் 5.மணக்கால் 6.எண்கண் 7.காரைப்பாலையூர் 8.நெய்குப்பை 9.உத்திரங்குடி 10.எலையூர் 11.திருகளம்பூர் 12.செல்லூர் 13.ஆர்ப்பாவூர் 14.ஆய்குடி 15.அம்மையப்பன் 16.திருகண்ணமங்கை 17.காட்டூர் 18. இலவங்கார்குடி 19.காவனூர் 20.நட்டுவாக்குடி 21.அத்திச்சோழமங்கலம் 22.ஊர்குடி 23.பத்தூர் 24.அபிவிருத்தீஸ்வரம் 25.கமுககுடி 26.விஸ்வநாதபுரம் 27.பெருமாள்அகரம் 28.நாலில்ஓன்று 29.மேலதிருமதிக்குன்னம் 30.தியாகராஜ புரம் 31.குளிக்கரை 32.பெருந்தரக்குடி 33.தேவர்கண்டநல்லூர் 34.கமலாபுரம் 35.எருக்காட்டூர் 36.பருத்தியூர்
37.கண்கொடுத்தவனிதம் 38.மேலராதாநல்லூர் 39.விடயபுரம் 40.முசிரியம் 41.திருவிடைவாசல் 42.களத்தூர்

 *மன்னார்குடி ஓன்றியம்*

1.வக்ரநல்லூர் 2.சித்தனக்குடி 3.வெங்கலம் பேரையூர் 4.புனவாசல் 5.பூந்தாழக்குடி 6.கீழமணலி 7.ஓகைப்பேரையூர் 8.அகரவேளுக்குடி 9.பழையனூர் 10.கொத்தங்குடி 11.வடகோவனூர் 12.தென்கோவனூர் 13.திருராமேஸ்வரம் 14.மஞ்சனவாடி 15.ஓவர்ச்சேரி 16.வெற்குடி 17.சாத்தனூர் 18.காக்கையாடி 19.வடபாதிமங்கலம் 20.ஹரிசந்திரபுரம் 21.புள்ளமங்கலம் 22.கிளியனூர் 23.பெரியகொத்தூர் 24.மணக்கரை 25.பாலக்குறிச்சி 26.சித்திரையூர்

 *கோட்டூர் ஓன்றியம்*

1.சேந்தங்குடி 2.குலமாணிக்கம் 3.மாவட்டக்குடி 4.செருவாமணி 5.மாரங்குடி

Thiruvarurbyeelection2019 - திருவாரூர் தொகுதி பார்வை 1


🔈 உபயோகமான தகவல்கள் 🔈

 *திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்* 28.01.2019

பார்வை 1





 *வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்* 

 *தனித்தொகுதி* 

1962   -  அம்பிகாபதி (காங்கிரஸ்)
1967  - தனுஷ்கோடி (மா.கம்யூனிஸ்ட்)
1971  - தாழை .கருணாநிதி ( திமுக)
1977  - தாழை . கருணாநிதி (திமுக )
1980  - செல்லமுத்து (மா.கம்யூனிஸ்ட்)
1984  - செல்லமுத்து (மா.கம்யூனிஸ்ட் )
1989  - தம்புசாமி ( மா.கம்யூனிஸ்ட்)
1991  - தம்புசாமி (மா.கம்யூனிஸ்ட்)
1996  - அசோகன் (திமுக)
2001  - அசோகன் (திமுக)
2006 - மதிவாணன் (திமுக)

 *பொதுத்தொகுதி* 

2011  - மு.கருணாநிதி (திமுக)
2016  - மு. கருணாநிதி ( திமுக)
2019  -  ?

*திமுக 7 முறையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும் காங்கிரஸ் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்று இருக்கிறது.* 


 *2016ம் பொதுத்தேர்தல் முடிவுகள்* 

தேர்தல் நாள் 16.05.2016
மொத்த வாக்காளர்கள் 2,53,030
பதிவான வாக்குகள் 1,95,142
கருணாநிதி. மு. (திமுக) 1,21,473
பன்னீர்செல்வம் (அஇஅதிமுக) 53,107
மாசிலாமணி (இ.கம்யூ) 13,158
ரெங்கதாஸ் (பாஜக)  1,254
சிவக்குமார் (பாமக)  1,787
தென்றல். சந்திரசேகர் (நாம் தமிழர்)     1,427
நோட்டா.       2,177
வித்தியாசம்  68,366


 கடந்த 2018 ஆகஸ்ட் 7ம்தேதி தி.மு.க தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கலைஞர் மு.கருணாநிதி காலமானத்தை அடுத்து தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடைப்பெறுகிறது.

Thiruvarurbyeelection2019 - திருவாரூர் இடைத்தேர்தலுக்கு 303 வாக்குச்சாவடி மையங்கள்


திருவாரூர் இடைத்தேர்தலுக்கு 303 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும் என்றும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதியுடைய வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திருவாரூரில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,58,687, ஆண்கள் - 1,27,500 பேர், பெண்கள் -1,31,169 பேர், 3-ம் பாலினத்தவர் - 18 பேர் என்ற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.

Tuesday, 1 January 2019