Wednesday, 9 January 2019

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து உருவாக்கப்படுகிறது புதிய மாவட்டம் கள்ளக்குறிச்சி சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு





முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டசபையில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 4, 5, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விவாதத்துக்கு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தனி அதிகாரி

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் குமரகுருவும், விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக உள்ளதால், அதனை பிரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள்.

இதனை பரிசீலித்து, விழுப்புரம் மாவட்டம், பெரிய மாவட்டமாக இருப்பதால், நிர்வாக வசதிக்காக அந்த மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும். புதிதாக தோற்றுவிக்கப்படும் இந்த மாவட்டத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் விரைவில் தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment