*பாச்சோற்றுப்பெருவிழா*
இச்சிறப்பு மிக்க கொடிக்கால்பாளையத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சியை நினைவு கூறும் முகத்தான் இப்பெருவிழா வருடா வருடம் ஜமாத்துல் அவ்வல் மாதம் பிறை 9ல் பாச்சோற்று ப்பெருநாள் எனப்படும் இப்பெருவிழாவாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் எனப்படும் இப்பள்ளிவாசல் வளாகத்தில் தங்கியிருந்த மஹான் சைய்தினா சைய்யது மஃஸூம் சாஹிப் (ஒலி) அவர்கள் ஒரு சிறு ஆலம் விழுதை ஊன்றியதைக் கொண்டு அது பெருமரமாகி இப்பகுதி தற்போதும் " *ஆலமரத்து மேடை* " *மஃஸூம் மஹால்* " என்று வழங்கப்படுகிறது.
மஹான் அவர்கள் தம்மை காணவருபவர்களுக்கு நமது தீனுல் இஸ்லாத்தின் கடமைகளை நல்லுஉபதேசங்களாக செய்து அக்காலத்தில் உணவு சமைக்க ப்பயன்ப்பட்ட மடா எனப்படும் மண்பானையில் 5 படி பச்சை அரிசி 5 சேர் சர்க்கரை 5 தேங்காய்களைக் கொண்டு பாகுச்சோறு எனப்படும் பாச்சோறு சமைத்து அனைவர்களுக்கும் பகிர்தளித்து வல்ல இறைவனிடம் தம்முடைய தேவைகளை மனமுருகி கேட்டு பிராத்திக்க வேண்டுமாய் அறிவுறுத்தி உள்ளார்கள்.
தொடக்கத்தில் ஒரு சில மடாக்களாக இருந்த இந்நிகழ்ச்சி தற்போது பெருகி ஆயிரத்திற்கு அதிகமான மடாக்கள் வந்து கொண்டுள்ளன என்பது இதன் சிறப்பாகும். மேலும் அனைவர்களும் ஜாதி மத பேதமின்றி மனித நேய மதநல்லிணக்க விழாவாக இப்பெருவிழா நடைபெறுவது இப்பெருவிழாவின் தனிப்பெறும் சிறப்பாகும்.
இவ்வாறான விழா நமது தாய் திருநாட்டின் வேறு எங்கும் அறியப்படாத விழாவாக உள்ளதால் இவ்விழா கொடிக்கால்பாளையத்தின் சிறப்புகளின் சிறப்பாகும்.
வஸ்ஸலாம்,
*மர்ஹூம் ஹாஜி கோ.மு.உபைதுல்லாஹ்*
*முன்னாள் நாட்டாண்மை*
*முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத்*
*புதிய பள்ளிவாசல் வக்ப் திறப்புவிழா சிறப்பு மலர் 2008 ல் வெளியிடப்பட்டது.*
15/01/2019
🌹 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*🖋
No comments:
Post a Comment