திருவாரூர் Dr.அகோரசிவம் அவர்களின் ABC மருத்துவமனையிலிருந்து உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த ஐந்து வயதுக் குழந்தைக்கு மேல்தர அவசர அறுவை சிகிச்சைக்காக கோவைக் கங்கா மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலையில் ஆறு மணி நேரத்திற்குள் அவசியம் கோவையை சென்றடைந்தால் மட்டுமே இது சாத்தியம் என்ற நிலையில் மருத்துவர் அகோரசிவம் அவர்கள் கொடிக்கால்பாளையம் தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏ.ஜெகபர் ஷேக்அலாவுதீன் ( எ) சேட் அவர்களிடம் துரிதமான நேரத்திலும் அதே சமயம் பாதுகாப்பான முறையிலும் கோவை கங்கா மருத்துவமனை கொண்டுசேர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில் திருவாரூரில் இருந்து இரவு 8 :00 மணிக்குப் புறப்பட்ட ஆம்புலன்ஸ் நள்ளிரவு சரியாக 1 : 00 மணிக்கு ஐந்து மணி நேரத்தில் *345 km தூரத்தை மருத்துவர் சொன்ன ஆறு மணி நேரத்திற்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கோவை மருத்துவமனை சென்றடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை மேல் அவசர அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
பாதுகாப்பான முறையில் கோவை கொண்டு சேர்த்த கோடிக்கால்பாளையம் தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சேட் அவர்களைக் குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பாராட்டி நன்றிகளைத் தெரிவித்தனர் மற்றும் திருவாரூர் ABC மருத்துவமனை மருத்துவர் அகோரசிவம் அவர்கள் தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சேட் அவர்களின் துரிதமான சேவையைப் பாராட்டி ஓட்டுநரை கௌரவிக்கும் விதமாக அன்பளிப்புகளை வழங்கி சேட் அவர்களை நெச்சம் நெகிழப் பாராட்டி நன்றி கூறினார்.
செய்தி மற்றும் படங்கள் :நன்றி
மருத்துவ சேவை அணி
தமுமுக கொடிக்கால்பாளையம்
No comments:
Post a Comment