Monday, 29 October 2018

கொடிக்கால்பாளையம் மீலாது விழா

🕋 *அன்பான வேண்டுகோள்* 🕋

 *உத்தம நபியின் உதய தினவிழா  மீலாது பெருவிழா பேரணி மற்றும் மார்க்க விளக்க போட்டிகள் என கடந்த ஆண்டுகளில் மிக சிறப்புடன் நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைப்பெற்றது என்பது நாம் அறிந்ததே.*

 *இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1440ம் ஆண்டு ரபீ உல் அவ்வல் பிறை 12 (உத்தோசமாக 21 நவம்பர் 2018) அன்று மிக சிறப்பான முறையில் நடைப்பெற திட்டமிட்டப்பட்டுள்ளது.*
 *இதில் நமது ஜமாத்தார்களில் பங்களிப்பு முக்கியமானதாகும்.*
 *இவ்விழா சிறக்க பொருளாதார உதவிகளை அளித்து ஆதரவை வழங்க வேண்டுகிறோம்.*
 *இதுபோல இவ்விழாவில் பங்குகொண்டு தன்னார்வ தொண்டு கொண்டவர்கள் மிக அவசியம் என்பதால் விழா கமிட்டியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.*

 *ஜமாஅத்தார்கள் அனைவரும் இவ்விழாவை சிறப்பு செய்ய தங்களின் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம்.*

 *Media partner  : KOM NEWS ONLY*

Friday, 26 October 2018

டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் ஐகோர்ட்டு 3-வது நீதிபதி பரபரப்பு தீர்ப்பு


இந்த நோட்டீசுக்கு எம்.எல்.ஏ. ஜக்கையன் மட்டும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மற்றவர்கள் தரப்பில் அரசு கொறடா புகாரின் நகலை கேட்டனர்.

இதைதொடர்ந்து, வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபா நாயகர் தனபால் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 18 எம்.எல்.ஏ.க்களும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு விசாரித்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை கடந்த ஜூன் 23-ந்தேதி பிறப்பித்தனர். அந்த தீர்ப்பில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகர் உத்தரவு செல்லும் என்றும், நீதிபதி எம்.சுந்தர் சபாநாயகர் உத்தரவு செல்லாது என்றும் தீர்ப்பு அளித்தனர்.

நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், இந்த வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக எம்.சத்தியநாராயணனை நியமித்தது.

இதன்படி, நீதிபதி எம்.சத்திய நாராயணன் விசாரித்தார். மொத்தம் 12 நாட்கள் இந்த வழக்கை விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று காலையில் நீதிபதி எம்.சத்தியநாராயணன் பிறப்பித்தார். காலை 10.25 மணிக்கு கோர்ட்டு அறைக்கு வந்த நீதிபதி, சரியாக 10.30 மணிக்கு தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.

அதற்கு முன்பாக, மனுதாரர்கள் 18 பேர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமனை பார்த்து, ‘தலைமை நீதிபதி உத்தரவு சரியா?, நீதிபதி எம்.சுந்தர் உத்தரவு சரியா? என்பதற்குள் நான் செல்லவில்லை. என்னுடைய தனிப்பட்ட முறையில் வழக்கை பரிசீலித்து தீர்ப்பை வழங்குகிறேன்’ என்றார்.

தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

அரசியலமைப்புச் சட்டத்தில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தங்களை, உள்நோக்கத்துடன் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார் என்று மனுதாரர்கள் கூறுகின்றனர். ஆனால், அதற்கான ஆதாரங்கள், ஆதார ஆவணங்கள் எதையும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை.

மேலும், அரசியலமைப்பு சட்டம், 10-வது அட்டவணை, சபாநாயகரின் அதிகாரத்தை கூறுகிறது. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையில், கவர்னர், முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சரவை எந்த ஒரு பங்கும் இல்லை என்று தெளிவாக கூறுகிறது. நபாம் ரிபியா வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘10-வது அட்டவணையில் சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது’ என்று கூறியுள்ளார்.

மனுதாரர்களை பொறுத்தவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு, கே.ஏ.செங்கோட்டையனை முதல்-அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், 18 பேரும் கட்சி தாவிவிட்டனர் என்று அர்த்தம் இல்லை என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் கூறுகிறார்.

இதற்காக அவர் எடியூரப்பா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள கருத்தையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். இந்த வாதத்தை ஏற்க முடியாது. ஏன் என்றால், 18 பேரும் மனு கொடுத்த பின்னர், கவர்னர் என்ன செய்திருப்பார்? எப்படி செயல்பட்டு இருப்பார்? என்பதை எல்லாம் இந்த ஐகோர்ட்டு கற்பனையாக ஆய்வு செய்ய முடியாது.

எம்.எல்.ஏ., எஸ்.டி.கே. ஜக்கையன், நேரில் ஆஜராகி அளித்த விளக்கத்தை மட்டும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால், சபாநாயகரின் நடவடிக்கை உள்நோக்கமானது என்று மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், ஜக்கையனிடம் விசாரணை நடத்தியதன் மூலம், 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இருந்து கொண்டு விளக்கம் அளிக்காமல் உள்ளனர் என்பதை உறுதி செய்திருக்கலாம். அதுமட்டுமல்ல, தன்னுடைய கருத்தை ஜக்கையன் திரும்பப் பெற்றுவிட்டதால், அவர் மீதான குற்றச்சாட்டை சபாநாயகர் தனியாக பரிசீலித்து இருக்கலாம்.

மேலும், பொதுவாக வழக் கின் தன்மை, சூழ்நிலை, சட்டம், ஏற்கனவே வேறு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் தான், பரிசீலித்து முடிவு எடுக்கப்படுகிறது.

அதனால், எடியூரப்பா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்துக்கள் இந்த வழக்கில் எடுத்துரைக்கப்பட்டன.

எடியூரப்பா வழக்கில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் பல, இந்த வழக்கிற்கு பொருந்துவதாக முதலில் தோன்றினாலும், பின்னர் இந்த வழக்கு மாறுபட்டது என்பது தெளிவாகுகிறது. அதனால், எடியூரப்பா வழக்கு இந்த வழக்கிற்கு எந்த வகையிலும் பயன்தருவதாக இல்லை.

நம்பிக்கை தீர்மானத்தில் தோல்வி அடையும்போது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356-ன் கீழ் மாநில அரசை கலைக்கவேண்டும் என்று ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. ஒருவேளை நம்பிக்கை தீர்மானத்தை கொண்டுவர முதல்- அமைச்சர் மறுக்கும்போது, அந்த தீர்மானத்தை கொண்டு வரும்படி, சட்டசபைக்கு உத்தரவிட்டு, அது தொடர்பான அறிக்கையை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 256-ன் கீழ் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் அதிகாரமும் கவர்னருக்கு உள்ளது என்று நபாம் ரிபியா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

இந்த வழக்கில், தமிழக கவர்னரை சந்தித்து மனுதாரர்கள் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கவர்னர், இந்த விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இதன்மூலம், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கவர்னரிடம் முறையிட்டுள்ளனர் என்பதும் தெரிய வருகிறது. இதன்மூலம் இவர்களது உள்நோக்கம் தெரிகிறது.

இதை நிரூபிக்கும் விதமாக மனுதாரர்களின் ஒருவராக வெற்றிவேல் தன் மனுவில், ‘தமிழக அரசு ஊழல் செய்கிறது என்று வெளிப்படையாக குற்றம் சாட்டிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்- அமைச்சர் பதவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்காக, உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் உள்நோக்கத்துடன், ஒரு தரப்பினருக்கு ஆதரவாக சபாநாயகர் எங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்துள்ளார்’ என்று கூறியுள்ளார். எனவே, அனைத்து தரப்பு வாதங்களின் அடிப்படையில், மனுதாரர்களின் கோரிக்கை ஏற்க முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட சபாநாயகரின் பதவி என்பது எப்போதுமே மரியாதைக்குரியதாகும். அதனால் சபாநாயகர் என்பவர் எப்போதுமே, நடுநிலை தவறாதவராக இருக்க வேண்டும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறார்.

இந்த வழக்கில், சபாநாயகர் ஆரம்பக்கட்ட பிரச்சினை, முக்கிய பிரச்சினைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, தன் முன்புள்ள ஆதார ஆவணங்களின் அடிப்படையில், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சபாநாயகரின் இந்த முடிவில் ஐகோர்ட்டு தலையிட முடியாது. இந்த வழக்கில் ஏற்கனவே இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை கருத்தில் கொள்ளாமல், வழக்கின் ஆதார ஆவணங்கள், இருதரப்பு வாதங்கள் உள்ளிட்டவைகளை கொண்டு தன்னிச்சையான முடிவுக்கு வந்துள்ளேன்.

சபாநாயகரின் உத்தரவில் உள்நோக்கம் இல்லை. இயற்கை நீதி மீறப்படவில்லை. அவர் நெறிபிறழவில்லை. 18 பேரையும் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறேன்.

ஏற்கனவே, 18 சட்டசபை தொகுதிகளையும் காலியாக அறிவிக்கவும், சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரவும் இந்த ஐகோர்ட்டு தடைவிதித்து இருந்தது. இந்த தடைகள் எல்லாம் நீக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி எம்.சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

Wednesday, 24 October 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 24/10/2018



மலாயத்தெரு மர்ஹூம் இ.கா.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மூத்த மகனாரும் ,இ.கா.மு.சு. பஷீருதீன் அவர்களின் தகப்பனாரும்,A.ஜெஹபர் ஷேக் அலாவுதீன் அவர்களின் மைத்துனரும் , A.நிம்தியாஸ் அஹமது அவர்களின் பாட்டனாருமாகிய *இ.கா.மு.சுல்தான் அப்துல் காதர்* அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.



இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்..

அன்னாரின் ஜனாசா (24/10/2018 புதன்கிழமை) இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது

Tuesday, 23 October 2018

கொடிக்கால்பாளையம் தைக்கால் கொடியோற்றம்







வெளியூர் மௌத் அறிவிப்பு 23/10/2018



நமதூர் மேலத்தெரு பூங்கா எதிரே  மர்ஹூம் சேக் தாவுது- குட்டாவீட்டு ஹபுராம்மாள் இவர்களின் மகனாரும் ஒய்வு பெற்ற வணிகவரி துறை அதிகாரியுமான அப்துல் லத்தீப் அவர்கள் சென்னை கோடாம்பாக்கத்தில் மௌத்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்


அன்னாரின் ஜனாசா 24/10/2018  நாளை காலை 10 மணிக்கு சென்னை யில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


Monday, 22 October 2018

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல் 2018: புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு




அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூர் முஹ்யித்தீன்  ஆண்டவர்கள்  பள்ளிவாசல்  ஊர்  உறவின்  முறை  ஜமாஅத்  நிருவாகக்குழுத்  தேர்தல் - 2018  மிக  சிறப்போடு  நடைபெற்று  புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள்

ஜமாஅத்  தலைவர் : ஹாஜி V.S.N. முஹம்மது  ஆதம் B.Sc., BGL.,

செயலாளர் : M. முஜிபுர் ரஹ்மான்

துணைத் தலைவர் : ( முத்தவல்லி)    ப. மு. ஹபிபுல்லாஹ்

பொருளாளர் : M.M.I. முக்தார் ஹுசேன்

ஆடிட்டர் : J. சேக் முஹைதீன்

52 - பணப்பகுதி  எஸ்டேட்  பொருளாளர் :
வா.மு.இ.மு. முஹம்மது அன்சாரி

தி.  ஹாஜி இப்ராம்ஷா ராவுத்தர் வக்கூப்  எஸ்டேட்  அடிஷனல்  டிரஸ்டி :
ஹாஜி S.M. இனாயத்துல்லாஹ்



அனைவருக்கும் 
Kodinagar Times

குழுமத்தின் சார்பாக 
*🌹🌹வாழ்த்துக்களை🌹🌹*
தெரிவித்துக் கொள்கிறோம்

Friday, 19 October 2018

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல் 2018 : சூடு பிடிக்கும் களம்




இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு மாலை 5மணிக்கு 21/10/2018 தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைப்பெற உள்ள நிலை யில் இரண்டு அணிகளாக பிரித்து பிரச்சாரம் சூடுபிடிக்க துவக்கியது.
மேலத்தெரு பிரதிநிதி முஹம்மது ஆதம் தலைமையில் ஒரு அணியாகவும் பர்மாதெரு பிரதிநிதி முஹம்மது சலாவுதீன் தலைமையில் ஒரு அணியாக வும் களத்தில் உள்ளது.
இன்றைய ஜூம்மா தொழுகைக்கு பிறகு பள்ளிவாசல் வளாகத்தில் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தார் கள்.








Wednesday, 17 October 2018

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல் 2018 நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 21 மாலை 5 மணிக்கு





நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் தேர்தல் 2018ல் நிர்வாக சபை தேர்தல்  இன்ஷா அல்லாஹ் வரும் 21/10/2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில் தலைவர் ஜலாலுதீன் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் முஹம்மது இசாக், அப்துல் காதர் , சுல்தான் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலையில் ஜமாஅத் தற்போதைய மற்றும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட தெருபிரதிநிதிகள்,ஜமாஅத் அங்கத்தினர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் மஹாஜன சபை கூட்டம் நடைப்பெற உள்ளது.

இதில்
ஜமாஅத் தலைவர்
செயலாளர்
துணை தலைவர்( பள்ளிவாசல் பொறுப்பு)
பொருளாளர்
ஆடிட்டர்
52 பணப்பகுதி பொருளாளர்
தி.இப்ராம்ஷா ராவுத்தர் தர்ம எஸ்டேட் அடிசனல் டிரஸ்டி

ஆகிய  7 நிர்வாக பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
 மஹாஜன சபை கூட்டத்தில் 21 தெரு பிரதிநிதிகளில்  யார் யார் அடுத்த நிர்வாக சபைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் தங்கள் வருகையை உறுதி செய்து பதிவேட்டில் பதிவு செய்வது அவசியம் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது


Tuesday, 16 October 2018

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’



பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதிய ‘ஸ்மார்ட் கார்டு’ நடப்பு கல்வி ஆண்டிலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தார். அதனை செயல்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் கருத்துரு அனுப்பியுள்ளார்.
மாணவர்களுக்கான ‘ஸ்மார்ட் கார்டில்’ உள்ள ‘க்யூ ஆர் கோடு’ அல்லது ‘பார் கோடு’ வாயிலாக மாணவர் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் கல்வி தகவல் மேலாண்மை முகமையின் பொது தொகுப்பில் இருந்து இணையதளத்தின் வாயிலாக பெற முடியும்.

மேலும் ‘ஸ்மார்ட் கார்டு’ அடிப்படையில் மாணவர்கள் பள்ளி நேரங்களில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் இருக்கும் சூழலில் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை கண்டறிய இயலும். மாணவர்களின் ரத்தப்பிரிவு சார்ந்த விவரம் அதில் இருப்பதால் மாணவர்களுக்கு எதிர்பாராத விபத்து ஏற்படும்போது அந்த மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு பெரிதும் உதவும்

மாணவர்கள் ‘ஸ்மார்ட் கார்டை’ அணியும்போது தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக தங்களை உணர்கிற வாய்ப்பு ஏற்படும். மாணவர்களின் இடை நிற்றலை துல்லியமாக கண்டறிய முடியும்.

மேலும் பள்ளிக்கல்வி இயக்குனர் அரசு துறையின் கீழ் உள்ள 37 ஆயிரத்து 358 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 46 லட்சத்து 60 ஆயிரத்து 965 மாணவர்களுக்கும், 8 ஆயிரத்து 386 அரசு உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 23 லட்சத்து 99 ஆயிரத்து 17 மாணவர்களுக்கும் என மொத்தம் 70 லட்சத்து 59 ஆயிரத்து 982 மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பெயர், மாணவர்களின் அடையாள அட்டை எண், பிறந்த தேதி, தந்தையின் பெயர், முழு முகவரி, பள்ளியின் பெயர், ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட்ட ஆண்டு, மாணவரின் புகைப்படம், ரத்தப்பிரிவு, கல்வித்தகவல் மேலாண்மையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவரங்களுடன் ‘பார் கோடு’ அல்லது ‘க்யூ ஆர் கோடு’ ஆகியவை இடம்பெறும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சுய விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை அமைப்பில் உள்ளடு செய்யப்பட்டு உள்ளது என்றும், மாணவர்களின் சுய விவரங்கள் அடங்கிய மென்பொருள் பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஒப்பந்த புள்ளிகள் தயாரித்து அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கவும், இந்த திட்டத்தை செயல்படுத்தவும் ரூ.12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரத்து 676 அனுமதித்து ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் கருத்துரு அனுப்பியுள்ளார்.

அதனை கவனமுடன் பரிசீலித்து ஏற்க அரசு முடிவு செய்து ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க ரூ.12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரத்து 676 வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் உரிய ஒப்பந்த விதிமுறைகளை கடைபிடித்து ‘ஸ்மார்ட் கார்டு’ தயாரிக்கும் பணியை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

Monday, 15 October 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 15/10/2018



நமதூர் வடக்கு தெரு மர்ஹூம் முஹம்மது ஹூசைன் அவர்களின் மகனாரும் முஹம்மது நூர்தீன் ,பௌசில் அலி இவர்களின் தகப்பனாருமான கண்ணப்பா என்கிற செய்யது முஹம்மது அவர்கள் காயிதே மில்லத் தெருவில் மௌத்.



அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 16/10/2018 செவ்வாய் காலை 10:30 மணிக்கு

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் பிறந்த நாள்


Sunday, 14 October 2018

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல் மஹாஜன சபை கூட்டம்






நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் ஜமாஅத் மஹாஜன சபை கூட்டம் பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில் 14/10/2018 ஞாயிறு காலை 10 மணிக்கு தலைவர் ஜலாலுதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:
1. ஜமாஅத் மஹாஜன சபை தேர்த்தேடுத்த தேர்தல் அதிகாரிகள் முலமாக தேர்வு செய்யப்பட்ட தெரு பிரதிநிதிகள்
 *மேலத்தெரு -காட்டுப்பள்ளி தெரு*
1. முஹம்மது ஆதம்
2. இனாயத்துல்லா

 *பள்ளிவாசல் தெரு*
1.முஹம்மது ஜெஹபர்
2. அஷ்ரப் அலி

 *பர்மா தெரு*
1.முஹம்மது சலாவுதீன்
2.சேக் முஹம்மது

 *தெற்கு தெரு*
1.பஜாலுதீன்
2.முஹம்மது அப்துல் வகாப்
3.சுக்கூர் முஹம்மது
4.முஜிபுர் ரஹ்மான்

 *நடுத்தெரு*
1.அஹமது ஜலீல்
2. ஜாகிர் ஹூசைன்
3.ஹபிபுல்லாஹ்
4.முஹம்மது அன்சாரி
5. சேட் என்கிற சிராஜூதீன்

 *வடக்கு தெரு*
1. அலி அக்பர்
2.முஹம்மது அலி

 *ஜெயம் தெரு*
1.அப்துல் லத்தீப்
2.முஹம்மது ஆசிக்

 * -மலாயத்தெரு*
1. துக்கான் ராஜா என்கிற சேக் முஹைதீன்
 புதுமனைத்தெரு
1. முக்தார் உசேன்

இக்கூட்டத்தில் அங்கீகாரம் வழங்குவது என்றும்

2. ஜமாஅத் மஹாஜன சபையால் நியாயமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள் சிறப்பாக நடத்திதை பாராட்டு தெரிவிப்பது என்றும்

3.இன்ஷாஅல்லாஹ் வரும் 21/10/2018 ஞாயிறு மாலை 5  மணிக்கு தலைவர் உள்ளிட்ட நிருவாகிகள்  தேர்வு செய்ய தேர்தல் மஹாஜன சபை கூட்டம் நடத்துவது என்றும் ஒருமானதாக நிறைவேற்றப்பட்டது.
இதில் ஏராளமான ஜமாஅத் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.


நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்






Friday, 12 October 2018

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல் 2018 -மஹாஜன சபை கூட்டம் அழைப்பு




திருவாரூர் - கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் தேர்தல் 2018 அனைத்து தெரு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பொது சபை கூட்டம் கூடி அங்கிகாரம் வழங்கி நிர்வாக சபையை தேர்வு செய்து புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது ஜமாஅத் சட்டவிதி.

இதன்படி பொது சபை கூட்டம் இன்ஷாஅல்லாஹ்   வரும் ஹிஜ்ரி 1440 ம் ஸபர் மாதம் 4 (14/10/2018) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மஃஸூம் மஹாலில் தலைவர் ஜலாலுதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற உள்ளது.

இதில் நடந்து முடிந்த தெரு பிரதிநிதிகள் தேர்தல் அங்கிகாரம் வழங்கினால் நிர்வாக சபை தேர்தல் நடைப்பெறும்.
நீண்ட நாளுக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பு உடன் நடைபெறும் இக்கூட்டத்தில்
 நமது ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் மாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

Thursday, 11 October 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 11/10/2018

நமதூர் வடக்கு தெரு அகுர்சா வீட்டு மர்ஹூம் ம.அ.ஹாஜி முஹம்மது அவர்களின் மகளாரும் ஆண்டவர் டீ ஸ்டால் ஹாஜா மைதீன் அவர்களின் தாயாருமான ராபியத்து பஜிரியா அவர்கள் காயிதே மில்லத் தெருவில் மௌத்.
ஜனாசா நல்லடக்கம் நேரம் இன்று முற்பகல் 11:30 மணி

Monday, 8 October 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 8/10/2018

நமதூர் சூஃபி நகர் நடுத்தெரு மர்ஹூம் க.இ.ஜூலைகா பீவி அவர்களின் பேரனும் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனுமாகிய முஹம்மது சபியுதீன் அவர்கள் மௌத்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம்  பிற்பகல் 1:15 மணிக்கு 

Sunday, 7 October 2018

மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு திருச்சி யில் நடைப்பெற்றது.


சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் தெலுங்கானா 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநில தேர்தல்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் ஒப்புகைச்சீட்டு எந்திரம் பயன்படுத்தப்படும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. சத்தீஷ்கர் மாநிலத்தில் 18 இடங்களுக்கு மட்டும் முதற்கட்ட தேர்தல் நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறும். 2-ம் கட்ட வாக்குப்ப்பதிவு  நவம்பர் 20-ல் நடைபெறும்.

மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். 

ராஜஸ்தான்,  தெலங்கானா  டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடைபெறும். 

சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறும்.

கர்நாடகாவில் ஷிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகியவற்றில் இடைத்தேர்தல் 3-வது நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.