Sunday, 5 August 2018

வருமான சான்றிதழ் பெற செல்போன் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டத்தின்கீழ் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், விவசாய வருமான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ் உள்பட 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்கள் இணைய வழியில் பொது சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மையங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் கிராம தொழில் முனைவோர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனியார் பொதுசேவை மையங்கள் ஆகியவற்றின் வாயிலாக விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது மேற்கண்ட சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது செல்போன் (ஸ்மார்ட்போன்) அல்லது கணினி மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சான்றிதழ்களை பெற “லீ௴௴ஜீ://௴ஸீமீமீஸ்ணீவீ.௴ஸீ.ரீஷீஸ்.வீஸீ/சிவீ௴வீக்ஷ்மீஸீ” என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து, பயனாளியின் பெயரை பெற்றதும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம். இதற்கான வழிமுறைகளை https://www.tnes-ev-ai.tn.gov.in/vi-d-e-otut-o-r-i-al.html மற்றும் https://www.tnes-ev-ai.tn.gov.in/Use-r-M-a-nu-al.html ஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், “ஹிவிகிழிநி” என்ற செல்போன் செயலி மூலமாக வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகிய 3 சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான சேவை கட்டணம் ரூ.60. இதை இணையதள வங்கி முறை அல்லது கிரெடிட், டெபிட் அட்டைகள் மூலமாக செலுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment