Friday, 31 August 2018
நமதூர் நிக்காஹ் தகவல் 02/09/2018
நமதூர் பர்மாதெரு M.S.பதுருதீன் அவர்களின் செய்யது இம்ரானுதீன் மணமகனுக்கும் பொதக்குடி A.முஹம்மது ஜியாவுதீன் அவர்களின் மகளார் தஸ்னிம் பானு மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 துல்ஹஜ் பிறை 21(02/09/2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:45 மணிக்கு பர்மாதெரு மணமகன் இல்லத்தில் நடைபெற உள்ளது.
நமதூர் ஜெயம் தெரு A. குத்புதீன் (பாவா வீட்டு) அவர்களின் மகனார் ஹாஜா நஜிபுதீன் மணமகனுக்கும் பொதக்குடி M. அலி அக்பர் அவர்களின் மகளார் ரஃபீதா மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 துல்ஹஜ் 21 (02/09/2018) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சிங்கப்பூர் NTU Allumni வளாகத்தில் நடைப்பெற உள்ளது.
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
நமதூர் ஜெயம் தெரு A. குத்புதீன் (பாவா வீட்டு) அவர்களின் மகனார் ஹாஜா நஜிபுதீன் மணமகனுக்கும் பொதக்குடி M. அலி அக்பர் அவர்களின் மகளார் ரஃபீதா மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 துல்ஹஜ் 21 (02/09/2018) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சிங்கப்பூர் NTU Allumni வளாகத்தில் நடைப்பெற உள்ளது.
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்:
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
Thursday, 30 August 2018
Wednesday, 29 August 2018
நமதூர் நிக்காஹ் தகவல் 01/09/2018
நமதூர் தெற்கு தெரு M.H.மஹபூப் அலி அவர்களின் மகனார் ஹாஜா இம்ரான் அலி மணமகனுக்கும், கூத்தாநல்லூர் S.கலிக்குல் ஜமான் அவர்களின் மகளார் ஹிபாஸ் ஜப்ரானா மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 துல்ஹஜ் பிறை 20 (01/09/2018) சனிக்கிழமை முற்பகல் 11:45 மணிக்கு தெற்கு தெரு மணமகன் இல்லத்தில் நடைபெற உள்ளது.
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்:
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
Tuesday, 28 August 2018
Monday, 27 August 2018
Sunday, 26 August 2018
Saturday, 25 August 2018
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியாவிட்டாலும் கடும் நடவடிக்கை: போலீஸ்
சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மோட்டார் வாகன சட்டப்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதியை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இந்த விதியை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தியது குறித்து காவல்துறை தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதுதொடர்பான மோட்டார் வாகன சட்ட விதிகள் முறையாக அமல்படுத்தப்படும்’ என்று உறுதி அளித்தார். பின்னர், ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தனி அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 31-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
ஹெல்மெட் அணிவது கட்டாயமக்கப்படும் என்று டிஜிபி சென்னை ஐகோர்ட்டில் உறுதி அளித்த நிலையில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாவிட்டால், வாகனம் ஓட்டுபவர், பயணிப்பவர் ஆகிய இருவர் மீது வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஹெல்மட் அணிவதன் அவசியம் பற்றி சென்னையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, 24 August 2018
முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.410 கோடியில் புதிய அணை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மேட்டூர் அணையில் இருந்து சமீபத்தில் 2 லட்சம் கனஅடிக் கும் அதிகமான அளவில் உபரி நீர் திறக்கப்பட்டதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் 182 ஆண்டுகள் பழமை வாய்ந்த முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் 9 மதகுகள் கடந்த 22-ந் தேதி இரவு திடீரென உடைந்தன. உடைந்து விழுந்த மதகுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தனி செயலாளர் சாய்குமார், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்று இடிந்த அணையை சீரமைப்பது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் நேற்று காலை திருச்சி சென்றார். விமான நிலைய வரவேற்பு முடிந்ததும், அவர் காலை 9.30 மணி அளவில் முக்கொம்புக்கு போய்ச் சேர்ந்தார். அங்கு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட மதகுகளை அவர் பார்வையிட்டார்.
உடைந்த மதகுகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்து கொண்டு இருந்ததால் எடப்பாடி பழனிசாமி வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கி நடந்து சென்றார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைப்பு பணிகள் எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன என்பதை அவரிடம் விளக்கி கூறினார்கள்.
அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி அணையில் உடைப்பு ஏற்பட்டது, இப்போது கொள்ளிடம் மதகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதே?
பதில்:- முக்கொம்பு மேலணையில் அதாவது கொள்ளிடம் ஆற்றின் கதவணையில் 9 ‘ஷட்டர்’களில் உடைப்பு ஏற்பட்டு இருக்கின்றது. அதை தற்காலிகமாக சீரமைக்க வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 4 நாட்களுக்குள் அந்த சீரமைப்பு பணிகள் முழுமை பெறும். கிருஷ்ணகிரி அணை உடையவில்லை, ‘ஷட்டர்’ பழுதாகி இருந்தது. பழுதடைந்த ஷட்டரை சரி செய்துவிட்டார்கள்.
கேள்வி:- 9 மதகுகள் உடைவதற்கு என்ன காரணம்?
பதில்:- 1836-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கதவணை. கிட்டத்தட்ட 182 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அணை கட்டப்பட்டு இருக் கின்றது. இது முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. கடந்த முறை, அதாவது 1924, 1977, 2005, 2013 ஆகிய ஆண்டுகளில் வெள்ளம் வந்த போது, இந்த கொள்ளிடம் ஆற்றின் மேலணை வழியாக உபரிநீர் வெளியேறி இருக்கிறது. அப்போது, 5, 6 நாட்கள்தான் மேலணை வழியாக உபரிநீர் வெளியேறி இருக்கிறது. ஆனால், தற்போது முதற்கட்டமாக 8 நாட்கள் தொடர்ந்து அதிக அளவில் உபரிநீர் இதன் வழியாக வெளியேறியது. அதற்கு பிறகு இரண்டாம் கட்டமாக, 12 நாட்கள் தொடர்ந்து அதிக வெள்ள நீர், இந்த மேலணை வழியாக வெளியேறி இருக்கிறது. அதனுடைய அழுத்தத்தின் காரணமாக இது தற்பொழுது உடைந்து இருக்கின்றது.
கேள்வி:- மதகுகள் ஆண்டுதோறும் பராமரிக்கப்பட்டு இருக்கவேண்டும், இதை முதலிலேயே பார்த்திருக்க வேண்டுமல்லவா?
பதில்:- ஆண்டுதோறும் பராமரித்துக்கொண்டு தான் வருகிறோம். நாம் கூட நன்றாகத்தான் இருக்கிறோம், திடீரென்று காய்ச்சல் வந்துவிடுகிறது அல்லவா?. எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறோம். யாருக்காவது நோய் வரும் என்று தெரியுமா? இது தற்காலிகமாக ஏற்பட்ட விபத்து. இதற்கான புதிய திட்டம் வகுக்கப்பட்டு இருக்கின்றது. கொடி நடப்பட்டு இருக்கின்றது,
ஏற்கனவே, மேலணையில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் புதிய அணை ஒன்று கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து இருக்கின்றது. கொள்ளிடத்தில் முழுமையாக இரண்டு பக்கங்களிலும் கட்டுகிறோம். அதாவது கொள்ளிடம் ஆற்றில் ஒரு பகுதியில் 325 கோடி ரூபாய் மதிப்பிலும், 10 கண்மாய் உள்ள மற்றொரு பகுதியில் 85 கோடி ரூபாய் மதிப்பிலும் அந்த பணியை தொடங்குகிறோம்.
ஆகவே, இரண்டு பகுதிகளிலுமே, புதிதாக 100 மீட்டருக்கு அப்பால் கதவணை கட்டப் படும், கிட்டத்தட்ட 15 மாதங்களில் கட்டி முடிப்பதாக நிபுணர் குழுவினர் தெரிவித்திருக்கின்றார்கள். அந்த பணிகளெல்லாம் வேகமாக நடைபெறுவதற்குண்டான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்.
கேள்வி:- புதிய கதவணை கட்டும் பணி எப்போது தொடங்கும்?
பதில்:- இப்பொழுதுதான் நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட பணி நடைபெறவேண்டும். அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, துரிதமாக அந்த பணிகள் நடைபெற்று, அதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அதை எந்த வடிவத்தில் கட்ட வேண்டும் என்பதையெல்லாம் நிபுணர் குழு மூலமாக ஆராயப்பட்டு, அந்த பணி விரைவில் தொடங்கும்.
கேள்வி:- சம்பா விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்படுமா?
பதில்:- எந்த விதத்திலும் பாதிக்காது. ஏனென்றால், மேலணையைவிட காவிரி 2 அடி குறைவாக இருக்கின்றது. ஆகவே, இப்பொழுதே அதில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. கொள்ளிடம் அணையில் உடைந்த பகுதியில் மணல் மூட்டையை வைத்து, ஒன்றரை மீட்டர் உயரத்துக்கு தற்காலிகமாக தடுப்பு ஏற்படுத்தி இருக்கின்றார்கள், அப்படி தடுப்பு ஏற்படுத்தும்பொழுது எல்லா தண்ணீரும் அங்கு சென்று கொண்டு இருக்கும். கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகரில் இருந்தும், கபினி அணையில் இருந்தும் திறக்கப்படும் தண்ணீரின் அளவை இப்போது குறைத்து விட்டார்கள். இப்போது மேட்டூரில் இருந்து வரும் தண்ணீர் 15 ஆயிரம் கனஅடிதான்.
கேள்வி:- மணல் குவாரியினால் தான் இந்த பிரச்சினை என்று சொல்கிறார்களே?
பதில்:- மணல் குவாரிக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? மணல் குவாரியில் மணல் அள்ளுவதற்கு ஒரு வரைமுறை இருக்கின்றது. ஒரு அணை என்றால், அதில் இருந்து எவ்வளவு தூரம் அள்ளவேண்டும் என்ற வரைமுறைக்கு உட்பட்டுத்தான் மணல் அள்ளுவார்களேயொழிய புதிதாக அள்ளுவது கிடையாது.
அனைத்து ஆட்சியிலும் அப்படித்தான் செய்தார்கள், அ.தி.மு.க. ஆட்சியில் மட்டும் தான் என்பது தவறான கருத்து. குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் தான் மணல் அள்ளுவதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, படிப்படியாக இந்த மணலை தடை செய்வதற்கு அரசு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது.
அதனால்தான், வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்கு, டெண்டர் விடப்பட்டு, இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மணலின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, எம்.சேண்ட் பயன்படுத்த வேண்டுமென்று அரசால் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.
கட்டுமான தொழில் செய்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டு, இப்போது கிட்டத்தட்ட 20-லிருந்து 30 சதவீத மக்கள் இன்றைக்கு எம்.சேண்டை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
படிப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, மணல் அள்ளுவது முழுவதும் தடை செய்யப்பட்டு, முழுக்க, முழுக்க எம்.சேண்ட் மூலமாக கட்டுமான பணியை மேற்கொள்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு பொதுமக்களும், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் ஒத்துழைக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
Thursday, 23 August 2018
Wednesday, 22 August 2018
Tuesday, 21 August 2018
Monday, 20 August 2018
அரஃபா தினம் -ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற மெக்கா நகரில் குவிந்த 20 லட்சம் இஸ்லாமியர்கள்
பக்ரீத் பண்டிகை உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெரு நாள் எனவும் அழைக்கப்படுகிறது.
இஸ்லாம் மார்க்கத்தின் புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித மெக்கா நகரில் ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து மெக்கா நகரில் சுமார் 20 லட்சம் இஸ்லாமியர்கள் இங்கு குவிந்துள்ளனர்.
5 நாட்கள் நடைபெறும் இந்த புனித பயணத்தில் மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் தொழுகை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றிய பின்னர், மினா நகருக்கு புறப்பட்டு செல்லும் யாத்ரீகர்கள், அங்கு சில சம்பிரதாயங்களை நிறைவேற்றிவிட்டு அரபா மலையில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாளை புறப்பட்டு செல்கின்றனர். ஹஜ் புனித பயணத்திற்காக மக்கள் குவிந்துள்ளதால் மெக்கா மற்றும் மதினாவை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹஜ் கடமையின் உள்ளார்ந்த தத்துவங்கள்
இஸ்லாத்தின் அடிப்படையான கடமைகளில் ஏராளமான உள்ளார்ந்த தத்துவங்கள் அடங்கியுள்ளன. இஸ்லாத்தின் ஒவ்வொரு கடமையிலும் அபூர்வமான, ஆச்சரியமான, தத்துவரீதியான அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
அவற்றில் குறிப்பிடத்தக்கது தொழுகை. தொழுகை ஏன் கடமையாக்கப்பட்டது?
இறைவனை நினைவு கூர்வதற்கு ஏராளமான வழிகள் உண்டு, அவற்றில் சிறந்தது தொழுகை. பாவங்களிலிருந்து ஒரு முஸ்லிமை பாதுகாக்கும் சாதனம் தொழுகை. இவற்றை பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
‘நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. என்னையே நீங்கள் வணங்குங்கள். என்னை தியானித்துக்கொண்டே இருக்கும் பொருட்டு தொழுகையைக் கடைப்பிடியுங்கள்’ (20:14).
‘‘இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக. நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும், தீமையையும் விட்டு விலக்கும்’ (29:45)
ஆடம்பர வாழ்க்கையின் ஆதாரத்தை தேடுவதிலிருந்து ஆன்மாவைக் கட்டுப்படுத்தாத வரை தொழுகையை நிறைவு செய்யமுடியாது.
அடுத்தது நோன்பு. அந்த நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?
மனித உள்ளங்களில் இறையச்சத்தை ஏற்படுத்தவும், மனித நெஞ்சங்களில் ஷைத்தானின் வீண் சந்தேகங்களை அப்புறப்படுத்தவும் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது.
‘நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது’. (திருக்குர்ஆன் 2:183)
அதுபோல ‘ஜகாத்’ ஏன் கடமையாக்கப்பட்டது தெரியுமா?
உள்ளங்களை தூய்மைப்படுத்துவதற்கும், ஆன்மாக்களை அழகுபடுத்துவதற்கும் தான் ஜகாத் கடமையாக்கப்பட்டுள்ளது. உள்ளும், புறமும் ஜகாத்தினால் தூய்மை அடைகிறது.
‘(நபியே) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக்கொண்டு, அதனால் அவர்களை உள்ளும், புறமும் தூய்மையாக்குவீராக’ (திருக்குர்ஆன் 9:103)
அடுத்து வருவது ஹஜ். இந்த ‘ஹஜ் பயணம் கடமையாக்கப்பட்டதற்கு பலவிதமான தத்துவ காரணங்கள் உண்டு. அவற்றை இங்கு விரிவாகக் காண்போம்.
புனித ‘மக்கா’ சென்று இஸ்லாம் கூறும் சில வணக்க வழிபாடுகள் செய்வது ‘ஹஜ்’ என்று அழைக்கப்படுகிறது.
உடல் பலமும், பண பலமும் நிறைவாகப் பெற்றவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு தடவையாவது புனித ‘மக்கா’ சென்று ‘ஹஜ்’ செய்வது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமை ஆகும்.
‘இன்னும் அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்தல் அதன்பால் சென்று வர சக்தி பெற்றவர் மீது கடமையாகும்’ என்பது திருக்குர்ஆன் (3:97) வசனமாகும்.
புனித ஹஜ் பயணம் தொடர்பான நபிமொழிகள் வருமாறு:–
‘‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையில், ‘மக்களே, உங்கள் மீது அல்லாஹ் ஹஜ் கடமையாக்கியுள்ளான் ; எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்’ என்றார்கள். ஒரு தோழர் எழுந்து, ‘அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு ஆண்டுமா ஹஜ் கடமை? என மூன்று தடவை கேட்டார்’ அதுவரை மவுனமாக இருந்த மாநபி (ஸல்) அவர்கள் ‘நான் ஆம் என்றால் அது ஒவ்வொரு ஆண்டும் கடமையாகிவிடும்’ (அவ்வாறு அது ஒவ்வொரு ஆண்டும் கடமை இல்லை) என பதிலளித்தார்கள்’’ (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி).
‘‘ஹஜ் செய்வது முந்திய பாவங்கள் அனைத்தையும் அழித்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர் : அமர் பின் ஆஸ் (ரலி) நூல் : முஸ்லிம்)
‘‘ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டில் ஒன்றை மற்றொன்றோடு பின்பற்றுங்கள். தங்கம் மற்றும் வெள்ளி, இரும்பு ஆகியவைகளின் அழுக்குகளை கொல்லனின் நெருப்பு போக்குவது போன்று, அவ்விரண்டும் ஏழ்மை மற்றும் பாவத்தையும் போக்கிவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : திர்மிதி)
‘‘ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் இறைவனின் தூதுக்குழுவினர் ஆவர். இறைவனிடம் அவர்கள் பிரார்த்தித்தால், அதை அவன் ஏற்றுக் கொள்கிறான், இறைவனிடம் அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால், அவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : நஸயீ, இப்னுமாஜா)
‘‘ஹஜ் பயணத்திற்கு செலவு செய்வது இறைவழிப்பாதையில் ஏழுநூறு மடங்கு செலவு செய்வதைப் போன்று ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’’ (அறிவிப்பாளர் : புரைதா (ரலி) நூல் : அஹ்மது)
இஸ்லாமியக் கடமைகளை நான்கு விதமாக கூறலாம். 1) உள்ளம் சார்ந்தது. இதுதான் அடிப்படை. இதற்கு ஈமான் (இறை நம்பிக்கை) என இஸ்லாம் கூறுகிறது.
2) உடல் சார்ந்தது. இது தொழுகை மற்றும் நோன்பை குறிக்கிறது.
3) பொருள் சார்ந்தது. இது ஜகாத் மற்றும் ஸதகா, அன்பளிப்பு, வக்ப், அழகிய கடன் போன்ற பொருளாதாரம் சார்ந்த கடமைகளை குறிக்கிறது.
4) உடல் மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கடமை தான் புனித ஹஜ் எனும் கடமையாகும். உடல் பலமும், பணபலமும் ஒன்று சேர பெற்றவர்களுக்குத்தான் ஹஜ் கடமை. இரண்டு தகுதிகளையும் பெறாதவர் அல்லது இரண்டில் ஒரு தகுதியை பெறாதவர் மீது ஹஜ் கடமையாகாது.
இதை பின்வரும் திருக்குர்ஆனின் வசனம் தெளிவுபடுத்துகிறது.
‘‘அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை’’ (திருக்குர்ஆன் 3:97)
ஹஜ் என்பது உள்ளம் ஆசைப்படும் வணக்கம், உயிரோட்டமான வணக்கம். அது ஒரு உலக மகாநாடு. அங்கு சகோதரத்துவம் வெளிப்படுகிறது, சமாதானம் நிலவுகிறது. அன்பு பெருகுகிறது, அமைதி நிலவுகிறது.
தேசம், இனம், மொழி, நிற வேறுபாடுகளைக் களைந்து ஒரேவிதமான வெண்மை நிற சீருடைகளை அணிந்து இறையில்லத்தில் கூடி தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள். இது இஸ்லாமியர்களின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.
பல உள்ளார்ந்த தத்துவங்களை புனித ஹஜ் பயணம் எடுத்துரைக்கிறது. இத்தகைய தத்துவங்களின் அடிப்படையில்தான் முஸ்லிம்கள் தமது உலக வாழ்வை அமைத்துக் கொள்ளும்படி இஸ்லாமும் விரும்புகிறது. அதுவே இறைவனின் விருப்பமும், இறைத்தூதரின் விருப்பமும் ஆகும்.
Sunday, 19 August 2018
Saturday, 18 August 2018
Friday, 17 August 2018
Thursday, 16 August 2018
Wednesday, 15 August 2018
Tuesday, 14 August 2018
Monday, 13 August 2018
Sunday, 12 August 2018
Saturday, 11 August 2018
கொடிக்கால்பாளையம் நிக்காஹ் தகவல்12/08/2018
நமதூர் மேலத்தெரு செய்யது சுபஹான் அலி அவர்களின் மகளார் ஜெமிலா சுபஹான் மணமகளுக்கும் காரியமங்கலம் அப்துல் பத்தாஹ் அவர்களின் மகனார் பரக்கத் அலி மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1439 துல்காயிதா பிறை 29 (12/08/2018) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மேலத்தெரு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது.
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்:
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
Friday, 10 August 2018
Thursday, 9 August 2018
கருணாநிதி மறைவு: திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு பஸ்கள் ஓடவில்லை
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையொட்டி திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப் பட்டது.
நேற்று 2-வது நாளாக திருவாரூர் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப் பட்டது. ரெயில்கள் இயங்கிய போதும் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. லாரிகள், வேன்கள், கார்கள், ஆட்டோக்கள் என அனைத்தும் இயக்கப்படவில்லை. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவர் படித்த திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். திருவாரூர் கமலாலயம் கிழக்கு கரையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமையில் கட்சியினர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் வர்த்தகர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று பஸ் நிலையம், தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர். பின்னர் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருணாநிதியின் மறைவையொட்டி திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி துக்கம் அனுசரித்தனர். பூக் கடைகள், பிளக்ஸ் போன்ற கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.
திருவாரூர் பஸ் நிலையம், கடைவீதி போன்ற முக்்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர் என்பதால், அவருடைய பிரிவை தாங்க முடியாமல் திருவாரூர் பகுதியே சோகத்தில் மூழ்கியது.
நன்னிலம், கங்களாச்சேரி, ஆண்டிப்பந்தல், பனங்குடி, சன்னா நல்லூர், பூந்தோட்டம், பேரளம், கொல்லுமாங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. அதேபோல கருணாநிதியின் மறைவையொட்டி கோட்டூர், பெருகவாழ்ந்தான், களப்பாள், விக்கிரபாண்டியம், திருநெல்லிக்காவல் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
கருணாநிதியின் மறைவையொட்டி மன்னார்குடியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேற்று 2-வது நாளாக திருவாரூர் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப் பட்டது. ரெயில்கள் இயங்கிய போதும் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. லாரிகள், வேன்கள், கார்கள், ஆட்டோக்கள் என அனைத்தும் இயக்கப்படவில்லை. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவர் படித்த திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். திருவாரூர் கமலாலயம் கிழக்கு கரையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமையில் கட்சியினர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் வர்த்தகர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று பஸ் நிலையம், தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர். பின்னர் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருணாநிதியின் மறைவையொட்டி திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி துக்கம் அனுசரித்தனர். பூக் கடைகள், பிளக்ஸ் போன்ற கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.
திருவாரூர் பஸ் நிலையம், கடைவீதி போன்ற முக்்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர் என்பதால், அவருடைய பிரிவை தாங்க முடியாமல் திருவாரூர் பகுதியே சோகத்தில் மூழ்கியது.
நன்னிலம், கங்களாச்சேரி, ஆண்டிப்பந்தல், பனங்குடி, சன்னா நல்லூர், பூந்தோட்டம், பேரளம், கொல்லுமாங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. அதேபோல கருணாநிதியின் மறைவையொட்டி கோட்டூர், பெருகவாழ்ந்தான், களப்பாள், விக்கிரபாண்டியம், திருநெல்லிக்காவல் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
கருணாநிதியின் மறைவையொட்டி மன்னார்குடியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Wednesday, 8 August 2018
வெளியூர் மௌத் அறிவிப்பு 8 /8/2018
வெளியூர் மௌத் அறிவிப்பு 8/8/2018
நமதூர் தெற்கு தெரு மர்ஹூம் சி.ப .முஹம்மது ஹாமீது அவர்களின் சம்பந்தியும் ஹாஜா நஜிபுதீன் அவர்களின் மாமியாருமான மல்லிகா பீவி அவர்கள் ஆழியூரில் மௌத்.
அன
நமதூர் தெற்கு தெரு மர்ஹூம் சி.ப .முஹம்மது ஹாமீது அவர்களின் சம்பந்தியும் ஹாஜா நஜிபுதீன் அவர்களின் மாமியாருமான மல்லிகா பீவி அவர்கள் ஆழியூரில் மௌத்.
அன
Tuesday, 7 August 2018
தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார்!! ஓய்வறியா சூரியன் ஓய்வெடுத்துக் கொண்டது
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 11 நாட்கள் ஆகியது. அகில இந்திய அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், கேரள ஆந்திரா, மாநில முதல்வர்கள், திரை உலக பிரபலங்கள் என காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்து சென்றனர்
வயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்-இறக்கமுமாக காணப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.
இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதாக நேற்று மதியம் தகவல்கள் வெளியானது. இது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து நேற்று காலை காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் குடும்பத்தினர் ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், தயாளு அம்மாள், மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தனர்
நேற்று மாலை 6.30 மணி அளவில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி ஆஸ்பத்திரி சார்பில் 6-வது அறிக்கை வெளியிடப்பட்டது அதில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அவரது வயது மூப்பின் மூலம் வரும் பிரச்சினைகளை கணக்கிடும் போது, முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பராமரிப்பதில் சவாலான நிலையே தொடர்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவ சிகிச்சையை அடுத்த 24 மணி நேரத்தில், அவரது உடல் எவ்வாறு ஏற்கிறது என்பதை வைத்துத்தான் நோயில் இருந்து அவர் மீள்வதை தீர்மானிக்க முடியும் என கூறப்பட்டது.
அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே அரசியல் கட்சியினரும் தொண்டர்களும் மருத்துவமனை முன்பு குவிய தொடங்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொண்டர்கள் வா வா தலைவா, கலைஞர் வாழ்க என விடிய விடிய கோஷமிட்டபடியே இருந்தனர்.
இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின், கனிமொழி, செல்வி, ஆ.ராசா வருகை தந்தனர். கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம், உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியது. தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கவனித்து வந்தனர்.
இந்த நிலையில் மாலை 4.30 மணிக்கு காவேரி மருத்துவமனை சார்பில் 7-வது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கருணாநிதி உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும். கடந்த சில மணிநேரஙகளில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. முடிந்தவரை அவருக்கு சிகிச்சை அளிக்கபட்ட போதிலும் அவரது உடலின் முக்கிய உறுப்புகள் செயல் இழந்து வருகிறது என கூறப்பட்டது.
இந்நிலையில் 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 94. இன்று மாலை 6:10 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Monday, 6 August 2018
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து ப
திருவாரூர் சேந்தமங்கலம் காவிரி நகரை சேர்்ந்தவர் சிங்காரவேலு. இவர் லாரிகள் வைத்து மணல், ஜல்லி வியாபாரம் செய்து வருகிறார். தற்போது ‘ஆன்லைன்’ மூலம் மணல் எடுப்பதால் சுழற்சி முறையில் இவருக்கு மணல் எடுக்க அனுமதி கிடைப்பதில் கால தாமதமானது. இதனால்் கடந்த மாதம் 13-ந் தேதி தனக்கு சொந்தமான லாரி ஒன்றை வீட்டின் அருகில் உள்ள சுப்பம்மாள் நகரில் உள்ள சேமிப்பு கிடங்கு பகுதியில் நிறுத்தி வைத்து இருந்தார்.
இந்த நிலையில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 நாட்களுக்கு பின்னர் அதாவது 18-ந் தேதி இவருக்கு மணல் எடுப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து லாரியை எடுப்பதற்காக டிரைவர் சென்றுள்ளார். அப்போது லாரியின் டீசல் டேங்க் அருகில் ஏர் பில்டர் மேல் பாதுகாப்பு கம்பி வளையத்தில் ஒரு புறா 2 முட்டைகளை இட்டு இருப்பதை பார்த்துள்ளார். இது குறித்து டிரைவர், லாரி உரிமையாளர் சிங்கார வேலுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்த சிங்காரவேலு, லாரி நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது புறா, அழகாக கட்டியிருந்த கூட்டில் முட்டைகள் இருப்பதை பார்த்தார். இதனையடுத்து லாரியை இயக்க வேண்டாம் என டிரைவரிடம் கூறினார். இந்த சம்பவம் நடந்து கொண்டு இருந்தபோது இரை தேடிச்சென்ற புறா, முட்டைகளை அடை காப்பதற்காக லாரியை சுற்றி, சுற்றி வந்தது.
இதனை கண்டதும் நெகிழ்ச்சியடைந்த சிங்காரவேலு, லாரியால் கிடைக்கும் வருமானம் தனக்கு பெரிதல்ல என்று முடிவு செய்து டிரைவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். தினமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை போய் பார்த்து புறாவின் முட்டை பாதுகாப்பாக உள்ளதா என கண்காணித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டை உடைந்து குஞ்சுகள் வெளியில் வந்தது. கண் திறக்காமல் இருந்த அந்த புறா குஞ்சுகளை பாாத்து சிங்காரவேலு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். தற்போது அந்த குஞ்சுகள் கொஞ்சம், கொஞ்சமாக கண் விழித்து வருகிறது.
இதுகுறித்து லாரி உரிமையாளர் சிங்காரவேலு கூறுகையில், உயிர் பிறப்பு என்பது இறைவன் கொடுத்த வரம். அவ்வாறுதான் புறா குஞ்சுகளை நான் பார்க்கிறேன். அதனால் தான் எனக்கு ஆயிரக்கணக்கில் வருமானம் பாதிக்கப்பட்டாலும் கூட பரவாயில்லை. புறா குஞ்சுகள் இறக்கை முளைத்து பறந்து செல்லும் வரை லாரியை எடுக்காமல் காத்திருக்க போகிறேன். வருமானத்்தை விட இது எனக்கு அதிகமான மகிழ்ச்சியை அளிக்கிறது என்பது தான் உண்மை என தெரிவி்த்தார்.
கடை ஏழு வள்ளல்களில் பேகன் என்பவர் குளிருக்கு நடுங்கிய மயிலுக்கு போர்வை கொடுத்ததாக வரலாறு. அந்த வழியில் புறாவிற்காக தனது லாரியை இயக்காமல் இருக்கும் சிங்காரவேலுவின் மனிதநேயத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Sunday, 5 August 2018
வருமான சான்றிதழ் பெற செல்போன் மூலம் விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டத்தின்கீழ் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், விவசாய வருமான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ் உள்பட 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்கள் இணைய வழியில் பொது சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மையங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் கிராம தொழில் முனைவோர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனியார் பொதுசேவை மையங்கள் ஆகியவற்றின் வாயிலாக விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது மேற்கண்ட சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது செல்போன் (ஸ்மார்ட்போன்) அல்லது கணினி மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சான்றிதழ்களை பெற “லீ௴௴ஜீ://௴ஸீமீமீஸ்ணீவீ.௴ஸீ.ரீஷீஸ்.வீஸீ/சிவீ௴வீக்ஷ்மீஸீ” என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து, பயனாளியின் பெயரை பெற்றதும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம். இதற்கான வழிமுறைகளை https://www.tnes-ev-ai.tn.gov.in/vi-d-e-otut-o-r-i-al.html மற்றும் https://www.tnes-ev-ai.tn.gov.in/Use-r-M-a-nu-al.html ஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், “ஹிவிகிழிநி” என்ற செல்போன் செயலி மூலமாக வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகிய 3 சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான சேவை கட்டணம் ரூ.60. இதை இணையதள வங்கி முறை அல்லது கிரெடிட், டெபிட் அட்டைகள் மூலமாக செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Saturday, 4 August 2018
Friday, 3 August 2018
Thursday, 2 August 2018
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் மறைவு; முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் நேரில் அஞ்சலி
மதுரை,
திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (வயது 69). இவர் மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் வசித்து வந்தார். நேற்று இரவு இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் எம்.எல்.ஏ போஸுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு நடக்கிறது. மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் உடலுக்கு முதல்வர் பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் சென்ற துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் ஏ.கே. போசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, அ.தி.மு.க.வில் விசுவாசமிக்க தொண்டன் ஆக பணியாற்றியவர் ஏ.கே. போஸ். மக்களிடையே நன்மதிப்பினை பெற்று 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
கட்சியில் படிப்படியாக தன்னுடைய உழைப்பினால் முன்னேறியவர். அவரது மறைவு மிகுந்த வருத்தம் தருகிறது என கூறினார்.
இதேபோன்று துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஏ.கே. போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, மக்களுக்காக உழைத்து வந்த அவரது மறைவு பேரிழப்பு. மக்களுக்காக பல்வேறு திட்டங்களை ஜெயலலிதாவிடம் கொண்டு சென்றவர்.
கட்சி மீது கொண்ட விசுவாசத்தினால் மக்களுக்கு சேவை செய்ய அவருக்கு ஜெயலலிதா 3 முறை வாய்ப்பு தந்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)