ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலூரு நகரத்தில் வசித்து வந்த சிறுவன் மீசலா நிரீக்ஷன் (வயது 4).
இவன் தனது வீட்டில் இருந்தபொழுது பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருளை பிரித்து சாப்பிட்டுள்ளான். சிறுவர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக இந்த பாக்கெட்டிற்குள் அவர்களை கவரும் வகையிலான மிக சிறிய பிளாஸ்டிக்கினால் ஆன விளையாட்டு பொம்மை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. இதனை அறியாத அந்த சிறுவன் உணவு பொருளுடன் சேர்த்து பொம்மையை தவறுதலாக கடித்து தின்றுள்ளான்.
இதனை அடுத்து அவனுக்கு வாந்தி வந்துள்ளது. வாய் வழியே அதனை வெளியே துப்ப முயற்சித்துள்ளான். இதனை அவனது தாய் கவனித்துள்ளார். அந்த பொம்மை தொண்டைக்குள் சிக்கியுள்ளது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதனை வெளியே எடுக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
உடனடியாக அவனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவன் இறந்து விட்டான் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
உணவு பொருள் தயாரிப்பாளர் மீது போலீசில் சிறுவனின் பெற்றோர் புகார் பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment