Wednesday, 13 October 2021

கொடிக்கால்பாளையம்

 


கொடிக்கால் பாளையத்தில் முக்கிய சாலையான மாஸ்டர் கடை அருகில் உள்ள சந்திப்பில் பாதாள சாக்கடை வேலை நடந்துகொண்டு இருக்கின்றதுகொடிக்கால் பாளையத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் ஆசாத்நகர் வழியாகவும் ராமரோட வழியாகவும் செல்லவும்

Monday, 11 October 2021

கொடிக்கால்பாளையம் தினா அப்பா பெண்கள் அரபிக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா



 

இமாம்கள் குடியிருப்பு திறப்புவிழா






 

பிளாஷ்பேக் : ஜமாஅத் தேர்தல் 2012

*தேர்தல் 2012 பற்றிய தகவல்கள்*






 நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தேர்தல் 2021 நடைமுறை தற்போது வாக்காளர் பட்டியலில் திருத்தம் பணிகள் துவக்கி நடைப்பெற்று வருவது நாம் அறிந்த ஒன்றே. நமது ஜமாஅத் சட்ட பைலாக்கள் திருத்தப்பட்டு கடந்த 2012 ஆண்டு நடைப்பெற்ற முதல் நிருவாகிகள் பிரதிநிதிகள் தேர்தல் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்ளுவதில் பெருமை அடைகிறோம்.

 இதில் மாற்றி அமைக்கப்பட்ட சட்ட பரிபாலன முறையில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும் .எனவே ஜமாத்தார்கள் இடையே  மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது , நாட்டாண்மை முறை மாற்றப்பட்டு தலைவர் பதவி ஏற்படுத்தப்பட்டது .       வருடாத்திர மகாஜன சபை கூட்டம் நாட்டாண்மை ஹாஜி செ.மு. மு. கலீலூர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மார்ச் 4 ஆம் நாள் 2012 அன்று  நடைபெற்றது . 

ஆண்டு அறிக்கைகள் வாசிக்கப்பட்டு புதிய நிருவாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் 2012 - 2015 
வரை 

 *தலைவர்* புதுமனைத் தெரு  A M ரபியுதீன் 


 *செயலாளர்*          பர்மா தெரு   M.ஜாகிர் ஹுசைன் Ex.M.C *

துணைத்தலைவர் (பள்ளிவாசல் பொறுப்பு )* மலாயாத் தெரு   A ஜெஹபர்  ஷேக் அலாவுதீன்  

 *பொருளாளர்*   தெற்கு தெரு KVS .அப்துல் காதர் *

ஆடிட்டர்* நடுத்தெரு  A M அப்துல் ரெஜாக் *

52 பணப்பகுதி பொருளாளர்* நடுத்தெரு  மு அ முஹம்மது அபுசாலிஹ்  


 *தி. ஹாஜி இப்ராஹிம்சா  ராவுத்தர் வக்ப் தர்ம அறக்கட்டளை*  *அடிசனல் டிரஸ்டி* நடுத்தெரு ப மு ஹபிபுல்லாஹ் 


 *மொத்தம் பிரதிநிதிகள் = 21*

 *தெரு தொகுதியில்  வெற்றி பெற்றவர்கள்  விபரம்* *

மேலத்தெரு/காட்டுப்பள்ளி தெரு* 

        இ.மு .முஹம்மது ஜமால்       V.P.M.A.ஹபீப் ரஹ்மான் 


 *பர்மா தெரு*      

M.ஜாகிர் ஹுசைன் EX .M.C    
T.  சாதிக் பாட்சா  


 *பள்ளிவாசல் தெரு*       
 M M அப்துல் ரஷீத்        
 முஹம்மது இனாயதுல்லாஹ் (மஸ்தான் ) *

தெற்கு தெரு*          
 K.V.S.அப்துல் காதர்          
சுல்தான் கபீர்          
மு .முஜிபுர் ரஹ்மான்           
பஜாலுதீன் *

நடுத்தெரு*       

 ப மு ஹபிபுல்லாஹ்         
அ மா அப்துல் ரெஜாக்        
 மு அ முஹம்மது அபுஸாலிஹ்             
செ மு மு கலீலூர் ரஹ்மான்         
மு முஹம்மது சுல்தான் (அமீன் ) 

 *வடக்கு தெரு*
 முஹம்மது அலி  
 முஹம்மது அப்துல் காதர் 

 *புதுமனைத் தெரு* 
A M ரபியுதீன் 

 *மலாயாத் தெரு* 
 ஜெஹபர்  ஷேக் அலாவுதீன்

  *ஜெயம் தெரு*    
பாபு (எ )ஷாஜஹான்
   VTAN முஹம்மது ஹையும் *

மலரும் நினைவுகள்* 

 *அடுத்தது தேர்தல் 2015*

Sunday, 10 October 2021

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் புதிய கட்டிடம் நாளை திறப்புவிழா


 10/10/2021,
 அஸ்ஸலாமு அலைக்கும்.. நமதூர் கொடிநகர் முஹைதீன் ஆண்டவர்கள் ஊர் உறவின் முறை ஜமாஅத் இமாம்களுக்காக தனி நன்கொடையாளர்களால் கட்டப்பெற்று வந்த கட்டிடம், நமதூர் ஜமாஅத் தலைவர் ஹாஜி *V.S.N.முஹம்மது ஆதம் BSC, BGL* , அவர்கள் தலைமையில் , *ஜமாஅத் நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் ஜமாஅத்தார்கள்* முன்னிலையில், ஹாஜி *K.S.A.முஹம்மது உசேன், BSC, MA* அவர்கள் நாளை காலை 10 மணி அளவில் அர்ப்பணிக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் நமதூர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இது போன்று நமதூருக்கு பல மக்கள் நல உதவிகள் செய்து வரும் மர்ஹூம் K.S.அப்துல் ஜப்பார் குடும்பத்தார்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி சிறப்பாக செயல் பட்டு வரும் நமதூர் ஜமாஅத் தலைவர் ஹாஜி *V.S.N.முஹம்மது ஆதம்*, ஜமாஅத் நிருவாகிகள் மற்றும் பிரதிநிதிகள் அனைவருக்கும் கொடிநகர் தகவல் குழுமம் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறேம். அல்ஹம்துலில்லாஹ்.புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே,

Friday, 8 October 2021

கொடிக்கால்பாளையம் பள்ளிவாசல் அறிவிப்பு பலகையில் உள்ள திருமணம் விபர நோட்டீஸ் கிழிப்பு



தலைவர் முஹம்மது ஆதம் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பள்ளிவாசல் அறிவிப்பு பலகையில் திருமண தகவல் தாளில் கையெழுத்து பகுதியில் இருந்த பெயர்கள்  கிழித்துவிட்டார்கள்.


 

தி.இப்ராம்சா ராவுத்தர் நிஸ்வான் பெண்கள் அரபிக்கல்லூரி முதலாவது பட்டமளிப்பு விழா அழைப்பு


குறிப்பு  :செயலாளர் எம்.முஜிபுர் ரஹ்மான் பெயர் இல்லாமல் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.






 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு


 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி பி காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருவாரூர் மாவட்ட தலைவர் எம் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் இஸ்லாமிய பகுதிகளில் நடைபெறக் கூடிய பிரச்சினைகள் சம்பந்தமாகவும் வளர்ச்சிப் பணிகள் சம்பந்தமாகவும் 45 நிமிடத்திற்கு மேல் பல்வேறு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு, விஜயகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் பி, சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்

Thursday, 7 October 2021

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் கட்டிட திறப்புவிழா அழைப்பு


 

வெளியூர் மௌத் அறிவிப்பு

 




 நமதூர் நடுத்தெரு வெற்றிலைகார வீட்டு மர்ஹீம் H. செய்யதுமுபாரக் அவர்களின் மூத்த மருமகனும், S. முஹம்மது அப்துல்கரீம், S .முஹம்மது ஹசன் அவர்களின் மச்சானுமாகிய  M இஸ்மாயில் கனி அவர்கள் மலேசியாவில் மெளத்.



காவடிச்சேரி தர்கா ஹந்தூரி விழா


 

Tuesday, 5 October 2021

நமதூர் மௌத் அறிவிப்பு

 



நமதூர் மலாயத்தெரு மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாரும் நமது ஜமாஅத் முன்னாள் தலையாரி மர்ஹூம் அப்துல் வஹாப் அவர்களின் மச்சானும் ,அப்துல் ஹை ,சின்னராஜா என்கிற செய்யது முஹம்மது மற்றும் ஆட்டோ பாஷா இவர்களின் தாய் மாமாவுமாகிய அப்துல் மஜீத் அவர்கள் மௌத்.



 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன். 

 அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 06.10.2021 காலை 11 மணிக்கு

Saturday, 2 October 2021

துபை எக்ஸ்போ 2020 துவங்கியது

#dubaiexpo2020

1stOctober 2021 to 31st march 2022



 

மௌத் அறிவிப்பு


 நமதூர் குளத்தான்கரையா வீட்டு மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகனும் பகுருதீன், குத்புதீன், சலாவூதீன்,ஜெஹபர் சேக் அலாவுதீன், பரித்துல் ஹக்கு இவர்களின் தகப்பனாருமான பக்கீர் உசேன் அவர்கள் வடக்கு தெரு எஸ்.ஆர் காலணியில் மௌத்.


அன்னாரின் ஜனாசா இன்று காலை11.மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.