Saturday, 28 December 2019

முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல்: திருவாரூர் மாவட்டத்தில் 76.93 சதவீத வாக்குப்பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் திருவாரூர் ஒன்றியம்-76,025, மன்னார்குடி ஒன்றியம்-1,04,071 கோட்டூர் ஒன்றியம்-84,077, திருத்துறைப்பூண்டி ஒன்றியம்-68,683, முத்துப்பேட்டை ஒன்றியம்-64,513 என மொத்தம் 3 லட்சத்து 97 ஆயிரத்து 369 வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள 838 வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.

இதில் திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள்-28,157, பெண் வாக்காளர்கள்-30,889, மூன்றாம் பாலினம் 2 பேர் என மொத்தம் 59,048 வாக்குகள் பதிவாகின. இது 75.4 சதவீதமாகும்.

மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள்-37,086, பெண் வாக்காளர்-42,684 என மொத்தம் 79,770 வாக்குகள் பதிவாகின. இது 72.07 சதவீதமாகும்.

கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் ஆண் வாக்காளர்கள்-31,128, பெண் வாக்காளர்கள்-34,364 என மொத்தம் 65,492 வாக்குகள் பதிவாகின. இது 74.65 சதவீதமாகும். திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குசாவடிகளில் ஆண் வாக்காளர்கள்-25, 737, பெண் வாக்காளர்கள்-27,979 என மொத்தம் 53,716 வாக்குகள் பதவாகின. இது 75.57 சதவீதமாகும்.

முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆண் வாக்காளர்கள்-21,859, பெண் வாக்காளர்கள்-25,828 என மொத்தம் 47,687 வாக்குகள் பதிவாகின. இது 68.61 சதவீதமாகும். முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆண் வாக்காளர்கள்-1,43,967, பெண் வாக்காளர்கள்-1,61,744 மற்றும் மூன்றாம் பாலினம் -2 பேர் என மொத்த 3 லட்சத்து 5 ஆயிரத்து 713 வாக்காளர்கள் வாக்குகளை அளித்துள்ளனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் சராசரியாக 76.93 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

திருவாரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் சீல் வைத்தனர். இதனை தொடர்ந்து வாக்குசாவடியில் இருந்து வாக்குப்பதிவு பெட்டிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன்படி திருவாரூர் ஒன்றியத்திற்கு திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி, மன்னார்குடி ஒன்றியத்திற்கு மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி, கோட்டூர் ஒன்றியத்திற்கு கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு முத்துப்பேட்டை பெரியநாயகி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு பாதுகாப்பாக அறையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த அறைகளுக்கு அதிகாரிகள், வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டு போடப்பட்டு சீல் வைத்தனர்

Saturday, 21 December 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 21/12/2019

 நமதூர் வடக்கு தெரு கிடாக்கார வீட்டு மர்ஹூம் வாத்தியார் அப்துல் காதர் அவர்களின் சகோதரரும் ,முஜிபுர் ரஹ்மான், சாதிக் அலி,யூசுப்தீன் இவர்களின் தகப்பனாருமான முத்துமாமா என்கிற முஹம்மது ரஃபி அவர்கள் பர்மா தெரு தனது இல்லத்தில் மௌத்
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

#CAA2019 - திருவாரூரில் குடியுரிமை சட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


Wednesday, 4 December 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 04.12.2019


மலாயாத்தெரு
மா்ஹும்  வெ.ப.முஹம்மது தாவூத் அவா்களின் மகளும், மா்ஹும் வா.ம.அ. அப்துல் கரீம் அவா்களின் மனைவியும், A.ஹாஜா ஷேக் அலாவுதீன் தாயாரும் மான A. பசீலா பீவி அவா்கள் மலாயாத்தெருவில் மெளத்
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிவூன்

இன்று இரவு 08:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Friday, 29 November 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 29.11.2019(K.M.அப்துல் சலாம்)



நமதூர் நடுத்தெரு இ.மு.மு.குத்புதீன் அவர்களின் மாமனாரும் ஹாஜாத்துல்லா மற்றும் சபாயத்துல்லாஹ் இவர்களின் தகப்பனாருமான ஹாஜி K.M.அப்துல் சலாம் அவர்கள் அடியக்கமங்கலம் ராஜா தெருவில் மௌத்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Tuesday, 26 November 2019

உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி மஹாராஸ்டிரா பாஜக அரசு ராஜினாமா


நமதூர் மௌத் அறிவிப்பு 26.11.2019





நமதூர் நடுத்தெரு கா.செ.மு. அமீருதீன், கா.செ.முசலாஹுதீன், கா.செ.மு.கமருதீன் மற்றும்  ராஜா என்கிற கா.செ.மு.நஜ்முதீன் ஆகியோர்களின் தந்தை *கா.செ. முஹம்மது தாஜுதீன்* அவர்கள் மௌத்.

இன்று இரவு 8.00 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்.

Sunday, 24 November 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 24.11.2019




நமதூர் தெற்குத்தெரு (பள்ளிவாசல் வணிகவளாகம் எதிரே ) மர்ஹூம் சேட்டாபாய் என்கிற அப்துல் காதர் அவர்களின் மாமியாரும் A.k.n சகோதரர்கள் ராஜா,சர்தார், அமீன் இவர்களின் பாட்டியாருமான ஆமினாம்மாள் அவர்கள் மௌத்.

ஜனாசா நல்லடக்கம் மாலை 5 மணிக்கு

நமதூர் மௌத் அறிவிப்பு 24.11.2019




நமதூர் தெற்கு தெரு ஜலீல் காலணியில் வெற்றிலை கார வீட்டு மர்ஹூம் அப்துல் ரெஜாக் அவர்களின் கொளுத்தியாளும் மர்ஹூம் அமானுல்லா அவர்களின் சிறிய மாமியாருமான செய்யது நாச்சியார் அவர்கள் மௌத்.

ஜனாசா நல்லடக்கம் நேரம் காலை 11 மணி

Thursday, 21 November 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 21.11.2019

✲✲     அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)      ✲✲

          .......ஜனாஸா அறிவிப்பு......

அடியக்கமங்கலம் கீழச்செட்டித்தெரு ‘மர்ஹும்’கப்பலத்தா என்கிற கு.மு.அப்துல் ரஹீம் அவர்களின் மகனார் A.ஹசன் குத்தூஸ் அவர்கள்
தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். இன்ஷாஅல்லாஹ்!

Wednesday, 20 November 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 20.11.2019




நமதூர் பள்ளிவாசல் தெரு மர்ஹூம் செய்யது அகமது ,மஸ்தான் என்கிற இனாயத்துல்லா அவர்களின் தாயாரும் பாஹிம் அவர்களின் பாட்டியாளுமான ரம்ஜான்பீவி அவர்கள் மெளத்


ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு

Thursday, 14 November 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 14.11.2019

நமதூர் தினாஇப்ராஹிம்ஷா தெரு இல்யாஸ்,இதிரிஸ்,பருஜ்,யூனுஸ் ,ஹாரிஸ் ஆகியோர்களின் தகப்பானர் மைனர் பஷீர் என்கிற பஷீர் அகஹது மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்

ஜனாசா நல்லடக்கம் நேரம் மாலை 3:15

வெளியூர் மௌத் அறிவிப்பு 14.11.2019

☪ KOM NEWS ONLY 🕌

வெளியூர் மௌத் அறிவிப்பு

நமதூர் தாஜ் பிராக்ஷா தெரு ஜெ. சலாவுதீன் மற்றும் மலாயத்தெரு கே.எஸ்.ஏ.முஹம்மது ஹூசேன் இவர்களின் சம்பந்தி 'அல் ஸாபா ' அப்துல் ரெஜாக் அவர்கள் ஏனங்குடியில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

நல்லடக்கம் நேரம் 15.11.2019 வெள்ளி மாலை 4 மணிக்கு

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

Saturday, 9 November 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 09/11/2019



 நமதூர் நடுத்தெரு யூசுப் மரைக்காயர் அவர்கள் திருவாரூர் அன்னை காப்பகத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

 அன்னாரின் ஜனாசா இன்று காலை 11மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

Thursday, 31 October 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 31.10.2019



அடியக்கமங்கலம் மணற்கேணித்தெரு பந்தராவீட்டு ‘பேங்க்’குத்புதீன் அவர்களின் சகோதரரும்,மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மருமகனும் ஹாஜா சேக் அலாவுதீன் அவர்களின் மச்சானும், மஹாதீர் மற்றும் அல்கபீர் ஆகியோர்களின் தகப்பனாருமாகிய ‘சேத்தப்பா’என்கிற அஜ்முதீன் அவர்கள் நமதூர் மலாயத்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!

அன்னாரின் ஜனாஸா இன்று (31.10.2019) இரவு 8:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

கொடிக்கால்பாளையம்


Wednesday, 30 October 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 30.10.2019



நமதூர் 52 பணப்பகுதி நகர் S.முஹம்மது ஆரிபு பண்டாரி  அவர்களின் மச்சான் பஷீர் அஹமது அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்

Friday, 25 October 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 25.10.2019

☪ KOM NEWS ONLY 🕌

நமதூர் மலாயாதெரு K.S.A.முஹம்மது ஹுசேன், K.S.A.ஷேக்தாவுது இவர்களின் தகப்பனார் ஹாஜி K.S.அப்துல் ஜப்பார் அவர்கள் மௌத்.


ஜனாஸா நல்லடக்கம் 27.10.2019 ஞாயிறு காலை 10:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெறும்.


 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

வெளியூர் மௌத் அறிவிப்பு 25.10.2019

நமதூர் தெற்கு தெரு கா.மெ.மு.முஹம்மது ஜபருதீன் அவர்களின் சம்பந்தரும் முஹம்மது காசிம் அவர்களின் மாமானாருமான அப்துல் தமீம் அவர்கள் பாக்கம் கோட்டூரில் மௌத்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று மாலை3 மணிக்கு நல்லடக்கம் செய்ப்படுகிறது.

விக்கிரவண்டி மற்றும் நான்குநேரி இடைத்தேர்தல் அதிமுக வெற்றி


Monday, 21 October 2019

கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு 21.10.2019

திருவாரூர். EVS நகர்  (நேதாஜி சாலை இந்தியன் லைட் ஹவுஸ் உரிமையாளர்)  அக்பர் அலி அவர்கள் மௌத்

*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!**



அன்னாரின் ஜனாசா 22/10/2019 செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


Thursday, 10 October 2019

ஜியோ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

இழப்பை சரிசெய்ய வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூல் செய்ய ஜியோ முடிவு!

ஜியோ தவிர்த்த மற்ற இதர தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு செய்யும் வாய்ஸ்கால்களுக்கு இனி கட்டணம்  வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

2016ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2017ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்தியாவின் நம்பர் 1 தொலைதொடர்பு நிறுவனமாக திகழ்கிறது. மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள், ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என்று கட்டணம் வசூலித்து வந்த நிலையில், அன்லிமிட்டட் கால்கள் இலவசம் என்ற அறிவிப்பே பல கோடி வாடிக்கையாளர்களை ரிலையன்ஸுக்கு பெற்றுத்தந்தது. ரிலையன்ஸ் எடுத்த பல அதிரடி முடிவுகளால், மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களும், அந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அதன் தொலைதொடர்பு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த, மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான அழைப்புகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 13,500 கோடி ரூபாய் அளவிற்கு கட்டணமாக செலுத்தியுள்ளதால், இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தியதால் ஏற்பட்ட இழப்பை, வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பெற்று சரிசெய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால்,  பயனாளர்கள் செலுத்தும் இந்த கட்டணத்திற்கு நிகரான இலவச டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

ஜியோ சிம்கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இனி எப்போதும் செய்யும் ரீசார்ஜோடு சேர்த்து IUC(interconnect usage charge) ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறையானது வரும் அக்டோபர் 10 தேதி முதல் அமலுக்கு வருகிறது. ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இந்த கட்டண முறை பொறுந்தும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் அவுட்கோயிங் அழைப்புகளுக்கு கட்டணம் செலுத்தப்போவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது
எவ்வளவு ரூபாய்க்கு IUC ரீசார்ஜ் செய்யவேண்டும்? அதன் பலன்கள் பற்றிய விவரம்:

➤10 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் 124 IUC நிமிடங்கள் மற்ற தொலைதொடர்பு சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் பேசிக்கொள்ளலாம். இதற்கு இணையாக 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

➤20 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் 249 IUC நிமிடங்கள் மற்ற தொலைதொடர்பு சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் பேசிக்கொள்ளலாம். இதற்கு இணையாக 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

➤50 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் 656 IUC நிமிடங்கள் மற்ற தொலைதொடர்பு சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் பேசிக்கொள்ளலாம். இதற்கு இணையாக 5 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

➤100 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் 1,362 IUC நிமிடங்கள் மற்ற தொலைதொடர்பு சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் பேசிக்கொள்ளலாம். இதற்கு இணையாக 10 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

மேற்கண்ட கட்டண முறையானது, ஜியோ வாடிக்கையாளர் மற்றொரு ஜியோ வாடிக்கையாளருக்கு செய்யும் அழைப்புகளுக்கு பொறுந்தாது. அது எப்போதும் போல இலவசமாகவே வழங்கப்படும். இன்கம்மிங் அழைப்புகளுக்கு எந்த கட்டணமும் கிடையாது. தற்போதைய நிலையில், டேட்டாவிற்கு மட்டும் கட்டணம் பெற்றுவரும் ஜியோ, இனி வாய்ஸ் கால்களுக்கும் கட்டணம் வசூல் செய்ய முடிவெடுத்திருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு தொலைதொடர்பு நிறுவனத்திலிருந்து மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு செய்யும் அழைப்புகளுக்கான கட்டணத்தை நிமிடத்திற்கு 14 பைசா என்பதில் இருந்து, நிமிடத்திற்கு 6 பைசா என்ற அளவிற்கு தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான ட்ராய் கடந்த 2017ம் ஆண்டு குறைத்தது. இந்த விலை குறைப்பு அறிவிப்பின் காலமானது, வரும் ஜனவரி 2020ம் ஆண்டோடு முடிவடைய இருக்கும் நிலையில், இதே கட்டணத்தை தொடரலாமா அல்லது மாற்றங்கள் செய்யலாமா என்பது குறித்து ட்ராய் ஆலோசனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Wednesday, 9 October 2019

வெளியூர் ஜனாஸா அறிவிப்பு 9.10.2019

☪KOM NEWS ONLY🕋



இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

நமதூர் மேலத்தெரு பெரிய பட்டரை வீட்டு மர்ஹீம்
O.அப்துல் காதர் அவர்களின் சம்மந்தியும், A.முஹம்மது கஜ்ஜாலி (முன்னாள் நகரமன்ற உறுப்பினர்) அவர்களின் மாமனாருமாகிய S.R.அன்வர்தீன் அவர்கள் வடகரையில் மௌத். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 11.00 மணிக்கு வடகரையில் நல்லடக்கம் செய்யபடும்.

*கொடிக்கால் பாளையம் செய்திகள்*
09/10/2019

Wednesday, 2 October 2019

கொடிக்கால்பாளையம் செய்திகள்

பொது மக்களின் வேண்டுக்கோளை ஏற்று குடும்ப அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை இனைக்கும் பணி இன்று மதியம் 3 மணி முதல் 6 மணி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது மேலும் நாளை காலை 9 மணிக்கும் நாளை மறுநாள் காலை 9 மணிக்கும் தமுமுக அலுவலகத்தில் பதிவு செய்யப்படும்

Tuesday, 3 September 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 03/09/2019

நமதூர் நடுத்தெரு மர்ஹூம் O.P.M A. பக்கீர் முஹம்மது அவர்களின் மைத்துனர் அப்துல் ரவூப் அவர்கள் மஞ்சக்கொல்லை பள்ளிவாசல் தெரு தனது இல்லத்தில் மௌத்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்

இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Monday, 2 September 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 02.09.2019




நமதூர் மலாயத்தெரு அந்தமான் காரவீட்டு மர்ஹீம் முஹம்மது யாசீன் அவர்களின் மனைவியும், (ஹிஜ்ரா)M. ஹாஜா அப்துல் ஹமீது, M.பஹ்ருதீன் இவர்களின் தயாருமாகிய ஹைஜம்மாள் அவர்கள் மௌத்.

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8:30 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்.


Saturday, 31 August 2019

கொடிக்கால்பாளையத்தில் 1441ஹிஜ்ரி விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது



திருவாரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் இனைந்து நடந்திய 1441 ம் இஸ்லாமிய வருடப்பிறப்பு விளக்க பொதுக்கூட்டம் பள்ளிவாசல்  மஃஸூம் மஹாலில் சனிக்கிழமை காலையில் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஆதம் தலைமையில் நடைபெற்றது.  அத்திகடை வாஹித் பாத்திமா அரபிக்கல்லூரி முதல்வர் பௌஜ் அப்துர் ரஹீம் இன்றைய இந்தியா என்ற தலைப்பிலும் சென்னை பாலவாக்கம் மஸ்ஜித் மஹ்முது இமாம் அபுபக்கர் ஆலிம் ஹிஜ்ரி படிப்பினை என்பது குறித்து சிறப்பு பேருரையை ஆற்றினார்.

இதில் முத்துப்பேட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ,அடியக்கமங்கலம், விஜயபுரம் ஆகிய பள்ளிவாசல்களின் இமாம்கள் வாழ்த்துரை வழங்கினார்.


மேலும் ஜமாஅத் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது இல்யாஸ் ஆலிம் ,பள்ளிவாசல் துணைத்தலைவர் ஹபிபுல்லாஹ்  மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் ,பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் வந்து இருந்த இமாம்கள் ,ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.

விழா நிகழ்ச்சிகளை நமது பள்ளிவாசல் இமாம்கள் அப்துல் நாசர், முஹம்மது ஆஷிக் , உமர்ஆலிம் ஒருங்கினைத்து செய்தார்கள்.


நமதூர் மௌத் அறிவிப்பு 31.08.2019



நமதூர் மௌத் அறிவிப்பு

நமதூர் தெற்கு தெரு ஹாஸ் இல்லம் மர்ஹூம் அப்துல்லாஹ் அவர்களின் மகனாரும் ஷாகுல் ஹமீது அவர்களின் தகப்பனாரும் நசீர் ஹூசைன் அவர்களின் மாமானாருமான S.M .ஜபருல்லாஹ் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

31.08.2019

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

நமதூர் மௌத் அறிவிப்பு 31.08.2019


நமதூர் சின்னப்பள்ளிவாசல் தெரு மர்ஹூம் சி.அ.அப்துல் ரெஜாக் அவர்களின் மகனாரும்  மர்ஹூம் சி.அ.முஹம்மது ஜூனைது,  ஹாஜி சி.அ. முஹம்மது தாஹிர் இவர்களின் சகோதரரும், அப்துல் ரஹீம்,  முஜிபுர் ரஹ்மான்     முஹம்மது பிர்தௌஸ் ,முஹம்மது கஜ்ஜாலி ஆகியோர்களின் தகப்பனாருமான சி.அ. முஹம்மது இனாயத்துல்லா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

அன்னாரின் ஜனாஸா  01.09.2019 ஞாயிறு காலை 10:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Wednesday, 28 August 2019

நமதூர் நிக்காஹ் தகவல் 29.08.2019


நமதூர் மௌத் அறிவிப்பு 28.08.2019




நமதூர் நடுத்தெரு மர்ஹூம் ப.மு.அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும் வா.மெ.மு.முஹம்மது உஸ்மான் அவர்களின் மைத்துனருமான தம்பா என்கிற செய்யது இப்ராஹிம் அவர்கள் புதுமனைத்தெரு வில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்

அன்னாரின் ஜனாசா இன்று முற்பகல் 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.


Saturday, 24 August 2019

வெளிநாட்டு மௌத் அறிவிப்பு 24.08.2019

நமதூர் மலாயத்தெரு சூப்நானா வீட்டு அப்துல் காதர் ,               இவர்களின் தகப்பனார் முஹம்மது யூசுப் அவர்கள் சிங்கப்பூரில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

Monday, 19 August 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 19.08.2019 (ஹாஜா மைதீன்)

☪ KOM NEWS ONLY 🕌



புதுமனைத்தெரு ஹாஸ்பாவா வீட்டு முஹம்மது யூசுப் ,செய்யது அகமது ,ஜாஹிர் ஹூசேன்,  இவர்களின் சகோதரரும் புருஹானுதீன் மற்றும் கல்ஃபான் அவர்களின் தகப்பனாருமான ஹாஜா மைதீன் அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 20.08.2019 செவ்வாய் மாலை 3:30 மணிக்கு

19.08.2019

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

நமதூர் மௌத் அறிவிப்பு 19.08.2019

☪ KOM NEWS ONLY 🕌

 *நமதூர் மௌத் அறிவிப்பு*

தெற்குத்தெரு ஹாஸ் காலணியில் ஓண்டி ஆலிம்சா வீட்டு மர்ஹூம் முஹம்மது யாசீன் அவர்களின் மகளாரும் மர்ஹூம் TKM முஹம்மது ஜெஹபர் அவர்களின் கொழுத்தியாளும் திருவாரூர் மர்ஹூம் முஹம்மது பாரூக் அவர்களின் மனைவியும் , மர்ஹூம் சேத்தப்பா என்கிற சுல்தான் அப்துல் காதர் மற்றும் செல்லராஜா என்கிற ஹலிலூர் ரஹ்மான் ஆகியோர்களின் தாயாருமான ஹபிபுன் நிஷா அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 7:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

19.08.2019

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

Sunday, 11 August 2019

கொடிக்கால்பாளையம் ஹஜ் பெருநாள் தொழுகை நேரம்

☪ KOM NEWS ONLY 🕌

 *ஈத்துல் அல்ஹா தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்*

நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் இன்ஷா அல்லாஹ் பெருநாள் தொழுகை ஹிஜ்ரி 1440 துல்ஹஜ் பிறை 10 (12.08.2019) திங்கட்கிழமை காலை 8:30 மணிக்கு நடைப்பெறுகிறது.
இதில் ஜமாஅத்தார்கள் அனைவரும் விரைவாக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

Thursday, 25 July 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 25.07.2019

☪ KOM NEWS ONLY 🕌

நமதூர் மௌத் அறிவிப்பு

நமதூர் புதுமனைத்தெரு ஹாஸ்பாவா வீட்டு ஹாஜா மைதீன் அவர்களின் மாமானாரும் கல்ஃபான் அவர்களின் பாட்டானாருமான காட்டுப்பள்ளி தெரு ஹனிபா அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 மணிக்கு மேலத்தெரு வில் நல்லடக்கம் செய்யப்படும்.

25.07.2019

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

Tuesday, 23 July 2019

கர்நாடக அரசு கவிந்தது .குமாரசாமி ராஜினாமா

14 மாத கால காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதள அரசு கவிழ்ந்தது. முதலமைச்சர் குமாரசாமி முன்மொழிந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது. ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.

Sunday, 21 July 2019

நமதூர் நிக்காஹ் தகவல் 21.07.2019


Kodikkalpalayam - தமுமுக மற்றும் கார்டியன் பார்மஸி இணைந்து நடத்திய மருத்துவ முகாம்









திருவாரூர்  கொடிக்கால்பாளையம் நகரம்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னோற்ற கழகம் மற்றும் திருவாரூர் கார்டியன் பார்மஸி இணைந்து சிறப்பு இலவச அறுவைசிகிச்சை மற்றும் புற்றுநோய் மருத்துவ ஆலோசனை முகாம் கொடிக்கால்பாளையம் மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளியில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதுநிலை உதவி பேராசிரியர் பொது மற்றும் லேப்ரோஸ்கோப் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜின்ரீவ் டேனியல் மற்றும் புற்றுநோய் சிறப்பு நிபுணர் மருந்துவர் துளசிராமன் இருவரும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

இதில் தமுமுக மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் ,முஹ்யித்தீன்  ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர்உறவின் முறை ஜமாஅத் தலைவர் முஹம்மது ஆதம், நகர தலைவர் ஹாஜா நஜிபுதீன், நகர செயலாளர் பாஷா , கார்டியன் பார்மஸி முஹம்மது இத்ரிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.