திருவாரூர் கொடிக்கால்பாளையம் நகரம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னோற்ற கழகம் மற்றும் திருவாரூர் கார்டியன் பார்மஸி இணைந்து சிறப்பு இலவச அறுவைசிகிச்சை மற்றும் புற்றுநோய் மருத்துவ ஆலோசனை முகாம் கொடிக்கால்பாளையம் மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளியில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதுநிலை உதவி பேராசிரியர் பொது மற்றும் லேப்ரோஸ்கோப் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜின்ரீவ் டேனியல் மற்றும் புற்றுநோய் சிறப்பு நிபுணர் மருந்துவர் துளசிராமன் இருவரும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
இதில் தமுமுக மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் ,முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர்உறவின் முறை ஜமாஅத் தலைவர் முஹம்மது ஆதம், நகர தலைவர் ஹாஜா நஜிபுதீன், நகர செயலாளர் பாஷா , கார்டியன் பார்மஸி முஹம்மது இத்ரிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment