Tuesday, 16 July 2019

சந்திர கிரகணம்

 : பூரண சந்திர கிரகணம், இன்று நிகழ்கிறது. இதை, இந்தியாவில், வெறும் கண்ணால் பார்க்க முடியும்.சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, கிரகணம் உண்டாகிறது. 


அப்போது, பூமியின் நிழல், நிலவின் மீது விழுந்தால், அது, சந்திர கிரகணம் என, அழைக்கப்படுகிறது. இதன்படி, பூரண சந்திரகிரகணம் இன்று நள்ளிரவு, 12:13 மணிக்கு தொடங்குகிறது; பின், 1:31க்கு உச்சம் அடைந்து, அதிகாலை, 4:30க்கு முடிகிறது.சந்திர கிரகணத்தன்று, தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும், ஆடி மாதமும் பிறக்கிறது. எனவே, சந்திர கிரகணத்தை முன்னிட்டு செய்யக்கூடிய தர்ப்பணத்துடன், ஆடி மாதம் பிறந்த பின், மறுபடியும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். திருப்பதி கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

No comments:

Post a Comment