Saturday 21 September 2013

Kodikkalpalayam - பாதாள சாக்கடை பணி திருவாரூர் மக்கள் அவதி


ஜவ்வாக இழுக்கிறது 6 ஆண்டாக நடைபெறும் பாதாள சாக்கடை பணி திருவாரூர் மக்கள் அவதி
 
கொடிக்கால்பாளையம் பட்ட அவதி நாம் அறிவோம் இன்னும் சிமெண்ட் சாலையை போட்டு ஜல்லி கல்கள் பெயர்ந்து கொண்டு உள்ளதை நேராக பார்க்கிறோம் அப்படியே இணைப்புக்களை கொடுத்தாலும் திட்டம் பயன் உள்ளதா என்பதை இரு தரப்பின் செயல் பட்டை பொருத்தை அமையும் .பார்போம்
 
       திருவாரூரில் 6 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணி நடந்து வருவதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவாரூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த கடந்த ஆட்சி காலத்தில் ரூ.39.26 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் டெண்டர் விடப்பட்டது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த .வி.ஆர்.சி.எல் என்ற தனியார் நிறுவனம் இந்த பணியினை செய்ய டெண்டர் எடுத்து 2007 அக்டோபர் மாதம் 1ந் தேதி 12 வது வார்டு சத்தியமூர்த்தி தெருவில் முதன் முதலாக பணியை துவக்கியது. நகரில் உள்ள 30 வார்டுகளிலும் 10.47 சதுர கி.மீ பரப்பளவில் 76 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் பதிப்பு, 2580 கழிவுநீர் தொட்டிகள் மற்றும் 5 கழிவு நீரேற்று கிணறுகள், 5 வடிகட்டும் கிணறுகள் , சுத்திகரிப்பு நிலையம் ஒன்று என இந்த திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. 2011 கணக்கெடுப்பின்படி நகராட்சியின் மக்கள் தொகை 52,279 ஆக உள்ளது. 2038ல் 98 ஆயிரமாக உயரக்கூடும் என்ற அடிப்படையில் அதற்கேற்ப பாதாள சாக்கடை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
18
மாதத்தில் பணியினை முடிக்க வேண்டும் என்ற விதிமுறையில் டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம் மெதுவாக பணியினை மேற்கொண்டு வருவதால் நகரில் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் பலர் தவறி விழுந்து காயமடைந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி வெளியூர் வாகனங்களும் இந்த பள்ளத்தில் சிக்கி வருவதால் பல மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கபட்டு வருகிறது.
பணிகள் துவங்கப்பட்டு வரும் 30ந் தேதியுடன் 6 ஆண்டுகள் நிறைவுபெற உள்ள நிலையில் கடந்த மாத நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விக்கு பதில் கூறிய தலைவர் ரவிச்சந்திரன், இன்னும் 9 மாத காலத்தில் பணியினை முடித்து தருவதாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். 18 மாதத்தில் முடிக்க வேண்டிய பணிகள் 6 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில் 9 மாதம் என்பது குறைந்த பட்சம் ஒரு வருட காலத்திற்கும் மேல் ஆகும் என்பதால் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய பொறியா ளர் ஒருவர் கூறுகையில், குழாய்கள் பதிப்பு, கழிவு நீரேற்று நிலையம், வடிகட்டும் நிலையம் என 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது. சுத்திகரிப்பு நிலையத்திற்கான பணிகள் மட்டும் தற்போது நடை பெற்று வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் பணிகள் நிறைவு பெற்று நகராட்சி வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.
குழாய்கள் பதிப்பு பணிகள் முடிவுற்றதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்திருந்தாலும் இந்த திட்டத்தில் கழிவு நீரினை கொண்டு செல்லும் கடைசி பகுதியான நகரின் 9 வது வார்டு கேக்கரை பகுதியில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்கள் தரமில்லாமல், நீரை முழுமையாக நிரப்பி சோதனை செய்யும் போதே பல குழாய்கள் உடைந்ததால் அந்த இடங்களில் மாற்று குழாய்கள் பதிக்கும் பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது. எனவே பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு.

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment