Wednesday 18 September 2013

கழிவுநீரை அகற்றும் போது நகராட்சியில் தெரிவிக்க வேண்டும்'

கழிவுநீரை அகற்றும் போது நகராட்சியில் தெரிவிக்க வேண்டும்'

திருவாரூர் நகரில் தனியார் வாகனங்கள் மூலம் கழிவுநீரை அகற்றும்போது, அதுகுறித்த தகவலை நகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் நகருக்குள் உரிய உயிர் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தனியார் கழிவுநீர் அகற்றும் லாரிகளை பயன்படுத்தி, தனியார் குடியிருப்புப் பகுதிகள் அல்லது வணிக வளாகங்கள், விடுதிகள், உணவகங்கள் போன்றவைகளில் பணிகள் மேற்கொண்டால் தொடர்புடைய உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், லாரி உரிமத்தை ரத்து செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிய வழிமுறைப்படி சுத்தம் செய்யும் போது எடுக்கப்படும் கழிவுநீரை நகராட்சி அனுமதியளித்துள்ள இடத்தில் மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும்.
மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


 

No comments:

Post a Comment