Saturday, 28 September 2013

Kodikkalpalayam - பொது விநியோக அங்காடிகளிலும் நுகர்வோர் விழிப்புணர்வு பொதுத்தகவல் பலகை

திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 695 பொது விநியோக அங்காடிகளிலும் நுகர்வோர் விழிப்புணர்வு பொதுத்தகவல் பலகை பொருத்தப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.

விழிப்புணர்வு பொதுத்தகவல் பலகை

திருவாரூர் அருகே எண்கண் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு நியாய விலை அங்காடியில் நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவதற்காக தமிழக அரசினால் அமைக்கப்பட்டுள்ள பொதுத்தகவல் பலகை பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட மாவட்ட கலெக்டர் நடராசன் நுகர்வோர் விழிப்புணர்வு பொதுத்தகவல் பலகையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பொதுமக்கள் தாங்கள் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் தரம் மற்றும் சேவையில் ஏதேனும் குறைகள் தெரிய வந்தால் அதனை உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும், அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்வதற்கான, விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுவிநியோக அங்காடிகளில், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் குறித்த தகவல் பலகைகள் அமைத்திட அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் இந்த தகவல் பலகையில் தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி சேவை எண், மாநில நுகர்வோர் உதவி மைய தொலைபேசி எண் மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தின் தொலைபேசி எண் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் நுகர்வோர் வாங்கும் பொருட்களின் சேவை குறைபாடு, தரம் குறைபாடு குறித்து குறுஞ்செய்தி அனுப்புவதற்கான எண்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தாங்கள் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் ரசீது பெற்று, தங்களுக்குள்ள நுகர்வோர் உரிமையை பெற வேண்டும். வாங்கிய் பொருட்களில் தரம் குறைவாகவோ, பெறும் சேவையில் குறைபாடுகளோ காணப்பட்டால் தகவல் பலகையில் தெரிவித்துள்ள எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் நடராசன் கூறினார்.

Thursday, 26 September 2013

Kodikkalpalayam -வேகத்தடை


கொடிக்கால்பாளையம் மத்லபுல் கைராத் தொடக்க ப்பள்ளி அருகே புதியதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது

இந்திய பல்கலைக்கழகங்களின் நிலை வேதனையளிக்கிறது: குடியரசுத் தலைவர்

பழங்காலத்தில் இந்திய பல்கலைக்கழகத்தில்தான் வெளிநாட்டு மாணவர்கள் அதிகளவில் கல்வி பயின்றனர். அப்புகழை மீண்டும் பெறுவோம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் 23-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. குடியரசுத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக புதுச்சேரி வந்த அவர், மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி நிகழ்த்திய உரை:
பட்டம் பெறுவதோடு நிற்காமல் அறிவை தொடர்ந்து மேம்படுத்துதல் அவசியம். உலகளவில் முதல் 200 இடங்களில் இந்திய பல்கலைக்கழகம் ஒன்றுக்கூட இல்லை. இது வேதனையளிக்கிறது. இதை மாற்றி சிறந்த இடத்தை பெறும் தகுதியும், திறமையும் இந்திய கல்வி நிறுவனங்களுக்கு உண்டு.
கடந்த 6-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவில் இருந்த நாளந்தா, சோமபுரா பல்கலைக்கழகங்களில் உலகளாவிய மாணவர்கள் பயின்றனர். அப்புகழை மீண்டும் பெறுவோம்.
சிறந்தது ஆசிரியர் பணியே. மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிப்பது ஆனந்தமளிக்கும். அத்துடன் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருப்பது அவசியம். அறிவை போதிப்பதில் கடமையும், பொறுப்புணர்வும் தேவை.
அரசியல் சட்டப்படி கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. தரமான கல்வியை பெறுவது நம் உரிமை.
ஒழுக்கம், கடமை உணர்வு, கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் எந்த கடின சூழலையும் சமாளிக்கலாம் . இந்தியாவை முன்னேற்றுவதில் மாணவ, மாணவியருக்கு பெரும் பங்கு உள்ளது என பேசினார்.

’டெபிட் கார்டு’ மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கு சேவை வரி வசூலிக்க கூடாது: ரிசர்வ் வங்கி


பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான இடைநிலை பணக் கொள்கை ஆய்வு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டார். இதில், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ‘ரெப்போ ரேட்ஸ்’ எனப்படும் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளாக ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

இந்நிலையில், ’டெபிட் கார்டு’ மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கு சேவை வரி வசூலிக்க கூடாது என்று பாரத ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது. மேலும், பொருட்கள் வாங்குவதற்கான 0 சதவீத வட்டி திட்டத்திற்கு தடை விதித்துள்ளது.

வட்டியில்லா கடன்
டெலிவிஷன், பிரிட்ஜ், வாஷிங்மெஷின், செல்போன்கள் உள்பட பல்வேறு வகையான நுகர்வோர் பொருட்கள் விழாக்காலங்களில் 0 சதவீத வட்டியில் அதாவது வட்டியில்லாமல், சுலப தவணை முறையில் விற்பனை செய்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இதனை அந்த நிறுவனங்களில் முகாமிட்டு இருக்கும் வங்கி ஊழியர்கள் தான் அந்த பொருட்கள் வாங்குவதற்கான தொகையை நுகர்வோர் கடனாக வழங்குவார்கள். வட்டி இல்லை என்று கூறப்பட்டாலும் நடைமுறை கட்டணம் என்று ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுவது வழக்கம்.
ரிசர்வ் வங்கி தடை
ரிசர்வ் வங்கி 0 சதவீத வட்டியில் பொருட்கள் விற்பனை செய்வதை தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
வங்கிகள் வட்டி விகிதத்தை திரித்துக் கூற எந்த நடைமுறையையும் கையாளக் கூடாது என்பது விதி. இது ஒரு பொருளின் விலை நிர்ணயத்தின் வெளிப்படைத்தன்மையை இழிவுபடுத்தும் செயலாகும். நுகர்வோருக்கு உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
நடைமுறை கட்டணம்
நேர்மையான நடைமுறைக்கு, செயல்முறை கட்டணம், வட்டி விகிதம் ஆகியவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனை பொருட்படுத்தாதவர்கள் தான் பலவீனமான நுகர்வோர்களை கவர்ச்சியான, சுரண்டுகிற மாதிரியான இந்த திட்டங்களை செயல்படுத்துவார்கள்.
கடன் அட்டைகள் மூலம் 0 சதவீத வட்டியில் சுலப தவணையில் பொருட்கள் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. இதில் வட்டி விகிதம் நுகர்வோரிடம் நடைமுறை கட்டணம் என்ற வகையில் ஏமாற்றி வசூலிக்கப்படுகிறது.
ஒரே வட்டி, ஒரே நடைமுறை
ஒரே பொருளுக்கு பலவித வட்டி விகிதங்கள் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். ஒரே விதமான வட்டியும், ஒரே விதமான நடைமுறையும் பின்பற்றப்பட வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் வாடிக்கையாளர் இடர் விகிதம் பொருந்தாது.
பொருட்களுக்கு தள்ளுபடி இருந்தால் தள்ளுபடியை கழித்த பின்னர் வரும் பொருளின் விலைக்கு தான் கடன் தொகை வழங்க வேண்டும். அல்லது அதற்கு ஏற்ப வட்டியை குறைத்துக்கொள்ள வேண்டும். கடனை திரும்ப செலுத்தும் காலம் அதிகம் இருந்தால் அந்த பயனை நுகர்வோருக்கு வழங்க வேண்டும். அல்லது வட்டியில் இதனை சரி செய்து கொள்ள வேண்டும்.
கடன் அட்டைகளுக்கு
நுகர்வோருக்கு இத்தகைய முழு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த பயன்கள் அனைத்தும் நுகர்வோருக்கு செல்லும் வகையில் கடன்களை வழங்குவதும் வங்கிகளின் பொறுப்பு.
வங்கி கடன் அட்டைகள் (டெபிட் கார்டு) மூலம் பொருட்கள் வாங்குபவர்களிடம் கூடுதல் கட்டணமோ, சேவை கட்டணமோ வசூலிக்கக் கூடாது. வங்கிகளுக்கும்,, வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி இந்த கூடுதல் கட்டணம் வசூலிப்பது நியாயமாகாது, அனுமதிக்க முடியாதது. இதுபோன்ற செயல்கள் அந்த வங்கிகளுடனான உறவை முறித்துவிடும்.

நுகர்வோர் பாதுகாப்புக்காக
உண்மைத்தன்மை, பொருட்களின் வெளிப்படையான விலை ஆகியவை மூலம் நுகர்வோர்களின் குறிப்பாக சில்லறை வர்த்தகத்தில் பலவீனமான நுகர்வோர்களின் உரிமைக்காகவும், நுகர்வோர்களை பாதுகாக்கவும் தான் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீபாவளி விற்பனை
ஆனாலும் இந்த நடவடிக்கையால் வர இருக்கும் தீபாவளி, புத்தாண்டு போன்ற விழாக்காலங்களில் இந்த வட்டியில்லா சுலப தவணை திட்ட முறையில் நடைபெறும் விற்பனை பாதிக்கும் என்று வியாபாரிகள் தெரித்துள்ளனர்.
 
 
 

Wednesday, 25 September 2013

வைரஸ் காய்ச்சலை தடுக்க பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள 10 கட்டளைகள்!

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள் 10 கட்டளைகளை அறிவித்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மலேரியா, சிக்குன் குனியா போன்ற வைரஸ் காய்ச்சல் குழந்தைகள், பள்ளி மாணவர்களை எளிதில் தாக்கும். இதனால், அவர்கள் உடல் நலம் கெடுவதுடன், கல்வியும் பாதிக்கும். எனவே, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரும், தொடக்க கல்வித் துறை இயக்குநரும் உத்தரவிட்டுள்ளனர். அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும் தங்கள் கட்டுப்பாட்டில் வரும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டியன குறித்த பத்து கட்டளைகளையும் பிறப்பித்துள்ளனர்.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் பள்ளி வளாகத்தில் நீர் தேங்காமல் இப்பதற்கான தடுப்பு நடவடிக்கையை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் குடிநீர்த் தொட்டி, கழிவு நீர்த் தொட்டி திறந்த நிலையில் இருத்தல் கூடாது. பயனற்ற திறந்த வெளிக்கிணறு, பள்ளம் இருந்தால் அதை மூடிவிட வேண்டும். பள்ளிக் கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கழிவு நீர்க் கால்வாய் இருந்தால் கொசுக்கள் உற்பத்தியாவதை சுகாதாரத் துறை மூலம் தடுக்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், வாகன டயர் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வேண்டும்.

பள்ளி மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணிக்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்காமல் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். சிறு பள்ளம், சிறு கிணறு இருந்தால், அவற்றை மூட வேண்டும். இது தொடர்பாக காலையில் நடக்கும் இறைவணக்கத்தின்போது மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மாணவர்கள் மூலம் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தக் கட்டளைகளை அமல்படுத்தி நோய் தாக்குதலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறியுள்ளனர்

ஹஜ் 2013-H1434 பயணம் செய்யும் நமதூர் பயணிகள்

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி முலமாக ஹஜ் பயணம் செய்யும் நமதூர் பயணிகள் விபரம்

ராமகே ரோடு முஹம்மது ஜபருல்லாஹ் அவர்கள் மற்றும் அவர்களின் மனைவியும்

நடுத்தெரு A M அப்துல் ரெஜாக் அவர்கள் மற்றும் அவர்களின் மனைவியும் மற்றும் மூத்த சகோதரியும்

வடக்குத்தெரு ஷேக் அலாவுதீன் அவர்கள் மற்றும் அவர்களின் மனைவியும்

மேலத்தெரு பக்கீர் முஹம்மது அவர்களின் மனைவியும்

வடக்குத்தெரு பதிவுல் ஜமான் அவர்களின் மனைவியும்

நடுத்தெரு அஷ்ரப் அலி அவர்களின் மனைவியும்

இன்ஷா அல்லாஹ் வியாழக்கிழமை 26/09/2013 புனித ஹஜ் பயணம் புறப்பட்டு செல்கிறார்கள்

இறைவன் நம் அனைவரது அமல்களையும் ஏற்றுக் கொண்டு பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் சுவனச் சோலையில் நுழையும் சிறப்பு மிக்க நல்லடியார்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக…!

ஹஜ்ஜுக் கடமையானது அதற்கான முழுப் பயிற்சியையும் தரக்கூடியதாக மாற்றம் பெற வல்ல இறைவன் நம் அனைவருக்கும் பேரருள் புரிவானாக…! ஆமீன்


Tuesday, 24 September 2013

சமையல் எரிவாயு உள்ளவர்கள் கவனத்துக்கு - ஆதார் அட்டை குழப்பம்

வரும் 01-01-2014 முதல் திருவாரூர் மாவட்டத்தில் வீட்டு சமையல் எரிவாயு உருளைக்கு அரசு தரும் மானியம் தொகைகளை இண்டேன் கேஸ் வாடிக்கையாளர் வங்கி கணக்கு நேரடியாக  தரும் திட்டத்தை (DBTL) மத்திய அரசு செயல் படுத்த உள்ளது  .
 

மானிய திட்டத்திற்கு கட்டாயம்எலக்ட்ரானிக் அடையாள அட்டை, "ஆதார்' கார்டு வழங்கும் திட்டம், கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 12 இலக்கங்களைக் கொண்டிருக்கும். அதில், அட்டை வைத்திருப்பவரின் அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். அவரின் பெயர், முகவரி, வங்கி கணக்கு எண், ரேஷன் கார்டு எண், சமையல் காஸ் இணைப்பு எண், பாஸ்போர்ட் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் என, அனைத்து விவரங்களும் இருக்கும்.
விரல் ரேகை, விழி
த் திரையைப் பதிவு செய்யும் ஆதார் அட்டை திட்டம் 2009-ல் தொடங்கப்பட்டது. இதற்காக இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேனியைத் தலைவராகக் கொண்டு ஆதார் அடையாள அட்டை ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) உருவாக்கப்பட்டது. இத் திட்டத்துக்காக இதுவரை ரூ.50,000 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மத்திய அரசின் மானியத் திட்டங்களான, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், பொது வினியோகத் திட்டம், சமூக பாதுகாப்பு திட்டம், பென்ஷன், மானிய விலை சமையல் காஸ் இணைப்பு, வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கான நிதியுதவி, உயர்கல்வி ஊக்கத் தொகை போன்ற திட்டங்களுக்கான நிதி, ஆதார் அட்டை வாயிலாக பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

எனவே இந்த அடையாள அட்டையை மானிய திட்டத்திற்கு கட்டாய அடையாள அட்டையாக பயன்படுத்தி நாடு முழுவதும் விரிவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் சமீபத்தில் காஸ் மானிய திட்டம், ஆதார் அட்டை மூலம் வங்கி கணக்கு துவக்குபவர்களுக்கு உங்கள் பணம் உங்கள் கையில் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.



 

ஆதார் அட்டை பெற்றுக்கொள்வது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் விருப்பமெனில், அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
 
 
அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டயம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி புட்டுசாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
 
அந்த மனுக்கள் நீதிபதிகள் பி.எஸ்.செளகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஓய்வு பெற்ற நீதிபதி புட்டுசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் தவான், திருமணப் பதிவு உள்பட அரசின் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
 
 
 
 
 
இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், ஆதார் அட்டை பெற்றுக் கொள்வது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்றும், கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
 
 நமதுரை பொருத்தவரையில் ஆதார் அட்டை அனைவருக்கும் அளிக்கப்பட்டது என்றால் இல்லை என்பதே உண்மை கடந்த மார்ச்  மாதம் நமதூரில் முகாம் குறைந்தது 10 நாட்கள் மேல் நடைபெற்றது
இதில் 50 சதவிதம் மக்கள் பயன் அடைந்து இருக்கலாம் ஆனால் ரூபாய் 900 உள்ள சிலின்டர் மக்கள் வாங்க வேண்டும் ஒரு ஆண்டுக்கு 9 உருளைக்கு ரூபாய் 450 வரை  மானியம் தரப்படும் .வீட்டு வரும் உருளையை வாடிக்கையாளர் தன் கை ரேகை கொண்டு பதிய பெற்றே பெற முடியும்
 
ஆதார் அட்டை எண் கிடைக்க பெறாதகள் உடன் பெற சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்ளலாம்.
 
 
 
இந்த முகவரியில் ஆதார் எண்ணுடன் உங்கள் முழு விபரத்தை தெரிவிக்கவும்
அல்லது பிரியா காஸ் அல்லது செம்மலர் காஸ் ஏஜென்ட்களை தொடர்பு கொள்ளவும் கடைசி நேர  பரபப்பு வேண்டாம் 

 
 
 
 
திட்டம் வெற்றி பெற அரசு நிர்வாகம் முழு ஈடுபட்டாலும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இதுபோல அரசும் மக்களின் அச்சத்தை போக்கி தவறுகள் நடக்காமலும் காக்க வேண்டும்.

 
 
 
 
 
 

Monday, 23 September 2013

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகாம் -- ஆன்லைன் புது நடைமுறை:

 
கொடிக்கால் பாளையத்தில் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் முகாம் நடைபெற உள்ளது அதிலும் விண்ணபிக்கலாம். கவனம் 2014 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க அவசியம் உங்க பெயர் பட்டியலில் இருக்கணும் அதனால் தயவு கூர்ந்து முகாம் சென்று பட்டியலில் உங்க பெயரை உறுதி செய்வது நல்லது .
அதுபோல உங்கள் வீட்டு பெண்கள் போட்டோவை விண்ணப்பத்தில் அளிக்கும் போது தலையில் முக்காடு (நிஜப்) இட்டு கண்ணியமாக அளிக்கவும் .
 
 
2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்க திருத்த பணி முகாம் திருவாரூர் மாவட்டத் தில் இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுரையின்படி மேற்கொள்ளப்பட உள்ளது
சிறப்பு முகாம்
விண்ணப்பம் வினியோகம், சமர்ப்பித்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் 6-ந் தேதி, 20-ந் தேதி, 27-ந் தேதி ஆகிய 3 ஞாயிற் றுக்கிழமைகளில் வாக்குச் சாவடி மையங்களில் நடை பெறுகிறது
 
 
அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நகராச்சி துவக்க பள்ளி யில் முகாம் நடைபெறும் மேல் விபரங்களுக்கு நகர மன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும் 

 
இது தவிர ஆன்லைன் இல் பதிவு செய்யலாம் 
 
கட்டணம் நிர்ணயம்:

இணையதள மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாற்றம் செய்ய, 10 ரூபாய்; வாக்காளர் பட்டியலை, பிரின்ட் எடுக்க விரும்பினால், ஒரு பக்கத்திற்கு, 3 ரூபாய்; வாக்காளர் பெயர், ஓட்டுச் சாவடி, விண்ணப்பத்தின் நிலை, ஆகியவற்றை அறிந்து கொள்ள, 2 ரூபாய்; புகார் பதிவு செய்ய, 10 ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படும். கட்டண விவரம், இணையதள மையங்களில் எழுதி வைக்கப்படும்.

இணையதள மையங்கள்:
 
நாட்டில் முதன் முறையாக, தமிழகத்தில் இணையதள மையங்களுடன், தேர்தல் கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இணையதள மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க செல்லும்போது, அடையாள அட்டை எதுவும் தேவை இல்லை. ஆனால், அலுவலர்கள் ஆய்வுக்கு வரும்போது, இருப்பிடச் சான்றிதழ், வயது சான்றிதழ் ஆகியவற்றை காண்பிக்க வேண்டும்.


இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது: இணையதள மையங்களில், விண்ணப்பிப்போருக்கு ரசீது வழங்கப்படும். அதில் உள்ள எண்ணை பயன்படுத்தி, விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதையும், ஆன்- லைனில் அறிந்து கொள்ள முடியும். ஆன்-லைனில் விண்ணப்பித்த, 40 நாட்களுக்குள், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டையில், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். திருத்தம் செய்த அடையாள அட்டை வழங்க, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. ஆனால், திருத்தம் இல்லாமல், இரண்டாவது முறையாக, வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பினால், 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகம் முழுவதும், 32 மையங்களில், 944 இணையதள மையங்களுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் ஆதரவை பொறுத்து, கூடுதல் இணைய தள மையங்களுக்கு, அனுமதி வழங்கப்படும். இணையதள மையங்கள், தேர்தல் கமிஷன் அனுமதி அளித்த, கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. வாக்காளர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால், கட்டணமில்லா தொலைபேசி எண் 1950ஐ, தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.





Click Here

Sunday, 22 September 2013

தென்னக ரயில்வேயின் வேலை வாய்ப்பு தகவல்

                                                                                                           
                                                                                                BARS KODIKKALPALAYAM

Saturday, 21 September 2013

Kodikkalpalayam - பாதாள சாக்கடை பணி திருவாரூர் மக்கள் அவதி


ஜவ்வாக இழுக்கிறது 6 ஆண்டாக நடைபெறும் பாதாள சாக்கடை பணி திருவாரூர் மக்கள் அவதி
 
கொடிக்கால்பாளையம் பட்ட அவதி நாம் அறிவோம் இன்னும் சிமெண்ட் சாலையை போட்டு ஜல்லி கல்கள் பெயர்ந்து கொண்டு உள்ளதை நேராக பார்க்கிறோம் அப்படியே இணைப்புக்களை கொடுத்தாலும் திட்டம் பயன் உள்ளதா என்பதை இரு தரப்பின் செயல் பட்டை பொருத்தை அமையும் .பார்போம்
 
       திருவாரூரில் 6 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணி நடந்து வருவதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவாரூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த கடந்த ஆட்சி காலத்தில் ரூ.39.26 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் டெண்டர் விடப்பட்டது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த .வி.ஆர்.சி.எல் என்ற தனியார் நிறுவனம் இந்த பணியினை செய்ய டெண்டர் எடுத்து 2007 அக்டோபர் மாதம் 1ந் தேதி 12 வது வார்டு சத்தியமூர்த்தி தெருவில் முதன் முதலாக பணியை துவக்கியது. நகரில் உள்ள 30 வார்டுகளிலும் 10.47 சதுர கி.மீ பரப்பளவில் 76 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் பதிப்பு, 2580 கழிவுநீர் தொட்டிகள் மற்றும் 5 கழிவு நீரேற்று கிணறுகள், 5 வடிகட்டும் கிணறுகள் , சுத்திகரிப்பு நிலையம் ஒன்று என இந்த திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. 2011 கணக்கெடுப்பின்படி நகராட்சியின் மக்கள் தொகை 52,279 ஆக உள்ளது. 2038ல் 98 ஆயிரமாக உயரக்கூடும் என்ற அடிப்படையில் அதற்கேற்ப பாதாள சாக்கடை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
18
மாதத்தில் பணியினை முடிக்க வேண்டும் என்ற விதிமுறையில் டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம் மெதுவாக பணியினை மேற்கொண்டு வருவதால் நகரில் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் பலர் தவறி விழுந்து காயமடைந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி வெளியூர் வாகனங்களும் இந்த பள்ளத்தில் சிக்கி வருவதால் பல மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கபட்டு வருகிறது.
பணிகள் துவங்கப்பட்டு வரும் 30ந் தேதியுடன் 6 ஆண்டுகள் நிறைவுபெற உள்ள நிலையில் கடந்த மாத நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விக்கு பதில் கூறிய தலைவர் ரவிச்சந்திரன், இன்னும் 9 மாத காலத்தில் பணியினை முடித்து தருவதாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். 18 மாதத்தில் முடிக்க வேண்டிய பணிகள் 6 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில் 9 மாதம் என்பது குறைந்த பட்சம் ஒரு வருட காலத்திற்கும் மேல் ஆகும் என்பதால் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய பொறியா ளர் ஒருவர் கூறுகையில், குழாய்கள் பதிப்பு, கழிவு நீரேற்று நிலையம், வடிகட்டும் நிலையம் என 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது. சுத்திகரிப்பு நிலையத்திற்கான பணிகள் மட்டும் தற்போது நடை பெற்று வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் பணிகள் நிறைவு பெற்று நகராட்சி வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.
குழாய்கள் பதிப்பு பணிகள் முடிவுற்றதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்திருந்தாலும் இந்த திட்டத்தில் கழிவு நீரினை கொண்டு செல்லும் கடைசி பகுதியான நகரின் 9 வது வார்டு கேக்கரை பகுதியில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்கள் தரமில்லாமல், நீரை முழுமையாக நிரப்பி சோதனை செய்யும் போதே பல குழாய்கள் உடைந்ததால் அந்த இடங்களில் மாற்று குழாய்கள் பதிக்கும் பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது. எனவே பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு.