Friday, 20 September 2013

செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி?

சிட்டுக்குருவிகள் ஏன் குறைந்து விட்டன? எங்கள் காலத்தில் சிட்டுக்குருவிகள் வீட்டிலேயே கூடி கட்டி அமோகமாக இனப்பெருக்கம் செய்துள்ளன. இன்றைக்குச் சிட்டுக்குருவிகளைப் பார்க்கவே முடியவில்லையே. இதற்குக் காரணம் செல்போன் கதிர்வீச்சுதான்...
இந்தத் தகவல் நிச்சயம் உங்கள் காதுக்கும் வந்திருக்கும். எல்லோரும் செல்போன் பயன்படுத்தினாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி பெரிய விழிப்புணர்வு பலரிடம் இல்லை. ஆனால் சிட்டுக்குருவிகள் ஏன் அழிந்தன என்ற கேள்வியை 10 பேரிடம் கேட்டால், அதில் 8 பேர் செல்போன் கோபுரங்கள்தான் காரணம் என்று அழுத்தமாகக் கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே சிட்டுக்குருவிகள் அழிந்ததற்குக் காரணம் என்ன? செல்போன் அலைகள் வேறு என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்?
செல்போன் அலைகள் சிட்டுக்குருவிகளின் முட்டைகளை சிதைப்பதால், அவற்றின் எண்ணிக்கை சரிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்தவர் சிட்டுக்குருவிகள் அழிவைப் பற்றி பிரபலப்படுத்திய பூனேயைச் சேர்ந்த முகமது திலாவர். மேற்கத்திய நாடுகள் சிலவற்றில் நடைபெற்ற சில ஆராய்ச்சிகளை முன்வைத்து அவர் இந்தக் கூற்றை முன்வைத்தார். அந்த ஆராய்ச்சிகள் வல்லுநர்களால் மறுஆய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இல்லை. கேரளம், அசாம் பல்கலைக்கழகங்களும் இதே காரணத்தை முன்வைத்தன
.
செல்போன் அலைகள் என்பவை டிவி, மைக்ரோவேவ் அவன் போன்ற வற்றில், வெளியாகக் கூடிய சிற்றலை மின்காந்த கதிர்வீச்சு வகையைச் சேர்ந்தவை. இவை உடல்நலனை பாதிக்கலாம் என்ற குற்றச்சாட்டை சமீபத்திய ஆய்வுகள் சந்தேகிக்கின்றன. எக்ஸ்ரே கதிர்வீச்சு போன்றவை நீண்டகாலத்துக்கு உடலில் பட்டால், அவற்றிலிருந்து வரும் ஆற்றலை திசுக்கள் கிரகித்துக்கொண்டு மரபணு கட்டமைப்பு மாறக்கூடும். இதனால் உடலில் குறைபாடான வளர்ச்சி ஏற்படலாம். ஆனால், நுண்ணலை களோ, ரேடியோ அலைகளோ பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்குத் திறனைக் கொண்டிருப்பதில்லை.
 
இந்நிலையில் செல்போன் கதிர்வீச்சு சிட்டுக்குருவிகளை பாதிப்பதில்லை என்று கோவை அனைக்கட்டியில் உள்ள சாலிம் அலி பறவையியல், இயற்கை அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இது தொடர்பாக கூடுதல் ஆராய்ச்சி களையும் மேற்கொள்ள இருக்கிறது.
சிட்டுக்குருவிகள் அழிவுக்கு செல்போன் கதிர்வீச்சைத் தாண்டி உணவு கிடைக்கும்தன்மை, கூடுகட்டும் இடங்கள் போன்றவை குறைந்துவிட்டதே முக்கியக் காரணம்.
 
நகர்மயமாக்கம் காரணமாகச் சிட்டுக்குருவிகளின் வாழிடம் அதிவேகமாக அழிந்துவிட்டன. மேலும் இப்போது தானியங்கள் ஞெகிழிப் பைகளில் வருவதால், குருவிகளுக்கு தானியங்கள் கிடைப்பதில்லை. குருவிக் குஞ்சுகளிகன் அதிவேக வளர்ச்சிக்குத் தோட்டங்களில் கிடைக்கும் புழு, பூச்சிகள்தான் முக்கிய உணவு. பூச்சிக்கொல்லிகள் அதிகரிப்பு, புழு பூச்சிகளைக் குறைத்துவிட்டது. இப்படியாக குஞ்சுகள் முதல் வளர்ந்த குருவிகள் வரை உணவு கிடைக்காமல் போவதாலேயே குருவியின் இனப்பெருக்கம் கடுமையான பாதிப்பைச் சந்திக்கின்றன.
 
எனவே, சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்ததற்கு செல் போனை வந்தடையும் கதிர்வீச்சோ, செல்போன் கோபுரங்களில் வெளியிடப்படும் கதிர்வீச்சோ நேரடிக் காரணம் என்று இதுவரை நிறுவப்படவில்லை.
மனிதர்களுக்கு என்ன பாதிப்பு?
 
சிட்டுக்குருவிகள் இருக்கட்டும். செல்போன் கதிர்வீச்சால், மனித உடல்நலனுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? இதுபற்றி இரண்டு விதமான வாதங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றன.
செல்போன் கதிர்வீச்சு அதிக காலம் உடலில் படுவதால், மரபணு மாற்றத்தில் பங்காற்றுவதாகவோ, புற்றுநோய்க் கட்டிகளை உருவாக்குவதாகவோ இதுவரை எந்த அறிவியல் ஆராய்ச்சியும் நிறுவவில்லை. செல்போன் கதிர்வீச்சு, சீரமைக்க முடியாத உடல்நல பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
 
"நமது மூளைச் செயல்பாடுகள் மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. மின்காந்த அலை களான செல்போன் அலைகள், நமது உடலில் செயல்படும் மின்சாரத்துடன் இடையீடு செய்யும். இதனால் செல்போன் கோபுரங்கள் அருகே வாழும் மக்களுக்கு தலைவலி, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதேநேரம், இதனால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள், ஏற்படுவதை உறுதிப்படுத்துவது போன்ற ஆராய்ச்சிகள் இன்னும் நடக்க வில்லை. செல்போன் கதிர்வீச்சு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பான ஆராய்ச்சிகள் ஏன் இதுவரை முறைப்படி நடத்தப்படவில்லை என்பதும் சிந்தனைக்குரியது," என்கிறார் புதுவையைச் சேர்ந்த ஒரு இயற்பியலாளர்.
செல்போன் நிறுவனங்கள், சேவை வழங்கும் நிறுவனங்கள் செல்போன் கதிர்வீச்சின் பாதகங்கள் பற்றி போதுமான அறிவியல் ஆய்வுகள் இல்லை என்று கூறினாலும், அதிகப்படியான செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பாக சாதாரண மக்களும் உணரும் விஷயம், கேட்கும் தன்மை.
மேலும், "செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கான விதிமுறைகளை பல நாடுகள் கடுமையாக்கி உள்ளன. செல்போன் கோபுரங்களுக்கு அருகே வாழ்வது என்பது மைக்ரோவேவ் அவனுக்குள் நாம் வாழ்வதைப் போன்றது. மும்பையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பயணிக்கும் ஒருவர், அதில் 90 சதவிகித நேரம் கடுமையான கதிர்வீச்சை எதிர்கொள்கிறார், என்று பம்பாய் ஐ.ஐ.டி. மின் பொறியியல் பேராசிரியர் கிரீஷ் குமார் உள்ளிட்டவர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்," என்று குறிப்பிடுகிறார் சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் எழுத்தாளர் நித்தியானந்த் ஜெயராமன்.
 
 
இன்றைய காலத்தில் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க முடியாது. அதேநேரம், செல்போனில் அதிக நேரம் பேசாதீர்கள். ஹாண்ட்ஸ் ஃபிரீ கருவி அல்லது குறைந்த சப்தத்தில் வைத்து பேசுங்கள், நிலவழித் தொலைபேசியில் பேசுங்கள் என்று மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள்.

Kodikkalpalayam - நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் புதிய டிஜிட்டல் தொழுகை நேரம் பலகை


சென்னையை சேர்ந்தவருக்கு சிங்கப்பூர் அரசு விருது

சிங்கப்பூரில், அறப்பணிகள் செய்யும் தமிழருக்கு, அந்நாட்டின் சார்பில், விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்தவர் முகமது அப்துல் ஜலீல். 50 ஆண்டுகளுக்கு முன், பிழைப்புக்காக, சிங்கப்பூர் சென்ற ஜலீல், கார் துடைப்பது போன்ற வேலைகளை செய்து, படிப்படியாக உயர்ந்து. கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வருவாய் ஈட்டும் நிறுவனத்தை நடத்திவரும், ஜலீல், ஏழைகளுக்கு, கல்வி தொகை உள்ளிட்டவற்றை வழங்கி சேவை செய்து வருகிறார். இந்தியாவை சேர்ந்த நபர்களுக்கு, தேவையான உதவிகளை செய்து வரும் ஜலீலின் சேவையை பாராட்டி, சிங்கப்பூர் அரசு, "சமூக போராளி விருது' வழங்கியுள்ளது. இந்த விருதுடன், 6 லட்ச ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்பட்டுள்ளது

Thursday, 19 September 2013

வெளியூர் ஜனாசா அறிவிப்பு 19/09/2013



நமதூர் இ கா மு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவி ஹசீனா பேகம் அவர்கள் அடியக்கமங்கலம் ராஜாத் தெருவில் மௌத்.

 இன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இரவு 7 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Wednesday, 18 September 2013

கழிவுநீரை அகற்றும் போது நகராட்சியில் தெரிவிக்க வேண்டும்'

கழிவுநீரை அகற்றும் போது நகராட்சியில் தெரிவிக்க வேண்டும்'

திருவாரூர் நகரில் தனியார் வாகனங்கள் மூலம் கழிவுநீரை அகற்றும்போது, அதுகுறித்த தகவலை நகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் நகருக்குள் உரிய உயிர் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தனியார் கழிவுநீர் அகற்றும் லாரிகளை பயன்படுத்தி, தனியார் குடியிருப்புப் பகுதிகள் அல்லது வணிக வளாகங்கள், விடுதிகள், உணவகங்கள் போன்றவைகளில் பணிகள் மேற்கொண்டால் தொடர்புடைய உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், லாரி உரிமத்தை ரத்து செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிய வழிமுறைப்படி சுத்தம் செய்யும் போது எடுக்கப்படும் கழிவுநீரை நகராட்சி அனுமதியளித்துள்ள இடத்தில் மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும்.
மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


 

திருவாரூரில் செப். 20-ல் வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூரில் வரும் 20-ம் தேதி தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கு. திருஞானசம்பந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 20-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு அரசால் அறிவிக்கப்பட்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் முதல் பட்டதாரிகள் உள்பட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் அனைவரும் முகாமில் பங்கேற்கலாம்.
முகாமில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், செக்யூரிட்டி கார்டு, எஸ்.பி.ஐ இன்சூரன்ஸ் முகவர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தமிழகத்திலுள்ள தொழில் நிறுவனங்கள் தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளன.
இவ்வாறு தனியார் துறைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு நீக்கம் செய்யப்படாமல் தொடர்ந்து பராமரிக்கப்படும். எனவே மாவட்டத்தில் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தங்கள் சுயவிவர நகல்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயன்பெறலாம்.

Friday, 13 September 2013

கவனிக்குமா?

மழைக்காலம் வந்தாலே தெருவில் உள்ள குப்பைகளை அள்ள மாட்டார் கள் போல இது நடுத்தெரு  வெள்ளக்காரன் கேணி குளம் அருகே கண்ட காட்சி சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

சிறுபாண்மை மாணவர்களுக்கான உதவித் திட்டம்!

மத்திய பொதுப் பணியாளக்ர தேர்வாணையம், பணியாளர் தேர்வானையம் மற்றும் மாநில பொதுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட முதன்மை தேர்வுகளை முடித்திருக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குகிறது.
குடும்ப மொத்த வருமானம் ஆண்டுக்கு ரூ.4.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் இதற்காக விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
நிதியுதவி விகிதமானது கெஜட் பதவிக்கும் மாதம் ரூ.50,000/- மற்றும் கெஜடட் சாராத பதவிக்கு மாதம் ரூ.25,000 /- என இருக்கும்.
திட்டத்தின் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தின் மாதிரி இந்த அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.minorityaffairs.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரையறுக்கப்பட்ட விண்ணப்பத்தை முறையாக நிரப்பி விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளவாறு உரிய அனைத்து ஆவணங்களுடன் சேர்த்து, துணைச் செயலாளர் அறை எண்: 1130, சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சகம், பார்யவரன் பவன், 11வது தளம், சிஜிஓ வளாகம், லோடி சாலை, புது டெல்லி - 110003 என்ற முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் இவ்விண்ணப்பம் செப்., 18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

வெளியூர் ஜனாசா அறிவிப்பு .13/9/2013


நமதூர் நடுத்தெரு போஸ்ட் மாஸ்டர் துரை என்கிற சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மாமனார் அப்துல் வாஹப் அவர்கள் ஏனக்குடி ஆதலையூர் ஜின்னா தெருவில் மௌத் .

அன்னாரின் ஜனாசா காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்

Kodikkalpalayam - கொடிக்கால்பாளையத்தில் .மழை 12/09/2013

கொடிக்கால்பாளையத்தில் இப்போது இரவு 10.30 மணி முதல் மிதமான மழை பெய்த்து கொண்டு இருக்கிறது .

Wednesday, 11 September 2013

Kodikkalpalayam pallivasal


10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள் நாளை  வெளியிடப்படுகிறது.
மாணவர்கள் காலை 10.30 மணிக்கு www.tndge.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
மதிப்பெண்களில் மாறுதல் உள்ள மாணவர்கள் மட்டும் தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழ்களை ஒப்படைத்துவிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 16 முதல் 18 வரை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
மதிப்பெண்களில் மாறுதல் உள்ள மாணவர்களில் இதுவரை பதிவிறக்கம் செய்யப்பட்ட சலானை சமர்ப்பிக்காதவர்கள், பாரத ஸ்டேட் வங்கி சலானை கொடுத்தால் மட்டுமே புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Friday, 6 September 2013

கொடிநகர் ஜனாசா அறிவிப்பு 6/9/2013




நமதூர் VTA நூர் முஹம்மது அவர்களின் மனைவியும் , முஹம்மது ஹையும் ,முஹம்மது நஜுபுதீன் ,முஹம்மது அபுபக்கர் இவர்களின் தாயாருமான பாப்பா என்கிற ஹபீபுன்னிஷா அவர்கள் ஜெயம் தெருவில் அவர்கள் மௌத்.






இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா 6/9/2013 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நமதூர் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Thursday, 5 September 2013

மானிய சமையல் காஸ் சிலிண்டர் பெற "ஆதார்' எண் கட்டாயம்: தமிழகத்தில் அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது

சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு, நேரடி மானியம் வழங்கும் திட்டம், தமிழகத்தில், அரியலூர் மாவட்டத்தில், அக்., 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் அறிமுகமானதும், "மூன்று மாதங்களுக்குள், "ஆதார்' எண் வாங்குபவர்களுக்கு மட்டுமே, சமையல் காஸ் சிலிண்டருக்குரிய, நேரடி மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டம்: சமையல், "காஸ்' சிலிண்டர்களுக்கு நேரடி மானிய வழங்கும் திட்டம், தமிழகத்தில் வரும், அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. துவக்கமாக, தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நவம்பரில், மதுரை, டிசம்பரில், கடலூர் ஜனவரியில் தஞ்சை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் தமிழகத்தில், அமலுக்கு வந்தாலும், மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும். அவகாசம் அளிக்கப்படும் மூன்று மாதத்திற்குள், சமையல் காஸ் சிலிண்டர் பெறுபவர்கள் அனைவரும், ஆதார் எண்ணை கட்டாயம் வாங்கிவிட வேண்டும்.

சேமிப்பு கணக்கு:

ஆதார் எண்ணை, சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கியில், தங்களது சேமிப்பு கணக்குடன் இணைந்து, சமையல் காஸ் சிலிண்டர் பெறும் டீலரிடம் வழங்க வேண்டும். இதன்பின், சமையல், காஸ் சிலிண்டர்களுக்குரிய நேரடி மானியம், வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன் காரணமாக, வரும் அக்டோபர் 1ம் தேதி முதல், படிப் படியாக நேரடி மானிய திட்டம் அறிமுகமாகும் மாவட்டங்களில் வசிக்கும், சமையல் காஸ் சிலிண்டர் பெறும் பொதுமக்கள், விரைவாக ஆதார் எண்ணை பெற்று, அதை வங்கி கணக்குடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.நேரடி மானிய திட்டம் அறிமுகமாகும் மாவட்டங்களில் வசிப்பவர்கள், மூன்று மாதத்திற்குள் ஆதார் எண்ணை பெற்று இணைக்க வில்லை என்றால், சந்தை விலையில் மட்டுமே காஸ் சிலிண்டர் பெற முடியும்.உதாரணமாக அரியலூர் மாவட்டத்தில் வசிப்பவர்கள், டிசம்பர் 31ம் தேதிக்குள், ஆதார் எண்ணை பெறவில்லை யென்றால், ஜனவரி 1ம் தேதி முதல் நேரடி மானியத்தை பெற முடியாது. சந்தை விலையில் மட்டுமே வாங்க முடியும்.நேரடி மானிய திட்டம், ஜனவரி 1ம் தேதிக்குள், இந்தியாவில், 289 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுவிடும். இதன் மூலம், 14 கோடி சமையல் காஸ் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்கள் நேரடி மானிய திட்டத்தின் கீழ் வந்துவிடுவர். இவர்களுக்கு, நேரடி மானியமாக, ஆண்டுக்கு, 27 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முரண்பாடு:

கடந்த சில வாரங்களுக்கு முன் ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த, மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் ராஜிவ் சுக்லா "சமையல் காஸ் உள்ளிட்ட, அரசின் மானியங்களை பெறுவதற்கு, "ஆதார்' அடையாள அட்டை அவசியமில்லை' என, குறிப்பிட்டு இருந்தார். தற்போது, அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "ஆதார்' எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திஉள்ளது.

Wednesday, 7 August 2013

விடைபெறும் ரமலான்

   இந்த ஆண்டின் ரமலான் மாதம் நிறைவு பகுதிக்கு வந்து விட்டது .இறைவன் நாடினால் அடுத்த ஆண்டு நம் அனைவருக்கும் புனித ரமலானை அடையும் பாக்கியத்தை கிடைக்க பெறுவோம் .பள்ளிவாசலில் நோன்பு திறப்பு ,தராவிஹ்  தொழுகை ,கியாமுல் லைல் தொழுகை , ராத்திப்பு மஜிலிஸ் ,திருகுரான் மஜிலிஸ் என சிறப்பு நிழல்வுகளாக இருந்து வந்தன .

நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் கொடிநகர் கத்தார் வாசிகள் குழு  மற்றும்  மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் முஸ்லிம் இளைஞர் சங்கம்  சார்பாக சஹர் சாப்பாடு ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. அதுபோல MABHS சங்கத்தில்  புருதா  மஜீலிஸ்  நிறைவு  நிகழ்ச்சி  நடைபெற  உள்ளது .7/8/2013


முடிந்த வரை செய்திகளை கொடுந்துவந்தோம் அதில் குறை இருந்தால் மன்னிக்கவும் நிறை இருந்தால் துவா செய்து ஊக்க படுத்தவும் .இன்ஷா அல்லாஹ்.............

Kodikkalpalayam - கொடிக்கால்பாளையம் மத்லபுல் ஹைராத் பெண்கள் உயர்நிலை பள்ளி


மத்லபுல் ஹைராத் மழலையர் தொடக்கப்பள்ளி கடந்த பல ஆண்டுகளாக கொடிக்கால்பாளையம்  முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஜமாஅத்  நிருவாகத்தின் கீழ் செயல்படுவருவது நாம் அறிந்ததே.

இந்நிலையில் பள்ளியை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் பெண்கள் உயர்நிலை பள்ளி துவங்க முடிவு செய்து  பைகாரா திடலில் புதியதாக கட்டிடகள் கட்ட இடம் தேர்வு ஆனது .

மத்லபுல் ஹைராத் கல்வி நல குழுமம் என்ற பெயரில் சட்ட ரீதியான அமைப்பை பதிவு செய்து பள்ளி சம்பத்தப்பட்ட அனைத்தும் செய்ய படுகிறது .புதிய பெண்கள் உயர்நிலைப்பள்ளி 10000 சதுர அடியில்  கட்டிடங்கள் கட்ட நன்கொடையாளர்கள் முலமாக செய்யபடுவதால் தற்போது 50 % கட்டடங்கள் கட்ட முன்வந்து உள்ளார்கள். மீதி உள்ள வகுப்பறைக்கள் கட்ட நமதுரை சார்ந்த வெளிநாட்டு அமைப்புகள் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் முன்வர வேண்டும் என்பதே எங்கள் நிலை.

இன்ஷா அல்லாஹ் பெண்கள் உயர்நிலைப்பள்ளி உருவானால் நம் சமுதாய மக்கள் உலக கல்வியுடன் மார்க்க கல்வியும் சேர்ந்து கற்கலாம். நம் நகர பகுதியில் பெண்கள் பள்ளி குறைவாக உள்ளதால் சுற்று வட்டார சமுதாய மக்களுக்கும் பயன் தர வல்ல பள்ளியாக மாறும் என்பதில் ஐயமில்லை.


KODIKKALPALAYAM LANDMARKS

 
முஸ்லிம் அறிவானந்த பைத்து ஹலரா சங்கம் கொடிக்கால் பாளையம் 
 
 
ரமலான் 29வது நாள் சங்க முறை 


Saturday, 19 January 2013

ஜனாசா அறிவிப்பு 19/01/2013



நமதூர் மேலத்தெரு  தேங்காய் வீட்டு சலாஹுதீன் அவர்களின் சகோதார்  பஷீர் அவர்கள் (19/01/2013) சவூதி அரேபியா வில்  வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

Wednesday, 16 January 2013

ஜனாசா அறிவிப்பு 14/01/2013

நமதூர் அனகாச்சி வீட்டு  த அ அப்துல் சலாம், த அ அப்துல் ஜலீல் இவர்களின் சகோதரரும் , A சுல்தான் சிக்காதர், A உபையதுல்லாஹ்  அவர்களின் தகப்பனாருமான  த அ அப்துல் பத்தாஹ் அவர்கள் நடுத்தெருவில்  வஃபாத்தாகிவிட்டார்கள்.

 இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா 14/01/2013 இரவு 8.30 மணிக்கு கொடிக்கால்பாளையம் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யப்படும்.

.