Wednesday, 7 August 2013

Kodikkalpalayam - கொடிக்கால்பாளையம் மத்லபுல் ஹைராத் பெண்கள் உயர்நிலை பள்ளி


மத்லபுல் ஹைராத் மழலையர் தொடக்கப்பள்ளி கடந்த பல ஆண்டுகளாக கொடிக்கால்பாளையம்  முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஜமாஅத்  நிருவாகத்தின் கீழ் செயல்படுவருவது நாம் அறிந்ததே.

இந்நிலையில் பள்ளியை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் பெண்கள் உயர்நிலை பள்ளி துவங்க முடிவு செய்து  பைகாரா திடலில் புதியதாக கட்டிடகள் கட்ட இடம் தேர்வு ஆனது .

மத்லபுல் ஹைராத் கல்வி நல குழுமம் என்ற பெயரில் சட்ட ரீதியான அமைப்பை பதிவு செய்து பள்ளி சம்பத்தப்பட்ட அனைத்தும் செய்ய படுகிறது .புதிய பெண்கள் உயர்நிலைப்பள்ளி 10000 சதுர அடியில்  கட்டிடங்கள் கட்ட நன்கொடையாளர்கள் முலமாக செய்யபடுவதால் தற்போது 50 % கட்டடங்கள் கட்ட முன்வந்து உள்ளார்கள். மீதி உள்ள வகுப்பறைக்கள் கட்ட நமதுரை சார்ந்த வெளிநாட்டு அமைப்புகள் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் முன்வர வேண்டும் என்பதே எங்கள் நிலை.

இன்ஷா அல்லாஹ் பெண்கள் உயர்நிலைப்பள்ளி உருவானால் நம் சமுதாய மக்கள் உலக கல்வியுடன் மார்க்க கல்வியும் சேர்ந்து கற்கலாம். நம் நகர பகுதியில் பெண்கள் பள்ளி குறைவாக உள்ளதால் சுற்று வட்டார சமுதாய மக்களுக்கும் பயன் தர வல்ல பள்ளியாக மாறும் என்பதில் ஐயமில்லை.


No comments:

Post a Comment