Sunday, 17 January 2016

போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் ஜன. 17-ஆம் தேதி 870 முகாம்கள் அமைக்கப்பட்டு, 5 வயதுக்குள்பட்ட 1,22,637 குழந்தைகளுக்கு முதல்கட்டமாக போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது என்று ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் போலியோவை ஒழிக்க ஊரகப் பகுதிகளில் 831 முகாம்கள், நகர்ப் பகுதிகளில் 39 முகாம்கள் என மொத்தம் 870 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், வளர்கல்வி மையங்கள், பள்ளிகள், புகைவண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், நடமாடும் குழுக்கள் மூலம் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களுக்குப் தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறும் இடங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கும், முகாம் அன்று பிறந்த குழந்தைகளுக்கும், ஏற்கெனவே எத்தனை முறை சொட்டு மருந்து புகட்டியிருந்தாலும் தற்போது சொட்டு மருந்து தவறாமல் புகட்டப்பட வேண்டும்.

பணி நிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்து செல்லும் செங்கல்சூளை தொழிலாளர்கள், கட்டுதமானத் தொழிலாளர்கள், சாலைப் பணி தொழிலாளர்கள், கைரேகை பார்ப்பவர்கள், ஆடு, மாடு மற்றும் வாத்து மேய்ப்பவர்கள். பிற மாநில தொழிலாளர்கள் (பொம்மை செய்பவர்கள்) போன்றவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அவரவர்கள் பணியிடத்தில் சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பணியில் சுகாதாரம், ஊட்டச்சத்து, ஊரக வளர்ச்சி, கல்வித்துறை, வருவாய்த்துறை, மாணவர்கள், தன்னார்வலர்கள், ரோட்டரி சங்கத்தினர், மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 3,480 பேர் போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணியில் ஈடுபடவுள்ளனர் என்று ஆட்சியர்

தெரிவித்துள்ளார்

Friday, 15 January 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 15/1/2016

நமதூர் மணப்பறையா வீட்டு முஹம்மது இல்யாஸ் அவர்களின் மச்சான் அடியக்கமங்கலம் அப்துல் ரஷித் அவர்கள் நடுத்தெரு 2வது சந்து பாக்கர் காலனியில் மௌத்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரின் ஜனாசா 15/1/2016 இன்று இரவு 9 மணிக்கு நமது முஹ்யீத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

நமதூர் நிக்காஹ் தகவல்கள் 17/01/2016

நமதூர் வடக்கு தெரு மு.ப.மு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகளார் யாஸ்மின் அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ்  நாளது 17/01/2016 ஞாயிறு முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.

நமதூர் மேலத்தெரு முஹ்மமது இஸ்மாயில் அவர்களின் மகளார் நூரே யாஸ்மின் அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 17/01/2016 அன்று இரவு 6:30 மணிக்கு நமது மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.



மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!

Thursday, 14 January 2016

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக் கூறி பலரிடம் ரூ. 20 லட்சம் வரை மோசடி


வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக் கூறி பலரிடம் ரூ. 20 லட்சம் வரை மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே அகரப் பொதக்குடியைச் சேர்ந்தவர் ரகமத்நிசா (50). இவரது மகன் அபுநசீம் (25). இவர் அதே பகுதியில் அல்அமானா டிராவல்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி, வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்பி வந்துள்ளார். இவருக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ஜெகபர்சாதிக் (40), நூர்முகமது (44) ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அபுநசீமிடம் வெளிநாட்டுக்கு செல்வதற்காக கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலர் பணம் கொடுத்தனர். அவர்கள் அகரப்பொதக்குடிக்கு சென்று பார்த்தபோது, அங்கு யாரும் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து தகலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.ஜெயச்சந்திரன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், குற்றப்பிரிவு டிஎஸ்பி பலுலா, ஆய்வாளர் சந்திரசேகர், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரதராஜன், ராஜேந்திரன், வெங்கட் ஆகியோர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் அபிநசீம், இவரது தாய் ரகமத்நிசா, நண்பர்கள் ஜெகபர்சாதிக், நூர்முகமது ஆகியோர் சேர்ந்து பலரிடம் ரூ.20 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நூர்முகமதுவை கைது செய்த போலீஸார் தலைமறைவாக உள்ள அபிநசீம் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்

Tuesday, 12 January 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 12/01/2016

நமதூர் மலாயா தெரு துக்கான் வீட்டு மர்ஹூம் அப்துல் பத்தாஹ் அவர்களின் மனைவியும், லியாக்கத்தலி,அப்துல் சத்தார் , ஹசன் குத்தூஸ் இவர்களின் தாயாருமான லத்திபா பீவி அம்மாள் அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி
ராஜிஊன்.


அன்னாரின் ஜனாசா 12/1/2016 செவ்வாய் பிற்பகல் 3:30 மணிக்கு நமது முஹ்யீத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Monday, 11 January 2016

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்



வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி கூறியுள்ளார்.

உதவித்தொகை

திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தவறியவர்களுக்கு மாதம் ரூ.100-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.200-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 10-ம் வகுப்பு வரை படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.300-ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.375-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.450-ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

விதிமுறைகள்

இந்த உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2015-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருத்தல் கூடாது. தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலை வாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருத்தல் கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.

தகுதி உடையவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களுடன் அடுத்த மாதம் (பிப்ரவரி) 29-ந் தேதிக்குள் அலுவலக வேலை நாளில் திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Sunday, 10 January 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 10/1/2016

திருவாரூர் புதுத்தெரு காட்டுராஜா வீட்டு மர்ஹூம் ஜாபர் அவர்களின் மகளாரும் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு ஹாஜாத்துல்லா அவர்களின் மனைவியும் குத்புதீன்,தங்கதுரை,முனவர் ஜமான் இவர்களின் மூத்த சகோதரிமான ரஹ்மத்துன்னிசா அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி
ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா 11/1/2016 திங்கள் காலை 10:30 மணிக்கு நமது மேலத்தெரு  பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது

மீன் உணவு சிறு விளக்கம்

உணவு பிராணிகளை உயிரோடு அறுத்து தான் சாப்பிட வேண்டும் என்று இருக்கும் போது, மீன்களை மட்டும் உயிரோடு அறுக்காமல் (இறந்தவற்றை) சாப்பிடுவது ஏன்?

பதில்:

திருக்குர்ஆனில் இவ்வசனங்களில் (5:96, 16:14) மீன்களை உணவாக உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மற்ற உயிரினங்களை அறுத்து உண்ண வேண்டும். ஆனால் மீன்களை அறுக்கத் தேவையில்லை: தானாகச் செத்த மீன்களையும் உண்ணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

மீன் அல்லாத உயிரினங்களை அறுக்க வேண்டும்; மீனை அறுக்காமல் உண்ணலாம் என்ற வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? என்று சந்தேகம் சிலருக்கு உள்ளது.

நீர் வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

நீர்வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை.

இஸ்லாமிய நம்பிக்கையின்படி ஓட்டப்படும் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தான் ஆடு, மாடு போன்ற உயிரினங்களை அறுக்கும்போது வெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது.

ஆடு, மாடு போன்றவை உயிருடன் இருக்கும்போது அறுத்தால் மட்டுமே அதிலிருந்து இரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் இரத்தம் வெளிப்படாது. எனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும்போது இரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.

இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோ, கிருமிகளோ இருக்கலாம். பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது. இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. இரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும்போதும் ஏற்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மீன்களுக்கு ஓடக் கூடிய இரத்தம் இல்லாததால் அறுத்தாலும் அதிலிருந்து இரத்தம் பீரிட்டு ஓடாது. தானாகச் செத்தாலும் சதை வரை ஊடுறுவும் இரத்தம் மீன்களில் இல்லை. எனவே தான் மீனை அறுக்குமாறு இஸ்லாம் கூறவில்லை.

Saturday, 9 January 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 09/01/2016

நமதூர் மேலத்தெரு மர்ஹூம் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனாரும் ஹாஸ்நகர் முஹம்மது ஹூசேன் அவர்களின் சகோதரரும் சேக் அலாவுதீன் முஹம்மது நத்தர் இவர்களின் தகப்பனார் அப்துல் ஜமீல் அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி
ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா 9/1/2016 சனிக்கிழமை இரவு 9:30 மணிக்கு நமது முஹ்யீத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

நமதூர் மௌத் அறிவிப்பு 9/1/2016

நமதூர் தெற்கு தெரு நல்ல முஹம்மது அவர்களின் மனைவி யும்,ஹாஜா நஜூபுதீன் அவர்களின் தாயாரும் ,பக்கீர் முஹம்மது , அபுதாலிப் இவர்களின் மாமியாருமான பாத்துமுத்து பீவி அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி
ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா 9/1/2016 சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு நமது முஹ்யீத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Friday, 8 January 2016

திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு பொருட்கள்


திருவாரூர் மாவட்டத்தில் 3½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் மதிவாணன் தெரிவித்தார்.



தமிழகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சிறப்பு பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டு சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், 2 அடிநீள கரும்பு மற்றும் ரூ.100 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி நேற்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் கீழவீதியில் உள்ள நியாயவிலை கடையில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதிவாணன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 43 ஆயிரத்து 614 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பரிசு பொருட்கள் பொங்கல் தினத்திற்கு முன்பு அனைவருக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Thursday, 7 January 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 7/1/2016

நமதூர் தெற்கு தெரு மர்ஹூம் அப்துல் பத்தாஹ் அவர்களின் மனைவியும், ஹலிலூர் ரஹ்மான், மர்ஹூம் ஹாஜா அலாவூதீன், ஆட்டோ சுல்தான் கபீர் இவர்களின் தாயாருமான ஹைஜம்மாள் அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா 7/01/2016 வியாழன் முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு

மார்சு 4 முதல் பிளஸ்2 வும் பத்தாம் வகுப்பு 29 துவக்கம்

Wednesday, 6 January 2016

கோழி -குறிப்புகள்

⚠ Warning ⚠
மதுவை விட பாதிப்பு❓
   🐓🐓 கோழி 🐓🐓

கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.

⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🐓ஆண்களின்  உயிரணுக்களை அழிக்கிறது.😯
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்

🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯

🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯

🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.😯

"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴

🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟

🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇

🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕

🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😳

🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯

🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟

🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர் களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.

📳 பகிருங்கள் 📳

Monday, 4 January 2016

ஹஜ் 2016 விண்ணப்பம் துவக்கம்

2016 வருட ஹஜ் பிரயாணத்திற்காண விண்ணப்பம் 14-1-2016 முதல் 8-2-2016 வரை வரவேற்கப்படுகிறது.

அதன்பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாதாம் . தாமதம் வேண்டாம். முந்திக்கொள்ளுங்கள்.

மேலும் விபரங்கள் அறிய:-

http://indianliveresults.blogspot.in/2015/02/hajj-online-application-form-2016-haj.html?m=1

http://www.hajcommittee.gov.in/

Sunday, 3 January 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 3/1/2016

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .கொடிநகர் பள்ளிகூடத் திடல் ஜெகபர்அண்ணன்
 (வாழை பழக்கடை) அவர்கள் மௌத்.அன்னாரின் மறுமை வாழ்விற்காக
துஆ செய்வோம்.

Saturday, 2 January 2016

நமதூர் நிக்காஹ் தகவல்

நமதூர் மேலத்தெரு ஹஜ்ஜூ முகம்மது அவர்களின் மகளார் ரிபாயா தஸ்லிம் அவர்கள் நிக்காஹ் 03/01/2016 அன்று பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.
பாரக்கல்லாஹ்..