Saturday, 13 February 2021

தமிழக அரசின் "1100" சேவை எண் திட்டம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

 



பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு தெரிவித்து விரைந்து தீர்வு காணும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்ட, “முதல்- அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்வு மேலாண்மை திட்டத்தை” முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 15.9.2020 அன்று சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் தற்போது வெவ்வேறு அரசுத்துறைகள் தங்களுக்கென, தனித்தனியே துறை வாரியான மக்கள் குறை தீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன.

மாவட்ட அளவில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள், மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறை தீர்க்கும் நாள், அம்மா திட்ட குறை தீர்க்கும் நாள், ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் நாள் போன்றவையும், மாநில அரசு அளவில் முதல்- அமைச்சரின் தனிப்பிரிவு, அம்மா அழைப்பு மையம் போன்ற அமைப்புகளிலும் மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகள் காணப்படுகின்றன.

இதனால் ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை அளிக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரே கோரிக்கை மனு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படுவதையும் காண முடிகிறது. எனவே தமிழ்நாடு அரசுத்துறைகளின் கீழ் செயல்படும் எல்லாக் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதைக் கண்காணிக்க ஒரு சிறப்பான அமைப்பு முறை தேவைப்படுகிறது.

எனவே பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து அவற்றிற்கு தீர்வு காண ஒரு குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து 1100 தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று 1100 தொலைபேசி சேவை திட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சேவை மையத்தில் புகார் தெரிவித்தால் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைக்கு பதிவு செய்து அனுப்பப்பட்டு குறை தீர்க்கப்படும்.

புகார் தெரிவித்தவருக்கு குறுஞ்செய்தி வாயிலாக மனுதார்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைககள் குறித்து முதல்- அமைச்சர், அரசு தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைத்து துறை அரசு செயலாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களால் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிகாரிகள் ஹன்ஸ்ராஜ் வர்மா, சந்தோஷ் மிஸ்ரா, கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்


கொடிக்கால்பாளையம் நிக்காஹ் 14.02.2021


 

Saturday, 6 February 2021

நமதூர் மௌத் அறிவிப்பு 06.02.2021





நமதூர் நடுத்தெரு மர்ஹூம் OPM பக்கீர் முஹம்மது அவர்களின் மனைவியும். A P ஜெஹபர்அலி. மர்ஹூம் கா செ மு செய்யது அஹமது. V M A அன்வர் தீன் ஆகியோரின் மாமியாரும் செல்லதுரை என்கிற சேக் அலாவுதீன். செய்யது அபுதாஹீர. முஹம்மது நத்தர் ஆகியோரின் தாயாருமாகிய ரெஜினா பீவி அவர்கள் நடுத்தெருவில் வபாத்தாய்விட்டார்கள். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மதியம்1:30 மணிக்கு நடைபெறும்.

நமதூர் நிக்காஹ் தகவல் 07.02.2021



நமதூர் ராமகே ரோடு அல்ஹாஜ் S.முஹம்மது ஜபருல்லாஹ் அவர்களின் மகனார் M.J.அஜ்மல் கான் மணமகனுக்கு திருவாரூர் விஜயபுரம் காந்தி சாலை ஹாஜி.S.முஹம்மது ஹனிபா அவர்களின் மகளார் M.மெகராஜ் நிஷா மணமகளுக்கு நிக்காஹ் உடன்படிக்கை இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1442 ம் ஆண்டு ஜமாத்துல் ஆகிர் பிறை 24 (07.02.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு திருவாரூர் பை பாஸ் ரோடு மல்லிகா மஹால் திருமண அரங்கத்தில் நடைப்பெற உள்ளது.


மணமக்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) வாழ்த்திய துஆ


பாரக்கல்லாஹு ல(க்)க வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.

Friday, 5 February 2021

நமதூர் மௌத் அறிவிப்பு 06.02.2021


  


நமதூர் நடுத்தெரு வெற்றிலைக்காரவீட்டு மர்ஹூம் S.அப்துல் ரெஜாக் அவர்களின் மகளாரும் மர்ஹூம் S.அமானுல்லா அவர்களின் மனைவியும்மான ஜன்னத்துன்னிஸா அவர்கள் நடுத்தெரு ஜலீல் காலனியில் வஃபாத்தாகி விட்டார்கள் 


 அன்னாரின் ஜனாஸா 6.2.2021 சனிக்கிழமை காலை 11:00மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

திருவாரூர் : ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

 உலக தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைவலாம் அவர்கள் பற்றிய அவதூறு பரப்பியவர்களை கண்டித்து திருவாரூர் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.








#TNElections2021 |12 ஆயிரம் கோடி பயிர்க்கடன்கள் ரத்து முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு


 

Thursday, 4 February 2021

நிக்காஹ் தகவல் 4/2/21


 

மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

 



இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் திருவாரூர் கீழவீதியிலிருந்து புறப்பட்டு புதிய ரயில் நிலையம் சென்றடையும். இதில் நமதூர் பெண்கள் மற்றும் முதியவர்கள் கலந்து கொள்ள வசதியாக நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலிருந்து மாலை 3 மணி முதல் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

Wednesday, 3 February 2021

நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) நடத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை- மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்* 

 *தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்) மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய அச்சங்கள் தொடர்பான உள்துறை அமைச்சகம்   நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு  பதில் அளித்து உள்ளது. காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த் சர்மா தலைமையிலான குழு, தேசிய மக்கள்தொகை பதிவு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மக்களிடையே இருந்த மிகுந்த அதிருப்தியும், அச்சமும்  இருப்பதை சுட்டிக்காட்டியது. தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி ) மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து, பல மாநிலங்கள் தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்) பயிற்சியை செயல்படுத்தப்போவதில்லை என்று கூறியிருந்தன. இதுகுறித்து உள்துறை அமைச்சகம்  நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட அனைத்து தனிநபர்  தகவல்களும் ரகசியமானவை. மக்கள் தொகை கணக்கெடுப்பில், பல்வேறு நிர்வாக மட்டங்களில் ஒருங்கிணைந்த தரவு மட்டுமே வெளியிடப்படுகிறது.  முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளைப் போலவே, மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 ஐ வெற்றிகரமாக நடத்துவதற்கும் நிறைவு செய்வதற்கும் பொதுமக்களிடையே சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த பரந்த விளம்பர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட சோதனையில் தேசிய மக்கள்தொகை பதிவு   உடன் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான கேள்வித்தாள்கள் சோதிக்கப்பட்டுள்ளன. இந்திய குடிமக்களின் தேசிய பதிவேட்டை உருவாக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது அரசு பல் வேறு நேரங்களிலும் பல்வேறு மட்டங்களிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.   தேசிய மக்கள்தொகை பதிவில்  சரியான மற்றும் தெளிவான செய்தியைத் தொடர்புகொள்வதற்கான 360 டிகிரி அணுகுமுறை பின்பற்ற  அரசு திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவு  மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஐ சுற்றியுள்ள தவறான தகவல்தொடர்பு மற்றும் வதந்திகளைச் சமாளிக்க சரியான   நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய மக்கள்தொகை பதிவு  மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஐ சுற்றியுள்ள தவறான தகவல்தொடர்பு மற்றும் வதந்திகளைச் சமாளிக்க சரியான   நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வாறாயினும், கொரோனா தொற்றுநோய் பரவலை கருத்தில் கொண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இன் முதல் கட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவு  புதுப்பித்தல் மற்றும் பிற தொடர்புடைய கள நடவடிக்கைகள் அடுத்த உத்தரவுகள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

Tuesday, 2 February 2021

#தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை


 

#பட்ஜெட்2021 :மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல்




 


மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 01.02.2021 அறிவித்த பட்ஜெடின் முக்கிய அம்சங்களில் சில வருமாறு: 

 • சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும். • மதுரையில் தொழில் வழித்தடம். • தமிழகத்தில் 3,500 கி.மீ. புதிய சாலை அமைக்கப்படும். • தமிழக சாலை மேம்பாட்டுக்கு ரூ.1.03 லட்சம் கோடி. • தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா. • மதுரை டூ கொல்லம் நவீன தேசிய நெடுஞ்சாலை. • சென்னை , கொச்சி உள்ளிட்ட 5 மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். • வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும். • உள்கட்டமைப்புக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி. • புதிதாக 7 ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும். • கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி கூடுதல் நிதி. • பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகம் • சுயசார்பு இந்தியா : ரூ.27 லட்சம் கோடிக்கு புதிய திட்டங்கள். • சுகாதார துறைக்கு ரூ. 2.23. லட்சம் கோடி நிதி. • மேலும் 2 கொரோனா மருந்து வரவுள்ளது. • காகிதமில்லா பட்ஜெட்டால் ரூ.140 கோடி மிச்சம். • தேசிய மொழி பெயர்ப்பு திட்டம் உருவாகும். • புதிதாக 100 சைனிக் பள்ளிகள் திறக்கப்படும். • எல்.ஐ.சி., ஏர்இந்தியா, நிறுவன பங்குகள் விற்க முடிவு. • சூரிய சக்தி கழகத்திற்கு ரூ.ஆயிரம் கோடி நிதி. • அரசு வங்கிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. • இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீதமாக உயர்வு. • மின்னணு முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு. • வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை. • தங்கம் இறக்குமதி வரி குறைப்பு. • குறைந்தவிலை வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை. • என்.ஆர்.ஐ., களுக்கு இரட்டை வரி விதிப்பு ரத்து. • வருமான வரியில் மூத்த குடிமக்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. ஓய்வூதியம் மற்றும் வட்டியை மட்டும் நம்பியுள்ள 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம். • தற்சார்பு இந்தியா நடவடிக்கைகள் சுகாதார துறைக்கும் விரிவுபடுத்தப்படும் (ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் திட்டம்). தேசிய சுகாதார இயக்கத்திற்கு உறுதுணையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். • ஊட்டச்சத்து இயக்கம் 2.0 என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.இது ஒருங்கிணைந்த திட்டமாக அமல்படுத்தப்படும். • நீர்நிலைகளை பராமரிக்கக்கூடிய ஜல்ஜீவன் திட்டம், நகர்ப்புறங்களிலும் நீட்டிக்கப்படும். • காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு • கொரோனா தடுப்பூசி வழங்கலுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்படுகிறது. • சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவீதம் அதிகமாக 2,23,846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. • காலாவதியான வாகனங்களை உடைப்பதற்காக, 15 ஆண்டுகளான வர்த்தக நோக்கில் ஓடிய வாகனங்கள் தகுதி பெறுகின்றன. 20 ஆண்டுகளான இதர சொந்த உபயோக வாகனங்களை உரிமையாளர்கள் தாமே முன்வந்து உடைப்பதற்காக அளித்து விடலாம். • ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகம். • முதலீட்டு நிதிநிலையில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையோடு ஒப்பிடும் போது அது 34.5 சதவீதம் உயர்வு. • தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. • மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் வழித்தடங்களில் இந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. • இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது மற்றும் சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். • அகல ரயில்பாதை வழித்தடங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளாக 100 சதவீதம் மின்மயமாக்கப்படும். • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு 1,18,101 கோடி ரூபாய் ஒதுக்கீடு. • பொது பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டம் அறிமுகம். இதன்காரணமாக ஆட்டோ மொபைல் துறைக்கு ஊக்கமும், ஆக்கமும் ஏற்படும். • நகர்ப்புறப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும். • 139 ஜிகாவாட் அளவுக்கான மின்உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. • முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு 1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. • பசுமை எரிசக்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ஹைட்ரஜன் எரிபொருள் திட்டம் ஒன்று நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும். • வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. வரும் ஐந்தாண்டுகளுக்கு இந்தத் திட்டத்திற்காக 1,624 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். • உஜ்வாலா திட்டத்தினால் சமையல் எரிவாயு 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 100 நகரங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். குழாய் வழியாக சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் ஜம்மு காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. • குஜராத்தில் பொருளாதார தொழில்நுட்ப முனையம் ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளது. • காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீத அளவுக்கு, பாதுகாப்பு விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறது. • நிறுவனங்கள் சட்டம் 2013, சிறிய நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் திருத்தியமைக்கப்படவுள்ளது. • நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் நுகர்வோர் தங்களது உரிமைகளை அறிந்து கொள்ளவும், குறைகளைத் தீர்க்கவும் புதிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. • கணினி துறையில் புதிய முன்னேற்றங்களான டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. • எல்ஐசியின் தகுந்த சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பங்குகள் வெளியிடப்படவுள்ளன. • மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம். • அரசின் வருவாய் ஈட்டாத சொத்துக்களை கண்டறிந்து அவற்றை வருவாய்க்கு உரியதாக ஆக்க தனி அமைப்பு (SPV) ஏற்படுத்தப்படும். • விவசாயிகளின் நலன்களை காக்க அரசு உறுதிபூண்டுள்ளது. • வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கொள்முதலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. • நெல்லுக்கும், கோதுமைக்கும் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை காரணமாக, ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர். • வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு. • வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இ-நாம் திட்டத்தின் கீழ் இணையவழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைக்கப்படுகின்றன. • தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. • வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களில் உள்ள வேளாண் உற்பத்தி விற்பனை மையங்கள் மூலமாக சிறப்பு கட்டமைப்பு நிதியம் மூலம் கடன் வசதி • அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படவுள்ளது. • கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. • அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேரப் பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. • சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு. • லே -யில் புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது. • மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள். • அடுத்த 6 ஆண்டுகளில் பட்டியலின மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு. • பட்டியலின மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம். • தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி ஒதுக்கீடு. • இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா துவக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்து வாகனம் உருவாக்கப்படவுள்ளது. • 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்வெளி ஓடம் ககன்யான் செலுத்தப்படவுள்ளது. • ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், பல்லுயிர் பெருக்கத்தை கட்டிக்காக்கவும் ஆழ்கடல் ஆய்வு அமைப்பு ஏற்படுத்தப்படும். • தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலனைக் காக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு. • தேசிய செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணைய மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும். • நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. • வரும் நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. • 2025-26 ஆம் ஆண்டுக்குள் இந்த நிதிப்பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைக்க திட்டம். • வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டம். • நாட்டின் உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் தொடங்க திட்டம். • 15-வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். • பெரு நிறுவன வர்த்தக வரி விகிதங்கள் உலகிலேயே மிகக்குறைந்த அளவில் நமது நாட்டில் வசூலிக்கப்பட்டு வருகிறது. • மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. • தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் பிரச்சினைகளை தீர்க்க புதிய குறைதீர்க்கும் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும். • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம். • கட்டமைப்புத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். • வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு. இது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தவும் குறைந்த விலை உடைய வீட்டு வசதி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கவும் உபயோகமாக இருக்கும். • புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது. • பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி அறிமுகம். • பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10 லிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு • உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு #Budget2021

Wednesday, 27 January 2021

நமதூர் நிக்காஹ் 28.01.2021


 

#TNelections2021 | தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

 *



தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்: 17 மாவட்ட அதிகாரிகளுக்கு இன்று முதல் பயிற்சி* தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இன்று முதல் பயிற்சி தொடங்குகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நெருங்கி வருகிறது. இதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை பணிகளை தமிழக தேர்தல் துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜன.20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைவழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதுதவிர, தமிழகத்தில் கூடுதலாக 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணிகள் முடிக்கப்பட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் பட்டியலிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், ஒரு தொகுதிக்கு 4 பேர் வீதம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு தமிழக அரசிதழில் நேற்றுவெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை ஆட்சியர்கள் நிலையில் உள்ளவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 17 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள 116 தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி மற்றும் சான்றளித்தல் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ இந்த பயிற்சியை இன்று தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, இதரமாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி திருச்சியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, 23 January 2021

நமதூர் மௌத் அறிவிப்பு 23.01.2021 முஹபத்துன்னிசா

நமதூர் நடுத்தெரு கோசு வீட்டு மர்ஹும் கோ.மு.சா.முஹம்மது யாசின் அவர்களின் மகளாரும், Y.M.ஜபருல்லா, Y.செய்யது ஷேக் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரியும், முஹம்மது அபூபக்கர் அவர்களின் மனைவியும், M.குத்புன்நியாஸ் அவர்களின் தாயாருமான   முஹபத்துன்னிஸா அவர்கள் மௌத். 




 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.. 


 இன்னா லில்லாஹி வா இன்னா இளைஹி ராஜிஊன்..

Wednesday, 20 January 2021

நமதூர் மௌத் அறிவிப்பு 20.01.2021

 *ஜனாஸா அறிவிப்பு*


*நமதூர் வேப்பமரத்தார் வீட்டு மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களின் பேரனும், மர்ஹும் அப்துல் சமது அவர்களின் மகனாரும், மர்ஹும் ஜெய்னுல்  ஆபிதீன் அவர்களின் மருமகனும், அன்வர் சாதாத்  அவர்களின் மைத்துனருமான *ஷேக் தாவுத்* *அவர்கள் M.M.I. நகரில் மௌத்.* 


அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு   கீழத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வா இன்னா இளைஹி ராஜிஊன்.

#TNElections2021 : இறுதி வாக்களார் பட்டியல் வெளியானது!

 #BREAKING | 


தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.26 கோடி - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு 


Sunday, 17 January 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு 17.01.2021

 நமதூர் பள்ளிக்கூடத்தெரு இமாமுதீன் அவர்களின் மைத்துனரும் , இ.அஹமது லாபீர் அவர்களின் மாமனாரும், அடியக்கமங்கலம் பட்டக்கால்தெரு “நானாச்சி வீட்டு”(மர்ஹும்)க.நூ.மு.செய்யது அபூபக்கர் அவர்களின் மூத்த மகனும்,S.A.நூருல்லாஹ் அவர்களின் சகோதரரும்,H.அப்துல் மாலிக்,H.ஹாஜா மெய்தீன் ஆகியோர்களின் தகப்பனாருமான S.A.ஹாஜாத்துல்லாஹ் அவர்கள் பட்டக்கால்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்


. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்! 


 நல்லடக்க நேரம் இன்று இரவு 7 மணிக்கு

நமதூர் ஜனாஸா அறிவிப்பு* 17.01.2021 



நமதூர் வடக்கு தெரு மர்ஹூம் T.K.M.அப்துல் காதர் அவர்களின் பேரனும், A.யூசுப்தீன் அவர்களின் மகனார் சபா அஹமது அவர்கள் மௌத்.*

 *இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்*


 *நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கபடும்*

நிக்காஹ் தகவல் 17.01.2021


 

Friday, 8 January 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு.

 கொடிக்கால் பாளையம் நடுத்தெரு, மர்ஹும் முஹம்மது அலி மரைக்காயர் அவர்களின் மச்சானும், த.மு.மு.க மாநில பொது செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி அவர்களின் தகப்பனாருமான *S.N.ஜெய்னுல் ஆபிதீன்* அவர்கள் சென்னையில் மௌத். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்

அன்னாரது ஜனாசா இன்று இரவு 8 மணிக்கு சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்.

கொடிக்கால் பாளையம்

Wednesday, 6 January 2021

தைப்பூசம் பொது விடுமுறை தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு


 

 வெளியூர் மௌத் அறிவிப்பு 06.01.2021



 நமதூர் காட்டுப்பள்ளி தெரு கருத்துணி வீட்டு முஹம்மது இணாயத்துல்லா அவர்களின் மைத்துனரும். கலிபுல்லா, பயாஸ் ஆகியோரின் தாய்மாமாவாகிய அப்துல் வாஹிது அவர்கள் குருக்கத்தியில் மௌத்.. 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு குருக்கத்தியில் நல்லடக்கம் செய்யப்படும்

Tuesday, 5 January 2021

நமதூர் மௌத் அறிவிப்பு

 *இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*. 


நமதூர் சூபி நகர் பட்டிக்காரவீட்டு மர்ஹும் ப.ஜா.மு. அப்துல் பத்தாஹ் அவர்களின் சம்மந்தரும் A. ஹாரூன் ரஷீத் அவர்களின் மாமனாரும் H. ரஹ்மதுல்லா H. தௌபீக் H. ஹாலித் ஆகியோரின் பாட்டானாரும் ஆகிய H. முகமது இபுறாஹிம் அவர்கள் புதுமனை தெரு *தீன் காலனியில்* மௌத்

 அன்னாரின் ஜனாஸா பகல் 12.00மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Sunday, 3 January 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு 03/01/2021 

நமதூர் நடுத்தெரு போஸ்ட் துரை என்கிற சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மருமகன் சபியூதீன் அவர்களின் பாட்டியாரும் அடியக்கமங்கலம் பட்டக்கால்தெரு நாட்டக்காரவீட்டு மர்ஹும் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், S.குத்புதீன், மர்ஹும் S.நஜ்முதீன் ஆகியோர்களின் தாயாரும், ’மர்ஹும்’ கியாஸுதீன், ஹாரூன் ரஷீது, காட்டூர் ஜெஹபர்தீன் இவர்களின் மாமியாருமான ‘செவத்தாச்சி’என்கிற உம்முல் பஜ்ரியா அவர்கள் அடியக்கமங்கலம் ரஹ்மாணியாத்தெரு தனது இல்லத்தில் மௌத். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்! 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Saturday, 2 January 2021

மௌத் அறிவிப்பு ரம்ஜான் பீவி



 நமதூர் சூபி நகர் நடுத்தெரு மர்ஹூம் முன்னால் தலையாரி அப்துல் வஹாப் அவர்களின் மகளாரும் பாவா பக்ருதீன் அவர்களின் மனைவியும் ரிஸ்வாத் மன்னர். ரிஜ்வான். ஆகியோரின் தாயாரும் ஆட்டோ பாஷா அவர்களின் சகோதரியுமான ரம்ஜான் பீவீ அவர்கள் மலாயாத்தெரு சிராஜ் காலனியில் வஃபாத்தாகிவிட்டார்கள்


அன்னாரின் ஜனாசா இன்று மாலை5மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Thursday, 31 December 2020

மௌத் அறிவிப்பு கா.செ.மு.அப்துல் சலாம்

 



 நமதூர் காயிதே மில்லத் தெரு கா.செ.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனாரும், A.கனியுர் ரஹ்மான் அவர்களுடைய தகப்பனாரும், அடியக்கமங்கலம் A.P.A.முஹம்மது ஃபுரோஸ், மர்ஹும் A.அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும், முஹம்மது இஸ்மாயில், முஹம்மது இம்ரான், முஹம்மது இக்ரமுல்லா ஆகியோரின் பாட்டனாருமாகிய ஹாஜி *கா.செ.மு.அப்துல் ஸலாம்* அவர்கள் மௌத். 

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன் 


 அன்னாரின் ஜனாசா நாளை *01/01/2021* காலை *11* மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். .

 *நமதூர் மௌத் அறிவிப்பு.* 31/12/2020 

நமதூர் தாஜ்பிராக் ஷா தெரு M.ரபி அஹமது, M.அப்துர் ரஹ்மான், M.பஷீர் அஹமது ஆகியோரின் தகப்பனாரும் A.K.அலி அக்பரின் மாமனாருமாகிய கெடிகார வீட்டு *A.முஹம்மது கபீர்* அவர்கள் புதுமனை தெரு, துக்கான் நகரில் மௌத்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன். 


 அன்னாரின் ஜனாசா இன்று மதியம் 12 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்

திருவாரூர் நகராட்சியை கண்டித்து தமுமுக மமக ஆர்ப்பாட்டம்


 

தொடர் மழை பெய்து வருகிறது

Wednesday, 30 December 2020

 *வெளியூர் மௌத் அறிவிப்பு

நமதூர் மலாயத்தெரு, குட்டா வீட்டு மர்ஹும் மெ.மு.முஹம்மது யூனுஸ் அவர்களின் சின்ன மாமியாரும் முஹம்மது இப்ராஹிம் தமீமுல் அன்சாரி ஆகியோரின் பாட்டியாருமான சேத்தா என்கிற *ஹயிருன் நிஷா பீவி* அவர்கள் திருவாரூர் விஜயபுரம் ஜின்னாத்தெருவில் மௌத். 

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு திருவாரூர் விஜயபுரத்தில் நல்லடக்கம் செய்யப்படும்..

Wednesday, 23 December 2020

வெளியூர் மௌத் அறிவிப்பு தஞ்சாவூர்

 வெளியூர் ஜனாஸா அறிவிப்பு இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜுவூன் நமதூர் மலாயாத்தெரு மர்ஹும் அபுஷாலிஹ் ஹாஜியார் அவர்களின் மகனாரும், ஜெகபர் ஷேக் அலாவுதீன், அப்துல்லாஹ் அவர்களின் சகோதரரும், ஹாஜா நசீருதீன் அவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் காதர் அவர்கள் தஞ்சாவூரில் வபத்தாகிவிட்டார்கள்

அன்னாரின் ஜனாசா 1 மணிக்கு தஞ்சை பாம்பாட்டி தெரு பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

Tuesday, 22 December 2020

நமதூர் மௌத் அறிவிப்பு ஹைருன்னிசா

 



 நமதூர் புதுமனைத்தெரு கருவேப்பிலை வீட்டு மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும் M.M.I .முக்தார் ஹூசேன் ,M.M.I.ஹபிப் முஹம்மது,M.M.I.முஹம்மது முஸ்தபா ஆகியோர்களின் தாயாரும் ,அடியக்கமங்கலம் அன்வர் சதாத் மற்றும் தெற்கு தெரு முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்களின் மாமியாருமான ஹைருன்னிசா அவர்கள் தனது இல்லத்தில் மௌத். 



 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

கொடிக்கால்பாளையம் பாச்சோற்றுப்பெருவிழா அழைப்பு


 

Sunday, 13 December 2020

நமதூர் மௌத் அறிவிப்பு பாத்திமா பீவி

 நமதூர் மாலிக் மளிகை உரிமையாளர் நாசர்

அவர்களின் தாயார் 

பாத்திமாபீவி அவர்கள்

நடுத்தெருவில் மெளத்



Thursday, 10 December 2020

நமதூர் மௌத் அறிவிப்பு ஜெய்த்துன் பீவி



 நமதூர் பள்ளிவாசல் தெரு கொல்லாபுரத்தார் வீட்டு  கொ.அ.முஹம்மது துல்பக்கிர், கொ.அ.ஹாஜா அலாவுதீன், கொ.அ.முஹம்மது யூசுப்தீன் ஆகியோரின் தாயாரும், திருவிடச்சேரி மு.முஹம்மது யாசின் அவர்களின் மாமியாருமாகிய *கொ.அ.ஜெய்துன் பீவி* அவர்கள் தெற்குத்தெரு தாஜ் காலணியில் மௌத். 


அன்னாரின் ஜனாசா இன்று இரவு *8 மணிக்கு* நல்லடக்கம் செய்யபடும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன். 



வெளியூர் மௌத் அறிவிப்பு

Sunday, 6 December 2020

நமதூர் மௌத் அறிவிப்பு அபுசாலிஹ்





 நமதூர் கொஞ்சுலி வீட்டு மர்ஹூம் நெய்னாம்ஷா ராவுத்தர் அவர்களின் மகனாரும் 

A.சுல்தான் சலாவுதீன் 

A.முகம்மது அன்சாரி 

A.முகம்மது மஹசூக் (பாபு)

ஆகியோரின் தகப்பனாரும் 

A.ஹாஜா அலாவுதீன் அவர்களின் மாமனாரும்

H.ஃபர்ஹானுதீன் அவர்களின் பாட்டனாருமாகிய 

கொஞ்சுலி ஹாஜி N.முகம்மது அபுசாலிஹ் அவர்கள் தெற்கு தெரு

இறையருள் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 8:00மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

கொடிக்கால்பாளையம்

Wednesday, 2 December 2020

புரெவி புயல் எச்சரிக்கை எதிரொலி மழை. பெய்து வருகிறது

 * புரெவி புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு  


* குமரி - பாம்பன் இடையே கரையை கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் - வானிலை மையம்  

#Puravicyclone