கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் மகாஜன சபை கூட்டம் தலைவர் முக்தார் உசேன் தலைமையில் 08.08.2026 ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1.மஸ்ஜித் ஆயிஷா பள்ளிவாசல் கட்டுமான கணக்கு வரவு செலவு அறிக்கை புத்தங்மாக வழங்கப்பட்டது.
2. கடந்த 8 மாதங்களாக நடைப்பெற்ற பள்ளிவாசல் பராமரிப்பு கணக்குகள். வாசிக்கப்பட்டது. மேலும் பள்ளிவாசல் அவுல் பகுதியில் மாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.
3. ஜமாஅத் அங்கத்தினர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
4.ஹாஜி. தினா இப்ராஹிம் ஷா ராவுத்தர் வக்ஃப் இடங்கள் உள்ள கீழக்காவதுகுடி பகுதியில் 13 லட்சம் சதுர அடி திருமண மண்டபம் மற்றும் பள்ளிக்கூடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இடங்களை பகுதியாக மனைகளை பிரித்து விற்பனை செய்ய பொதுமக்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது.
5.தெற்கு தெரு ஹாஜி தி.இப்ராம்சா ராவுத்தர் பெண்கள் அரபி கல்லூரி வளாகத்தில் பெண்கள் பூங்கா அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
6. நீதிமன்ற தடை உத்தரவு சம்மந்தமான ஆலோசிக்க பட்டதில் காட்டுப்பள்ளி தெரு பிரதிநிதி முஹம்மது ஆதம் தொடர்ந்து செயல்பட தடையாக உள்ள ஜமாஅத் எதிரான வழக்குகளை திரும்ப பெறுவதாக உறுதி அளித்ததை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
7.காவல்நிலைய வழங்கு சம்பந்தமான ஆலோசிக்கப்பட்டத்தில் ஆர்.டி.ஓ. அமைதி கூட்டத்தில் பிறகு ஆலோசனை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இதர விஷயங்கள் தீர்மானம்
8.மத்லபுல் கைராத் கல்வி நல குழுமத்தின் கடிதத்தின் அடிப்படையில் அருகில் உள்ள கூடுதல் மனைகளை வாங்க அனுமதி வழங்கப்பட்டது.
9. ஜமாஅத் ஆடிட்டர் ஜெ.சேக் மைதீன் அவர்களை தற்காலிக பொறுப்புகளை நிரந்தரமாக ஆக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:
Post a Comment