Sunday, 30 June 2019

ஹஜ் பயணத்துக்கான இந்தியாவின் ஒதுக்கீட்டை அதிகரித்தது சவூதி அரேபியா*

*

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்திய யாத்ரீகர்களுக்கான ஒதுக்கீட்டை 2 லட்சமாக சவூதி அரேபியா அதிகரித்துள்ளது.
முஸ்லிம் சமூகத்தினரின் புனித இடமான சவூதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதீனாவுக்கு உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் மக்கள் ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். புனிதப் பயணம் அமைதியாகவும், இடையூறின்றியும் நடைபெறும் நோக்கில், ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட ஒதுக்கீட்டை சவூதி அரேபியா அளித்து வருகிறது.
அந்த வகையில், இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 1.70 லட்சம் பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள சவூதி அரேபியா அனுமதி வழங்கியிருந்தது. அந்த எண்ணிக்கையைத் தற்போது 2 லட்சமாக சவூதி அரேபியா உயர்த்தியுள்ளது.
ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டினிடையே, சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக, வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது, ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கையை 1.70 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்துவதாக இளவரசர் முகமது பின் சல்மான் உறுதியளித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கிடையேயான சுற்றுலாவை அதிகரிப்பது தொடர்பாகவும், விமானச் சேவைகளை அதிகரிப்பது தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்தாண்டு இறுதியில் சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு இளவரசர் சல்மான் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார் என்றார் விஜய் கோகலே.
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டை சவூதி அரேபியா தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு 35,000 இடங்களையும், கடந்த ஆண்டு 5,000 இடங்களையும் கூடுதலாக ஒதுக்கிய நிலையில், தற்போது 30,000 இடங்களை இந்தியப் பயணிகளுக்காக அதிகரித்துள்ளது.

தமிழக அரசின் சின்னங்களில் ‘தமிழ் மறவன் பட்டாம்பூச்சி’ சேர்ப்பு*

*

தமிழக அரசின் சின்னங்களில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்தை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா, வரையாடு, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி உள்ளிட்டவை அரசின் சின்னங்களாக உள்ளன.

இந்நிலையில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர் பரிந்துரையை ஏற்று தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றாக ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சியை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம், பனைமரம் உள்ளிட்ட சின்னங்களின் பட்டியலில் தற்போது பட்டாம் பூச்சியும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மறவன் பட்டாம் பூச்சி (அறிவியல் பெயர்: கிற்றோ சோர்ரா தைஸ்) எனபது ஆகும்.

Wednesday, 26 June 2019

தேசியக் கல்விக் கொள்கை- 2019: நீங்கள் அறிந்தே ஆக வேண்டிய பாதகங்கள்!*

*


தேசியக் கல்விக் கொள்கை வரைவு-2019 விரைவில் கொள்கையாக வரவிருக்கிறது. இதன் சாதக பாதகங்கள் குறித்து அலசி ஆராய்ந்து வருகிறார் செயற்பாட்டாளராகவும் சிறுவர்களுக்கான எழுத்தாளராகவும் நன்கு அறியப்படும் விழியன் என்கிற உமாநாத் செல்வன்.

அவர் தொடர்ந்து தேசியக் கல்விக் கொள்கை - 2019 குறித்து தனது கருத்துகளையும், மக்களின் கேள்விகளுக்கு பதில்கள் வடிவில் முக்கிய விஷயங்களையும் எடுத்துரைக்கிறார்.

தேசியக் கல்விக் கொள்கையில் ஏதோ மும்மொழித் திணிப்பு மட்டுமே பிரச்னை என்று அரசியலாக்கப்பட்டு, அது திரும்பப் பெறப்பட்டது வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி எத்தனை எத்தனை பிரச்னைகள் இருக்கின்றன என்பதை எடுத்துரைத்து, ஆழமாக எடுத்துச் சொல்லும் உமாநாத்தின் பொறுப்பு, மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

நிச்சயம் இது ஏதோ கல்வியாளர்களின் பிரச்னை என்று நினைத்தால் தற்போது துவக்கப் பள்ளியில் படிக்கும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் கேள்விக்குறியாகும் என்பதையும் சேர்த்தே அவர் சொல்கிறார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கட்டுரைகள் இனி உங்களுக்காக..

அவரின் பதிவில் இருந்து

அன்புள்ள பெற்றோர்களே !

தேசிய கல்விக் கொள்கை (வரைவு) என்பது எதோ கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்களுக்கான விஷயம் மட்டும் அல்ல. நம் பிள்ளைகளுக்கு மூன்று வயது முதல் கல்லூரி முடித்து ஆராய்ச்சி செய்யும் வரையில் கல்வி எப்படி கொடுக்கப்படும் என்பதற்கான ஒரு கட்டமைப்பு.

சரி, ஒரு பெற்றோராக இதில் எங்கெல்லாம் பாதிக்கப்படுவோம். நமக்கான முக்கிய புள்ளிகள் என்ன?

1. இனி அரசுப் பள்ளிகளைப் போலவே தனியார் பள்ளிகளையும் சரிசமமாக அரசு ஊக்குவிக்கும். தனியார் பள்ளிகளெனில் அவர்கள் பள்ளிக் கட்டணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் நிர்ணயித்துக் கொள்ளலாம் ஆனால் வருடா வருடம் ஏற்றக்கூடாது (சும்மா அவங்களை கட்டுப்படுத்தறாங்கலாம்)

2. நம் குழந்தைகள் பள்ளி முடித்துவிட்டுக் கல்லூரிக்கு இனி எளிதாகச் சென்றுவிட முடியாது. தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கல்லூரிக்குள் நுழைய முடியும்.

3. அரசுப் பள்ளிகளில் குறைவான மாணவர்கள் இருந்தால் அவை மூடப்பட்டு வேறு பள்ளிகளுடன் இணைக்கப்படும். (பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே நீலகிரியில் பத்து பள்ளிகள் மூடப்பட்டு இணைக்கப்பட்டன)

4.மாங்கு மாங்கு என விடியற்காலை எழுந்து டீ, காபி போட்டு படிக்க வைத்த மேல்நிலைச் சான்றிதழுக்கு(+2) இனி எந்தப் பயனும் இல்லை.

5. டியூசன் / கோச்சிங் சென்டருக்கு கட்ட இப்போதே வைப்பு நிதி, லோன் போட்டு வைக்கவும்.

6. கட்டாயம் இனி மூன்று மொழி உண்டு.

7. ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் அறிவியல், கணிதம் ஆகியவை இரண்டு மொழிகளில் கற்றுத்தரப்படும்.

8. சமஸ்கிருதம் கட்டாயம் கற்றுத்தரப்படும். ஆகவே விரைவில் ஒரு மாதத்தில் சமஸ்கிருதப் புத்தகம் வாங்கவும்.

9. பத்து ஆண்டுகளுக்குள் தானாக டிகிரி வழங்காத கல்லூரிகள் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விடும். அந்தக் கல்லூரிகள் நூலக வளாகமாகவோ தொழில் பயிற்சி வளாகமாகவோ மாற்றப்படும் (நீங்க படிச்ச கல்லூரிகளை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுவது நல்லது)

10. தற்சமயம் ஆசிரியர் பணிக்கு ஏராளமான காலியிடம் இருந்தாலும் அரசு பணியிடங்களை நிரப்பவில்லை. இந்தக் கல்விக் கொள்கையின் படி இன்னும் நிறைய ஆசிரியர்கள் தேவை. அப்ப உங்க பிள்ளை படிக்கும் பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் இருப்பாங்க?

11. தமிழ் நாடு அரசு பின்பற்றும் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

12. பத்தாம் வகுப்பு - 12ஆம் வகுப்பு இடைநிற்றல் அதிகம். 12ஆம் வகுப்பு - கல்லூரிகள் இன்னும் அதிகம். நுழைவுத்தேர்வு மூலம் கல்லூரியில் சேரும் Procedureகள் இன்னும் இடைநிற்றலை அதிகரிக்கும்.

13. எட்டாம் வகுப்பு முதலே துணைப்பாடமாக (விருப்பப்பாடம்) தொழில்சார் கல்வி வழங்கப்படும். குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவன் கூட இதனால் படிக்கமாட்டான். வேறு மொழியில் கிராமப்புற மாணவனுக்கு எலக்ட்ரிக்கல், நகரப்புற மாணவனுக்கு ரொபோட்டிக்ஸ்.

14. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் தேசிய அளவிலான கற்றல் திறன் வெளிப்பாடு அடிப்படையிலான‌ தேர்வுகள் நடத்தப்படும்.

15. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இடைநிலைக் கல்வியாக கருதப்பட்டு எட்டு பருவத் தேர்வுகள் வாரியத் தேர்வுகளாக நடத்தப்படும். அரே ஓ சம்போ !

16. தாய்மொழிக்கல்வியே சிறந்தது ஆனால் ஆங்கில வழிக் கல்வி மட்டும் ஊக்குவிக்கப்படும்

17. பள்ளிகளுக்கு இதனைச் செய்வோம் அதனைச் செய்வோம், ஆசிரியர்களுக்கு இதனைச் செய்வோம் அதனைச் செய்வோம்னு ஆயிரத்து நானூத்தி முப்பத்தி எட்டு வாக்குகள். ஆனால் இதற்குத் தேவையான நிதி எங்கிருந்து வரும்னா பெப்பே !

18. 10+2 (5+3+2+2)என்று இருந்த பள்ளிக் கல்வி முறை 5+3+3+4 என்று மாற்றி அமைக்கப்படும்.

19.கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் இனி மாநில அரசுக்கு இல்லை! அதுமட்டுமல்ல, அதன் பாடத்திட்டத்திலும் மாநில அரசு தலையிட முடியாது. அதற்கென்று “பொதுக் கல்விக் குழு” (General Education Council) என்ற ஒன்று நிறுவப்படும்.

20. இது தான் முக்கியமான பாயிண்ட். இன்னும் இன்னும் நிறைய விஷயங்கள் இந்த கல்விக் கொள்கையில் இருக்கு. இதனை சாமான்ய மனிதர்களாகிய நாம் எதுவும் செய்திடவும் முடியாது. கருத்துச் சொல்ல இன்னும் ஒரு வாரமே மீதம் இருக்கு (ஜூன் 30). ஆனால் இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி கல்வி பற்றிய புரிதலை நமக்குள் விதைக்க வேண்டும்.
இது கட்டாயம் நிறைவேறும், அப்படி நிறைவேறினால் மினிமம் டேமேஜிற்கு என்ன செய்ய முடியும் என்றும் பேச வேண்டும்.

மிக முக்கியமாக இது சமமற்ற ஒரு களத்தினை உருவாக்கும் முயற்சி. சிலர் வளர்ந்து நல்ல நிலையில் இருக்கலாம், சிலர் இன்னும் எழக் கூட முடியாமல் இருக்கலாம். இந்தக் கொள்கை சமூகப் பிளவினை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்யும். அதற்காகவேனும் கை கேர்க்க வேண்டும்.

வாசிப்போம். விவாதிப்போம். புரிந்துகொள்வோம். ஒன்றாய் கைகோர்த்து பயணிப்போம்

பெற்றோர்கள் சார்பாகவும் ஒருவனாகவும்,
 *விழியன்*
நன்றி   தினமணி

 *இது குறித்து நேற்றைய பதிவை சேர்த்து படிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்*

 *USEFUL information Group*🌹

Tuesday, 25 June 2019

முக்கிய அறிவிப்பு. தேசிய கல்வி கொள்கை

முக்கிய அறிவிப்பு

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் தேசிய  கல்வி கொள்கை 2019  தயார்செய்ய குழு அமைத்து அதன் வரைவு அறிக்கை அண்மையில் மத்திய அரசு வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த கல்வி கொள்கை அடிப்படையில் தான் இனிவரும் ஆண்டுகளில் பள்ளி பாடத்திட்டம் அமையும் என்பதால் பொதுமக்கள், பெற்றோர்கள் , கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் தாங்கள் கருத்துக்களையும் ஆலோசனைக்களையும் வரும் 2019 ஜூன் 30 க்குள் nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனவே இப்போது தான் எனக்கு தெரியும் வரைவு அறிக்கை 400 பக்கங்கள் மேல் இருக்கிறது என ஐயம் கொண்டாலும்  உடனே மின்னஞ்சல் முகவரி முலமாக இறுதி நாளை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என அனுப்பி வைக்கலாம்.
வருங்கால குழந்தைகள் கல்வி சம்பந்தப்பட்டது என்பதால் அனைவரும் உடனே மின்னஞ்சல் அனுப்புங்கள்.

நன்றி

Monday, 24 June 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 24.06.2019



நமதூர் தெற்கு தெரு மஜீத் அப்பா என்கிற அப்துல் மஜீத் அவர்களின் மனைவி ரெஜியா பானு அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா  இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

24.06.2019

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

நமதூர் நிக்காஹ் தகவல்கள் 24/06/2019


Saturday, 22 June 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 22.06.2019





நமதூர் தெற்கு தெரு ஸூஃபி வீட்டு சவுக்கத் அலி,நூருல் அமீன் ,யாசிர் அரபாத் இவர்களின் தகப்பனாருமான ஸூஃபி அப்துல் மஜீத் அவர்கள் நடுகொத்த தெருவில் மௌத்.

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 7மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.
திருவாரூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஜூலை 4- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் தகுதியான மகளிருக்கு, அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு மகளிருக்கு மட்டும் பயன்பெற முடியும். பயனாளிகள் இருசக்கர வாகனம் வாங்க, அந்த வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியமாக ரூ. 25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்.
125 சிசி-க்கு மேற்படாத திறன் கொண்ட கியர்லெஸ் அல்லது ஆட்டோ கியர் வாகனமாக இருக்க வேண்டும். 1.1.2018 தேதி மற்றும் அதற்கு பின்னர் தயாரிக்கப்பட்ட, புதிய இருசக்கர வாகனமாக இருக்க வேண்டும்.
பயனாளிகளுக்கான தகுதிகள்: அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத நல வாரியங்களில் பதிவு பெற்ற மகளிர், தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணிபுரியும் மகளிர், சுயதொழில் புரியும் பெண்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்களின் கீழ் பணிபுரியும் பெண்கள், ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள மகளிர், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள், மக்கள் கற்றல் மையங்களில் தொகுப்பு ஊதியத்திலோ அல்லது தினக்கூலி அல்லது ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் மகளிர், வங்கிகளில் ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரியும் மகளிர் ஆகியோர் தகுதியுடையவர்கள் ஆவர்.  வயது 18 முதல் 40- க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் நாளில் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ. 2,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரே அக்குடும்பத்தில் பிரதான வருவாய் ஈட்டுபவராக இருக்க வேண்டும். மகளிரை குடும்பத் தலைவியாக கொண்ட மகளிர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளி மகளிர், திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர் மற்றும்  தாழ்த்தப்பட்ட  வகுப்பினர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியுள்ளோர் ஜூலை 4- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.  
விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்: அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்கள், அனைத்து பேரூராட்சி அலுவலகங்கள், மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை இலவசமாகப் பெறலாம்.  ஜூன் 20- ஆம் தேதி காலை 10 மணி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 4- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்: பிறப்பு சான்றிதழ் (வயது 18 முதல் 40 வரை), வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம், இருப்பிட ஆதாரம் ( வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு அல்லது விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்பட்ட தொலைபேசி கட்டண ரசீது, மின் கட்டண ரசீது, வீட்டுவரி ரசீது), வருமானச் சான்று (பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்று, சுய சான்றொப்பமிட்ட சான்று), பணிபுரிவதற்கான ஆதாரம் (பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்று), ஆதார் கார்டு, கல்வித்தகுதி சான்று, 8-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கான சான்று ( மாற்றுச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் முதலியன), பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், முன்னுரிமை கோருவதற்கான சான்று, சாதிச்சான்றிதழ், மாற்றுத் திறனாளி அடையாள அட்டை (தகுதி பெற்ற அலுவலரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்), வாங்க உத்தேசித்திருக்கும் இருசக்கர வாகனத்துக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பெறப்பட்ட விலைப்புள்ளி, விலைப்பட்டியல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
ஜூலை 4- ஆம் தேதிக்கு பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. இதற்கென தொடர்புடைய அலுவலகங்களில் மனுக்கள் வழங்குவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கும் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த அலுவலகங்களில் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். தகுதியுள்ள மகளிர் இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Friday, 21 June 2019

மழைநீர் சேகரிப்பு அமைப்பு மீண்டும் கட்டாயமாக்கப்படுமா?- காற்றில் பறந்த ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டம்

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தினால் மட்டுமே கட்டிடஅனுமதி வழங்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவு தற்போதுதீவிரமாக அமல்படுத்தப்படாததால், வறட்சி காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
நிலத்தில் பெய்யும் மழையில் 40 சதவீதம் கடலில் கலப்பதாகவும், 35 சதவீதம் வெயிலில் ஆவியாவதாகவும், 14 சதவீதம் நிலத்தால் உறிஞ்சப்படுவதாகவும், 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்துக்கு உதவுவதாகவும் கணக்கிடப்படுகிறது. ஆனால், தற்போது கிராமங்கள்முதல் நகரங்கள் வரை வீடுகள்,கட்டிடங்கள் அருகருகே கட்டப்படுவதாலும், திறந்தவெளிகளை சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார்ச்சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், பெய்யும் மழை நீரில் 5 சதவீதம்கூட நிலத்தால் உறிஞ்சப்படுவதில்லை.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் 2001-ம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, ‘நிலத்தடி நீர் மேம்படுத்துதல் மற்றும் நீர் மேலாண்மை’ சட்டத்தைக் கொண்டு வந்தது. வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில், கட்டிட அனுமதி பெறும்போது மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகளை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தாத கட்டிடங்களுடைய மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
ஆனால், அதற்குப் பின்னர் 2006-ல் ஆட்சிக்கு வந்த திமுகஅரசு இந்த திட்டத்தை கண்டுகொள்ளவில்லை. மீண்டும் 2011-ல்பொறுப்பேற்ற அதிமுக அரசு, இந்த திட்டத்தின் மீது ஆர்வம் காட்டவில்லை. மக்களும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தாமலேயே கட்டிடம் கட்டுகின்றனர். அவ்வாறு மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தியவர்களில் பெரும்பாலானோர் பயனடைந்துள்ளதை தற்போது பெருமையாகக் கூறுகின்றனர்.
கடும் குடிநீர் தட்டுப்பாடு
தொலைநோக்குடன் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர்சேகரிப்பு திட்டம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. அதனால், தற்போது சென்னை மட்டுமின்றி மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் வாரத்துக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஒரு குடம் குடிநீரை 8 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் பல இடங்களில் 1,000 அடிக்கு கீழே சென்றுவிட்டதால் மதுரை அண்ணா நகர், கே.கே.நகர், டிஆர்ஓ காலனி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், டிராக்டர், லாரி தண்ணீரை வாங்கிபயன்படுத்துகின்றனர். அதேநேரம் தனிப்பட்ட ஆர்வத்தில் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி தண்ணீரை சேமித்தவர்கள், குடிநீர் தட்டுப்பாடின்றி உள்ளனர்.
மழைநீர் சேகரிப்பு அமைப்புஇருந்தால்தான் கட்டிட அனுமதிஎன்ற திட்டத்தை உள்ளாட்சிஅமைப்புகள் கட்டாயமாக செயல்படுத்தியிருந்தால் இன்று குடிநீர் பிரச்சினை பெருமளவு குறைந்திருக்கும்.
கண்காணிப்பில் தொய்வு
இதுகுறித்து மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மழைநீர் சேகரிப்புத் திட்டம் தொடர்பான அரசு ஆணைநடைமுறையில்தான் உள்ளது. கட்டிட அனுமதி வரைபடத்தில் ஏதாவது ஓரிடத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருப்பதாகக் காட்டுகின்றனர். ஆனால், அரசுஇந்த விஷயத்தில் கட்டாயப்படுத்தாததாலும், கண்காணிப்பு மற்றும்ஆய்வு செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாலும் பெரும்பாலானோர் முறைப்படி மழைநீர் சேகரிப்பு அமைப்பை கட்டுவதில்லை" என்று கூறினார்.

Thursday, 20 June 2019

நமதூர் நிக்காஹ் தகவல்கள் 20.06.2019


சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது - பிரதீப் ஜான்

இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் பெய்யும் பருவ மழை தான், இந்தியாவின் 70 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. 

கேரளாவில் ஜூன் 1ம் தேதியே பருவமழை தொடங்கி விடுவது வழக்கம். ஆனால், ஜூன் 8ம் தேதி தான் பருவமழை துவங்கியது. இதற்கு 'வாயு' புயல் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. காற்றில் இருந்த ஈரப்பதத்தை 'வாயு' புயல் எடுத்துச் சென்றதால், பருவமழை தீவிரம் அடைவதை தாமதப்படுத்தி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 25ம் தேதிக்குள் தென்னிந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பத்தின் தாக்கம் வருகின்ற நாட்களில் குறைந்து காணப்படும் என கூறினார்.


Wednesday, 19 June 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 19.06.2019




நமதூர் மேலத்தெரு பூங்கா எதிரே மர்ஹூம் சேக் தாவுது அவர்களின் மனைவியும் சேக் அலாவுதீன், அப்துல் லத்தீப், ஹாஜா நஜிபுதீன் இவர்களின் தாயாருமான குட்டாவீட்டு ஹபுலம்மாள்  அவர்கள் பள்ளிவாசல் தெருவில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்.

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 7:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

19.06.2019

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

Monday, 10 June 2019

வெளியூர் மௌத்அறிவிப்பு* 10.06.2019 புலிவலம்

☪ KOM NEWS ONLY 🕌

*
நமதூர் தெற்கு தெரு சி.ப.மு. முஹம்மது மூசா அவர்களின் மகனார் யூசுப்தீன் அவர்களின் மைத்துனர் மூசா ஹாஜா அவர்களின் மகள் ஆயிஷா பர்ஹாணா அவர்கள் புலிவலத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணிக்கு புலிவலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

10.06.2019

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

திருவாரூர் நகராட்சி தேர்தல் 2019: வார்டுகள் பிரிப்பு பட்டியல்



இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் - மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்

முஸ்லிம்கள் ஆண்டு தோறும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு ஹஜ் புனித பயண ஏற்பாடுகள் குறித்து தனியார் சுற்றுலா நிறுவன பொறுப்பாளர்களுடன், மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய ஹஜ் கமிட்டி மூலம் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதேபோல் தனியார் சுற்றுலா அமைப்புகள் மூலம் 60 ஆயிரம் பேர் பயணம் செய்ய உள்ளனர்.

இதன்படி கிட்டத்தட்ட 2 லட்சம் பக்தர்கள் எந்தவித மானியமும் இன்றி ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இதேபோல் 2 ஆயிரத்து 340 பெண்கள் ஆண்களின் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 2 லட்சம் பேரில் 48 சதவீதத்தினர் பெண்கள் ஆவர்.

இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையும், 2-ம் கட்டமாக 20-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையும் விமானங்கள் மூலம் பயணிகள் ஹஜ் புனித பயணத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

இந்திய பயணிகளுக்காக மெக்காவில் 11 இடங்களிலும், மதினாவில் 3 இடங்களிலும் சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Saturday, 8 June 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 08.06.2019

நமதூர் பர்மா தெரு மர்ஹூம் இ.கா.மு.முஹம்மது ஜலால் முஹ்யித்தீன் அவர்களின் மருமகனும் EKMJ. முஹம்மது சிராஜூதீன் அவர்களின் மச்சானும் ,அடியக்கமங்கலம் அனிஸ்தீன் அவர்களின் மாமனாரும்  , முஹம்மது பயாஸ் அவர்களின் தகப்பனாருமான முஹம்மது ரபீக் அவர்கள் நாகப்பட்டினம் - சிக்கல் தனது இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு சிக்கலில் நல்லடக்கம் செய்யப்படும்.

நமதூர் மௌத் அறிவிப்பு 08.06.2019



நமதூர் சின்னபள்ளிவாசல் தெரு ஹாஜி N.A.சேக் அலாவுதீன் அவர்களின் மனைவி நாகை ADJ கல்லூரி பேராசிரியை ஹாஜியா S.மெஹர் பானு அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

#Kodikkalpalayam