Thursday, 31 May 2018

அஞ்சல் ஊழியர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் பணிகள் பாதிப்பு

ஜி.டி.எஸ். கமிட்டி ஊழியர் ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொழிற் சங்க உறுப்பினர் சரி பார்ப்பை உடனே வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 22-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 9-வது நாளாக நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சல் துறை ஊழியர் சங்க நிர்வாகி தர்மதாஸ் தலைமை தாங்கினார்.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் தபால் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் நடந்த போராட்டத்தினால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டன.

No comments:

Post a Comment