Monday 7 May 2018

மலேசியா 2018:ஹராப்பான் குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெறும் – இன்வோக் மலேசியா கணிப்பு!

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெறும் என இன்வோக் மலேசியா ஆய்வு செய்து கணித்திருக்கிறது.
இந்த ஆய்வை தீபகற்ப மலேசியாவில் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
அதன் படி, தேசிய முன்னணியால், பெர்லிஸ், பகாங், திரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் மட்டுமே நல்ல முடிவுகளைப் பெற முடியும் என்றும், என்றாலும் தேசிய முன்னணியால் 54 நாடாளுமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடியும் என்று இன்வோக் மலேசியா கூறுகின்றது.
அதேவேளையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 111 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.
மேலும், பாஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றியடைய முடியாது என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.

இந்த ஆய்வை 11,991 பேரிடம் நடத்தியிருக்கும் இன்வோக் மலேசியா, அதன் மூலம் பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய் வாக்காளர்களிடம் ஆதரவு பெருகியிருப்பதைக் கண்டறிந்திருக்கிறது.

No comments:

Post a Comment