Sunday 14 January 2018

தமிழக அரசும், அதிமுகவும் மதச்சார்பற்றது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில்  அதிமுக ஊராட்சி செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி  ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, கூறியதாவது:

 "காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக அமையும். 15 டிஎம்சி தண்ணீர் வழங்க கோரி கர்நாடகாவுக்கு கடிதம், அதில் முதற்கட்டமாக 7 டிஎம்சி தண்ணீர் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அதிமுகவாலும், ஜெயலலிதாவாலும் ஒதுக்கி வைக்கப்பட்டவர் தினகரன், பெரும்பாலான ஊராட்சிகள் செயலாளர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். சேலம் விமான நிலையத்தில் விரைவில் விமான சேவை தொடங்கும் சேலத்தில் விமான நிலையம் அமைப்பது குறித்து சில நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். 

தமிழக அரசு மதச்சார்பற்றது தான். முத்தலாக் சட்டமசோதாவில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை அகற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது அதிமுக எம்.பிக்கள் தான். 

அதிமுக எப்போதும் மதச்சார்பற்ற இயக்கம் தான். கட்சியையும், ஆட்சியையும் யாராலும் உடைக்கவும் முடியாது. கவிழ்க்கவும் முடியாது. யார் வேண்டுமாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் அதெல்லாம் நிலைத்து நிற்பதில்லை." 

கட்சியை உடைக்க வேண்டும், ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கனவு பலிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment