Monday 8 January 2018

4-வதுநாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: 85 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன

ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஐகோர்ட்டு தடை விதித்தது. பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

இதனை தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்து போராட்டம் தொடரும் என அறிவித்தது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் திருவாரூர் மாவட்டத்தில் 85 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்களின் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

No comments:

Post a Comment