Monday 15 January 2018

ஆதாரில் முகம் கண்டறியும் வசதி: ஜூலை 1-ல் இருந்து புதிய பாதுகாப்பு வசதியை உதய் இணைக்கிறது



இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொருவரின் ஆதார் அட்டையிலும் அவரது புகைப்படம், பெயர் விவரம், முகவரி, கண் கருவிழி படலம், கை பெருவிரல் ரேகை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் அதில் 12 இலக்கங்கள் கொண்ட எண்ணும் இடம்பெற்று இருக்கிறது. வங்கி கணக்கு தொடங்குவது, செல்போன் இணைப்புக்கான சிம் கார்டு வாங்குவது, சமையல் கியாஸ் இணைப்பு, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது போன்றவற்றுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

இதனால் இதுபோன்றவற்றுக்கு ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை தெரிவிப்பது மிகவும் கட்டாயம் ஆகிறது. இப்படி பல இடங்களிலும் ஆதார் அட்டையை பயன்படுத்தும் போது, பிரச்சனையும் நேரிடுகிறது. ஆதாரில் உள்ள கைரேகையுடன் பலரது கைரேகை ஒத்துப்போவது கிடையாது என்ற பிரச்சனையும் எழுகிறது. மூத்த குடிமக்களுக்கு இதுபோன்ற பிரச்சனை எழுகிறது. ஆதார் தரவில் பயனாளரின் கைரேகையும், ஒடிபியும் ஒத்துப்போகாத நிலையில் அடையாளத்தை உறுதிசெய்யும் வகையில் புதிய வசதியை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (உதய்) கொண்டு வருகிறது.

ஆதாரில் அங்கீகாரத்தை உறுதி செய்யும் வகையில் பிரச்னையை சரி செய்வதற்காக முகம் கண்டறியும் தொழில்நுட்பம் ஆதாரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆதாரில் முகம் கண்டறியும் புதிய பாதுகாப்பு வசதி ஜூலை 1-ம் தேதியில் இணைக்கப்படுகிறது. கைரேகை அங்கீகாரத்தில் பிரச்சனையை எதிர்க்கொள்ளும் முதியவர்களுக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக இந்த வசதி இருக்கும். ஜூலை 1-ம் தேதி முதல் இந்த திட்டமான அமலுக்கு வருகிறது என உதய் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment