Wednesday, 31 January 2018
Tuesday, 30 January 2018
Monday, 29 January 2018
பஸ் கட்டணம் திடீர் குறைப்பு இன்று முதல் அமல் ஆகிறது
தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 19-ந் தேதி பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியது. இந்த பஸ் கட்டண உயர்வு 20-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.
உத்தேசமாக 20 சதவீதம் முதல் 54.54 சதவீதம் வரை பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு வரை, சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்படும் நகர, மாநகர பஸ்களில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாய் ஆகவும், அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயில் இருந்து 19 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டது.
சென்னை மாநகரில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாய் ஆகவும், அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயில் இருந்து 23 ரூபாய் ஆகவும் உயர்ந்தது. இதேபோல், வால்வோ ஏ.சி. பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ல் இருந்து ரூ.25 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆகவும் அதிகரித்தது.
வெளியூர்களுக்கு இயக்கப்படும் (புறநகர்) பஸ் கட்டணத்தை பொறுத்தமட்டில், சாதாரண பஸ்களில் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.6 ஆக அதிகரிக்கப்பட்டது. 30 கி.மீ. தூரத்திற்கு பயணம் செய்ய விரைவு பஸ்களில் ரூ.17-ல் இருந்து ரூ.24 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டது. இதேபோல், அதிசொகுசு, இடைநில்லா பஸ்கள், புறவழிச்சாலை இயக்க பஸ்கள் (பைபாஸ் ரைடர்) ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.18-ல் இருந்து ரூ.27 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதே தூரத்திற்கு, அதிநவீன சொகுசு பஸ்களில் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.21-ல் இருந்து ரூ.33 ஆகவும், ஏ.சி. பஸ்களுக் கான கட்டணம் ரூ.27-ல் இருந்து ரூ.42 ஆகவும், வால்வோ ஏ.சி. பஸ் கட்டணம் ரூ.33-ல் இருந்து ரூ.51 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
மலைப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் 6 கி.மீ. தூரம் பயணம் செய்ய ரூ.4 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அத்துடன் கூடுதலாக 20 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்பட்டது. இதேபோல், விரைவு பஸ்களில் 30 கி.மீ. தூரத்திற்கு வசூலிக்கப்பட்ட ரூ.20 அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப் பட்டது.
இதன் மூலம், போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.7 கோடி வருவாய் கிடைத்தது. இதனால், தினமும் ரூ.9 கோடியாக இருந்த இழப்பின் அளவு, ரூ.2 கோடியாக குறைந்தது.
ஆனால், இந்த பஸ் கட்டண உயர்வு அதிக அளவில் இருப்பதாக கூறி, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பஸ் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.
பஸ் கட்டண உயர்வை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், “தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. பஸ் கட்டண உயர்வுக்கு தடை இல்லை” என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில், தமிழக அரசு நேற்று திடீரென்று பஸ் கட்டணத்தை சிறிதளவு குறைத்தது. இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
போக்குவரத்து கழகங்களை கடும் நெருக்கடியில் இருந்து மீளச்செய்து, பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்கும், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் அவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய சட்டரீதியான பணப்பயன்களை உரிய காலத்தில் வழங்குவதற்கும், விபத்து இழப்பீட்டு தொகை வழங்குவதற்கும், போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சட்ட ரீதியான பணப்பயன்களை வழங்குவதற்கும், மாதந்தோறும் ரூ.12 கோடி சுங்கக் கட்டணம் கட்டுவதற்கும் மட்டுமே கடந்த 20-1-2018 அன்று பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், பெரும்பான்மையான பொதுமக்களின் வேண்டுகோளினை கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை தொடர வேண்டிய போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசு நன்கு பரிசீலித்து பஸ் கட்டணங்களை குறைத்து மாறுதல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி, தற்போது சாதாரண பஸ்களில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 60 காசில் இருந்து 58 காசாக குறைக்கப்படுகிறது. விரைவு பஸ்களில் கட்டணம் 80 காசில் இருந்து 75 காசாகவும், சொகுசு பஸ்களில் 90 காசில் இருந்து 85 காசாகவும், அதிநவீன சொகுசு பஸ்கள் (அல்ட்ரா டீலக்ஸ்) 110 காசில் இருந்து 100 காசாகவும், குளிர்சாதன (ஏ.சி.) பஸ்களில் 140 காசில் இருந்து 130 காசாகவும் குறைக்கப்படுகிறது.
சென்னை மாநகர பஸ்களில் (1 முதல் 28 நிலை வரை) குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.4 ஆக குறைக்கப்படுகிறது. அதிகபட்ச கட்டணம் ரூ.23-ல் இருந்து ரூ.22 ஆக குறைக்கப்படுகிறது. மேலும், அனைத்து நிலைகளிலும் ரூ.1 குறைக்கப்படுகிறது.
அதேபோன்று, மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள நகர்ப்புற பஸ்களில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.4 ஆக குறைக்கப்படுகிறது. அதிகபட்ச கட்டணம் ரூ.19-ல் இருந்து ரூ.18 ஆக குறைக்கப்படுகிறது. மேலும், அனைத்து நிலைகளிலும் ரூ.1 குறைக்கப்படுகிறது.
ஏற்கனவே, 20-1-2018-ல் மாற்றியமைக்கப்பட்ட பஸ் கட்டணத்தினால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி நஷ்டம் ஏற்படும் என உத்தேசிக்கப்பட்டு இருந்தது. தற்போது, பஸ் கட்டண குறைப்பால் நாளொன்றுக்கு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சராசரியாக ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை தொடர்ந்து வழங்கிட மாற்றியமைக்கப்பட்ட இப்புதிய பஸ் கட்டண விகிதங்களை ஏற்று, தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாற்றி அமைக்கப்பட்ட இப்புதிய கட்டணங்கள் 29-ந் தேதி (இன்று) முதல் அமல் படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Sunday, 28 January 2018
திருவாரூர் வங்கி ஏ.டி.எம் கொள்ளை முயற்சி
திருவாரூர் தெற்கு வீதியில் தனியார் வங்கியின் பிரதான கிளை உள்ளது. இந்த வங்கியின் முகப்பு பகுதியில் வங்கிக்கான ஏ.டி.எம். மையம் உள்ளது.
இந்த ஏ.டி.எம்.மில் தினமும், நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கான ரூபாய் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்த வங்கி மற்றும் ஏ.டி.எம். ஆகியவற்றுக்கு காவலாளிகள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மர்ம மனிதர்கள் வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்துள்ளனர். அவர்கள், ஏ.டி.எம். வாசலில் இருந்த கண்காணிப்பு கேமராவை முதலில் உடைத்துள்ளனர்.
இந்த சத்தம் கேட்டு அங்கு காவல் பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளி சேதுரத்தினம், ஏ.டி.எம். மையத்தின் உள்ளே இருந்து வெளியே வந்துள்ளார். அங்கு மர்ம மனிதர்கள் கேமராவை உடைத்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அவர் சத்தம் போட்டு உள்ளார்.
அங்கு காவலாளி இருக்க மாட்டார் என நினைத்து கொள்ளையடிக்க வந்த மர்ம மனிதர்கள், காவலாளி சத்தம் போட்டதால் பயந்துபோய் கொள்ளையடிக்கும் திட்டத்தை கைவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். சரியான நேரத்தில் காவலாளி சத்தம் போட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை போகாமல் தப்பியது.
இந்த கொள்ளை முயற்சி குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கேமரா உடைக்கப்படுவதற்கு முன்பு அதில் பதிவாகி இருந்த பதிவுகளை கைப்பற்றினர். இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
திருவாரூரில், வங்கி ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Saturday, 27 January 2018
Friday, 26 January 2018
முஹம்மது நபி (ஸல்)
அவர்களுக்குப் பிடித்த
12 உணவுகளும் 🍲அவற்றின் நன்மைகளும்!
1. பார்லி – Barley
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள் :
காய்ச்சலுக்கு இதை
சூப்பாகக் குடிப்பது
நல்லது என்று …
2. ஈச்சம் பழம் – Dates
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள் :
ஈச்சம் பழம் இல்லாத
வீடு உணவு இல்லாத
வீடு என்றும் பிள்ளை
பிறக்கும் நேரங்களில் உண்பது மிகவும் நல்லது என்றும்
3. அத்திப்பழம் – Figs
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
அத்திப்பழம்
சுவர்க்கத்துக்
கனியாகும் இது மூல
நோய்களுக்கு உகந்தது
4. திராட்சைப் பழம் –
Grapes
ரசூலுல்லாஹ் (ஸல்)
அவர்கள் மிகவும்
விரும்பிச் சாப்பிட்ட
திராட்சைப் பழம்,
ரத்தத்தை
சுத்தப்படுத்துவதோடு
கிட்னியின்
ஆரோக்கியத்துக்கு
மிகவும் உயர்ந்தது
5. தேன் – Honey
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
வயிற்றுப்
போக்குள்ளவர்கள்
தேனை சுடு நீரில்
கலந்து சாப்பிடுவது
நல்லது இதை
காலையில் இளம்
சூடான நீரில் கலந்து
குடிப்பது நன்மை
பயக்கும்
6. தர்பூசணி = Watermelon
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
பிரசவமாகியுள்ள
பெண்கள் தர்பூசணிக் காய்களை உண்டால் அழகிய முகத்
தோற்றமும் நல்ல
குணங்களையும் உள்ள
பிள்ளைகளை
உற்பத்தி செய்ய
முடியும் என்று ….
7. பால் – Milk
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
பால் இதயத்தின்
சூட்டைத் தணிப்பதோடு, மூளை
பார்வையை
புதுப்பிப்பதோடு
மறதியையும் போக்கச்
செய்கின்றது.
8. காளான் – Mushroom
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
காளான் கண்ணுக்கு
நல்ல மருந்தாகும்.
அத்துடன்
பக்கவாததுக்குமான
மருந்தாகும்.
9. ஆலிவ் எண்ணெய்
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
ஆலிவ் எண்ணெய்
சருமத்துக்கும், தலை
முடிக்கும் நல்ல
பயனுள்ளதுடன்
வயிற்று வீக்கத்தையும்
கட்டுப்படுத்தும்
10. மாதுளம் பழம் –
Pomegranate
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
மாதுளம் பழம் 40
நாட்களுக்கு
ஷைத்தானுடைய
தீங்குகளிருந்தும்
கெட்ட ஆசைகளில்
இருந்தும்
பரிசுத்தமாக்கும்.
11. வினிகர் – Vinegar
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
ரசூலுல்லாஹ் (ஸல்)
அவர்கள்
வினிகரையும்
ஓலிவ்
எண்ணையையும்
ஒன்றாக சேர்த்து
சாப்பிடுவது
வழக்கமாக இருந்தது
12.தண்ணீர் – Water
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
இந்த உலகின் நல்ல
பானமானது
தண்ணீராகும்
தாகமெடுத்தால்
தண்ணீரை உறிஞ்சிக்
குடிக்குமாறும்
அவசரமாக
குடித்தால் அது
ஈரலில் வருத்தத்தை
உண்டுபண்ணும் என்றும் நவின்றார்கள்.
***இவற்றுடன்
வெள்ளரிக்காய்
(Cucumber) மற்றும் கரும் தானியம் (Black seed)
போன்றவைகளும்
உட்கொள்ளும் பழக்கம்
உடையவராக
இருந்தார்கள்.
அவர்களுக்குப் பிடித்த
12 உணவுகளும் 🍲அவற்றின் நன்மைகளும்!
1. பார்லி – Barley
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள் :
காய்ச்சலுக்கு இதை
சூப்பாகக் குடிப்பது
நல்லது என்று …
2. ஈச்சம் பழம் – Dates
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள் :
ஈச்சம் பழம் இல்லாத
வீடு உணவு இல்லாத
வீடு என்றும் பிள்ளை
பிறக்கும் நேரங்களில் உண்பது மிகவும் நல்லது என்றும்
3. அத்திப்பழம் – Figs
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
அத்திப்பழம்
சுவர்க்கத்துக்
கனியாகும் இது மூல
நோய்களுக்கு உகந்தது
4. திராட்சைப் பழம் –
Grapes
ரசூலுல்லாஹ் (ஸல்)
அவர்கள் மிகவும்
விரும்பிச் சாப்பிட்ட
திராட்சைப் பழம்,
ரத்தத்தை
சுத்தப்படுத்துவதோடு
கிட்னியின்
ஆரோக்கியத்துக்கு
மிகவும் உயர்ந்தது
5. தேன் – Honey
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
வயிற்றுப்
போக்குள்ளவர்கள்
தேனை சுடு நீரில்
கலந்து சாப்பிடுவது
நல்லது இதை
காலையில் இளம்
சூடான நீரில் கலந்து
குடிப்பது நன்மை
பயக்கும்
6. தர்பூசணி = Watermelon
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
பிரசவமாகியுள்ள
பெண்கள் தர்பூசணிக் காய்களை உண்டால் அழகிய முகத்
தோற்றமும் நல்ல
குணங்களையும் உள்ள
பிள்ளைகளை
உற்பத்தி செய்ய
முடியும் என்று ….
7. பால் – Milk
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
பால் இதயத்தின்
சூட்டைத் தணிப்பதோடு, மூளை
பார்வையை
புதுப்பிப்பதோடு
மறதியையும் போக்கச்
செய்கின்றது.
8. காளான் – Mushroom
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
காளான் கண்ணுக்கு
நல்ல மருந்தாகும்.
அத்துடன்
பக்கவாததுக்குமான
மருந்தாகும்.
9. ஆலிவ் எண்ணெய்
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
ஆலிவ் எண்ணெய்
சருமத்துக்கும், தலை
முடிக்கும் நல்ல
பயனுள்ளதுடன்
வயிற்று வீக்கத்தையும்
கட்டுப்படுத்தும்
10. மாதுளம் பழம் –
Pomegranate
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
மாதுளம் பழம் 40
நாட்களுக்கு
ஷைத்தானுடைய
தீங்குகளிருந்தும்
கெட்ட ஆசைகளில்
இருந்தும்
பரிசுத்தமாக்கும்.
11. வினிகர் – Vinegar
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
ரசூலுல்லாஹ் (ஸல்)
அவர்கள்
வினிகரையும்
ஓலிவ்
எண்ணையையும்
ஒன்றாக சேர்த்து
சாப்பிடுவது
வழக்கமாக இருந்தது
12.தண்ணீர் – Water
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
இந்த உலகின் நல்ல
பானமானது
தண்ணீராகும்
தாகமெடுத்தால்
தண்ணீரை உறிஞ்சிக்
குடிக்குமாறும்
அவசரமாக
குடித்தால் அது
ஈரலில் வருத்தத்தை
உண்டுபண்ணும் என்றும் நவின்றார்கள்.
***இவற்றுடன்
வெள்ளரிக்காய்
(Cucumber) மற்றும் கரும் தானியம் (Black seed)
போன்றவைகளும்
உட்கொள்ளும் பழக்கம்
உடையவராக
இருந்தார்கள்.
Thursday, 25 January 2018
Wednesday, 24 January 2018
Tuesday, 23 January 2018
Subscribe to:
Posts (Atom)