ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வந்தன. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இதற்கு முஸ்லிம் நாடுகள் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டது. ஆனால் அமெரிக்கா அதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது.
இந்நிலையில் ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா. பொதுச்சபையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 128 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்காவுக்கு ஆதரவாக வெறும் 9 நாடுகள் மட்டும் வாக்களித்தன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து ஐ.நா. சபை கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 35 நாடுகள் நழுவி விட்டன.
கூட்டாளிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றின் மகத்தான அழுத்தம் இருந்தபோதிலும் பாலஸ்தீனத்துடன் உறுதியுடன் நிற்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடந்தஐ.நா. பொது அமர்வின் போது அணி சேரா நாடுகளின் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது
பாலஸ்தீனிய மக்களுக்கு இந்தியாவின் உறுதிப்பாடு மற்றும் பாலஸ்தீனிய மக்களுடன் நமது ஒற்றுமை ஒருபோதும் படுமோசமானதாக இருக்க முடியாது.அனைத்து நாடுகளிலுமுள்ள இந்தியாவின் பரந்த உறவு பாலஸ்தீனிய நட்பை பலப்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்"என கூறினார்
No comments:
Post a Comment