Sunday, 5 January 2014
ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
|
திருவாரூர் மாவட்டத்தில்
ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க
தீவிர நடவடிக்கை
கலெக்டர் நடராசன் பேச்சு
திருவாரூர், ஜன.5- திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தப் படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப் படும் என்று கலெக்டர் நடராசன் கூறினார். குற்ற புலனாய்வு துறை திருவாரூர் அருகே விளம லில் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புல னாய்வு துறையின் புதிய அலுவலகம் அமைக்கப்பட் டுள்ளது. இதன் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச் சியில் கலெக்டர் நடராசன் கலந்து கொண்டு புதிய அலுவ லகத்தை திறந்து வைத்தார். இதில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய் வுத்துறையின் மதுரை மண்டல சூப்பிரண்டு சாமிநாதன் முன் னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராசன் பேசிய போது கூறியதாவது:- தீவிர நடவடிக்கை நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, மானிய விலை மண்எண்ணை உள்ளிட்ட பொருட்கள் வினி யோகம் செய்யப்படுகின்றன. அரசின் மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் முழுமையாக பொதுமக் களுக்கே கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி நியாய விலைக்கடை பொருட் கள் கடத்தப்படுகிறதா? என் பது பற்றி கண்காணிப்பு செய்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் தொட ரும். திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை அலுவலகம் அமைக்கப் பட்டுள்ளது. அரிசி கடத்தல் வழக்குகள் திருவாரூர் மாவட்டத்தில் 2013-ம் ஆண்டில் அரிசி கடத் தல் தொடர்பாக 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 4 ஆயிரத்து 700 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட 2 மோட்டார்சைக்கிள் கள் பறிமுதல் செய்யப்பட் டன. 20 மண்எண்ணை கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 465 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மானிய விலை சிலிண்டரை வணிக உபயோகத்திற்கு பயன்படுத் தியது கண்டறியப்பட்டு 30 சிலிண்டர்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் பதிவான 102 வழக்குகளில் இதுவரை 46 வழக்குகளின் விசாரணை முடிவு பெற்றது. அதில் ரூ.28 ஆயிரத்து 70 அபராதம் வசூல் செய்யப்பட் டது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் நியாய விலைக் கடை பொருட்கள் கடத்தப்படுவது தெரிய வந்தால் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கலாம். குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறை மதுரை மண்டல சூப்பிரண்டு சாமிநாதனை 9043006363 என்ற செல்போன் எண்ணிலும், திருச்சி உட்கோட்ட துணை சூப்பிரண்டு சீனிவாசனை 9245176204 என்ற செல்போன் எண்ணிலும், இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ் என்பவரை 9843293324 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு ரேசன் பொருள் கடத்தல் தொடர் பான தகவலை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையின் திருச்சி உட்கோட்ட துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ் பெக்டர் சுபாஷ் சந்திரபோஸ், தாசில்தார் சின்னதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். |
வாக்காளர் பட்டியல் ஜன.10-இல் வெளியாகும்: தேர்தல் ஆணையம் தகவல்
திருத்தப்பட்டு இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் வரும் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக, வாக்காளர் பட்டியல் வரும் 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்காக, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.14 கோடியாக உள்ளது.
2014 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைபவர்கள், பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபர் வரை பெயர்களைச் சேர்க்கும் பணிகள் நடைபெற்றன.
மொத்தம் 30 லட்சம் பேர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மொத்தம் 30 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பங்கள் அனைத்தும் முழுமையான அளவில் சரிபார்த்து வாங்கப்பட்டுள்ளதால், அனைத்தும் ஏற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.44 கோடியாக அதிகரிக்கும்.
கடந்த வாரத்தில் இந்திய துணை தேர்தல் ஆணையர் சுதீர், சென்னை வந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, ஜனவரி 10 ஆம் தேதி பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரிவீண் குமார் தெரிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள், வாக்குச் சாவடி மையங்கள் ஆகியவற்றில் மக்களின் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Muthupettei - இன்று உலகப் பறவைகள் தினம்: பறவைகளைப் பாதுகாப்போம்
இயற்கை வளம், காடுகள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட மனிதச் செயல்களால் பல்வேறு பறவையினங்கள் வேகமாக அழிந்துவருவதாக பறவை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பறவைகளைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 5-ஆம் தேதி உலக பறவைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பறவைகளைப் பாதுகாப்பது, வளர்ப்பது, வளர்ப்போருக்கு உரிய ஆலோசனைகள் வழங்குதல் ஆகியன இத் தினத்தில் முக்கியமாகப் பின்பற்றப்படுகிறது.
சங்ககால இலங்கியங்கள் தொடங்கி இன்றைய புறா பந்தயங்கள் வரை பறவைகள் மனிதர்களோடு இரண்டற கலந்துவிட்ட ஒரு ஜீவன். வனப்பரப்பில் இந்திய மாநிலங்களில் தமிழகம் 22,877 சதுர கி.மீ. தொலைவைக் கொண்டுள்ளது. இங்குள்ள வனப் பகுதிகளில் கழுகு, பருந்து, மயில், ஆந்தை, புறா, மரங்கொத்தி, குயில், பாம்புதாரா, கொண்டலாத்தி, தேன்சிட்டு, அரிவாள் மூக்கன், கொக்கு, நாரைகள் உள்ளிட்ட 350 பறவையினங்கள் வாழ்ந்துவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், செல்போன் கோபுரங்கள் வருகையால் சிட்டுக்குருவி இனங்கள் அழிவுப்பாதைக்குச் சென்றதுபோல இயற்கைக்கு எதிரான பல்வேறு இடையூறுகளால் உலக அளவில் 200 வகையான பறவைகளும், இந்திய அளவில் 15 வகையான பறவைகளும் அழிவின் பிடியில் உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.நாடு முழுவதும் உள்ள வன உயிரின சரணாலயங்களால் பெருமளவு அந்நியச் செலாவணி ஈட்டப்படுகிறது.
இவற்றைக் காண வெளிநாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை பழவேற்காடு, வெள்ளோடு, கரைவெட்டி, உதயமார்த்தாண்டபுரம், வடுவூர், சித்திரன்குடி, கூந்தங்குளம், கஞ்சிரன்குளம், வேட்டன்குடி, வேடந்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.
இருப்பினும், நீர்நிலைகள் குறைந்துபோதல், மரங்கள் அழிக்கப்படுதல், வேட்டையாடப்படுதல் போன்ற பல காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. மக்கள் வசிப்பிடங்களில் மரங்கள் முற்றிலும் அழிக்கப்படுவதன் காரணமாக, குருவிகள், கிளிகள், மைனா, குயில் என நம் கண் முன் பார்த்து ரசித்த பறவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது கண்கூடு.இதுகுறித்து பறவைகள் ஆர்வலரான லீபுரம் பகுதியைச் சேர்ந்த த.கோவிவிநாஸ்குமார் கூறியதாவது: ஒருசில பறவைகள் மரங்களில் கூடுகட்டி வாழ்வதைவிட வீடுகளின் முன்பு உள்ள மரங்களில் கூடு கட்டி வாழ்வதையே பெரிதும் விரும்புகின்றன. இது போன்ற பறவைகளுக்கு வீட்டின் கொல்லைப்புறத்திலோ, மாடியிலோ சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்தால் தாகத்தைப் போக்கிக்கொள்ளும். இதன்மூலம் மனதளவில் நாம் மகிழ்ச்சிப் பெறலாம்.
நாட்டின் தேசியப் பறவையாக மயிலையும், மாநிலப் பறவையாக புறாவையும் கொண்டாடும் நாம் பறவைகளைப் பாதுகாப்பதில் போதுமான கவனம் செலுத்துவது இல்லை. வனப்பகுதிகளில் வாழும் பறவை இனங்கள் வேட்டையாடப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நமது வசிப்பிடங்களிலேயே பறவைகள் வாழ்வதற்கான சூழலை மனமுவந்து ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே இயற்கையை அனுபவித்து வாழ்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மிகவும் அவசியம் என்றார் அவர்.
வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தை முதன்முதலில் இயற்றிய நாடு என்கிற பெருமை நமக்கு உண்டு. 1887-ல் இச்சட்டம் உருவாக்கப்பட்டது. பறவைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்திய பறவைகள் பாதுகாப்பு இயக்கம் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும்; பறவைகள் வாழும் முக்கியப் பகுதிகளை ஆராய்ந்து அவற்றைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; எல்லாவற்றையும்விட, சுற்றுச்சூழல் சமநிலைத் தன்மையில் பறவைகளின் பங்கு முக்கியமானது; அவற்றின் இருப்புகுறித்த முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது பறவை ஆர்வலர்களின் விருப்பம்.
திருவாரூர் மாவட்டத்தில் முத்துபேட்டைஅலையாத்தி காடுகள், நாச்சிகுளம் - உதயமார்த்தாண்டபுரம், மன்னார்குடி அருகே வடுவூர் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயம் உள்ளன .அக்டோபர் முதல் பிப்ரவரி வரை உள்ள காலங்களில் சென்று பார்க்கலாம் .

Thursday, 2 January 2014
104-க்கு அழைத்தால் இலவச மருத்துவ ஆலோசனை: தமிழகத்தில் புதிய திட்டம் துவக்கம்
'104' என்ற எண்ணுக்கு போன் செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெறும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்கள் இனிமேல் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய், சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதல்வரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை '104' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இதற்காக ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேர தொலைபேசி '104' மருத்துவ சேவையை முதல்வர் ஜெயலலிதா கொடநாடு முகாமிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் முக்கியமான திட்டங்களை முன்னின்று நிறைவேற்றுவதிலும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களைக் கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தை குறைக்கும் வகையிலும், அவர்கள் பணி மேம்பாடு அடையும் வகையிலும் அவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று கடந்த 2.11.2012 அன்று சட்டமன்றப் பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
திருவாரூரில் பொய் வழக்கை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்
தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் மீது பொய் வழக்கை போட்ட இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்துறை துணை ஆய்வாளரை கண்டித்தும் அவர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்டம் தமுமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 1.1.2014 மாலை 4 மணி அளவில் திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட தலைவர் ஹலிலூர் ரஹ்மான் தலைமையில் தமுமுக மாவட்ட செயலாளர் யாகத் அலி, மமக மாவட்ட செயலாளர் சீனி முஹம்மது, மாவட்ட பொருளார் கமாலூதீன் முன்னிலையில் நடைபெற்றது. மாநில மாணவரணி செயலாளர் டாக்டர் சர்வத்கான், மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிகுளம் தாஜீதீன் கண்டன உரை நிகழ்த்தினார்கள். முன்னால் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 300க்கும் அதிகமான தமுமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு & சிறப்பு கூட்டம் - மாவட்ட அலுவலகத்தில் (01.01.2014) நடைபெற்றது.

முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயற்குழு & சிறப்பு கூட்டம் கட்சியின் மாவட்ட தலைவர் M.A. லத்தீப் தலைமையில் 01.01.2014 திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் நைனா முஹம்மது, துணை தலைவர் A. அப்துல் அஜிஸ் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் முஹம்மது பைசல் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வந்த SDTU (சோஷியல் டெமாக்ரடிக் தொழிற் சங்கம் ) மாநில தலைவர் பாருக் சாஹிப் அவர்கள் SDTUயின் பணிகள் பற்றியும், தொழிற் சங்கத்தில் எப்படி பட்ட & எந்த தொழிலாளர்கள் இணையமுடியும் என்றும், தொழிற் சங்கத்தில் இணைவதின் மூலம் அவர்களக்கு அரசிடமிருந்து கிடைக்கு மானியங்கள் பற்றியும் மற்றும் SDTU அதிகமாக உறுபினர்களை இணைக்க நாம் செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு மற்றும் SDTU கிளை நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்....
மற்றொரு சிறப்பு அழைப்பாளரக வந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்கள் கட்சியின் வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரசியல் சூழல் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். அதன் பிறகு மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளுடன் கலந்துரையாட பட்டது.
கூட்டத்தில் மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட தீர்மானங்களை நமது மாவட்டதில் வீரியமாக செயல்படுத்த வேண்டும் என்றும் SDTUயில் அதிகமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் தீர்மானிக்க பட்டது
தீர்மானங்கள்:-
1. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும், இல்லையேல் ஏற்கனவே திட்டமிட்டபடி 10 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
2. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 3.5% என்பதில் இருந்து 7% சதவிகிதமாக உயர்த்திட இச்செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது. கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கிட வாக்குறுதியளித்ததை இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
3. நாட்டில் அதிகரித்துவரும் ஊழலை கட்டுப்படுத்தும் விதத்தில் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த “லோக்பால் மசோதா” நிறைவேற்றப்பட்டதை இச்செயற்குழு வரவேற்கிறது.
அதே வேளையில் மாநில அளவில் “லோக் ஆயுக்தா” வை அமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க மாநில அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
4. வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழக மக்களால் தொடந்து புறக்கணிக்கப்பட்டு வரும் பா.ஜ.க வோடு மற்ற கட்சிகளை கூட்டணி அமைக்க தரகு வேலைகளில் ஈடுபடுபவர்களை இச்செயற்குழு கண்டிப்பதோடு, மதவாத பாரதிய ஜனதாவை தனிமைப்படுத்திட மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் எனவும், பா.ஜ.க வோடு கூட்டணி சேரும் கட்சிகளை பொதுமக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
5. ‘ஒருபால் உறவு‘ சம்பந்தமாக உச்சநீதின்மன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பை இச்செயற்குழு வரவேற்கிறது. இந்த கலாச்சார சீர்கேட்டை அதிகரித்திடும் வகையில் செயல்படும் மத்திய அரசை இச்செயற்குழு கண்டிப்பதோடு, இத்தீர்ப்பிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.
6. கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் நிதியினை வசூல்செய்திட தீர்மானிக்கப்பட்டது. கட்சி தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றிடவும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
இறுதியாக மாவட்ட பொதுச்செயலாளர் நைனா முஹம்மது அவர்கள் நன்றியரை ஆற்றினார்கள்.........
இதில் மாவட்ட செயற்குழு உறுபினர்கள், நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.....................

Tuesday, 31 December 2013
.வெல்கம் 2014............
தேர்தல் ஆண்டே வருக நிலையான ஆட்சி தருக
2014 ம் ஆண்டு இன்று பிறந்து உள்ளது .இந்தியாவின் அடுத்த 5 ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் யாரை அமர்த்த போகிறோம் என்பதை தீர்மானிக்கும் ஆண்டு பிறந்து உள்ளது.
இப்பொழுது ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப மீண்டும் ஆள முடியுமா அல்லது பாரதீய ஜனதா கட்சி யின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரபாய் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலருமா அல்லது தமிழக முதல்வர் ஜெயலலிதா ,முலாயம் சிங், மாயாவதி, கருணாநிதி தலைவர்களின் மூன்றாம் அணி ஆட்சி கனவு பலிக்குமா என்பதை மக்கள் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் வாக்கு பதிவு இயத்திரத்தில் முடிவு செய்வார்கள் .இனி வரும் ஆறு மாதம் காலம் முழுவதும் மக்கள் நிறைய காட்சிகளை கண்டு களிக்காலம்.கட்சிகள் நடத்தும் மாநாடுகள் ,சமுதாய அமைப்புகள் ,அரசு சார்ந்த சங்கங்கள் கோரிக்கைகள் கொண்டு மக்களை திரட்டும் போராட்டம் ,தேர்தல் புறக்கணிப்பு, நோட்டா வில் வோட்டை பதிவுசெய்ய வேண்டுகோள் என பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது .இவைகள் எல்லாம் நாடு முழுவதும் காணும் நிகழ்வுதான் .ஆனால் வோட்டுக்கு எவ்வளது பணம் கிடைக்கும் அதுவும் கட்சிகாரர்கள் கமிஷன் வெட்டாமல் கிடைக்குமா எது மக்களின் எதிர்பார்ப்பு .வளர்ச்சி திட்டம் எல்லாம் இந்த 500 ருபாய் அப்பறம் தான்.
தேர்தல் முலமாக நிலையான அரசு அமைய வாய்ப்பு குறைவுதான் .காங்கிரஸ் முலமாக கடந்த 10 ஆண்டுகளாக பயன் அடைத்த பெரும் பணக்காரர்கள் இப்போது மோடிக்கு ஊடகம் முலமாக பிரசாரம் செய்கிறார்கள் .
2014 ம் ஆண்டு வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் ஐயம் இல்லை என் என்றால் தமிழக கட்சிகள் தற்போதிய நிலைகள் மாறிவரும் சூழ்நிலைகள் அதிரடிகள் எல்லாம் வரும் நாட்களில் காணலாம் . பேஸ்புக் முக்கியமாக இடத்தில இருந்து தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும்
.வெல்கம் 2014
Subscribe to:
Posts (Atom)