Saturday, 27 January 2018
Friday, 26 January 2018
முஹம்மது நபி (ஸல்)
அவர்களுக்குப் பிடித்த
12 உணவுகளும் 🍲அவற்றின் நன்மைகளும்!
1. பார்லி – Barley
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள் :
காய்ச்சலுக்கு இதை
சூப்பாகக் குடிப்பது
நல்லது என்று …
2. ஈச்சம் பழம் – Dates
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள் :
ஈச்சம் பழம் இல்லாத
வீடு உணவு இல்லாத
வீடு என்றும் பிள்ளை
பிறக்கும் நேரங்களில் உண்பது மிகவும் நல்லது என்றும்
3. அத்திப்பழம் – Figs
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
அத்திப்பழம்
சுவர்க்கத்துக்
கனியாகும் இது மூல
நோய்களுக்கு உகந்தது
4. திராட்சைப் பழம் –
Grapes
ரசூலுல்லாஹ் (ஸல்)
அவர்கள் மிகவும்
விரும்பிச் சாப்பிட்ட
திராட்சைப் பழம்,
ரத்தத்தை
சுத்தப்படுத்துவதோடு
கிட்னியின்
ஆரோக்கியத்துக்கு
மிகவும் உயர்ந்தது
5. தேன் – Honey
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
வயிற்றுப்
போக்குள்ளவர்கள்
தேனை சுடு நீரில்
கலந்து சாப்பிடுவது
நல்லது இதை
காலையில் இளம்
சூடான நீரில் கலந்து
குடிப்பது நன்மை
பயக்கும்
6. தர்பூசணி = Watermelon
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
பிரசவமாகியுள்ள
பெண்கள் தர்பூசணிக் காய்களை உண்டால் அழகிய முகத்
தோற்றமும் நல்ல
குணங்களையும் உள்ள
பிள்ளைகளை
உற்பத்தி செய்ய
முடியும் என்று ….
7. பால் – Milk
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
பால் இதயத்தின்
சூட்டைத் தணிப்பதோடு, மூளை
பார்வையை
புதுப்பிப்பதோடு
மறதியையும் போக்கச்
செய்கின்றது.
8. காளான் – Mushroom
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
காளான் கண்ணுக்கு
நல்ல மருந்தாகும்.
அத்துடன்
பக்கவாததுக்குமான
மருந்தாகும்.
9. ஆலிவ் எண்ணெய்
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
ஆலிவ் எண்ணெய்
சருமத்துக்கும், தலை
முடிக்கும் நல்ல
பயனுள்ளதுடன்
வயிற்று வீக்கத்தையும்
கட்டுப்படுத்தும்
10. மாதுளம் பழம் –
Pomegranate
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
மாதுளம் பழம் 40
நாட்களுக்கு
ஷைத்தானுடைய
தீங்குகளிருந்தும்
கெட்ட ஆசைகளில்
இருந்தும்
பரிசுத்தமாக்கும்.
11. வினிகர் – Vinegar
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
ரசூலுல்லாஹ் (ஸல்)
அவர்கள்
வினிகரையும்
ஓலிவ்
எண்ணையையும்
ஒன்றாக சேர்த்து
சாப்பிடுவது
வழக்கமாக இருந்தது
12.தண்ணீர் – Water
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
இந்த உலகின் நல்ல
பானமானது
தண்ணீராகும்
தாகமெடுத்தால்
தண்ணீரை உறிஞ்சிக்
குடிக்குமாறும்
அவசரமாக
குடித்தால் அது
ஈரலில் வருத்தத்தை
உண்டுபண்ணும் என்றும் நவின்றார்கள்.
***இவற்றுடன்
வெள்ளரிக்காய்
(Cucumber) மற்றும் கரும் தானியம் (Black seed)
போன்றவைகளும்
உட்கொள்ளும் பழக்கம்
உடையவராக
இருந்தார்கள்.
அவர்களுக்குப் பிடித்த
12 உணவுகளும் 🍲அவற்றின் நன்மைகளும்!
1. பார்லி – Barley
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள் :
காய்ச்சலுக்கு இதை
சூப்பாகக் குடிப்பது
நல்லது என்று …
2. ஈச்சம் பழம் – Dates
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள் :
ஈச்சம் பழம் இல்லாத
வீடு உணவு இல்லாத
வீடு என்றும் பிள்ளை
பிறக்கும் நேரங்களில் உண்பது மிகவும் நல்லது என்றும்
3. அத்திப்பழம் – Figs
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
அத்திப்பழம்
சுவர்க்கத்துக்
கனியாகும் இது மூல
நோய்களுக்கு உகந்தது
4. திராட்சைப் பழம் –
Grapes
ரசூலுல்லாஹ் (ஸல்)
அவர்கள் மிகவும்
விரும்பிச் சாப்பிட்ட
திராட்சைப் பழம்,
ரத்தத்தை
சுத்தப்படுத்துவதோடு
கிட்னியின்
ஆரோக்கியத்துக்கு
மிகவும் உயர்ந்தது
5. தேன் – Honey
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
வயிற்றுப்
போக்குள்ளவர்கள்
தேனை சுடு நீரில்
கலந்து சாப்பிடுவது
நல்லது இதை
காலையில் இளம்
சூடான நீரில் கலந்து
குடிப்பது நன்மை
பயக்கும்
6. தர்பூசணி = Watermelon
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
பிரசவமாகியுள்ள
பெண்கள் தர்பூசணிக் காய்களை உண்டால் அழகிய முகத்
தோற்றமும் நல்ல
குணங்களையும் உள்ள
பிள்ளைகளை
உற்பத்தி செய்ய
முடியும் என்று ….
7. பால் – Milk
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
பால் இதயத்தின்
சூட்டைத் தணிப்பதோடு, மூளை
பார்வையை
புதுப்பிப்பதோடு
மறதியையும் போக்கச்
செய்கின்றது.
8. காளான் – Mushroom
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
காளான் கண்ணுக்கு
நல்ல மருந்தாகும்.
அத்துடன்
பக்கவாததுக்குமான
மருந்தாகும்.
9. ஆலிவ் எண்ணெய்
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
ஆலிவ் எண்ணெய்
சருமத்துக்கும், தலை
முடிக்கும் நல்ல
பயனுள்ளதுடன்
வயிற்று வீக்கத்தையும்
கட்டுப்படுத்தும்
10. மாதுளம் பழம் –
Pomegranate
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
மாதுளம் பழம் 40
நாட்களுக்கு
ஷைத்தானுடைய
தீங்குகளிருந்தும்
கெட்ட ஆசைகளில்
இருந்தும்
பரிசுத்தமாக்கும்.
11. வினிகர் – Vinegar
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
ரசூலுல்லாஹ் (ஸல்)
அவர்கள்
வினிகரையும்
ஓலிவ்
எண்ணையையும்
ஒன்றாக சேர்த்து
சாப்பிடுவது
வழக்கமாக இருந்தது
12.தண்ணீர் – Water
ரசூலுல்லாஹ் (ஸல்)
சொன்னார்கள்:
இந்த உலகின் நல்ல
பானமானது
தண்ணீராகும்
தாகமெடுத்தால்
தண்ணீரை உறிஞ்சிக்
குடிக்குமாறும்
அவசரமாக
குடித்தால் அது
ஈரலில் வருத்தத்தை
உண்டுபண்ணும் என்றும் நவின்றார்கள்.
***இவற்றுடன்
வெள்ளரிக்காய்
(Cucumber) மற்றும் கரும் தானியம் (Black seed)
போன்றவைகளும்
உட்கொள்ளும் பழக்கம்
உடையவராக
இருந்தார்கள்.
Thursday, 25 January 2018
Wednesday, 24 January 2018
Tuesday, 23 January 2018
Monday, 22 January 2018
Sunday, 21 January 2018
Saturday, 20 January 2018
Friday, 19 January 2018
Thursday, 18 January 2018
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் நடவடிக்கை ‘ஹஜ்’ மானியம் இந்த ஆண்டு முதல் ரத்து மத்திய அரசு அறிவிப்பு
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று, வாழ்நாளில் ஒரு முறையாவது சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனிதப்பயணம் மேற்கொள்வது ஆகும்.
ஹஜ் புனிதப்பயண வகையில் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.700 கோடி செலவிடப்பட்டு வந்து உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், 2012-ம் ஆண்டு, மே மாதம் 8-ந் தேதி ஹஜ் புனிதப்பயணம் தொடர்பான ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்சனா தேசாய் ஆகியோர் விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பித்தனர்.
அதில் அவர்கள், ஹஜ் மானியத்தை 10 ஆண்டுகளுக்குள் (2022-ம் ஆண்டுக்குள்) படிப்படியாக விலக்கிக்கொண்டு விட வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இதையொட்டி தற்போது அமலில் இருந்து வருகிற ஹஜ் புனிதப் பயண கொள்கையை பரிசீலனை செய்யவும், 2018-22 ஆண்டுகளுக்கான புதிய ஹஜ் கொள்கையை வகுக்கவும் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது.
அப்போது மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, ஹஜ் மானியம் விரைவில் ரத்து செய்யப்படும் என அறிவித்து இருந்தார்.
இது தொடர்பாக அவர், “சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு ஹஜ் மானியத்தை நிறுத்தி விட உத்தரவிட்டது. எனவே புதிய கொள்கையை வகுக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் சிபாரிசுகள்படி, ஹஜ் மானியத்தை படிப்படியாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் இந்த ஆண்டு முதல் ஹஜ் மானியத்தை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுபற்றி மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு முதல் ஹஜ் புனிதப்பயணத்துக்கு மானியம் வழங்கப்பட மாட்டாது.
ஹஜ் மானியத்துக்கு என ஒதுக்கப்பட்டு வந்த நிதி, சிறுபான்மை சமூக பெண்களின் கல்விக்காக பயன்படுத்தப்படும். தாஜா செய்யாமல், கண்ணியமான வகையில் முன்னேற்றத்துக்கு உதவுவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டு உள்ளோம்.
ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டு உள்ளபோதும், அது புனிதப்பயணம் மேற்கொள்கிறவர்களின் பயண செலவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
மேலும், இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரம் இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வார்கள்.
இந்தியாவில் இருந்து கப்பல் மூலமாக ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதற்கும், இதற்கான வழிமுறைகளை முடிவு செய்வதற்கும், இரு தரப்பு அதிகாரிகள் அமர்ந்து பேசவும் சவுதி அரேபிய அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டு உள்ளது.
இந்த ஆண்டு முதல் 1,300 பெண்கள், ஆண் துணையின்றி ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வார்கள். பெண் ஹஜ் உதவியாளர்கள் அவர்களுடன் செல்வார்கள். அவர் கள் சவுதி அரேபியாவில் தங்குவதற்கு ஆன ஏற்பாடுகளை அரசு செய்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Tuesday, 16 January 2018
சாதி மறந்து காதல் திருமணம் செய்பவர்களை யாருக்கும் தடுக்கும் அதிகாரம் கிடையாது- சுப்ரீம் கோர்ட்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு முன்பு வடமாநிலங்களில் அதிகரித்துவரும் கட்டபஞ்சாயத்துக்கள் தொடர்பான வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது.
- 'இரு வேறு சாதியினருக்கு இடையே நடக்கும் திருமணத்துக்கு எதிராக நடக்கும் கட்டப் பஞ்சாயத்துக்களை மத்திய அரசு தடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். ஒரு ஆணும் , ஒரு பெண்ணும் அவரவரின் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம். திருமண வயது வந்த ஆணும் பெண்ணும் காதல் திருமணம் செய்வதை தடுப்பது சட்டவிரோதம். சாதி மறந்து காதல் திருமணம் செய்வதை தடுக்கும் அதிகாரம் பெற்றோர், சமூகம் என யாருக்கும் கிடையாது' என்று நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர்.
Monday, 15 January 2018
ஆதாரில் முகம் கண்டறியும் வசதி: ஜூலை 1-ல் இருந்து புதிய பாதுகாப்பு வசதியை உதய் இணைக்கிறது
இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொருவரின் ஆதார் அட்டையிலும் அவரது புகைப்படம், பெயர் விவரம், முகவரி, கண் கருவிழி படலம், கை பெருவிரல் ரேகை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் அதில் 12 இலக்கங்கள் கொண்ட எண்ணும் இடம்பெற்று இருக்கிறது. வங்கி கணக்கு தொடங்குவது, செல்போன் இணைப்புக்கான சிம் கார்டு வாங்குவது, சமையல் கியாஸ் இணைப்பு, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது போன்றவற்றுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இதனால் இதுபோன்றவற்றுக்கு ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை தெரிவிப்பது மிகவும் கட்டாயம் ஆகிறது. இப்படி பல இடங்களிலும் ஆதார் அட்டையை பயன்படுத்தும் போது, பிரச்சனையும் நேரிடுகிறது. ஆதாரில் உள்ள கைரேகையுடன் பலரது கைரேகை ஒத்துப்போவது கிடையாது என்ற பிரச்சனையும் எழுகிறது. மூத்த குடிமக்களுக்கு இதுபோன்ற பிரச்சனை எழுகிறது. ஆதார் தரவில் பயனாளரின் கைரேகையும், ஒடிபியும் ஒத்துப்போகாத நிலையில் அடையாளத்தை உறுதிசெய்யும் வகையில் புதிய வசதியை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (உதய்) கொண்டு வருகிறது.
ஆதாரில் அங்கீகாரத்தை உறுதி செய்யும் வகையில் பிரச்னையை சரி செய்வதற்காக முகம் கண்டறியும் தொழில்நுட்பம் ஆதாரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆதாரில் முகம் கண்டறியும் புதிய பாதுகாப்பு வசதி ஜூலை 1-ம் தேதியில் இணைக்கப்படுகிறது. கைரேகை அங்கீகாரத்தில் பிரச்சனையை எதிர்க்கொள்ளும் முதியவர்களுக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக இந்த வசதி இருக்கும். ஜூலை 1-ம் தேதி முதல் இந்த திட்டமான அமலுக்கு வருகிறது என உதய் தெரிவித்து உள்ளது.
Sunday, 14 January 2018
தமிழக அரசும், அதிமுகவும் மதச்சார்பற்றது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக ஊராட்சி செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, கூறியதாவது:
"காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக அமையும். 15 டிஎம்சி தண்ணீர் வழங்க கோரி கர்நாடகாவுக்கு கடிதம், அதில் முதற்கட்டமாக 7 டிஎம்சி தண்ணீர் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அதிமுகவாலும், ஜெயலலிதாவாலும் ஒதுக்கி வைக்கப்பட்டவர் தினகரன், பெரும்பாலான ஊராட்சிகள் செயலாளர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். சேலம் விமான நிலையத்தில் விரைவில் விமான சேவை தொடங்கும் சேலத்தில் விமான நிலையம் அமைப்பது குறித்து சில நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
தமிழக அரசு மதச்சார்பற்றது தான். முத்தலாக் சட்டமசோதாவில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை அகற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது அதிமுக எம்.பிக்கள் தான்.
அதிமுக எப்போதும் மதச்சார்பற்ற இயக்கம் தான். கட்சியையும், ஆட்சியையும் யாராலும் உடைக்கவும் முடியாது. கவிழ்க்கவும் முடியாது. யார் வேண்டுமாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் அதெல்லாம் நிலைத்து நிற்பதில்லை."
கட்சியை உடைக்க வேண்டும், ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கனவு பலிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்
Saturday, 13 January 2018
Friday, 12 January 2018
உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட்டாக பரபரப்பு பேட்டி
உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் முதன்முறையாக இன்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
பத்திரிக்கையாளர்களை சந்தித்த நீதிபதி செல்லமேஸ்வர், நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியம் முறையை கடுமையாக எதிர்த்து வருபவர்.
நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதையொட்டி உச்சநீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் வழக்கு விசாரணையை முடித்து கொண்டுள்ளன.
நீதிபதிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . இப்படியே போனால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது.
சில மாதங்களுக்கு முன்பு முக்கிய விவகாரம் ஒன்றில் 4 நீதிபதிகள் கையெழுத்திட்டு கடிதம் அளித்தோம். உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க தலைமை நீதிபதிக்கு கொண்டு சென்ற சில விவகாரங்கள், நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது. சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. நீதித்துறைக்கு எங்களைபோன்ற மூத்த நீதிபதிகளே பொறுப்பானவர்கள் என்பது எங்கள் கருத்து.
நாங்கள் கொடுத்த கடிதத்தின் பிரதிகளை ஊடகங்களுக்கு கொடுக்கிறோம். அந்த கடிதத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன. எங்களுக்காக மட்டுமே நாங்கள் இப்போது பேசினோம் என உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கூறினார்.
உச்சநீதிமன்றத்தை பாதுகாப்பது குறித்து நாட்டு மக்களே முடிவு செய்ய வேண்டும் என நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.
Thursday, 11 January 2018
KEIA -2018ம் ஆண்டு கூட்டம் அழைப்பு
கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோசியேஷன் ஆண்டின் துவக்கத்தில் நடத்தும் ஆண்டு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் நாளை 12/01 /2018 வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு துபை ஜெபில் பார்கில் நடைபெறள்ளது.
இதில் பங்கு பெற வாய்ப்பு உள்ள நமதூர் வாசிகளை அன்புடன் வரவேற்கிறது. மேலும் அமீரகத்தில் வாசித்தாலும் நம் ஊரில் நடக்கும் நல்ல செயல்களில் தொடர்ந்து ஈடுபாடு வருவது நாம் அறிந்த ஓன்று தான்.
இறைவன் அருளால் பணிகள் மேன்மேலும் சிறக்க பிரார்த்தனை செய்கிறோம்...
கொடிநகர் டைம்ஸ்
இதில் பங்கு பெற வாய்ப்பு உள்ள நமதூர் வாசிகளை அன்புடன் வரவேற்கிறது. மேலும் அமீரகத்தில் வாசித்தாலும் நம் ஊரில் நடக்கும் நல்ல செயல்களில் தொடர்ந்து ஈடுபாடு வருவது நாம் அறிந்த ஓன்று தான்.
இறைவன் அருளால் பணிகள் மேன்மேலும் சிறக்க பிரார்த்தனை செய்கிறோம்...
கொடிநகர் டைம்ஸ்
ஆதார் அட்டைக்கு மாற்றாக புதிய அடையாள அட்டை அறிமுகம்
இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொருவரின் ஆதார் அட்டையிலும் அவரது புகைப்படம், பெயர் விவரம், முகவரி, கண் கருவிழி படலம், கை பெருவிரல் ரேகை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் அதில் 12 இலக்கங்கள் கொண்ட எண்ணும் இடம்பெற்று இருக்கிறது.
வங்கி கணக்கு தொடங்குவது, செல்போன் இணைப்புக்கான சிம் கார்டு வாங்குவது, சமையல் கியாஸ் இணைப்பு, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது போன்றவற்றுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இதனால் இதுபோன்றவற்றுக்கு ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை தெரிவிப்பது மிகவும் கட்டாயம் ஆகிறது.
இப்படி பல இடங்களிலும் ஆதார் அட்டையை பயன்படுத்தும் போது, அந்த அட்டைதாரரை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண் மூலம் வங்கி கணக்குகளில் மோசடி நடைபெற வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் திருடப்படுவதை தடுத்து, தனிநபர் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில், ஆதார் அட்டைக்கு மாற்றாக அதேபோன்ற புதிய அடையாள அட்டை முறையை (மெய்நிகர் ஆதார் அட்டை) இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (உதய்) நேற்று முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் இணையதள முகவரிக்கு சென்று இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை உருவாக்கி பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம், பெயர் விவரம் போன்ற அனைத்து விவரங்களும் இப்புதிய அட்டையில் இடம் பெற்று இருக்கும்.
ஆனால் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண்ணுக்கு பதிலாக இந்த புதிய அடையாள அட்டையில் 16 இலக்க எண் இருக்கும். சம்பந்தப்பட்ட நபரே இந்த எண்ணை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது விரும்பும் குறிப்பிட்ட காலவரை வரை இந்த புதிய அட்டையை பயன்படுத்தலாம். தேவைப்படும் போதெல்லாம் இந்த அடையாள அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை மாற்றி புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அப்படி புதிய அட்டை பெறும் பட்சத்தில், ஏற்கனவே பெற்று இருந்த மெய்நிகர் ஆதார் அட்டை தானாக ரத்தாகிவிடும்.
இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபரின் உண்மையான ஆதார் எண் மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளப்படுவது தவிர்க்கப்படும். முக்கியமாக தனிநபர் ரகசியம் காக்கப்படுவதோடு, தகவல் திருட்டும் தடுத்து நிறுத்தப்படுகிறது.
ஆதார் அட்டை எந்தெந்த இடங்களில் எல்லாம் தேவைப்படுமோ, அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு யாரும் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை மோசடியாக தயாரிக்க முடியாது.
வருகிற மார்ச் 1–ந் தேதி முதல் இந்த மெய்நிகர் ஆதார் அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டு வர இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தீர்மானித்து உள்ளது. மேலும் ஆதார் அட்டை எங்கெங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை ஜூன் 1–ந் தேதி முதல் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும் நடைமுறையை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
மேற்கண்ட தகவல்களை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்து உள்ளது.
Wednesday, 10 January 2018
Tuesday, 9 January 2018
திருவாரூர் மக்களின் கவனத்திற்கு..
திருவாரூர் மக்களுக்கு, 💐💐
இதுவரை கம்பன் இரயிலிலை பயன்படுத்தி வந்தோம்..
வரும் மார்ச் ஒன்று முதல் மன்னை(திருவாரூர்) இரயிலை அதிகமாக நன்கு பயன்படுத்தி கொள்ளவும்..
திருவாரூரில் இருந்து 137(Pooled Quota) படுக்கை எண்ணிக்கையும்,
மன்னை, நீடாமங்கலம் இருந்து 290(General Quota)படுக்கை எண்ணிக்கை கொண்டு உள்ளது.
திருவாரூரில் இருந்து இடம் இல்லை என்றால் (210 rs to Chennai),
நீடாமங்கலம் இருந்து பதிவு செய்து திருவாரூரில் ( Boarding) செய்து (220 rs to Chennai)கொள்ளலாம்..
மிகவும் போராடி , திருவாரூர் மக்களுக்காக வாங்கிய இரயில் இது..
இதன் அட்டவணை கீழே உள்ளது..
16180
திருவாரூர் ----- 11.03-11.05 PM
சென்னை --------5.45 AM
.
16179
சென்னை ---9.20 PM
திருவாரூர் ----3.03-3.05 am
.
💐💐திருவாரூர் மக்கள் பயன்பெற பகிரவும் 💐💐
இதுவரை கம்பன் இரயிலிலை பயன்படுத்தி வந்தோம்..
வரும் மார்ச் ஒன்று முதல் மன்னை(திருவாரூர்) இரயிலை அதிகமாக நன்கு பயன்படுத்தி கொள்ளவும்..
திருவாரூரில் இருந்து 137(Pooled Quota) படுக்கை எண்ணிக்கையும்,
மன்னை, நீடாமங்கலம் இருந்து 290(General Quota)படுக்கை எண்ணிக்கை கொண்டு உள்ளது.
திருவாரூரில் இருந்து இடம் இல்லை என்றால் (210 rs to Chennai),
நீடாமங்கலம் இருந்து பதிவு செய்து திருவாரூரில் ( Boarding) செய்து (220 rs to Chennai)கொள்ளலாம்..
மிகவும் போராடி , திருவாரூர் மக்களுக்காக வாங்கிய இரயில் இது..
இதன் அட்டவணை கீழே உள்ளது..
16180
திருவாரூர் ----- 11.03-11.05 PM
சென்னை --------5.45 AM
.
16179
சென்னை ---9.20 PM
திருவாரூர் ----3.03-3.05 am
.
💐💐திருவாரூர் மக்கள் பயன்பெற பகிரவும் 💐💐
Monday, 8 January 2018
4-வதுநாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: 85 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன
ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஐகோர்ட்டு தடை விதித்தது. பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
இதனை தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்து போராட்டம் தொடரும் என அறிவித்தது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் திருவாரூர் மாவட்டத்தில் 85 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்களின் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இதனை தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்து போராட்டம் தொடரும் என அறிவித்தது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் திருவாரூர் மாவட்டத்தில் 85 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்களின் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
Subscribe to:
Posts (Atom)








































































