Monday, 10 February 2014

15 ஆண்டு கால நாகப்பட்டினம் தொகுதி எம் பி



 நாகை தனி தொகுதி யில் இப்போது இருக்கும் உறுப்பினர் பற்றிய விபரம் வருமாறு :

A K S விஜயன் (தி.மு க ).


இவர் கடந்த 1999 ம் ஆண்டு நடைபெற்ற 13ம் மக்களவை தேர்தலில் அறிமுக வேட்பாளராக போட்டிட்டு இ .கம்யூ எம் .பி செல்வராசுவை சுமார் 22000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார் .இது அப்போது பெரும் வெற்றியாக பார்க்கப்பட்டது .
என் என்றால் வாஜ்பாய் பிரதமராக மக்கள் ஓட்டு போட்டு டெல்லிக்கு அனுப்பிவைத்தார்கள்
மும்மத மக்களின் தலங்கள் உள்ளத்தால் பி ஜே பி.கூட்டில் வென்று வரலாறு படைத்தது.

2004இல் மீண்டும் வந்தார் மக்களிடம் இப்போது சோனியா காந்தி கூட்டுக்குள்
மன்மோகன் சிங் ஆட்சியில் ஆளும் கூட்டணி எம்.பி ஆனார் .

2009  இல்மூன்றாம் முறையாக போட்டிட்டு சுமார் 50000 வாக்கு கள்  மேல் பெற்று  இ .கம்யூ செல்வராசை  வென்று மக்களவை தி.மு.க.தலைவர் என்னும் பதவி பெற்றார் .

மேலும் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது .தீவிர ஸ்டாலின் ஆதரவாளர் .

சாதனைகள் என்ன சொல்லலாம் என்ன பார்த்தால் நாகூர் முதல் தஞ்சாவூர் வரை இருக்கும் அகலரயில் பாதை பணிகள் முடிந்து ரயில்கள் சென்றுவருகிறது .சேது சமுத்திரம் திட்டம் வந்தால் நாகை துறைமுகம் வளம் பெறும் என்றார் ஆனால் பயணிகள் கப்பல் போக்குவரத்து ,சரக்கு ஏற்றுமதி இறக்குமதி என நடந்த துறைமுகம் இப்ப மீன்பிடி துறைமுகமாக மட்டுமே செயல்படுகிறது . துறைமுகத்தை மேம்படுத்திப்பயணிகள் மற்றும் சரக்குபோக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது பல ஆண்டு கால கோரிக்கை .துறைமுகம் மேம்படுத்தப்பட்டால் நாகையில் தொழிற்சாலைகள் உருவாகலாம். அதன் மூலம்வேலைவாய்ப்பும்பொருளாதாரமும்உயரும்.ஆனால், மூன்று முறை எம்.பி-யாக இருந்தும் விஜயன் இதைக்கண்டு கொள்ளவே இல்லை ''  என்கிறார்கள் தொகுதி வாசிகள்.

திருவாரூர் மத்திய பல்கலைகழகம் ,நான்கு வழி சாலை அமைக்க இருந்த தஞ்சாவூர் -நாகை சாலை இப்ப இருவழி சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது .

 தந்தி டி வி யில் ஒளிபரப்பு லிங்க் இப்ப கீழே உள்ளன

http://www.thanthitv.com/schedule/schedule.aspx?pgid=78





விவசாயமும், மீன்பிடித்தலும்தான் இங்கேபிரதானதொழில். 30 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ, அப்படியேதான்இருக்கிறது நாகை. பாதாளச்சாக்கடைக்காக கொத்திப்போட்டதால் மேடும் பள்ளமுமாகக்காட்சி அளிக்கின்றன நாகைநகரச்சாலைகள்.' 'தொகுதியில்எம்.பி-யைபார்க்கமுடியும். மற்றவர்கள் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் காரில் உட்கார்ந்து கையை கூப்பியபடியே போவார் தெரியாதவராக இருந்தாலும் இனிக்க இனிக்கப்பேசுவார் . அவரைசந்திக்க முடியாது என்று யாருமே சொல்ல முடியாது  .எல்லாம் இருந்தும் என்ன?அவர் தொகுதிக்குப் பெரிதாக  எதையும்சாதித்துவிடவில்லை'' என்றுபரவலாகப்பொருமினார்கள் நாகை மக்கள்.



திருவாரூர் டு திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டதைப்பற்றி ஏகத்துக்கும் கொதிக்கிறார்கள் தொகுதிவாசிகள். ''சென்னை முதல் காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கி மயிலாடுதுறை முதல் திருவாரூர் வரை வேலைகள் நடந்தன .அடுத்த கட்டமாக திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி வரை வேலைகள் நடைபெற வேண்டும்.ஆனால், கடைசியாக முடிக்க வேண்டிய பட்டுக்கோட்டை-  காரைக்குடி பணிகள் முதலில்  நடைபெறுகின்றன. இதற்கு காரணம் டி.ஆர்.பாலுதான். ரயில்வே போர்டு சேர்மனாக இருக்கும் அவர் அவருடைய பகுதிக்கு மட்டும் முதலில் வேலையை ஆரம்பித்திருக்கிறார். இதை விஜயனால் தட்டிக்கேட்க முடியவில்லை. திருவாரூர் டு திருத்துறைப்பூண்டி வேலைகள் நின்றதோடு அந்த வழியில் ஓடிய ரயில்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.



நன்றி ஜூனியர் விகடன் 

  
மேலும் விவசாயம் முக்கிய தொழிலாக இருப்பதால் காவிரி நீர் ஏற்கனவே வருவது இல்லை என்பதால் இப்பொது மீத்தேன் வாயு எடுபதாக திட்டம் தொடங்கினால் நிலம் எல்லாம் பாலைவனம் ஆக்க படுவதை தடுக்க எம் பி என்ன செய்தார்கள் ?
 
இப்ப திடீர் என்ன பொங்கல் வாழ்த்து போஸ்டர் ஒட்டப்பட்டு நான் இன்றும் தொகுதி பிரதிநிதி என காட்டி கொண்டனர் .தினசரிகளின் இப்ப போட்டோ இல்ல செய்திகள் வந்து தேர்தல் விரைவில் வர போகுது என்பதை நமக்கு கட்டியது .
வேட்பாளர் அல்லது கட்சி சின்னம் இதை தாண்டி மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை வரும் நாட்களின் நகரும் அரசியல் விளையாட்டுகளின் இறுதியில் தெரியவரும் .

 இப்ப 2014ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் அவரே மீண்டும் போட்டிக்கு வந்தால் தொகுதி வாக்காளர்கள் என்ன செய்வார்கள் வரவேற்ப்பா அல்லது  இல்லையா .
மீண்டும் பழைய முகமா அல்லது புதியவர் வருவாரா என்பதை தி. மு.க தலைமை எடுக்கும் முடிவை பொருத்து அமையும் .
 
முதல் கட்ட நிலவரம் இது மீண்டும் வேட்பாளர் பட்டியலுடன் இறைவன் நாடினால் சந்திக்கலாம் ....
 
 
 

Sunday, 9 February 2014

Kodikkalpalayam , Thiruvarur - Photos 1

பெயர் பலகை - கீழ வீதி

 
 
 
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் 
 
 
 
ஜாமியுல் மஸ்ஜித் மேலத்தெரு 
 

தினா இப்ரம்ஷா அவர்களின் இல்லம்
தெற்குத்தெரு
 
குச்சிப்பள்ளி நடுத்தெரு 

 
நகராட்சி மருத்துவமனை 
 மேலத்தெரு பழைய பள்ளிவாசல்

 அரசு மேல்நிலைப்பள்ளி

 பள்ளிவாசல் இரவு தோற்றம்
 
2ம் நம்பர் பஸ் 


KEIA பள்ளி கட்டிடம்
நடுத்தெரு சிமெண்ட் சாலை 

 நிருவாக சபை
தைக்கால் கல்வெட்டு 
 
மத்லபுல் கைராத்பள்ளி  KEIA BLOCK 

புதுப்பள்ளி தர்கா 

தைக்கால் 

மேலத்தெரு தர்கா 

தைக்கால் 


Kodikkalpalayam ஜமாஅத் மகாஜன சபை கூட்டம் தீர்மானங்கள் 9/2/2014

நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் மகாஜன சபை கூட்டம் கடந்த 9/2/2014 அன்று தலைவர் ரபியுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

இதில் 52 பணப்பகுதி சார்பாக தெற்குத்தெரு - பள்ளிவாசல் தெரு சந்திப்பில் கட்டப்பட்ட வணிக வளாகம் கட்டி முழுமை பெற்றதை அடுத்து விரைவில் திறப்பு வைப்பது என்றும்  கட்டிட பணியை செம்மையாக மேற்கொண்ட கட்டிட கமிட்டியாளர்கள் , B & H Builders  இதயதுல்லா அவர்களும் பாராட்டுவது என்றும்

 மேலும்

கொடிக்கால் பாளையம் பைத்துல்மால் அலுவலகம்  தனியாக கட்ட தெற்குத்தெரு வில் நிலம் ஒதுக்குவது என்றும்
,
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைஞர் மு கருணாநிதி தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கிழ் நமதூர்   MABHS சங்கம் எதிரே பள்ளிக்கேணி குளம் அருகே பேருந்து நிழற்குடை அமைக்க இடம் ஒதுக்குவது என்றும்

மத்லபுல் கைராத் பெண்கள் உயர்நிலைப்பள்ளி அமைக்க தினா இப்ராகிம் ஷா ராவுத்தர் தர்ம எஸ்டேட் இடத்தில ஒதுக்குவது என்று மற்ற இதர விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது .

இதில் ஜமாஅத் அங்கத்தினர்கள் பெரு அளவில்  கலந்து கொண்டார்கள் .

இன்ஷா அல்லாஹ் வரும் 11/2/2014 செவ்வாய் மாலை புதன் இரவு 9:30 மணிக்கு  அன்று  வருடத்திர மகாஜன சபை கூட்டம் நடைபெற உள்ளது .





Adiyakkamangalam- மௌத் அறிவிப்பு 9/2/2014



அடியக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் S M J முஹம்மது நிஜாமுதீன் அவர்களின் தாயார் சபுரா நாச்சியா அம்மாள் அவர்கள் அடியக்கமங்கலம் ரயிலடி தெரு தனது இல்லத்தில் மௌத் .





இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா இன்று  9/2/2014 மாலை 5:30 மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுள் மஸ்ஜித்   பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.





Friday, 7 February 2014

Kodikkalpalayam - மஹாஜன சபை கூட்டங்கள் - அறிவிப்பு

 முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்
ஊர் உறவின் முறை ஜமாஅத்
 அறிவிப்பு
 
 
 

 



 1. இன்ஷா அல்லாஹ் வரும் 9/2/2014 அன்று ஞாயிற்றுக்கிழமை  காலை 9:30 மணிக்கு மஹாஜன சபை கூட்டம் பள்ளிவாசல் தரைத்தளம் மகசும் மஹாலில் தலைவர் ரபியுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது .

இதில் மத்லபுல் கைராத் பெண்கள் உயர்நிலைப்பள்ளி நிலம் வழங்குவது குறித்து , புதியதாக கட்டப்பட்ட வணிகவளாகம் குறித்தும் ,பைத்துல் மாலுக்கு தனி அலுவலகம் கட்டுவது உள்பட 5 பொருட்களின் தலைப்பில் ஆலோசணை நடைபெறும் .


 2. அதுபோல  இன்ஷா அல்லாஹ் வரும் 11/2/2014  அன்று செவ்வாய் மாலை புதன் இரவு 9:30 மணிக்கு வருடாந்திர மகாஜனசபை கூட்டம் மகசும் மஹாலில் தலைவர் ரபியுதீன் அவர்கள்  தலைமையில் நடைபெற உள்ளது .

இதில் கடந்த ஜமாஅத்  ஆண்டு அறிக்கை ,வரவு செலவு அறிக்கை மற்றும் 52 பணபகுதி ,மத்லபுல் கைராத் அறக்கட்டளை உள்பட அனைத்து சார்பு அமைப்புகளின் அறிக்கையும் ஜமாஅத்தார்கள் முன்பாக வைக்கபடுகிறது .


இந்த இரு மகாஜனசபை கூட்டங்களில் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள் .


புதன் காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு தலைக்கட்டு சோறு வழங்கப்படும் 

Thursday, 6 February 2014

ஹஜ் 2014 விண்ணப்பம்

                       





        http://www.hajcommittee.com/guideline2014.php


ஹஜ் 2014 விண்ணப்பம்   இந்த  லிங்கில் உள்ளது .

தேவைபடுவோர் இதில் சென்று பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் .

கடைசி நாள் மார்ச் 15 .2014

வங்கி pay in slip மற்றும் வக்கீல் affitavit மேலும் விண்ணப்பம் உள்ளன
























Kodikkalpalayam morning Fog 6/2/2014



Wednesday, 5 February 2014

Thiruvarur - முதலாவது நாணய கண்காட்சி

                  சோழ மண்டல நாணயவியல் கழகம் திருவாரூர் கிளை சார்பாக திருவாரூர் வடக்கு வீதி யில் இருக்கும் திருமண மண்டபத்தில் கடந்த 3/2/2014 அன்று முதலாவது நாணய கண் காட்சி நடைபெற்றது .இதில் கிளை பொறுப்பாளர் ஒய் .சுபஹத்துல்லா அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கண் காட்சியில் கி மு காலம் தொட்டு தற்பொழுது 2014 ம் ஆண்டு வரையுளும் உள்ள உலகம் தவுவிய நாணயம் ,பண்டைய கால பொருள்கள் ,உலக நாடுகளின் அஞ்சல் தலைகள் ,என காட்சிக்கு வைக்கபட்டு இருந்தன .
 இதில் நமதூர் மேலத்தெரு ஒய்வு பெற்ற கஸ்டம்ஸ் அலுவலர்  முஹம்மது ஆதம் அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்கள் .
 
 
 ஏரளமான மாணவ மாணவியர்கள் ,சமூக அலுவலர்கள் ,பொதுமக்கள் ,ஊடக நண்பர்கள்  என நகர மக்கள் பங்கு கொண்டு சிறப்பு செய்தார்கள் .
 
 
புகைப்படம் தொகுப்பு 
 










Monday, 3 February 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் சலுகை: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு



ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இனி 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்....

ஆசிரியர் தகுதி தேர்வின் தேர்ச்சி, இட ஒதுக்கீட்டை நிர்ணயிப்பதில்லை. ஆசிரியர்களை பணியிடங்களில் நியமிக்கும்போது தான் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர் நியமனத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படுகிறது.

எனினும், இந்த அவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இனி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

அதாவது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

Sunday, 2 February 2014

Kodikkalpalayam --- பைத்துல்மால் அறிவிப்பு

 
 
         நமது முஹ்யித்தீன்  ஆண்டவர்கள் பள்ளிவாசல்  ஊர் உறவின் முறை  ஜமாஅத் சார்பாக கடந்த 1/1/2014  அன்று துவக்க பட்ட பைத்துல் மால் நமதூரில் உள்ள பொருளாதார ரிதியாக பின் தங்கியுள்ளவர்கள் தங்கள் தேவைக்கு பல்வேறு 
வட்டிக்கு பணம் பெறும் அவலநிலை நிலவுவதை கருத்தில் கொண்டு இப்போது   வட்டியில்லா கடன் உதவி தேவை படுவோர்கள்  மகாஸும்  மகாலில் உள்ள அலுவலகத்தில் காலை 8:30 முதல் 9:30 வரை  வந்து விண்ணபிக்கும் தகவலை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கபட்டு உள்ளது .

              உங்கள் சதக்க மற்றும் ஜாகத் நிதிகளை அளித்து வளமான நிதி அமைப்பாக மாற்றி இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இஸ்லாமிய வங்கியாக உருவெடுக்க எல்லா வல்ல இறைவன் துணை புரிவானாக 
                                             ஆமீன்!
 

Saturday, 1 February 2014

Kodikkalpalayam TMMK collect Muzzaffarnagar Relief Fund 1/2/2014

 
 
திருவாரூர் நகரம் (கொடிக்கால்பாளையம்) தமுமுக சார்பாக முஸாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துயர் துடைக்க பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட ரூ.1,81,745 நிதியை அன்று 01.02.2014 தமுமுக மாநிலத் தலைவர் மெளலவி ஜே.எஸ்.ரிபாயி ரஷாதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடன் மாவட்ட தலைவர் ஹலிலுர் ரஹ்மான் மற்றும் மாணவர் அணினார் உள்ளனர்