நமதூர் மதரஸா மத்லபுல் கைராத் சார்பில் நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில் நடைபெறும் மக்தப் மதரஸாவில் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்து மார்க்க கல்வியை அனைவரும் பயில வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிவாசல் தெரு மற்றும் தெற்கு தெருவில் உள்ள வீடுகள் தோறும் அழைக்கும் நிகழ்ச்சி இன்று அசர் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. பெற்றோர்கள் அதை மகிழ்வோடு வரவேற்றதுடன் பிள்ளைகளை அனுப்பி வைப்பதாகவும் கூறினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது பிள்ளைகளுக்கு ஈருலக கல்வியை நிரப்பமாக தந்தருள் புரிவானாக ஆமீன்.
No comments:
Post a Comment