#திருவாரூர் #ஊரடங்கு #காவல்துறை
இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. கயல்விழி கூறியதாவது:-
மாவட்டம் முழுவதும் 59 இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தொடர் வாகன தணிக்கைகள் நடைபெற்று வருகிறது.
40 மோட்டார் சைக்கிள்களில் வாகன ரோந்துகள், 4 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. 22 இடங்களில் நிலையான ரோந்து அமைக்கப்பட்டுள்ளது.
640 வாகனங்கள் பறிமுதல்
கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு பணிகளில் போலீசார், ஊர்காவல் படையினர் என 1000 பேர் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்கள் நடத்தப்பட்ட தீவிர வாகன தணிக்கையில் தேவையின்றி வெளியில் சுற்றிய 640 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 584 மோட்டார் சைக்கிள்கள், 31 கார்கள் மற்றும் 25 இதர வாகனங்கள் அடங்கும்.
கடுமையான நடவடிக்கை
மேலும் முக கவசம் அணியாமல் வெளியில் வந்த 8 ஆயிரத்து 765 பேர் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 545 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.20 லட்சத்து 25 ஆயிரம் 500 அபராதம் வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment