தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிட்டதில் 38 மாவட்டங்களில் கோவை, தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியைக்கூட திமுகவால் கைப்பற்ற முடியவில்லை. சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் வேட்பாளர் வெற்றி பெற்றார். டெல்டா மாவட்டங்களில் சிறப்பான வெற்றியைத் திமுக பெற்றது. ஆனால், அமைச்சரவைப் பட்டியலில் 25 மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. 13 மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைச்சர்களும், மாவட்டங்களும்: ஸ்டாலின் - முதல்வர். கொளத்தூர், சென்னை மாவட்டம் துரைமுருகன் - நீர்வளத்துறை அமைச்சர், காட்பாடி, வேலூர் மாவட்டம். கே.என்.நேரு - உள்ளாட்சி நிர்வாகம். திருச்சி மேற்கு , திருச்சி மாவட்டம். ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர், ஆத்தூர், திண்டுக்கல் மாவட்டம். பொன்முடி - உயர்கல்வித்துறை அமைச்சர், திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம். எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர், திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மைத் துறை அமைச்சர், குறிஞ்சிப்பாடி தொகுதி, கடலூர் மாவட்டம். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம். தங்கம் தென்னரசு - தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி, தொல்லியல் துறை அமைச்சர், திருச்சுழி தொகுதி, விருதுநகர் மாவட்டம். எஸ்.ரகுபதி - சட்டத்துறை அமைச்சர். திருமயம் தொகுதி, புதுக்கோட்டை மாவட்டம். முத்துசாமி - வீட்டுவசதித் துறை அமைச்சர், ஈரோடு மேற்கு, ஈரோடு மாவட்டம். பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம். தா.மோ.அன்பரசன் - ஊரகத் தொழில் துறை அமைச்சர், ஆலந்தூர் தொகுதி, காஞ்சிபுரம் மாவட்டம் மு.பெ.சாமிநாதன் - செய்தித்துறை அமைச்சர், காங்கேயம் தொகுதி, திருப்பூர் மாவட்டம். கீதா ஜீவன் - சமூக நலத்துறை அமைச்சர், தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம். அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளத்துறை அமைச்சர், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம். ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத் துறை அமைச்சர், முதுகுளத்தூர், ராமநாதபுரம் மாவட்டம். கா.ராமசந்திரன் - வனத்துறை அமைச்சர், குன்னூர், நீலகிரி மாவட்டம். சக்கரபாணி - உணவுத்துறை அமைச்சர், ஒட்டன்சத்திரம் தொகுதி, திண்டுக்கல். செந்தில்பாலாஜி - மின்சாரம் மதுவிலக்கு- ஆயத்தீர்வை அமைச்சர், கரூர், கரூர் மாவட்டம். ஆர்.காந்தி - கைத்தறித் துறை அமைச்சர், ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம். மா.சுப்பிரமணியன் - சுகாதாரத்துறை அமைச்சர், சைதாப்பேட்டை, சென்னை மாவட்டம். பி.மூர்த்தி - வணிகவரித்துறை அமைச்சர், மதுரை கிழக்கு, மதுரை மாவட்டம். எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், குன்னம் தொகுதி, பெரம்பலூர் மாவட்டம். சேகர் பாபு - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், துறைமுகம், சென்னை மாவட்டம். பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை அமைச்சர், மதுரை மத்திய தொகுதி, மதுரை மாவட்டம். ஆவடி நாசர் -பால்வளத்துறை அமைச்சர், ஆவடி, திருவள்ளூர் மாவட்டம். மஸ்தான் - சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், செஞ்சி தொகுதி, விழுப்புரம் மாவட்டம். அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். திருவெறும்பூர், திருச்சி மாவட்டம். மெய்யநாதன் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர், ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம். சி.வி.கணேசன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர், திட்டக்குடி, கடலூர் மாவட்டம். மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், பத்மநாபபுரம், கன்னியாகுமரி மாவட்டம். மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர், ராசிபுரம், நாமக்கல் மாவட்டம். கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தாராபுரம், திருப்பூர் மாவட்டம். திமுகவில் கோவை, தருமபுரியில் யாரும் வெல்லவில்லை, சேலத்தில் ஒரே ஒரு உறுப்பினர் வென்றார். சேலம், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய 13 மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவமே இல்லை. இதில் குறிப்பாக நல்ல வெற்றியைக் கொடுத்த செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தேனி, கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைப் பரிசீலிக்கவே இல்லை.
No comments:
Post a Comment